திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-3-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

 நகரமும் நாடும் பிறவும்தேர்வேன்
நாண்எனக்கு இல்லைஎன் தோழிமீர்காள்!
சிகர மணிநெடு மாடநீடு
தென்திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன்மாயன்
நூற்று வரையன்று மங்கநூற்ற
நிகரில் முகில்வண்ணன் நேமியான்என்
நெஞ்சங் கவர்ந்துஎனை ஊழியானே.

    பொ – ரை : என்னுடைய தோழிமீர்காள்! நகரங்களிலும் நாடுகளிலும் பிற இடங்களிலும் தேடுவேன்; எனக்கு நாணம் இல்லை; ‘என்னை?’ எனின், சிகரங்களையுடைய அழகிய நீண்ட மரடங்கள் நிலைத்திருக்கின்ற தென்திருப்பேரெயிலில் எழுந்தருளியிருக்கின்ற மகர நெடுங்குழைக்காதனும் மாயனும் துரியோதனாதியர்கள் அன்று அவியும்படியாபக மந்திரித்த ஒப்பில்லாத முகில் வண்ணனும் நேமியானுமான எம்பெருமான் என் மனத்தினைக் கொள்ளைக்கொண்டு எத்தனை ஊழிக் காலத்தையுடையான்?

வி – கு : ‘மகர நெடுங்குழைக்காதன்’ என்பது, அந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் திருப்பெயர். ‘எனை ஊழியான்’ என்பது, ‘அவன் என் மனத்தினைக் கவர்ந்து எத்தனை ஊழிக்காலமாயிற்று?’ என்றபடி.

ஈடு : பத்தாம் பாட்டு. 1‘இருந்ததே குடியாக உலகத்தார் உன்னைப் பழி சொல்லார்களோ?’ என்று தோழிமார்கள் சொல்ல ‘அவர்கள் அன்றோ எனக்குத் தேட்டம்?’ என்கிறாள்.

நகரமும் நாடும் பிறவும் தேர்வன்-‘உன் துணிவாக, நாட்டார் நகரத்தார் மற்றுமுள்ளாரும் எல்லாரும் அறிந்து பழி சொல்லுகிறார்களே!’ என்ன, ‘எனக்குதான் தேட்டம் அவனேயோ? நகரம், நாடு பத்தநம் முதலானவைகள், இவற்றிலுள்ளாருடையபழியேயன்றோ எனக்குத் தேட்டம்? ‘தேர்வன்’ ‘தேடுகிறேன்’ என்றபடி. 1நீங்கள் சேர்க்கிலீர்கோளாகில், அவன் தானாக வாரானாகில், அவனுடனே கூட்டிப் பழி சொல்லுகிற இவர்கள் அன்றோ என் ஆத்மாவை நோக்குகிறார்கள்? 2‘அலர் எழ ஆருயிர் நிற்கும்’ என்றான் அன்றோ? பிறவும் – மற்றுமுள்ளனவும். நாண் எனக்கு இல்லை – 3நாணம் இங்கு இல்லாமையே அன்று; அங்குப் போனாலும் இல்லை. இந்தச் சரீரத்தில் முதலிலே இல்லாமை. என் தோழிமீர்காள் – 4இது நான் உங்களுக்குச் சொல்லி அறிய வேண்டுபடி ஆவதே! சிகரம் மணி நெடு மாடம் நீடு தென்திருப்பேரெயில் வீற்றிருந்த – மலைகளின் சிகரங்களைக் கொடுவந்து வைத்தாற்போலே ஓக்கமுடைத்தாய், இரத்தின மயமான மாடங்களையுடைய பெரிதான தென்திருப்பேரெயில் வீற்றிருந்த. மகர நெடுங்குழைக்காதன் – மகரத்தின் வடிவமான பெரிய ஆபரணத்தையுடைய கர்ணபாசங்களையுடையவன். 5தோள்கண்டார் தோளே கண்டார்; தொடுகழற் கமல மன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்; தடக்கைகண் டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை ஒத்தார்.’-
என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

அவனுடைய ஒரோ அவயங்களில் படிந்தாரை மீட்கலாயோ இருப்பது? 1மாயன் – சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்தும குணங்ளையும் நினைக்கிறது. அன்றிக்கே, மாயன் – 2‘அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடையவன்’ என்னுதல்.

நூற்றுவரை அன்று மங்க நூற்ற – சிலரை அழிக்க நினைத்தால் ஒருவரும் தப்பாதபடி அழிக்குமவன். துரியோதனன் முதலாயினோர்களைப் பாரதப்போர் உண்டான அன்று நசிக்கும்படி மந்திரித்த. நிகர் இல் முகில் வண்ணன்-ஒப்பில்லாத காளமேகம்போலே இருக்கிற வடிவழகு. இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவழகு’ என்கை. நேமியான் – 3அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தையுடையவன்.4திருவாழியைக் கொண்டு வீடுமன் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ? நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் – 5துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய், பாண்டவர்கள் துன்பம் தீர மழைபெய்து நின்றபடி. 6‘அவன் உன் விரோதிகளைப் போக்கிக்கூட நினையாத பின்பு, அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்திரத்தாலோ?’ என்ன, என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு? வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலத்தான்? எனை

ஊழியானே – பல கல்பங்கள் உண்டு. 1துரியோதனன் முதலாயினோரை வெல்ல எண்ணினார்போலே, என் நெஞ்சினைக் கவர்வதற்கு எத்தனை காலம் எண்ணினானோ!

இருந்ததே குடியாக நாட்டார் பழி சொல்லாரோ என்ன –
அதுவே எனக்கு தேட்டம்
அது அடியாக காதல் வளருமே
மகர நெடும் குழை காதன்
நிகரில் முகில் வண்ணன்
நெஞ்சம் கவர்ந்தான்
நகரம் -நாடு -பிறவும் உள்ளார் -சொல்லி வெட்கம் கொள்ள மாட்டேன்
துணிவு மிக்கு –
நாடும் கிராமமும் -பழி சொன்னாலும்
இதுவே தேட்டம் எனக்கு எம்பெருமான் கூட வேண்டாம்
பழி சொல்ல சொல்ல ஆசை மிக்கும்
சத்தையை நோக்குகிறார்கள் அவன் உடன் சேர்த்து சொல்லி
கூட்டிப் பழி சொல்ல
அலர் எளில் ஆர் உயிர் -பழி காரணமாக சேர்வார்கள் குரல்
லஜ்ஜையும் இங்கும் அங்கும் இல்லை
என் தோழி மீர் -நான் சொல்லி அறிய வேண்டுமா
சிகர மணி மாட நீடு -பர்வத சிகரம் கொண்டு வந்து வைத்தாப் போலே ஒக்கம்
ரத்னமயம்
மகர கர்ண ஆபரணம்
மகர பூஷணம் ஐ யங்கார்
காதர்-சுருக்கி பெயர்
மாயன் -சொல்லி சொல்லாத தேக காந்தி ஆத்மா குணங்கள் உள்ளவன்
ஆஸ்ரித பஷபாதன்
நூற்றுவரை சேஷியாத படி அழித்து –
என்னிடம் உள்ள அனைத்தையும் கவர்ந்து போனானே

நிகரில் முகில் வண்ணன் ‘
விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவு அழகு
மாயன் -ஆழி மறைத்து போல்வன ஆச்சர்யம்
நேமியான் -பகலை இரவாக்கும் பரிகரம் உடையவன்
ஆயுதம் எடுத்து பீஷ்மாதிகளை தொடர்ந்து
மின்னல் இடி போலே விரோதி மழை ஆஸ்ரிதருக்கு போலே
அவனே வந்து காலில் விழும்படி
அதுக்கு ஈடான பரிகரம் நெஞ்சை இழந்தேன்
கவர்ந்து கொண்டு ஊழி காலம்
வடிவு அழகையும் ஆயுத செர்த்தியையும் கொண்டு
அபகரிக்க எத்தனை காலம் மந்திர ஆலோசனை செய்தானோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading