திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

ஈடு: 1மேல் திருவாய்மொழியில், ‘இட்டகால் இட்டகை’ என்கிறபடியே, இவள் மோகித்துக் கிடக்க, இவளுக்கு முன்னே தோழிமாரும் தரைப்பட, திருத்தாயார் ஒருத்தியும் இவள் நிலையை நினைந்து அருகே இருந்து கூப்பிட்டுப் போருமதும் தவிர இப்பெண்பிள்ளை தானே எழுந்திருந்து கால் நடை தந்து போமளவாய் விழுந்தது. 2அதற்கு அடி: ‘பற்றிலார் பற்ற நின்றானே’ என்று பெரிய பெருமாளுடைய பற்றிலார் பற்ற நிற்கும் தன்மை தொடக்கமான, இவளுக்குப் பற்றாசான குணங்களையும் அழகு முதலான விக்கிரஹ குணங்களையும் இவள் தான் வாய் வெருவியும் திருத்தாயார் சொல்லவும் கேட்டு அதனாலே தரித்தாள். 3போன உயிரை மீட்கவற்றாயன்றோ குணங்களின் தன்மை இருப்பது?

குணங்கள் தரிப்பிக்குமோ?’ என்ன, ‘பொன உயிரை’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். இவ்விடத்திலே,

    ‘இத: பரம் மிருதஸஞ்ஜீவநீம் ராம வ்ருத்தாந்த கதாம்ஆஹ’-என்ற ஸஹஸ்ரநாம பாஷ்ய வாக்கியத்தை நினைப்பது.

    ‘அவித்தஜம் புலத்தவ ராதி யாயுள
புவித்தலை யுயிரெலாம் இராமன் பொன்முடி
கவிக்கும்என் றுரைக்கவே களித்த தாலது
செவிப்புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம்!’-என்பது, கம்பராமாயணம், அயோத்தியாகாண்டம், ஆற்றுப்படலம், 23.

 4மேல் திருவாய்மொழியில் பிறந்த மோகமுந்தெளிந்து பிரிவின் வியசனமும் நினைக்க வல்லளாய், பின்பு, ‘அவனைக் கிட்டியல்லது நில்லேன்’ என்னும்படியான ஆற்றாமையும் பிறந்து, அது பெறாமையாலே துக்கமுடையவளாக, இவள் விடாய்கு ஈடாகும்படி அணித்தாகத் தென்திருப்பேரெயில் வீற்றிருந்த மகர நெடுங்குழைக்காதனுடைய புன்சிரிப்பு, கடைக்கண் நோக்கம் முதலியவைகளாலே கவரப்பட்ட மனத்தையுடையவளாய், ‘அவன் இருந்து இடத்து ஏறப்போக வேணும்,’ என்று ஒருப்பட, பழையபடியே தோழிமாரும் தாய்மாரும் அவளைச் சூழப்போந்து, ‘உனக்கு இத்துணை அளவு கடந்த ஈடுபாடு ஆகாது: நமக்கு இது பழியாய் விளையும்,’ என்ன, ‘நீங்கள் சொல்லுகிறவற்றால் பிரயோஜனம் உண்டாகமாட்டாது. நான் 1அவன் பக்கலிலே சென்ற மனத்தையுடையவள் ஆனேன்; ஆன பின்பு நானே போனேன் ஆகாமே நீங்கள் என்னோடு உடன்பட்டு அங்கே கொடுபோய்ச் சேர்க்கப் பாருங்கோள்,’ என்று தனக்குப் பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்துச் சொல்லுகிறாளாய் இருக்கிறது.

அங்ஙன் அன்றிக்கே, ‘முகில் வண்ணன் அடியே இவள் அணுகி அடைந்தனள்,’ என்றது ஆகையாலே, 2‘நான் அங்கும் இராகவனுடைய வீட்டில் பன்னிரண்டு வருடங்கள் முடிய மனிதர்களுக்குரிய போகத்தை அனுபவித்தேன்,’ என்கிறபடியே, ஸமா த்வாதஸ தத்ராஹம் ராகவஸ்ய நிவேஸநே
புஞ்ஜாநா மாநுஷாந் போகாந் ஸர்வகாம ஸம்ருத்திநீ’-என்பது, ஸ்ரீராமா. சுந். 33.17.

பெரிய பெருமாளோடே நெடுங்காலம் பூர்ண ரசமான கலவி உண்டாக, 3பிரிந்து கூடாவிடில் இரண்டு தலைக்கும் அழிவு வருமளவு ஆயிற்றது. 4இனி, எல்லா அளவிலும் ஒரு நீராகக் கலக்கிறது தர்மிகள் இரண்டும் கூடி அன்றோ? ஆகையாலே, பிரியாவிடில் தர்மியே அழியும் அளவாகப் புக, இவ்வளவில். நாயகனான இவன் இரண்டு தலையும் ஜீவிக்கப் பார்ப்பான் ஒருவன் ஆகையாலேபிரிவைப் பற்றிப் பேசினான்; பேச, 1இவளும் பிரிவில் வாசனை இல்லாதாள் ஒருத்தி ஆகையாலே, ‘கலவியிலே ஒரு வகையோ’ என்று கொண்ட, இவளும் அதற்கு இசைந்தாள்; இசைய அவனும் வேட்டை நிமித்தமாகப் புறப்பட, இவளும் திருஅணுக்கன் திருவாசல் அளவும் ஒருப்படுத்தி மீண்டாள்: 2எல்லா அளவிலும் பிரிவு தன் காரியம் செய்தன்றி நில்லாதே அன்றோ? பின் இவள் நோவுபடப்புக. இதனைக் கண்ட தோழிமாரும் தாய்மாரும், ‘உனக்கு ஒடுகிறது என்?’ என்று கேட்க, ‘ஸ்ரீஜனகராஜன் திருமகள் காட்டிலே கூடப் போய் அவர் இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடந்தோறும் கூட இருந்து அனுபவித்தாற்போலே, நானும் அவன் இருந்த இடத்தே போய்ப் புக்கு அல்லது நில்லேன்,’ என்றாள்; அதனைக் கேட்ட அவர்கள், ‘உன் தலைமைக்கு இது போராது: நீ சொல்லுகிறது வார்த்தை அன்று,’ என்ன, அவர்கள், ‘அதற்கு நாங்கள் வழிப்படோம்’ என்ன, ‘ஆகில், 3நானேயாகிலும் போகை தவிரேன்,’ என்கிறாள் என்று 4பிள்ளான்பணிப்பர்.

5ஸமா த்வாதச தத்ர அஹம்-இப்போது ஒருவேளை தரிசனமுங்கூட அரிதாம்படி இருக்கிற நான், முன்பு பல காலம் அவரோடே அனுபவிக்கப் பெற்றேன்காண்! ராகவஸ்ய நிவேசநே-எங்கள் மாமனாருடைய மாளிகையிலே அவர் தண்ணீர்த் துரும்பு அறுத்துத் தர, நெடுங்காலம் அனுபவித்தேன். புஞ்ஜாநா மாநுஷாந் போகாந்ஸர்வகாம ஸம்ருத்திநீ- 1‘எல்லாக் காமங்களையும்’ என்கிறபடியே, ‘ஸர்வாந் காமாந்’ என்றது, தைத்.- எல்லாம் அனுபவிக்கப் பெற்றேன். 2அப்படியும் அன்றே இங்கு: 3‘அரசனே! கல்யாண குணங்கள் பல’ என்கிறபடியே, குணங்கள் இரட்டித்த இடம் அன்றோ இது? ‘பஸவோ ந்ருப கல்யாண குணா:’  என்பது, ஸ்ரீராமா, அயோத். 2:26.

4‘ஆக, இதனால் என் சொல்லியவாறோ?’ எனின், ‘நமக்கு ஐம்புல இன்பங்களினின்றும் இந்திரியங்களை மீட்க ஒண்ணாதவாறு போலே அன்றோ இவரைப் பகவத் விஷயத்தினின்றும் மீட்க ஒண்ணாதபடி?’ என்பதனைக் கூறியவாறு. 5அது கருமம் அடியாக வருகிறது: இது பகவானுடைய திருவருள் அடியாக வருகிறது. 6‘திருத்தாயார் பேச்சாக வருமவை, ஆழ்வாருக்குப் பிறந்த நிலை விசேடம்: தலைமகளாய்ப் பேசுகிறதும், இவர்க்குப் பிறந்தது ஓர் அவஸ்தா விசேடம்: அங்ஙனம் இருக்க, விலக்குவதும் போவதாகக் கூறுவதும் ஒருவர்க்கே கூடுமோ?’ எனின், அவற்றுள், விலகுகின்ற திருத்தாயார் முகத்தாற்சொல்லுகிறது, ‘சொரூபமான பிராவண்யம் உபாயத்திற்சேர்ந்தால் செய்வது என்?’என்னுமதற்குச் சொல்லுகிறது; பெண்பிள்ளை கருத்தாற்சொல்லுகிறது. ‘உபாயம் அவனேயாகில் பிராவண்யம்சொரூபமாமத்தனை அன்றோ?’ என்று சொல்லுகிறது. ஆக, இவ்விரண்டு அர்த்தத்தையும் இரண்டு முகத்தாலே ஆழ்வார் தாம் அநுசந்தித்தபடியைச் சொல்லுகிறது. 7மோகமும் தெளிந்து தானே கூப்பிட வல்லளான இதுவே, இத்திருவாய்மொழிக்கு ஏற்றம்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழிஏந்தித்
தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக்காணீர்!
என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன்நானே.

பொ-ரை : தாய்மார்களே! வெண்ணிறத்தையும் உள் சுரிந்திருத்தலைமையுடைய ஸ்ரீபாஞ்சசன்யம் என்னும் சங்கோடு சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்திக்கொண்டு தாமரைக்கண்ணனான எம்பெருமான் என் மனத்திற்குள்ளே கருடப்பறவைச் செலுத்துகின்ற விதத்தைக் காணுங்கோள்; அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்! பேரின்ப வெள்ளத்தையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற, வேதங்களின் ஒலியும் திருவிழாக்களின் ஒலியும் குழந்தைக் கூட்டங்கள் விளையாடுகிற விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்தை நான் அடைவேன் என்கிறாள்.

வி-கு : சுரிதல் – உள்ளே சுழித்திருத்தல், கடாவுதல்-ஏறிச்செலுத்தல். காணீர் -காண்கின்றிலீர் என்னலுமாம். வீற்றிருந்த திருப்பேரெயில் என்க. ‘ஒலியும் ஒலியும் விளையாட்டுஒலியும் அறாத்திருப்பேரெயில்’ என்க.

இத்திருவாய்மொழியில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

ஈடு : முதற்பாட்டு. 2இந்தப் பிராட்டி, சொற்களால் சொல்ல முடியாதபடி தனக்கு உண்டான வியசனத்தாலே, தென்திருப்பேரெயில் போகவேணும் என்று தனக்குப் பிறந்த நிலைய் வினவுகிற திருத்தாய்மார்க்குச் சொல்லுகிறாள்.

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி – 1‘தவள ஒண்சங்கு சக்கரம்’ -திருவாய். 6. 5:1.-என்றும், 2‘கூரார் ஆழி வெண்சங்கு’ திருவாய். 6. 9:1.-என்றும், 3‘சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்’ -7. 2:1.-என்றும் கையும் திருவாழியுமான அழகு கைவிடாதே இவரைத் தொடருகிறபடி. முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் 4பரபாகமான வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும்,5அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச் சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி, தாமரைக் கண்ணன்- 6‘தாமரைக் கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி. 7திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள் பிரகாசகமாய் இருக்குமாறு போலே, ஆத்துமகுணங்களுக்குத் திருக்கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி. என்றது, ‘அகவாயில் தண்ணளி எல்லாம் கண்வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி. பகைவார்களுக்குத் திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக்கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ, அனுகூலர்க்குத் திருக்கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி? 8திருக்கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக்கண்களையும் சேர்த்து அனுபவிப்பர்கள். 9ஆயுதங்களோடே

திருக்கண்களைக் கூட்டுகிறது, தோற்பித்தபடிக்கு; 1‘உனக்குத் தோற்றோம்’ என்னப் பண்ணுமன்றோ? கண்களோடு திவ்விய ஆயுதங்களைக் கூட்டுகிறது அழகுக்கு. 2இவ்விடத்தே நிலாத்துக் குறிப்பகவர் வார்த்தையை அருளிச்செய்வர்சீயர். 3கைக்கு ஆழ்வார்கள் ஆபரணமாய் இருக்குமாறு போலே ஆயிற்று, முகத் திருக்கண்கள் ஆபரணமாய் இருக்கும்படியும். 

        4‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன்-செருக்கிளரும்
பொன்ஆழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்ஆழி வண்ணன்பால் இன்று’

என்று வடிவழகைப் போன்று திவ்விய ஆயுதங்களும் ஆபரணமாய் அழகியனவாயன்றோ இருப்பன? 5ஆழ்வார்கள் தாம் அவனைக் கைசெய்திருக்கையாலே ஆபரணகோடியிலே இருப்பார்கள். கை செய்தல் – அலங்கரித்தல்.

என் நெஞ்சினூடே-தங்கள் நெஞ்சல் இல்லாமையாலே இது கூடாது என்று இருப்பார்கள் அன்றோ? ஆதலின், ‘என் நெஞ்சினூடே’ என்கிறாள். என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்- 6‘இவர்க்கு மயர்வு அற மதிநலம் அருளி ‘நெஞ்சமே நீள்நகர்’ திருவாய்மொழி
3. 8:2. -என்னும்படியன்றோ திருத்திற்று?’ ஒருதிரிபாத்விபூதியிலும் இடம் உடைத்தாயிருக்கை. 1திருவடி திருத்தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச் சாரிகை வந்து காட்டுமாறு போலே, இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு ஏறுகிறபடி. நெஞ்சினூடே-2‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள். 3‘குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்துமாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’ என்னுமாறு போலே.நிர்குண: பரமாத்மாஸென தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’-என்பது, பாரதம், ஆரண்

‘நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக்காண்’ என்று இருக்கிறாள் இவள். 4ஒரு வாசத்தடத்தில் அன்னங்கள் சக்கரவாகங்களை போன்ற ஆழ்வார்களும், காடுபட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும், அத்தடாகத்தில் நீரும் இலையும்போலே இருக்கிற திருமேனியுமாய்,

கினிய-கபளீகரிக்க.

‘மாயக் கூத்தா! வாமனா! வினையேன் கண்ணா! கண்கைகால்
தூய செய்ய மலர்களாச் சோதிச் செவ்வாய் முகிழதாகச்
சாயல் சாமத் திருமேனித் தண்பா சடையா தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவாளே! ஒருநாள் காண வாராயே.’என்பது, திருவாய். 8. 5;1.


கருமுகில் தாமரைக் காடு பூத்துநீடு
இருசுடர் இருபுறத் தேந்தி ஏடலர்த்
திருவொடும் பொலியவொர் செம்பொற் குன்றின்மேல்
வருவபோற் கழலுன்மேல் வந்து தோன்றினான்.-
என்பது, கம்பராமா. திருவவதாரப். 13.

அதனைக் கினிய ஒரு மேரு தாங்கினாற்போலேஇருக்கிற பெரிய திருவடியோடே கூட இவர் திருவுள்ளத்தே உலாவுகிறபடி. 1இப்படியே அன்றோ அநுகூலரோடு பரிமாறும்படி?

    2நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்தருளாநிற்க, வழியிலே திருக்குருகைப்பிரான்பிள்ளானைக் கண்டு ‘‘ஈஸ்வரனுக்குச் சொரூப வியாப்தியேயோ, விக்கிரஹ வியாப்தியும் உண்டோ?’ என்று கேட்க, பாஷ்யகாரர் தோற்ற அருளிச்செய்துகொண்டு போந்தது, சொரூப வியாப்தியாய் இருக்கும்; ஆகிலும், எம்பார் ஒரு நாள் ‘உபாசகர்கட்கு அநுக்கிரஹம் செய்தற்பொருட்டு அடியார்களுடைய நெஞ்சிலே விக்கிரஹத்தோட வியாபித்திருக்கும்’ என்று அருளிச்செய்யக் கேட்டேன்’ என்று பணித்தான்;’ 3‘மனமாகிய குகையில் வசிப்பவர்’ என்றும், ‘மனத்தில் இருப்பவரும் புராணபுருஷரும்’ என்றும்,குஹாயம்’ தைத். ஆரண். கஹ்வரேஷ்டம் புராணம்’, கடோபநிஷத். 

‘அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து’ பெரியாழ்வார் திருமொழி, 5. 2:10.-என்றும், ‘எவர்களுடைய மனத்தில் கருநெய்தல் போன்ற நிறத்தையுடைய பகவான் நன்கு எழுந்தருளி இருக்கிறாரோ’ என்றும்,

‘ஏஷாம் இந்தீவர ஸ்யாம: ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித;’என்பது, ஸ்ரீராமா.-

‘என் நெஞ்சினூடே புள்ளைக் கடாகின்ற’ என்றும் வருவனவற்றைக் காண்க.

4
தியானத்திற்குப் பற்றுக்கோடு தெரிவிக்கும் இடங்களிலும் ‘தன்னால் விரும்பப்படுகிறவனுக்கு இந்தப் பரமாத்துமா தன் சொரூபத்தைக் காட்டுகிறான்’ என்கிறபடியே

தஸ்யஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’-என்பது, முண்டகோபிநிடதம்.. 3. 2:3.

அவ்வடிவே ஆயிற்றுத்தியானிக்கத் தக்கதாகச் சொல்லுகிறது; பின்பு 1‘இந்த ஆலிங்கமானது எல்லாப் பொருளுக்கும் சமானமாகக் கடவது,’ என்று கொடுப்பது அவ்வடிவேயாயிற்றுஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து பரிஷ்வங்கோ ஹநூமத:’-என்பது, ஸ்ரீராமா.யுத். 1:13.

2புறம்புள்ளார் சொன்னபடி சொல்லுகிறார்கள்; நம் ஆழ்வார்கள் போனவழி இதற்கு மேற்பட இல்லை: 3‘இதற்கும் உள்ளே ஒன்று உண்டு’ என்று சொல்லுகிறவர்கள், சொரூபத்தின் உண்மை சொல்லுகிறார்களித்தனை; விக்கிரஹம் இல்லை என்று அன்று. புள்ளைக் கடாநின்ற-4‘அகவாயில் நின்று சுழிக்கு மத்தனையோ?’ என்று அவன் விரைந்து வடிம்பு இட்டுத் தாக்க ‘ஓம்காண்! நீ அறிந்தாயோ?’ என்று தூண்டி மீளாநிற்கும்;5‘அறிவுள்ளவனுடைய’ என்கிறபடியே, பக்ஷபாதத்தோடே சேர்க்கையிலே அன்றோ அவனுக்கும் பணி? கடாகின்ற –6நடந்துபோனதாய் மறக்கிறீர்கள் அன்று; இனி வருவதனை உபதேசிக்கிறது அன்று; இப்பொழுது நடப்பதற்கு உபதேசம்வேணுமோ? காணீர் – 1காண்கின்றிலீர். இப்பொழுது நடக்கிறதும் காணாமலே ஒழிகிறது தடுக்கின்ற நிர்பந்தத்தாலே அன்றோ? உங்களுக்குக் குரகோஷம் கேட்கிறது இல்லையோ? பிரசித்தமான பொருளை உபதேசிக்க வேண்டுவதே. காணீர்-உங்களுக்குக் கண்களும் செவிகளும் இன்றிக்கே இருந்தோ தடுக்கிறது? என்னைப் போலே உட்கண்ணாலே காணீர்கோள்! ‘நாங்கள் கண்டிலோம்; கண்ட நீ சொல்லிக்காணாய்!’ என்றார்கள்; என்ன, சொல்லுகிறாள் மேல்:

என் சொல்லிச் சொல்லுகேன் – எனக்குச் சொல்லலாவது இல்லை! என்ன பாசுரமிட்டு எதனைச் சொல்லுவது? 2உங்கள் கண்களுக்கு விஷயம் ஆகாதவாறு போலே என் வாக்கிற்கும் விஷயம் ஆகிறது இல்லை. 3இவர்க்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ளுகிறது இல்லைகாணும்! என் சொல்லிச் சொல்லுகேன் – 4நான் வலிமை குன்றியவளாக இருப்பதனாலே சொல்லமாட்டேன். விஷயம் இவ்வளவு என்று சொல்ல முடியாமையாலே சொல்லி முடிக்கப் போகாது; எண்ணிப் பார்த்தற்கு உங்களுக்குப் பரிகரம் இல்லாமையாலே சொல்லத்தான் வேண்டா. அன்னைமீர்காள்- 5அறிந்த விஷயங்கொண்டு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக்கொள்ளல் செய்யலாம் அன்றோ எனக்கு ஒத்தவர்கள் ஆனிர்கோளாகில்? என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள் – 1எனக்கு ஓடுகிற வியசனத்துக்குப் பாசுரம் இல்லை; நிலையை அறியும் ஞானம் இன்றிக்கே பழமை கொண்டாடுகின்றீர்கோள் இத்தனையன்றோ? விலக்குவதற்கு என்னைப் பின்பற்றி வருகின்றவர்களாமத்தனையோ வேண்டுவது? 2‘எங்களுக்குக் காணவும் கேட்கவும் கண்ணும் செவியும் இல்லையாகில், நீதான் செய்யப் பார்த்தது என்?’ என்ன, ‘ஹிதம் சொல்லி மீட்க நினைப்பர் இல்லாத ஊரிலே போய்ப் புகுமித்தனை அன்றோ?’ என்கிறாள் 3‘முத்தன் சனங்களின் மத்தியில் உள்ள இந்தச் சரீரத்தை நினைப்பது இல்லை,’ என்கிறபடியே,நோபஜனம் ஸ்மரந் இதம் சரீரம்’

சாந்தோக்யம். 8. 12:3. பிரிந்தவர்கள் நினைக்க ஒட்டாத தேசம் அன்றோ?

வெள்ளம் சுகமவன்-இன்பவெள்ளத்தையுடயவன். என்றது, ‘பிரிந்திருக்கும் நிலையிலும் கலந்திருக்கும் காலத்தில் உண்டாகிற பேரின்பம் மாறாதவன்’ என்றபடி. ‘என்றது, என்சொல்லியவாறோ?’ எனின், ‘பிரிவிலும் அரையாறு படாதபடிகாணும் கலவியில் அவன் தேக்கின பேரின்பம் இருந்தபடி’ என்பதனைச் சொல்லியபடி. ‘வெள்ளை’ என்பது பாடமானபோது, மறுவற்ற இன்பம் என்று பொருள் கொள்க. அவன் வீற்றிருந்த – 4‘இட்ட கால் இட்ட கையளாய் இருக்கிற இருப்புக்கு எதிர்த்தட்டாயிருக்கிற இருப்பு அன்றோ அது?’ என்றது, இத்தலையைத் துடிக்கவிட்டுத் தன் ஐஸ்வரியம் தோற்ற மேலான சுகத்தோடு இருக்கிறபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, 5இத்தலையைத் தோற்பித்த தன் வெற்றிஎல்லாம் அவ்விருப்பிலே தோற்றும்படி இருக்கிறபடி என்னுதல். 1அவன் மெய்ம்மறந்து அப்படி இருந்தால் நாமும் மெய்ம்மறந்திருக்கவோ? நிறைவாளனாய் அவன் செருக்காலே இருந்தால், குறைவாளராய் நோவுபடுகிற நாமும் இருக்கவோ? 2அவன் முறை தப்ப நின்றால் நாமும் முறை தப்புமித்தனை அன்றோ? 3 பிரிந்தால் முறை பார்த்திருக்கலாம்; விஷயத்துடனே கலந்தோமாகில் அன்றோ நாம் ஆறி இருக்கலாவது? முறையை அழித்தாகிலும் மடலை எடுத்துக் கொண்டு போமித்தனை அன்றோ? 4‘நமக்கே நலம் ஆதலின்’ என்னக் கடவதன்றோ?-பெரிய திருமொழி. 9. 3 : 9.

வேத ஒலியும் – அவன் நெஞ்சு ஒழிந்து 5பழம்புணர்ப்புக் கேளாநின்றான்காணும். என்றது, பண்டு தான் வென்ற வெற்றி மாலைகள் கேட்கையைத் தெரிவித்தபடி. அதாவது, ‘புண்டரீகாக்ஷனே! உனக்கு வெற்றி’ என்கிற வெற்றி மாலைகளைத் தெரிவித்தபடி. விழா ஒலியும் – இவளைத் தோறிபித்ததற்கு 6நெய்யாடல் போற்றுகிறபடி. அறா-தீர்த்தம் கொடுத்த பிற்றை நாளே திருமுளைச் சாத்தாநிற்குமத்தனை. 7சமந்தகமணி கைப்பட்ட பின்பு அக்குரூரன் அடுத்து அடுத்து அஸ்வமேதம் செய்தாற் போலே, அவர்க்கும் அடுத்து அடுத்துத் திருவிழாவாகச் சொல்லுகிறதித்தனை; பெண்மணி அன்றோ இவள்? இவள் இருக்கிற இடம் அன்றோ மங்கள ஒலிகள் மாறிக்கிடக்கிறது? பிள்ளைக்குழா விளையாட்டு ஒலியும் அறா-8பருவம்நிரம்பி இருக்கச்செய்தே விலகுகிறவர்கள் இருக்கிற ஊரை விட்டு, பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள். 1அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகரநெடுங்குழைக்காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவாநிற்பர்கள்.2‘விளையாடும் இளம்பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர் இராமதோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.
‘பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
ராமாபிஷடவ ஸம்யுக்தா: சக்ருரேவ மித: கதா:-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.
3
‘ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே. ப்ரஜாநாம பவந் கதா:- பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே. ராம்பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி. ‘நித்தியவிபூதியில் பரிமாறக்கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில், ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம்பாக்யமே அனுபவித்துவிட்டது.’

‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
ராம்பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’-என்பது, உத்தரராமாயணம்.

4‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை.

‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:-என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.

நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:- கொண்டு ஆழக்கடவ தண்ணீர் தானே கொண்டு மிதக்கப் புக்கது இராமசரத்துக்கு அஞ்சி. 1பண்டே கைகண்டு இருப்பது ஒன்றே தண்ணீர்தான். 2வேலை வேவ வில் வளைத்தவனை அன்றோ? திருப்பேரெயில் சேர்வன் நானே- 3வென்றார் இருந்த இடத்தே தோற்றார் சென்று விழுமத்தனை அன்றோ? 4தாமரைக்கண்ணன் என் நெஞ்சுனூடே அன்றோ? ஆகையாலே ‘உனக்கு வெற்றி’ என்று சென்று விழுமத்தனையேயாம்.

 

மோகித்து கிடந்தவள் -இப்பொழுது -சங்கதி என்ன –
இரண்டு சமாதானம்
பூர்வர் -தாயார் சொல்லிய திருநாமம் காரணம் –
-திரு குருகை பிரான் பிள்ளான் -சம்ச்லேஷம் பெற்றாள் இழக்க கூடாது என்று
சம்ச்லேஷம் பிரிவில் முடியும்
அவனை நினைந்து உருகுகிறாள் –
இவளும் தோழி மாறும் தரைப்பட -என்னில் முன் அவனுக்கு மாள்வர்-
திருத்தாயார் மட்டும் -இளைய பெருமாள் தரித்து இருந்தாப் போலே –
அதுவும் தவிர்ந்து
இவள் தானே எழுந்து இருந்து கால் நடை தந்து போந்தாள்
பற்றாசன குணங்கள் பற்றிலார்பற்ற நின்ற -அசரண்யா சரண்யதவம் காட்டி
இவள் வாய் வெருவியும் –
உடம்புக்கு பலம் திருநாமங்கள் சொல்ல சொல்ல –
தாயார் சொல்லவும் கேட்டு தரிக்க
போன உயிர் மீட்கும் படி இ றே திருநாம சங்கீர்த்தனம்
மிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் -பட்டர்

விஸ்லேஷ விசனம் தானே அனுசதிக்க வல்லவள்
ஆற்றாமை பிறந்து
பெறாமையாலே துக்கம் மேலிட
மகர நெடும் குழை காதன் -மீன் உருவில் குழை -ஆபரணம் –
மகராலய காரண பாச –
அவன் இருந்த இடம் புக ஒருப்பட
நமக்கு பழி ஆகும் தோழி தாயார் சொல்ல
ஸு பிரவர்த்தி ஆகுமே –
நீங்கள் தடுப்பதால் பிரயோஜனம் இல்லை
சிந்தை அபகரித்தான்
நீங்கள் என்னை அங்கே சேரப் பார்க்க வேண்டும் –
என்னோடு உடன்பட்டு -நானே போவது ஆகாமல் –
தனக்கு பிறந்த துணிவை அவர்களுக்கு அறிவித்து
அன்றிக்கே பிள்ளான் பணிக்கும் படி
முகில் வண்ணன் அடியே அடைந்து -சம்ச்லேஷம் பெற்று –
மண்டை வெடிக்கும் ரசம் ஆனந்தம் மிக்கு -உன்மச்தகம் –
அனுபவம் ஏற்பட்டு
பிரிந்து கூடாவிடில் இரண்டு தலைக்கும் -அழிவு வருமே
எல்லை மீறிய ஆனந்தமும் கூடாதே
குரவை கூத்தில் மறைத்து கொண்டானே அது போலே
பராங்குச நாயகி அழிந்தால் அவனால் தரித்து இருக்க முடியாதே
நீராக கலப்பது தரமி இரண்டும் கூடி
தரமி லோப பர்யந்தம் பிரியா விடில் –

பிரிவை பிரசங்கம் செய்ய
மேலே போவது கீழே வரும்
ஜீவிதம் மரணம்
சம்ச்லேஷம் பிரிவு –
விச்லேஷதில் வாசனை அறியாதவள் போலே கலந்தவள்
கலவியில் இதுவும் ஒரு வகை என்று அனுமதிக்க
விச்லேஷம் -சம்ச்லேஷம் இரண்டுக்கும் வாசி இன்றி –
வேட்டை நிமித்தமாக புறப்பட
இவளும் திரு வணக்கம் திருவாசல் ஆர்யா பட்டாள் வாசல் வரை வர
அந்த புர பத்னி படி தாண்டா பத்னிகள்-
மீள வந்ததும் -பிரிவு அதன் கார்யம் துக்கம் செய்ய
நோவு பட புக –
இருந்த இடம் நின்ற இடம் உலாவின இடம் தோறும் கூட இருந்து அனுபவித்த சீதை பிராட்டி போனது போலே –
போய் புக்கு அல்லது விடேன் –
பழி வரும் -தலைமைக்கு சேராது தாய்மாரும் தோழி மாறும் சொல்ல –
போவது தவிரேன் -நீங்களே கொடு போய் விடுங்கள் என்ன –

போகத்தான் போவேன் பிடிவாதம்
துக்கம் வரக் காரணம் தான் வாசி –
காதா சித்த தர்சனமும் பெறாத சீதை 12 வருஷம் அனுபவிக்கப் பெற்ற
தண்ணீர் துரும்பு அறுத்து கொடுத்த தசரதர்
அமானுஷான் போகான் -ச்தோதுதே சர்வான் காமான் என்கிறபடியே அனுபவிக்கப் பெற்றேன்
பரம பதத்தில் காட்டில் வாசி
அப்படி அல்லை இங்கு
குணங்கள் இரட்டித்து இருந்த இடம் ராமாவதாரத்தில் –
பெரிய திரு மொழி -ஐதீகம்
அவதரித்து பெருமையா
சுந்தர பாண்டிய தேவன் கேட்டானாம் நஞ்சீயர் இடம்
சௌ லப்யாதிகள் காட்ட முடியாதே
பகவா -இரட்டித்து இருக்கும் –
காமா -விடு பட்டபோன ஜீவாத்மா எம்பெருமான் திருக் கல்யாண குணங்கள் அனுபவிக்க –
பராங்குச நாயகி -அது போலே பெரிய பெருமாள் உடன் சம்ச்லேஷம்
அர்ச்சாவத்காரம் பூர்ணம்
குண பூர்த்தி இதில் தானே

ப்ரீதி அளவற்று இருக்க -விச்லேஷதில் அதிகம் துக்கம் இருக்குமே –
சப்தாதி விஷயங்களில் இந்த்ரியங்களை மீட்க ஒண்ணாதது போலே
இவருக்கு பகவத் குண அனுபவம்
பகவத் பிரசாதத்தால் வந்தது
தசா விசேஷம் -தாயார் சொல்வதும் உண்டு இந்த திருவாய்மொழியில் -உபாயத்தில் துணிவு –
தலை மகளாய் பேசுவதும் இவருக்கு ஒரு தசா விசேஷம் -பிராவண்யம் ஸ்வரூபம் என்பதால் –
கோஷ்டிக்கு போவது சாதனம் இல்லை பலம் என்ற எண்ணம் வேண்டுமே
கைங்கர்யம் பலம்
ஈடுபாடு உபாயமாக கொள்ளக் கூடாது
உபாயம் அவனே ஆகில் பிராவண்யம் ஸ்வரூபம் தலை மகள்
இரண்டு அர்த்தத்தையும் இரண்டு முகத்தால் அனுசந்திக்கிறார் ஆழ்வார்
பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும்
பேற்றுக்கு த்வரிக்கையும் –
மோகம் தெளிந்து தானே கூப்பிட வல்ல ஏற்றம் இந்த திருவாய் மொழி

வாக்கு எட்டாத தசை பிறந்து -தென் திருபேரையில்-திவ்ய தேச திரு நாமம் –
சைதா பேட்டை சைதை
மயிலை போலே
புதுவை ஸ்ரீ வில்லிபுத்தூர் -சுருக்கி சொல்வது போலே
வெள்ளை சுரி சங்கோடு -ஆலியொடு தாமரைக் கண்ணன் புள்ளை கடாவுகிறான்
நெஞ்சுக்கள் கருட வாகனம் காணலாம்
சுக வெள்ளத்துடன் வீற்று இருந்து
வேத ஒலி விழா ஒலி பிள்ளைகள் விளையாடும் ஒலி-மூன்றும்
தவள வெண் -கையும் திருஆழி-சேர்த்தி அழகாய் விடாமல்
கைவிடாதே அனுவர்த்திக்கிறார்
முகில் வண்ணன் -நிகரில் முகில் வண்ணன் -நேமியான் -இந்த திவ்ய தேசம்
பெரிய பெருமாள் முகில் வண்ணன்-
அத அளவுக்கு ஆழ்வார் ஈடுபட்டார்
சுரி சுழல் வலம் புரி
விசேஷணம் சொல்ல முடியாத ஆழி
தாமரைக் கண் பின்னாட்ட
திருமேனி பிரகாசம் திவ்ய ஆயதங்கள்
ஆத்மா குணங்களுக்கு நோக்கு பிரகாசகம்
அகவாயில் தண்ணளி தொடருமே கண்ணிலே
விரோதிகள் திருக்கண் திவ்ய ஆயுதங்கள் இரண்டும்
அழகுக்கு உடலாய் அனுகூலருக்கு

பராக்கிரமம்
அழகு இரண்டும்
சங்கோடு சக்கரம் -பங்கயக் கண்ணன் ஆண்டாள்
திரு நாபி கமலமும் தாமரை திருக்கண்களும் தாமரை
உந்தி வாய் இடம் தாமரை ஆங்கு மலரும் ஆங்கு குவியும்
ஓங்கு கமலத்து -சக்ராயுதம் சூர்யன் போலே சந்காயுதம் சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் –
கிருபை கண்ணை மூட ஒட்டாது –
கர்மம் மலர ஒட்டாது –
ஜிதந்தே என்னப் பண்ணும் இ றே திருக்கண்களும் திவ்ய ஆயுதங்களும்
கண்களுடன் -நிலாத்துக் குறிப்பகவர் -சந்திர சேகரர் ஏகாயனர் தவி புஜனா சதுர புஜனா பரமபதத்தில்
சங்கு சகர கதா தர தமாசா பரமோ -பிரமாணம்
பட்டர் -பெரியபெருமாள் நம் பெருமாள் இரண்டும் அழகு தானே
வேங்கட கிருஷ்ணன் பார்த்த சாரதி போலே
கைக்கு ஆயுதங்கள் ஆபரணம் போலே முகத்துக்கும் கண்கள் ஆபரணம் –
கை செய்து இருக்கையாலே ஆழ்வார்கள் -அனுபவம்

என் நெஞ்சினூடே-
தங்கள் நெஞ்சில் இல்லை
புள்ளை கடாவி
நெஞ்சமே நீள் நகர் -ஆழ்வாரை திருத்தி
ஒரு திருபாத் விபூதி விட பெரிய
திருவடி திருத் தோளில் ஏறி ஒய்யார நடை -ஏசல் -சாரிகை -ஆடி ஆடி அசைந்து காட்டி –
அழகு செண்டேரும்படி -நெஞ்சுக்குள்
புள்ளைக் கடாவுகின்றான் –
அகவாயில் உள்ளது கண்ணுக்கு தெரியாதோ -என்று இருக்கிறார்கள்
பீமா சேனன் ஹனுமான் -இருவரும் வாயு புத்திரன்
மாதவா சம்ப்ரதாயம் வாயு பிராண தேவதை
வாலை மடிக்காமல்
ஸ்வரூபம் காட்ட -ஹிருதயத்தில் சக்கரவர்த்தி திருமகன் சேவை சாதிக்க
கையும் வில்லுமாக
குணத்துடன் கூடிய வில் இல்லை
நாண் அறுந்து நிர்குண என்று அர்த்தம்
அது போலே புள்ளை கடாவுகின்ற

நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருப்பவள் பராங்குச நாயகி –
ஒரு வாசத் தடத்தில் ஹம்ச சக்ர வாகம் அன்றில் பறவை போலே
திவ்ய ஆயுத ஆழ்வார்கள்
திரு ஆழி -சக்ர வாகம்
செம்கமல -அன்னம் போலே -ஹம்சம் திரு சங்கு ஆழ்வார்
வாசத் தடம் எம்பெருமான்
தாமரை -செம்கமலம் போலே வாய் கண்
மேரு வகுத்தாப் பொழு கினிய -பூ ஏந்தினது போலே
திருவடி இவர் உள்ளத்தில் உலவுவது
தோளுக்கு இனியான் கினியான் -பிரிக்கலாம்
அனுகூளர் இடம் இப்படி பரிமாறுபவன்
மானச அனுபவம் தானா சங்கை
அந்தர்யாமித்வம் இப்படி உண்டா ஸ்வரூபம் மட்டுமே
விக்ரஹ வ்யாப்தியா ஸ்வரூப வ்யாப்தியா சங்கை
ஸ்வரூபம் அவன் ஆத்மா ஞானத்தால் வ்யாப்தி நமக்கு
ஆத்மா சரீரம்முழுவதும் வ்யாப்தி இல்லை
யானை எறும்பு அளவு பெரியது சிறியது -த்வைதி நிர்வாகம்
அழிவுக்கு இடமாகும் நித்ய தத்வம் ஆகாதே

பரிபூர்ண வ்யாப்தி அவனுக்கு
விக்ரஹ வ்யாப்தி சொல்லப் படுகிறது இங்கே
நஞ்சீயர் கோயிலுக்கு எழுந்து அருள நிற்க
வழியில் திரு குருகை பிள்ளானைக் கண்டு –
நஞ்சீயர் சம்ப்ரதாயம் வந்தது எம்பெருமானார் பரம பதித்த பின்பு
வெங்கடேச இதிகாச மாலையில் அனந்தாழ்வான் அருளிச் செய்தது
திரு மலை நம்பி வம்சம் இன்றி பரம பதம் எழுந்து அருளி
பிள்ளான் எம்பெருமானார் காலத்துக்கும் பிற்பாடு இருந்து இருக்கிறார்
திருமலை நம்பி குமாரராக இருக்க முடியாதே பிள்ளான் –
வடுக நம்பி எதிராஜ வைபவத்தில் பிள்ளான் திருமலை நம்பி திருக்குமாரர்
அது அவர் செய்தது இல்லை என்பர்
சகரவதி திருமகன் ஏரி காத்த நாமம் பிற்காலத்தில் ஏற்பட்டது
எதிராஜ வைபவத்தில் ஏரி காத்த ராமனை ராமானுஜர் மங்களா சாசனம் செய்தார்
வடுக நம்பியா சங்கை வரும்

வழியிலே சங்கை நஞ்சீயர் கேட்க
ஈஸ்வரனுக்கு ஸ்வரூப வ்யாப்தியோ விக்ரஹ வ்யாப்தியோ
பாஷ்யகாரர் -கீதா பாஷ்யம் ஸ்ரீ பாஷ்யம்
ஸ்தோத்ரம் அருளிக் கொண்டு போந்தது ஸ்வரூப வ்யாப்தியாய் இருக்கும்
ஆகிலும் எம்பார் -உபாசக அனுக்ரக அர்த்தமாக ஆஸ்ரிதர் நெஞ்சுக்குள் விக்ரக வ்யாப்தியும் உண்டு –

என்று அருளிச் செய்ய கேட்டு இருக்கிறேன்
த்யானம் செய்ய இப்படி திரு மேனி உடன் கூடியே அனுபவம்-

த்யானம் உருவகப்படுதியே -விக்ரகம் வேண்டுமே –
அர்த்த பஞ்சகம் அந்தர்யாமித்வம் இரண்டு படி பட்டு இருக்கும்
பிள்ளை லோகாச்சார்யர்
ஏகாந்தமாக சொல்லி இப்படி அருளி –
குகாயாம் -பிரமாணம் -காட்டி –
அரவதமளியினோடும் அழகிய பாற்கடலோடு
இந்தீவர ஸ்வாயாமாக
இப்படி சொல்லுகிற படி -விக்ரக வ்யாப்தி உண்டு –
ஆழ்வார் அருளியதே பிரமாணம்
ஸ்ரவணம் மனனம் –தனு திரு மேனி வடிவையே த்யானதுக்கு
பலமாக ஏஷ சர்வ பூதேஷு பரிஷ்வங்க -திருமேனியையே
தஸ்மின் -அதுக்குள் யாதொன்று இருப்பதோ உபாசனம் புறம்புள்ளார் சொல்ல
அவனுக்குள்ளே உள்ள திருக்கல்யாண குணங்கள் திருமேனி தான் உபாசனம் நம் பூர்வர் வியாக்யானம்
எம்பெருமானுக்கு விக்ரகம் உண்டு
ச விக்ரகனாய்க் கொண்டு பெரிய திருவடி உடன்
கடாகின்ற -காலால் கையால் உதைத்து -ராஷனம் பாரிப்பு
அசேதனம் போலே துரத்தி –
பஷபாததுடன் சேர்ப்பதே அவனுக்கும் பணி

வேட்டைக்கு புக -தென் திருபேரையில் -இவளும் புக போகிறாள் –

எம்பெருமானார் வார்த்தை -நம் பெருமாள் மழைக்காக -திரு ஆனைக்கால் கோயிலுக்குள் எழுந்து அருள
ராஜ எங்கும் போகலாம் ராஜ மகிஷி போக முடியுமா –
பேற்றுக்கு த்வரிக்கிறாள் பராங்குச நாயகி-

அனுகூலர்களுக்கு சவிக்ரக பூதனாய் அந்தர்யாமி எழுந்து அருளி –
தஸ்மின் வேத வாக்கியம் -ஆழ்வார்கள்
அவனுக்கு உள்ளே இருக்கும் ஸ்வரூப திவ்ய மங்கள விக்ரக குணங்களை த்யானிக்க -காட்டி அருளி
புள்ளைக் கடாகின்ற நடத்திக் கொண்டு
அகவாயில் -பரிவு மிக்கு -நீ அறிந்தாயோ என்று பிரேரித்து
செலுத்துவான் –
வேகம் இருவருக்கும் போத வில்லை என்ற எண்ணம் -பொங்கும் பரிவால் இருவருக்கும் போட்டி
இளைய பெருமாள் -லஷ்மனச்ய தீமதாக -கங்கை கலங்காதது போலே
ஆஸ்ரிதர் பாஷா பாதம் -இறக்கை அடித்து -கடகர் கிருத்தியம் கமன சாதனம்
சேர்க்கையிலே பணி-
கடாகின்ற வர்த்தமான
பவிஷ்யமாக உபதேசிக்க வில்லை
நடந்ததை நினைவு படுத்த வில்லை -பூதமாய் விஸ்மரிக்க
கண்ணாலே பார்க்க உபதேசம் வேண்டுமா –
காணீர் -காண வில்லையே
வர்த்தமான கார்யகரம் இன்றி ஒழிகிறது
தடுக்க விரதம் கொண்டு இருக்கிறீர்கள்
பறவை ஒலி கேட்க வில்லையா –
பிரசித்தமான அர்த்தம்
கண்ணாலும் காண வில்லை காதாலும் கேட்க வில்லை
என்னைப் போலே உள் கண்ணாலே காண மாட்டீர்களே
நாங்கள் கண்டிலோம் கண்ட நீ சொல்லு என்ன
வார்த்தைக்கு அப்பால் பட்டது
வாக்குக்கும் விஷயம் இல்லை
இவருக்கு நெஞ்சு நிறைந்தது வாய் கொள்ள வில்லை
பாலா ஹானியால் சொல்ல முடியாது
உருகி இருக்கிறாள்
அடுத்த காரணம் சொல்லி முடிக்க முடியாத விஷயம்
இப்படி பட்டது என்று எடுத்து சொல்ல முடியாத படி
மூன்றாவது உங்களுக்கு சொன்னாலும் புரியாது
இத்தை பிரதி பத்தி பண்ண உங்களுக்கு நெஞ்சு இல்லை
அன்னைமீர்காள் –
சஜாதீயர் இல்லை போதயந்த பரஸ்பரம் முடியாதே
தப்பு ஹிதமே சொல்லி போவீர்
எனக்கு ஓடுகிற விசனத்துக்கு பாசுரம் இல்லை-
அவஸ்தா ஞானம் இன்றி பழைமை கொண்டாடி இருக்கிறீர்கள் –

ஹிதம் சொல்லி மீட்க இல்லாதார் ஊரில் புக
தென் திருபேரையில் அனைவரும் பகவத் விஷயத்தில் ஆழ்ந்து
பிரிந்து போனாரை நினைக்க ஒட்டாத தேசம்
சுபிஷமான தேசம்
பரம பதம் போலே
வெள்ளை சுகமகன் -சுக வெள்ளம் உடையவன்
விஸ்லேஷ தசையிலும் துக்கம் எனக்கு தான்
சம்ச்லேஷ திசை சுகம் மறக்காமல்
கலவியில் ஏற்பட்ட சுகம் தேக்கி பிரிந்த காலம் அசை போட்டு கொண்டு இருக்கிறான்
வெள்ளை சுகம் மறுவற்ற சுகம் -தோஷம் இல்லாத சுகம் -துக்கம்நினைவு இல்லாத சுகம்
இட்ட கால் இட்ட கைகள் எதிர் மறையான

வெள்ள சுகம் வெள்ளை சுகம் இரண்டு பாடம்
வீற்று இருந்த -தென் திருபேரையில்
கம்பீரமாக பெருமை தோற்ற -வீறு பாடு தோற்ற இருத்தல்
நான் இட்ட கால் இட்ட கைகளாய் இருக்க
இத்தலை துடிக்க வைத்து
அவன் ஐஸ்வர்யம் தோற்ற இருந்தபடி
தோற்பித்த வெற்றி தோன்றும்படி இருந்தான்
மெய் மறந்து இருவரும்
நான் மெய் உடம்பு மறந்து
அவன் பரி பூரணன் செருக்காலே இருக்கிறான்
நான் குறைவாளர்
அவன் முறை தப்பி இருந்தால் நான் முறை தப்பினால் என்ன
தேடி போகலாமே
பிரிந்தார் -மடலை எடுத்தாகிலும் முறை தப்பினாலும்
நமக்கே நலம் ஆதலில் -சாதனா புத்தியால்
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் பாதம் நாளும் பணிவோம் -புல்லாணி பாசுரம் திரு மங்கை ஆழ்வார் –
நாமம் சொல்வதும் கைங்கர்யம் பலம் போலே
அப்படி செய்தால் யாது தாரானாலும் தரும்

ராஜா மகிஷி உஞ்ச விருத்தி செய்தால் அவத்யம் சகரவர்திக்கே தானே
துடிப்பின் காரணமாக செய்தால் –
வேத ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் –
உத்சவம் -ஒலி -பிள்ளைகளும் பெருமாள் போலே உத்சவம் கண்டு அருள-
சாம வேதம் ஜைமினிய சாம வேதம் இன்றும் தென் திருபேரையில் உண்டே
கஷ்டமான சாமம் ஈ ஒட்டி சாமம் என்பர் கை ஆட்டி சொல்வார்களாம்
அவன் நெஞ்சு ஒளிந்து பழைய கணக்கு கேட்டு இருக்கிறான் -வெட்டி பேச்சு
பழம் புணர்ப்பு வேதம் கேட்டு இருக்கிறான் நான் துடிக்க
ஜிதந்தே புண்டரீகாஷா போன்ற பழைய வெற்றி சரித்ரம் கேட்டு இருக்கிறான்
விழா ஒலி -இவளை தோற்பிததுக்கு நெய்யாடல்
ஆனந்த கூத்தாடி எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட –
கண்ணன் முற்றம் -கண் விசாலமான நல் முற்றம் அளவாயிற்று

எள் நெய் தானே எண்ணெய்
நெய்யாடல் இப்படி கூத்து ஆடி-
வெண்மை நெய் வெண்ணெய் –
உத்சவம் கொண்டாடி இருக்கிறான் –
அறா இடைவிடாமல்
தீர்த்தம் பிரசாதித்த அடுத்த நாளே திரு முளைக்காப்பு அங்குரார்ப்பணம் –
ராம ஸ்தம்பம் பெரிய திரிதண்டி ஜீயர் ஸ்ரீ மன் நாராயண ஜீயர்
1964 –
நாலாயிர சேவை கோயிலிலே நித்யம் வீதி புறப்பாடு தனி உத்சவமாக நடந்தது –
பெரிய சம்ஸ்ரோஷம் போலே நடக்கும்
நித்யம் பிஷை எடுத்து
திருமலையிலும் அப்படி பிஷை செய்து
கோணி பை நிறையும்
அங்கேயே அவ்வளவும் உபயோகித்து
தேசம் முழுவதும் ராம ஸ்தம்பம் நிர்மாணித்து
சத்யா சங்கல்பர்

அக்ரூரர் சமந்தக மணி கிடைத்ததும்
நித்யம் அஸ்வமேத யாகம் செய்தாப் போலே
ஸ்திரீ ரத்னம் இவள்
மங்கள கோஷங்கள் இன்றி மோகித்து இருக்க
அங்கே இன்றி இங்கே நடக்க
பிள்ளைகள்
பருவம் நிரம்பவதருக்கு முன்பே அங்கே பகவத் ப்ராவண்யம்
இங்கே வயசானவர் தடுக்க –
பகவத் அனுபவமே யாத்ரையாக
பேதை அறியாப் பருவம்
பாலகம் விளையாட்டு புத்தி
அது யவன பருவம் சொல்லவே பயம் -பிறவி வேண்டேன்
அரங்க மா நகர் உளானே -இங்கேயே பிறவி கொடு உனக்கு மூன்றாவது விபூதி உண்டே
பரம பதமும் வேண்டாம் -இரண்டு விபூதியும் வேண்டாம்
அங்கு பேதை பாலகன் யவனம் இருந்தாலும்
அன்ன பிராசனம் -பெருமாள் விளையாட்டு மண்ணை வைத்து -ஜீயா
யவன பருவத்தில் உகந்த விஷயம் காண கோயிலுக்கு வருவான்
வாய் வெருவா நிற்பார் பகவத் அனுபவத்திலே

கருடன் சந்நிதி தள்ளி இருக்கும்
பாலாபி க்ரீடமானாக -விளையாடுபவரும் ராம சரிதம் சொல்லியே விளையாடுவார்கள்
அயோத்யா வாசிகள் ராமோ ராமோ -ராம பூதம் ஜகத் பூத்
பிரஜானாம் ராமன் ராமன் வார்த்தையே சொல்லி –
சோறு சோறு என்று சொல்வாரைப் போலே
ஜனி தர்மிகளுக்கு இதே வியாபாரம்
நாடு அடங்க ராம அத்வைதம் ஆனதே
பரம பதம் போலே
ராம பாக்யமே -கர்மம் கழிந்து -அனைவரும் ராம அனுபவமே யாத்ரையாக இருக்க –
ந ச அக்னி பயம் கிஞ்சித் அக்னிக்கும் பயம் இல்லை
ஜலத்தில் -சரத்துக்கு அஞ்சி அதுவே வெளியில் கொண்டு வந்து
பண்டே கை கண்ட அனுபவம் ஜலத்துக்கு
வெம் சினத்த வில வளைத்த
மகர நெடும் குழை காதன் சரித்ரம் சொல்லியே விளையாடுவார்கள்

தென் திருப் பேரையில் சேர்வேன் நானே
ஜெயித்தார் இடத்தில் தோர்த்தார்
ஜிதந்தே என்று விழும் அத்தனை தாம்மரைக் கண்ணன்
தென் திருபேரை -இல்லை
எழில் மிக்க தென் திருபேரையில்
பேரை ஸ்தலம் திரு நாமம் இருந்தால் வேற்றுமை உறுப்பு சேர்த்தல் பேரைக்கு
பேரையில் -ஐகாரம் ஏற்று
நாங்கூர் நாங்கை
தங்கை நெல்லை சொல்வது போலே
பாசுரம் தோறும் பேரையில் என்பதே பாடம் சரி
திருப்பேர் திருபேரை சொல்ல வில்லை மா முனிகளும்
அப்பக்குடத்தான்
தென் திருப்பேர் எயில்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading