முகில்வண்ணன் அடியை அடைந்துஅருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன்வண் பொழில்சூழ்
வண்குரு கூர்ச்சட கோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்னசொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர்பே ரின்பவெள் ளத்தே.
பொ – ரை: ‘முகில் வண்ணரான பெரிய பெருமாள் திருவடிகளை அடைந்து திருவருளைப்பெற்று உய்ந்தவரும், துகிலின் வண்ணத்தைப் போன்ற பரிசுத்தமான தெளிந்த தன்மையையுடைய மிகுந்த நீர் நிறைந்த தாமிரபரணித் துறைவரும், வளப்பம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த வண்மையையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபருமான நம்மாழ்வார், முகில் வண்ணன் திருவடிகளின்மேலே அருளிச்செய்த சொல்மாலை ஆயிரத்தில் இந்தப் பத்தையும் வல்லவர்கள், முகில் போன்ற நிறத்தையுடைய பரமபதத்திலே நித்தியசூரிகள் சூழும்படி பேரின்ப வெள்ளத்தில் இருப்பர்,’ என்க.
வி-கு: ‘துகில் வண்ணத் தூநீர் மொய்புனல் பொருநல் சேர்ப்பான்’ எனக் கூட்டுக. அன்றிக்கே, ஆற்றொழுக்காகப் பொருள் கோடலுமாம். சேர்ப்பன் – இடத்தையுடையவன்.
ஈடு: முடிவில், 1‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், இவர் பட்ட கிலேசம் படாமல் திருநாட்டிலே பேரின்ப வெள்ளத்தினையுடையவராய், நித்தியசூரிகள் சூழ இருக்கப் பெறுவர்,’ என்கிறார்.
முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் – பெரிய பெருமாள் திருவடிகளைக் கிட்டி அங்குத்தைத் திருவருளைப் பெற்றுத் தரித்தர். 2முன்னைய நிலையில் சத்தையும் அழியும்படியாய் இருக்கையாலே உய்ந்தவன் என்கிறத். மொய்புனல் பொருநல் துகில் வண்ணம் தூநீர்ச் சேர்ப்பன் – வலியையுடைத்தான தண்ணீரோடு கூடின தாமிரபரணியில் துகிலினுடைய வண்ணத்தையுடைத்தான தூநீர்த் துறைவன். ‘மொய்’ என்பதற்கு; ‘மிகுதி’ என்பதும், ‘வலி’ என்பதும் பொருளாம். இங்கே, நீரோட்டத்தால் வந்த வலியை நினைக்கிறது. சேர்ப்பன் – துறைவன்: நெய்தல் நிலத்தின் தலைமகன். ‘மொய்ப்புனல்’ என்னாநிற்கவும், ‘தூநீர்’என்கிறது, பெருவெள்ளமாய் இருக்கச்செய்தே தெளிந்திருக்கும் படியைப்பற்ற. 1‘அழுக்கு அற்ற, தெளிந்த நீரையுடைய, அழகிய, பெரியோர்களுடைய மனம் போன்ற இந்தத் தீர்த்தத்தைப் பாரும்,’ என்கிறபடியே.
‘ரமணீயம் ப்ரஸந்நாம்பு ஸந்மநுஷ்ய மநோ யதா’-என்பது, ஸ்ரீராமா. பால. 2:5.
‘சவியுறத்தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவியெனக் கிடந்த கோதா விரியினை வீரர் கண்டார்’-என்பது, கம்பராமாயணம், சூர்ப்பணகைப் படலம், 1. 9
வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – காண்பதற்கு இனியதான பொழிலையுடைத்தாய் வண்மையையுடைய திருநகரிக்குநாதன். முகில் வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார் – காளமேகம் போன்று மிக்க பேரெழிலையுடையரான பெரிய பெருமாள் விஷயமாக அருளிச்செய்த சொற்களையுடைய மாலை ஆயிரத்து இப்பத்தையும் கருத்தோடு கற்க வல்லவர்கள். ‘பெரிய பெருமாள் திருவடிகளிலே, திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று; 2‘திருமோகூர்க்கு ஈத்து பத்து’.திருவாய். 10.1:11- ‘திருவேங்கடத்துக்கு இவை பத்து’ திருவாய். 6.10:11.-என்று பிரித்துக்கொடுத்த இத்தனை;பெருமாள் திருப்பலகையில் அழுதுபடியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன்மார்கட்கும் அளந்து கொடுக்குமாறு போலே’
என்று பிள்ளை அருளிச்செய்வர். முகில் வண்ணம் வானத்து-அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன்படியாய் இருக்கிற வானம் என்னுதல்; முகில் வண்ணனுடைய வானம் என்னுதல் இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே-இவள் மோகித்துக் கிடக்கத் திருத்தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர, நித்தியசூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தையுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
கங்குல் பகலாதி கைவிஞ்சி மோகமுற
அங்கதனைக் கண்டோர் அரங்கரைப்பார்த்-திங்கிவள்பால்
என்செயநீர் எண்ணுகின்ற தென்னுநிலை சேர்மாறன்
அஞ்சொலுற நெஞ்சுவெள்ளை யாம்
கிலேசம் இன்றி
நிகமத்தில் –
முகில் வண்ணன் அடி மேல் -சொன்ன மாலை ஆயிரம்
இப்பத்தும் வல்லார்
ஆயிரத்தில் இப்பத்தும் -பட்டர்
இப்பத்தும் –
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்
சத்தை பெற்று இதில்
முன்பு சத்தை இன்றி
போன பிராணன் திரும்பி வந்தது –
நீரோட்டம் -தீன தசையில் -நீரோட்டம் ரத்தம் ஓட்டம் பார்த்து அடையாளம்
மொய் புனல் தாமர பரணைக்கும்
நெய்தல் நிலத்தில் தலைமகன் நீரும் நீர் சார்ந்த இடம்
தெளிவான தீர்த்தம் –
தெண்ணீர் பொன்னி போலே
ரமனீயம் இனிமையாக தெளிந்து
திருஷ்டாந்தம் சத்துக்கள் மனஸ் போலே உள்ளல் மனஸ் காட்டுமே முகம்
நதியும் அப்படி உள்ளே உள்ளன காட்டும்
ஆழ்வார் திரு உள்ளம் போலே தெளிந்து
தர்சநீயமான ஒளியை உடைத்தாய் குருகூர் ஆழ்வார் தம்மையே கொடுத்த ஔதார்யம்
இப்பத்தையும் -பாவம் உடன்
ஆயிரமும் பெரிய பெருமாளுக்கு திருவேம்கடதுக்கு இவை பாத்து
திரு மோகூருக்கு ஈத்த பத்து
அளந்து கொடுக்குமா போலே –
உப சன்னதிகளுக்கு பிரித்து கொடுப்பது போலே கொட்டாரம் இருந்து பிரித்து பங்கிட்டு கொடுப்பது போலே –
ஆன்ற தமிழ் மறை ஆயிரமும் -பெரிய பெருமாளுக்கு பட்டர்
பிள்ளை அருளிச் செய்வர்
வடக்கு திரு வீதி பிள்ளை நம்பிள்ளை ஈடு பட்டு சொல்வதை இப்படி குறித்து அருளுகிறார்
முகில் வண்ணன் வானத்து
அவன் நிழலீட்டாலே வானமும்
திருப்பாற்கடல் -நீ தீண்டப் பெற்று கரும் கடல் ஆனது போலே –
பள்ளி கொள்ளும் இடம் பாற்கடல்
மாணிக்கம் நீல மணி -பாலை வைத்து மணி போட்டால் பாத்ரமும் நீலமாக தெரிய வேண்டும்
பரம பதமும் முகில் வண்ணம் ஆகும்
முகில் வண்ணன் உடைய வானம்
இமையவர் சூழ
கூப்பிட்ட விசனம் தீர
ஆனந்த நிற்பரராய் இருக்க
ஆழ்வார் பட்ட சுகம் மட்டும் -துக்கம் இன்றி அனுபவிக்கப் பெறுவார்
தகப்பன் சம்பாதித்த செல்வம் பிள்ளை கஷ்டம் இன்றி அனுபவிப்பது போலே
சொத்தில் அன்வயம் மட்டுமே கொள்ள வேண்டும்
மா முனிகள் –
சாரம் அருளி –
திருவாய்மொழி சொற்களையே கொண்டு அதே சாரம் அருளி
ஆழ்வார் திருநாமமும் சொல்லி
நிர்பந்தங்கள் பல வைத்து வெண்பா அருளி
கங்குல் பகல் அரத்தி விச்லேஷம் –
ஈட்டில் ப்ரேவேச சப்தமும் கொண்டு –
கை விஞ்சி போக
மோகம் அடைந்து
அது கண்டு இவள் பால் நீர் என்ன செய்ய
என்னும் –
மாறன் திருவாக்கை நினைந்து நெஞ்சு தெளிவு அடையும்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply