நானக் கருங்குழல் தோழிமீர்காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர்காள்!
நான்இத் தனிநெஞ்சம் காக்கமாட்டேன்
என்வசம் அன்றுஇது இராப்பகல்போய்த்
தேன்மொய்த்த பும்பொழில் தண்பணைசூழ்
தென்திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான்மணி வண்ணன்கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.
பொ-ரை : நறுநாற்றத்தையுடைய கரிய கூந்தலையுடைய தோழிமீர்காள்! தாய்மார்காள்! அருகில் உள்ள சேரியில் உள்ளவர்காள்! இந்தத் தனித்த நெஞ்சத்தினைக் காக்கமாட்டேன்; என் வசத்தில் இருப்பது அன்று; இந்நெஞ்சமானது, இரவும் பகலும் சென்று. வண்டுகள் மொய்த்திருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்திருக்கின்ற தெற்குத்திசையிலேயுள்ள திருப்பேரெயில்என்ற திவ்வியதேசத்தில் எழுந்திருளியிருக்கின்ற வானப்பிரானும் மணிவண்ணனும் கண்ணனுமான எம்பெருமானது சிவந்த கொவ்வைக்கனி போன்ற திருவதரத்தினிடத்தது’ என்கிறாள்.
வி-கு: நானம் – கத்தூரியுமாம். சேரி – தெரு; அல்லது, ஊர். வானப்பிரான் -நித்தியசூரிகளுக்குத் தலைவன்; வானம் – இடவாகு பெயர். வாயின் திறத்து-வாயினிடத்தது.
ஈடு: இரண்டாம் பாட்டு. 1தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாளாய் அன்றோ மேற்பாசுரத்தில் நின்றது? ‘இவள் இவ்வளவிலே மீளுமவள் அன்றிக்கே இருந்தாள்’ என்று தாய்மாரோடு தோழிமாரோடு அயற்சேரியுள்ளாரோடு வாசி அற வந்து திரண்டு ஹிதம் சொல்லப் புக்கார்கள். ‘உங்களுடைய நல்வார்த்தையைக் கேளாதபடி நிரவதிகமான பரத்துவ ஸௌலப்பியங்களையுடையவன் பக்கலிலே சென்ற சேர்ந்த என் நெஞ்சினைத் தகைய மாட்டுகின்றிலேன்; என் நெஞ்சினைக் கடல் கொண்டது காணுங்கோள்!’ என்கிறாள்.
நானம் கருங்குழல் தோழிமீர்காள் – 2அவர்களுக்கு ஒரு பழி சொல்லுமாறு போலே சொல்லுகிறாள், அவர்கள் தலையான நறுநாற்றத்தையுடையவர்கள் வந்து நிற்கையாலே, நானம் – நறு நாற்றம். 3மயிர்பட மாந்தும்படி அன்றோ இவள்படி? 4உங்கள் சந்நிதி இல்லையாகில் நான் இங்கே இரேனோ? மை வண்ண நறுங்குஞ்சியினை நினைப்பு ஊட்டுகிறதாய் இராநின்றாதே இவர்கள் குழல். 1‘நம் இருவர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றே’ என்று ஏகம் துக்கம் ஸூகஞ்ச நௌ’
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 5:18.-இவளுடைய இன்ப துன்பங்களையே தங்களுக்கும் இன்ப துன்பங்களாக இருக்கை அன்றோ தோழிமாராவது? இவள் மயிர்முடி பேணாதே நறுநாற்றங்காணில் முடியும்படியாக இருக்க, இவர்கள் கூந்தலைப் பேணி நறு நாற்றங்கொண்டு காரியங்கொள்ளப் போருமோ?’ என்னில், 2கலவியில் இவளோடு அவன் நெருங்க நெருங்கச் சாத்திக் கழித்தபடியே எல்லாவற்றையும் கொடுப்பது இவர்களுக்கே; அப்போது அவன் செய்த மிகுந்த திருவருளாலே, அது சருகு ஆனாலும் அவர்கள் மாறாதே வைத்துக்கொண்டு இருப்பார்களே! அது இவளுக்கு நினைப்பு ஊட்டுவதாய் நலிகிறபடி. அன்றிக்கே, ‘இவர்கள் தாம் நறுநாற்றங்கொண்டு காரியங்கொள்ளவும் வல்லர்கள்’ என்னுதல். என்றது, ‘தாங்கள் தளரந்து காட்டில் இவள் மிகவும் தளரும் என்று ஒப்பித்துக் கொண்டு இருப்பர்கள்’ என்றபடி. 3தங்கள் தங்களுடைய பொறாமையும் பாரார்களாயிற்று, இவளைப் பிழைப்பிக்கைக்காக.
4அகாரத்தின் பொருளான அவனும் ஜீவித்து மகாரத்தின் பொருளான இவனும் ஜீவித்துப் பலகாலம் போகச்செய்தேயும், உஜ்ஜீவிக்கப் பெறாதே நடுவே கிடந்து போயிற்றே. இனி, சேர்க்கின்றவர்களுடைய காரியம் அன்றோ உஜ்ஜீவிப்பிக்கை? அப்படியே இவளை இசைவித்து உஜ்ஜீவிப்பக்கே வேணுமே. 5‘சேஷிக்கு அதிசயம் வேணும்’ என்றிருப்பர், தங்கள் தங்களுடைய துக்கத்தைப்பாரார்களே அன்றோ? 1பெருமாளிலும் துக்கம் விஞ்சி இருக்கச் செய்தே பெருமாளுடைய இரட்சணத்துக்காக இளைய பெருமாள் தம்மைப் பேணிக்கொண்டு தரித்து இருக்குமாறு போலே. 2இளைய பெருமாள் தாம் பரம்போகி அன்றோ?3‘ஸௌமித்ரே பஸ்யபம்பாயா:- அங்குத்தை இனிமை நெஞ்சிலே படச்செய்தேயும், பெருமாளுக்கு வேற் ஒன்றிலே நோக்கை விளைக்கைக்காக முகத்தை மாற வைத்துக்கொண்டு நின்றார்; ஸௌமித்ரே பஸ்ய பம்பாயா: சித்ராஸூ வநராஜிஷூ
கிந்நரா நரஸார்த்தூல விசரந்தி ததஸ்தத;’
இது. ஸ்ரீராமா. கிஷ்கிந். 1:60
‘பிள்ளாய், பாராய் இது இருந்தபடி!’ என்கிறார். நானம் கருங்குழல் – 4ஒரு புலவன் ‘நானம் என்பது குழலுக்கு விசேஷணம் ஆகையாலே, நாவி போன்ற குழல்’ என்றான். அதனால் நினைக்கிறதும் நறுநாற்றத்தை.
தோழிமீர்காள் – 5பிரியம் சொல்லுவாரும் ஹிதம் சொல்லுவார் கோடியிலே புகுவதே! தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயற்சேரியீர்காள்!- 6தான் அறிந்து தோழிமார்க்குச் சொல்லாதே இருப்பது ஒரு நிலையும், தோழிமாரும் தானும் அறிந்து தாய் அறியாதே இருப்பது ஒரு நிலையும், தானும் தோழியும் தாயும் அறிந்து பிறர் அறியாதேஇருப்பது ஒரு நிலையுமாயிற்று இருப்பது; அந்நிலை குலைந்து எல்லாரையும் ஒக்க விளிக்கும்படி ஆயிற்று உலகப் பிரசித்தமானபடி. 1பிறர்க்குச் சொல்ல வேண்டுவது இல்லை அன்றோ? ஆயிருக்க, பிரதி கூலர்க்குங்கூட அருள் பண்ணவேண்டும்படிகாணும் இவளுடைய துன்ப நிலை. 2‘மாம் ஸமாநய துக்கிதாம்-துக்கத்தை அடைந்திருக்க என்னை ஸ்ரீராகவனோடு சேர்ப்பாயாக’ என்கிறபடியே, ஸாது ராவண ராமேண மாம் ஸமாநய துக்கிதாம்
வநே வாஹிதயா ஸார்த்தம் கரேண்வேவ கஜாதிபம்’
என்பது, ஸ்ரீராமா. சுந். 21:18.
‘என்னை நீ பெருமாளுடனே கூட்ட வல்லையே’ என்றாளன்றோ இராவணனை? 3‘அப்படியே என் விஷயத்தில் அருள்செய்’ என்றும், ‘வாக்கினால் தருமத்தை அடையக்கடவாய்’ என்றும், ‘ததா குரு தயாம் மயி’ என்பது, ஸ்ரீராமா. சுந்.
‘வாசா தர்ம மவாப்நுஹி’ என்பது, ஸ்ரீராமா, சுந். 39:10.
ஒரு திருவடி போல்வார்க்குச் சொல்லக்கடவ வார்த்தையை அன்றோ, பிரித்தவனைப் பார்த்துச் சொல்லிற்று?
எங்ஙனே நான் உகந்தது உகந்தீர்கோள்! என்பாள், ‘தோழிமீர்காள்!’ என்கிறாள். ‘எங்ஙனே எனக்குப் பிரியமான ஹிதத்தைப் பார்த்தீர்கோள்!’ என்பாள், ‘அன்னையர்காள்!’ என்கிறாள். ‘எங்ஙனே நொதுமலாளர்களாய் இருந்தீர்கோள்!’ என்பாள், ‘அயற்சேரியீர்காள்!’ என்கிறாள். ‘எங்கள் பக்கல் குறை உண்டோ? நீ மரியாதை தப்பினவாறே நாங்களும் முறை தப்பினோமித்தனை அன்றோ?’ என்ன, ‘நான் இத்தனி நெஞ்சம் காக்க மாட்டேன்- 5‘உங்களுக்கும் இங்ஙனே ஏதேனும் இருப்பது ஒரு காரணம்உண்டோ முறை தப்புகைக்கு நான்? நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ? உங்கள் அளவு அன்று’ என்றபடி.இத்தனி நெஞ்சம்-உங்களில் நான் வேறுபட்டவள் ஆனாற்போலேயாயிற்று, என்னிலும் என் நெஞ்சு வேறுபட்டபடி. என்றது, ‘சொல்லிற்றுக்கேளாத ஸ்வதந்திரமான நெஞ்சம்’ என்றபடி. 1‘அச்செயல் அவருக்குத் தக்கதாம்’ என்று இருப்பார் நெஞ்சமும் இதற்கு ஒப்பு அன்று. காக்கமாட்டேன்-‘தத் தஸ்ய ஸத்ருஸம் பவேத்’ என்பது, ஸ்ரீராமா.
சுந், 39:30. ‘என்றிருப்பர்’ என்றது, 2‘முந்துற்ற நெஞ்சே, இயற்றுவாய் எம்மோடு நீ கூடி’ பெரிய திருவந்.1.-என்று இருக்குமித்தனை ஒழிய, இவளால் தடுத்து வைக்கப் போகாதே. 3‘தாய் தந்தையர்கள் என்ன செய்வார்கள்?’ ‘குரவ: கிம் கரிஷ்யந்தி தக்தாநாம் விரஹாக்நிநா’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா. 5.18:22.
என்கிறபடியே, ஒருவரையும் பாராதே போகாநின்றது; ஒன்று கேட்டு மீளும் அளவு அன்று; 4மீட்கலாம் அளவும் காற்கட்டிப் பார்த்து, முடியாமையாலே கைவாங்கினமை தோற்றுகிறதுகாணும், ‘மாட்டேன்’ என்ற உறைப்பாலே. 5சம்சாரிகள் ஐம்புல இன்பங்களினின்றும் மீளமாட்டாதவாறு போலே அன்றோ, இவர் பகவத் விஷயத்தினின்றும் மீளாமாட்டதபடி?
6‘மாட்டேன்’ என்று சொல்லுகிற இதுவார்த்தையோ? எல்லா அளவிலும் தங்கள் தங்கள் மனம் தங்கள் தங்களுக்கு அடங்கியதாகஇருக்க வேண்டாவோ?’ என்ன, என் வசம் அன்று இது- என் செய்வோம், 1தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்? கைகேயி சொற்கேட்டு ஸ்ரீபரதாழ்வான் அரசினைச் செலுத்தும் அன்று ஆயிற்று, இவளும் இத்தாயார் வார்த்தை கேட்டு மீளுவது. 2‘இப்போது நான் உங்கள் மகள் அன்றோ? என்னைப் போலும் அன்றே என் நெஞ்சு?’ என்றது, 3எனக்குத் தான் என்று இருக்கும் நிலை குலைந்து, தன் வழியே நான் ஒழுகும்படியாயிற்று என்றபடி. 4‘தங்கள் தங்களுடைய மனம் அடங்கியிராது போயினும், அடங்கியிருப்பது ஒரு போது பார்த்து ஹ்தம் சொல்ல வேண்டாவோ?’ என்ன, இராப்பகல் போய் – 5படைக்கப்பட்ட காலத்திலே இதற்கு ஹிதம் சொல்லலாவது, 6ஒரு போது காண்கின்றிலேன்; ஒருபோது பகவத்விஷயத்திலும் கைவைத்து, ஒருபோது சம்சார யாத்திரையிலும் கை வைக்கும் அளவு அன்றே, இவளுடைய ஈடுபாடு. 7இங்கே இருப்பது ஒரு போது உண்டாகில் அன்றோ ஒன்று சொல்லி மீட்கலாவது?
தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ் திருப்பேரெயில் – 8இது மீட்கலாம் விஷயத்திலோ அகப்பட்டது? அவ்வூரில் இனிமையிலே படிந்தாரையும் மீட்கப்போமோ? தேன் – வண்டு.பூத்த பொழிலையும் குளிர்ந்த நீர் நிலங்களையுமுடைய தென்திருப்பேரெயில். வீற்றிருந்த- 1பரமபதத்தில் இருப்பு அடங்கலும் தோற்றும்படி இருக்கை. 2அவ்விடம் போன்றது அன்றே இவ்விடம்? ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற இடம் அன்றோ? அவ்விடத்தைப் போன்று இவ்விடத்தையும் திருத்திக்கொண்டிருக்கிற இடம் அன்றோ? வானப்பிரான் – இதனால் கண்ணழிவற்ற மேன்மையைச் சொல்லுகிறது. தென்திருப்பேரெயில் வீற்றிருந்த வானப்பிரான் – 3ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பை நமக்காக இங்கே இருக்கிற உபகாரன். மணி வண்ணன்-மேன்மை இல்லையாகிலும் விட ஒண்ணாத வடிவில் பசை இருக்கிறபடி. கண்ணன் – 4அங்குள்ளார்க்குப் படி விடும் உடம்பை இங்குள்ளார்க்கு வரையாதே கொடுத்துக்கொண்டு இருக்கிறவன். ஆக, ‘மேன்மை அளவிடவோ? வடிவழகு அளவிடவோ? நீர்மை அளவிடவோ?’ என்பதனைத் தெரிவித்தபடி. செங்கனி வாயின் திறத்ததுவே – 5கிண்ணகத்தில் ஒரு சுழியிலே அகப்படுவாரைப்போலே, வாய்க்கரையிலே அகப்பட்டது; 6ஆசைப்பட்ட விஷயத்தைக் கரை கண்டது ஆகில் அன்றோ மீளுவது? 7சிவந்து கனிந்து திருப்பவளத்தின் இடையாட்டத்தது; 8இது மீள நினைக்கில் அன்றோ உங்கள் வார்த்தை கேட்கைக்கு அவகாசம் உள்ளது?
அனைவரும் வந்து ஹிதம் சொல்ல வந்தார்கள்
பரத்வம் சௌலப்யம் உள்ளவன் இடம் நெஞ்சு போக
கடல் கொண்டது -மீட்க போமோ
என் வசம் அன்று இது –
வானப்பிரான் மணி வண்ணன் கண்ணன் -ஈடுபட்டு போனதே
தோழி அன்னைமீர் அயல் சேரியீர்காள்
நான-வாசனை -தலையான நறு நாற்றம்
கருமை குழல்
பழி சொல்லுமா போலே -நறு நாற்றம் உடன் வர –
ஹிதம் சொல்லப் போவார் அலங்கரித்து வர –
மயிர் கூட வாராமல் இவள் இருக்க –
பார்க்க துக்கம் மிக்கு இருக்க
மை வண்ண நறும் குஞ்சிக்கு ச்மாகரமான குழல் –
பேணி வாசனை உடன் வரலாமா -நாயகி சுக துக்கம் தோழிகளுக்கு –
கலவியில் நெருங்க அவன் செய்த பிரசாத அதிசயத்தால் அது சருகு ஆனாலும் விடாமல் இருப்பார்களே
அது இவளுக்கு ச்மாகரமாக நலிகிற படி
அன்றிக்கே
இவர்கள் தாங்கள் தளர்ந்தால் இவள் மிகவும் தளர்வாள் என்று
தாம்தாம் உடைய முடியாமை இருந்தும் தலைவிக்கு
தங்களை அழிய மாறி
இவளை உஜ்ஜீவிப்பிக்க
அகார வாச்யமான -கடகர் முடியாத கார்யங்கள் செய்வார்
சம்பந்தம் நித்யம் மகார வாசகன் மறந்து -\சேஷிக்கு அதிசயம்
பெருமாள் ரஷனதுக்கு இளைய பெருமாள்
சாஷாத் நாராயண தேவதா
இங்கே பிறந்தது நம்மை உஜ்ஜீவிப்பிக்க தானே
நாட்டில் பிறந்து படாதன பட்டு
தங்களை அழிய மாறி
அநாதி காலம் நடுவே கிடந்தது போக கடக கிருத்தியம் உஜ்ஜீவிக்க
இவளை இசைவித்து உஜ்ஜீவிக்க –
பரம போகி இளைய பெருமாள் ஆதி சேஷன் அவதாரம்
சுகுமாரானவர்
முகத்தை மாற வைத்து கொண்டு நின்றான் பம்பா நதி பார்க்காமல்
பெருமாள் பார்த்தால் துக்கம் மிக்கு இருக்குமே சீதையை பிரிந்ததால்
பிள்ளாய் பாராய் இருந்தபடி பெருமாள் காட்டி அருளி
இங்கும் தோழி துக்கம் அதிகம்
நாயகி தளர கூடாது என்று அலங்கரித்து இருக்க –
இன்னும் ஒரு அர்த்தம்
நானம்-நாவி போன்ற குழல் அழகாய் இருக்கும் -அத்தால் நினைக்கிறதும் பரிமளம்
தோழி -ஹிதம் சொல்லும் கோஷ்டியில் இவர்களும் புகுவதே
பிரியம் சொல்லக் கடவ
தான் அறிந்து தோழிக்கு சொல்லாத அவஸ்தை
தோழி அறிவாள் தாயாருக்கு தெரியாத அவஸ்தை
அவஸ்தை எல்லாரையும் -மரியாதை கடந்து ஒக்க சம்பாதிக்கும் படி
துக்கம் ஜகத் பிரசித்தம்
விரோதிகளும் தயை பண்ணும் படி இவர் ஆர்த்தி
விரோதிகள் இடமும் கருணை காட்ட சொல்லும் இடம் –
சீதை பிராட்டி ராவணன் -இடமும் நெஞ்சில் ஈரம் பிறக்குமோ
மாம் துக்கிதாம் -என்னை நீ பெருமாள் உடன் கூட்ட வல்லையே
திருவடி இடம் சொல்ல கூடிய வார்த்தையை
ராவணன் இடம் சொல்லும் படி துக்கத்தின் மிகுதி இருந்தபடி
பிரித்தவன் இடம் சொல்லிய வார்த்தை
எங்கனே நான் உகந்தது நீர் உககிறீர்கள் எங்கனே உதாசீனர்
எங்கள் பக்கல் குறை இல்லை
நீ மரியாதையை தப்பி
முறை தப்புகைக்கு ஹேது
என்னைப் போலே நெஞ்சு உங்களுக்கு இல்லை –
நீங்களும் ஏதேனும் நெஞ்சு இழந்தீர்களோ ‘இத் தனி நெஞ்சம்
உங்களில் நான் வ்யாவர்தம் போலே
என்னை காட்டிலும் வ்யாவர்தம் நெஞ்சு
பிராட்டி நெஞ்சு முறைக்காக காத்து இருந்ததே
இது அப்படி இல்லை
காக்க சாமர்த்தியம் இல்லை
முன்புற்ற நெஞ்சு என்னையும் விஞ்சி
தடுத்து வைக்கப் போகாதே –
காவல் கடந்து கயிறு மாலையாகி
கால கட்டி பார்த்து -மீண்டேன்
சப்தாதி விஷயங்களில் சம்சாரிகள் மீட்க மாட்டாதது போலே பகவத் விஷயத்தில்
என் வசம் இல்லை
தாய் வேற கன்று வேற
கைகேயி வார்த்தை கேட்டு பரத ஆழ்வான் ராஜ்ஜியம் ஆளும் அன்று
எனது நெஞ்சு நான் சொல்வதை கேட்கும்
இப்பொழுது நான் உங்கள் மகள்
என்னைப் போல் அன்று என் நெஞ்சு
அது வழியே நான் போகும் படி ஆனது
எப்பொழுதாவது பவ்யம் ஆகும் அந்த சமயம்
இராப்பகல் -போது-சம்சார யாத்ரை கை வைக்காமல்
ஈடு பட்டு கிடக்கிறது –
மீட்கலாம் விஷயத்திலோ அகப்பட்டது –
போக்யதை படிந்தாரையும் மீட்க போமோ
பரம பதத்தில் போலே வீற்று இருந்து -அதை விட வீறு மிக்கு
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் இடம்
வஸ்து கொஞ்சம் ஜனங்கள் மிக்கு
வானப்பிரான் மேன்மை
தென் திருபேரையில் வீற்று இருந்த திருக் கோலம்
மணி வண்ணன் -மேன்மை இல்லை என்றாலும் விட ஒண்ணாத வடிவுஅழகு
வடிவில் பசை
கண்ணன் சர்வருக்கும் வாரி வழங்கி
மேன்மை வடிவு அழகு நீர்மை அளவின்றி
கிண்ணகத்தில் ஒரு சுழியில் அகப்பட்டது போலே வாய் கரையில் அகப்பட்டு
சிவந்து கனிந்த திருப்பவளம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply