‘முடிவிவள் தனக்குஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடிகமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண்திரு வரங்கனே!’ என்னும்;
அடியடை யாதாள் போல்இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.
பொ-ரை : ‘இவள், தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்கிறாள்; ‘மூன்று உலகங்களையும் ஆளுகின்ற இந்திரனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘வாசனை வீசுகின்ற கொன்றைப் பூமாலையைச் சடையிலே தரித்தவனான சிவபெருமானுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்கிறாள்; ‘நான்முகனான பிரமனுக்கு அந்தராத்துமாவாக இருக்கின்றவனே!’ என்றகிறாள்; ‘தன்னோடு ஒத்த வடிவையுடைய நித்தியசூரிகளுக்குத் தலைவனே!’ என்கிறாள்; ‘வளப்பம் பொருந்திய திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே!’ என்கிறாள்; அவன் திருவடிகளை அடையாதவளைப் போலே இருந்த இவள் முகில் வண்ணனாகிய அவன் திருவடிகளைக் கிட்டி அடைந்தாள்’ என்றவாறு.
ஈடு : பத்தாம் பாட்டு. 3‘இனிக் கிட்டமாட்டாளோ!’ என்னும்படி துக்கத்தை அடைந்திருந்த இவள், பெரிய பெருமாள் திருவடிகளைக் கலக்கப்பெற்றாள் என்கிறாள்.
இவள்தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும் – பெண்பிள்ளை வார்த்தையைத் திருத்தாயார் அநுபாஷிக்கையாலே,‘இவள் தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன்’ என்னாநின்றாள் என்கிறாள். 1‘இந்தத் துக்கக் கடலைக் கரை காணும் விரகு அறிகிலேன்’ என்னுதல் அன்றிக்கே, ‘முடிந்து பிழைக்கும் விரகு அறிகிலேன்’ என்னுதல். மூவுலகாளியே என்னும் கடி கமழ் கொன்றைச் சடையனே என்னும் நான்முகக் கடவுளே என்னும் வடிவுடைவானோர் தலைவனே என்னும் – இதனை ‘மூவுலகாளியே! கடிகமழ் கொன்றைச்சடையனே! நான்முகக் கடவுளே’ என்று சொல்லப்படுகிற, வடிவுடை வானோர்க்குத் தலைவனே!’ என்னும் என்று, 2திருமலையாண்டான் வையதிகரண்யமாக்கிப் பொருள் நிர்வஹிப்பர். ‘என்னும்’ என்பதற்கு ‘என்னுமவனாய்’ என்பது பொருள். இதனை எம்பெருமானார் கேட்டருளி, ஸாமாநாதிகரண்யாத்தாலே அருளிச்செய்தருளினார்: ‘மூன்று உலகத்திற்கும் உரியனான இந்திரனுக்கு அநதர்யாமியாய் நின்று அவனுடைய அதிகாரத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்: ‘வாசனையையுடைத்தான கொன்றையைச் சடையிலேயுடைய சிவபிரானுக்கு அந்தர்யாமியாய் நின்று அவனுடைய பதத்தை நிர்வஹிக்கிறவனே!’ என்னும்; ‘அவர்களோடு இவ்வருகுள்ளரோடு வாசி அற எல்லார்க்கும் நிர்வாஹகனாயிருக்கிற நான்முகனாகிய தெய்வத்துக்கு அந்தர்யாமியானவனே!’ என்னும் என்று.
வடிவுடை வானோர் தலைவனே என்னும்-பகவானுடைய அனுபவத்தால் வந்த உவகை வடிவிலே தோற்றும்படி இருக்கிற நித்தியசூரிகளுக்கு நாதனானவனே’ என்னும். 1‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்றதனோடு, ‘மூவுலகாளியே!’ என்றதனோடு, ‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்றதனோடு, ‘நான்முகன் கடவுளே!’ என்றதனோடு வாசியற்று இருக்கிறதாயிற்று இவர்க்கு: மயர்வற மதிநலம் பெறுகையாலே; 2விசேஷணாம்சத்தில் நிற்கின்ற வரல்லரே; சர்வ நிர்வாஹகன் என்று உணர்ந்திருக்குமவராயிற்று இவர். வண்திருவரங்கனே என்னும் – நித்தியசூரிகள் மாத்திரம் அனுபவித்துப் போகை அன்றிக்கே, நித்திய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ இங்கு வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது? ‘இங்குச் சாய்ந்தருளின தன் பலம் நான் பெறவேண்டாவோ?’ என்னும். வண்மையாவது, ஆசைப்பட்டார்க்குத் தன்னைக் கொடுக்கும் ஒளதர்யம்.
அடி அடையாதாள் போல இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே-‘ஜீவிப்பாரைப் போல இருந்து கடுக முடிந்துகொடு நின்றாள்’ என்று நிர்வஹிப்பாருமுளர்; ‘அப்போது மேலே பிரபந்தம் நடவாதாகையாலே திருவடிகளைக் கிட்டாதாரைப் போலே இருந்து கிரமத்திலே கிட்டிக்கொண்டு நின்றாள்’ என்று அருளிச்செய்யும்படி. 3இதுதான், மானச அனுபவித்தில் ஒரு தெளிவினைச் சொன்னபடி. அடி அடையாதாள் போல – இவள் இப்போதே திருவடிகளைச் சேரமாட்டாள்: இன்னும் சில காலம் இருக்கும் என்று போலே இருந்தது, முடிந்துகொடு நின்றாள் என்னுதல். இனி, ‘கலக்கப் பெறாளோ?’ என்று தோற்றும்படி துக்கத்தையடைந்தவளான இவள், கிட்டிக் கலந்து அனுபவிக்கப் பெற்றாள் காளமேகம் போன்ற நிறத்தையுடைய பெரிய பெருமாள் திருவடிகளையே என்னுதல்.
அடைந்தாள் முகில் வண்ணன் அடியே
பிள்ளான் -பேறு கிடைக்க வில்லை முடிந்து போனாள்
எம்பெருமானார் நிர்வாகம் -முடிய வில்லை
பிரபந்தம் மேலே வருகிறதே –
முடிவு என்ன ஆகுமே
மூ உலகு ஆளியே என்னும்
கொன்றை சடையன் என்னும்
நான் முகக் கடவுள் என்னும்
வானோர் தலைவனே -என்னும்
இரண்டு நிர்வாகம் –
இவள் தனக்கு -துக்க சாகரம் கரை காண முடிய வில்லை தாயார் வார்த்தையாக சொல்லி –
வையதிகரண்யம் –
சாமானாதி கரண்யம் –
இரண்டு வகையிலும் நிர்வாகம் –
திருமாலை ஆண்டான் -வடிவுடை வானோர் தலைவனே என்பதருக்கு இவை விசெஷணங்கள்-வையதிகரண்யம்
எம்பெருமானார் -சாமானாதி கரண்யம் -அந்தர்யாமியாக இருக்கும் எம்பெருமானே
தனி தனியாக கொள்ளலாமே -இப்படி
மூ உலகு ஆளி- இந்தரனுக்கு அந்தர்யாமி
காஞ்சி ஸ்வாமி-காளியப்பா முதலியார்
பஞ்ச சம்ஸ்காரம் உலகாளியப்பன் திரு நாமம் சாத்தி -ருத்ரனுக்கும் நான்முகனுக்கும் அந்தர்யாமி –
பகவத் அனுபவத்தால் வந்த ஹர்ஷம் வடிவுடை வானோர் நித்ய சூரிகளைக் குறிக்கும் எம்பெருமானார் நிர்வாகம்
எல்லாம் சமமாக அறிந்தவர் ஆழ்வார் மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால்
பரமாத்மா பரியந்தம் வேதாந்த ஞானம் மிக்கு அறிவார்கள் –
விசிஷ்ட வஸ்து பர்யந்தம் அறிய வேண்டும் –
மூ உலகு ஆளி எம்பெருமானே சொல்வதாக கொண்டு மற்றவற்றுக்கும் வாசி இல்லை இவருக்கு
முனியே நான்முகனே முக்கண்ணப்பா இப்படி
அயன் அரன் என முதலிலே அருளி –
அந்தர்யாமி பாவம் கொண்டு
நித்ய சம்சாரிகளும் இழவாமைக்கு அன்றோ இங்கே வந்து கண் வளர்ந்து அருளுகிறது
நீருக்கு தண்ணீர் பந்தல் கங்கையில் வைத்தால் போலே பரம பதம் இருப்பு
நான் பெற வேண்டாவோ-திருவரங்கனே
ஆசைப்பட்டாருக்கு தம்மை கொடுக்கும் வன்மை ஔ தார்யம்
ஜீவிப்பாரை போலே இருந்து முடிந்து கொண்டு இருந்தாள் பூர்வர்
மேலே பிரபந்தம்
சம்ச்லேஷம் கிட்டி திருவடி பெற்றால் எம்பெருமானார் நிர்வாகம்
கிரமத்திலே அடைந்தாள்
குண அனுஷ்டானம் காட்டி தரிக்க
மானச அனுபவத்தில் காட்டி அருளி –
மேலே மேலே பாசுரம் பெற –
தீர்க்க சிந்தயந்தி -நம் ஆழ்வார் -பூர்வர்கள் நிர்வாகம் –
தீர்க்க சரணாகதி திருவாய் மொழி –
அடி அடையாதார் போலே அடி அடைந்தாள் –
முகில் வண்ணன் அடியையே -அடைந்து
பெரிய பெருமாள் திரு நாமம் இன்றி இதில்
பல இடங்களில் -வீற்று இருந்து -திவ்ய தேச பிரஸ்தாபம் வேங்கடத்து அண்ணலை -11 பாசுரத்தில்
வையம் அளந்த -திரு வாய் மொழி -நல வேங்கட வாணனை 11 பாசுரத்தில்
இங்கும் முகில் வண்ணன் -தான் பெரிய பெருமாள் –
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன் திரு விருத்தம் பாசுரம் இந்த திருவாய்மொழிக்கு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply