திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -7-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

   ‘என்திரு மகள்சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென்திரு அரங்கம் கோயில்கொண் டானே!
தெளிகிலேன் முடிவுஇவள் தனக்கே

 பொ-ரை : ‘என் திருமகள் சேர்ந்திருக்கின்ற மார்பையுடையவனே!’ என்பாள்; ‘என்னுடைய உயிரே!’ என்பாள்; ‘உன்னுடைய அழகிய தந்தத்தினாலே இடந்து எடுத்து உன் காதலுக்குரியவளாகக்கொண்ட பூமிப்பிராட்டிக்குக் கணவனே!’ என்பாள்; ‘கிருஷ்ணாவதாரத்தில் அஞ்சத்தக்க இடபங்கள் ஏழனையும் தழுவி உன் காதலுக்கு உரியவளாகக் கொண்ட நப்பின்னை பிராட்டிக்கு அன்பனே!’ என்பாள்; அழகிய திருவரங்கத்தைக் கோயிலாகக் கொண்டவனே! இவளுடைய துயரத்திற்கு முடிவு அறிகின்றிலேன்.

வி – கு :
 எயிறு – கோரப்பல், உரு – அச்சம்; அது இங்கு அச்சத்தை உண்டாக்குகின்ற இடபங்களுக்கு ஆயிற்று. தென் – தெற்குத் திசையுமாம்.

ஈடு: ஒன்பதாம் பாட்டு. 1‘இவள் துக்கத்துக்கு ஒரு முடிவு காண்கிறிலேன்,’ என்கிறாள்.

என் திருமகள் சேர் மார்பனே என்னும் – 2‘என் பேற்றுக்குப் புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ?’ என்னும். ‘என்’ என்பது திருமகளுக்கு அடைமொழி. மார்பனுக்கு அடைமொழி ஆக்கலாகாது. 3அனந்தாழ்வான் தன் பெண்பிள்ளையை‘என் திருமகள்’ என்று திருநாமம் சாத்தினான். பட்டர், பெருமாளிடத்தில், ‘அடியேனை ‘ஸ்திரீதனமாகப் பிராட்டிக்கு வந்தவன்’ என்று திருவுள்ளம் பற்றவும்; நானும், ‘இவர் எங்கள் நாய்ச்சியார்க்கு நல்லர்’ என்று அவ்வழியே ‘அழகிய மணவாளப் பெருமாள்’ என்று நினைத்திருக்கவுமாகவேணும்,’ என்று வேண்டிக்கொண்டார், ‘சேர்மார்பன்’ என்பது, நிகழ்கால வினைத்தொகையாலே 4இரஹஸ்யத்தில் நித்திய யோகத்தைச் சொல்லுகிறது: என்றது, ‘அவள் ஒரு கணம் பிரியஇருக்கில் அன்றோ எனக்குப் பேறு தாழ்க்க வேண்டுவது?’ என்கிறாள் என்றபடி. 1‘பெருமாளுக்கு விண்ணப்பஞ் செய்யுமவை கேட்கைக்காக நஞ்சீயரை அழைத்தருளித் தாம் அமுது செய்யா நிற்கச்செய்தே இத்திருவாய்மொழி இயலைக் கேட்டருளாநிற்க, இப்பாட்டளவில் வந்தவாறே ‘என் திருமகள் சேர் மார்பனே! என்னும்; என்னுடைய ஆவியே என்னும்’ என்று இயலைச் சேர்த்து அருளிச்செய்ய, அதனைக் கேட்டுக் கையை உதறி, ‘ஸ்ரீரங்கநாத’ என்று அணையிலே சாய்ந்தருளினார் பட்டர்’ என்று அருளிச்செய்வர். ‘அப்போது திருமேனியிலே பிறந்த வேறுபாட்டினைக் கண்டு, ‘இவர்க்குப் பகவானை அடைவது அணித்தாகிறதோ?’ என்று அஞ்சியிருந்தேன்,’ என்று சீயர் அருளிச்செய்வார்.2இவர்க்குப் பிரமாணம் ஒரு காற்று விசேடம் அன்று: ஒரு மிதுநமாயிற்று. ‘திருமகள் சேர் மார்பனாய்க்கொண்டு எனக்குத் தாரகனானவனே!’ என்னும்.

நின் திரு எயிற்றார் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே என்னும் -‘காதலிமார்கட்குக் காரியம் செய்யும் போது உன்னை அழிய மாறியன்றோ காரியம் செய்வது? ஸ்ரீ பூமிப்பிராட்டி பக்கல் முகம் பெறலாவது, 3அவள் விபூதியைத் தன் முகத்தால் நோக்கினால் அன்றோ 4‘நின் திரு எயிறு’ என்னும் இத்தனை அழகுக்கு? இடந்து நீ கொண்ட – நீ இடந்துகொண்ட ஸ்ரீ பூமிப்பிராட்டிக்கு வல்லபனானவனே! அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்மகள் அன்பனே என்னும் – ‘ஒரு நாள் உதவின நீ. இன்றுஉதவினால் ஆகாதோ?’ அன்றிக்கே, நப்பின்னைப் பிராட்டியுடைய நிலையை ‘அன்று’ என்னுமித்தனை என்னுதல். ஒன்று இரண்டு அன்றிக்கே இருக்கிற இடபங்கள் ஏழனையும் தழுவி. 1அவள் திருமுலைத் தடத்தை அணைத்தாற்போலே இருக்கிறதாயிற்று, அவளைப் பெறுகைக்கு உபாயமாகையாலே. உருவென்பது – இடி. ‘இடிபோலே பயங்கரமான குரலையுடைய ஏறு’ என்னுதல். அன்றிக்கே, உருவென்று மிடுக்காய், மிடுக்குத்தான் வடிவு கொண்டாற்போலே என்னுதல். 2‘உருவுட்கு’ என்பது உரிச்சொல். நீ கொண்ட – நீ கைக்கொண்ட. ஆய்மகள் அன்பனே என்னும் – 3‘என்னைக் கைவிட்டு என் ஸ்வாமிநிகள் பக்கலிலே எங்ஙனே முகம் பெற இருக்கிறாய்?’ என்னும். தென் திருவரங்கம் கோயில் கொண்டானே – தெற்குத் திசைக்குச் சிறப்பைத் தருகின்ற திருவரங்கம் என்னம் திருப்பதியை வசிக்குமிடமாக வுடையவனே! 4‘எருது ஏழ் அடர்த்த அவதாரத்தில் முகங்காட்டப் பெற்றதில்லை’ என்னும் குறை உண்டோ? அவதாரங்கள் போல அன்றியே நித்தியவாசம் செய்கிறது பிற்பாடர்க்கு உதவ அன்றோ? 5‘தன்னுடைய மேலான இடத்தை அடைந்தான்’ என்ன வேண்டாதபடி கோயில் கொண்டானாயிற்று.‘கத: ஸ்வம் ஸ்த்தாநம் உத்தமம்’-என்பது பாரதம்.

தெளிகிலேன் – 6அங்குக் குறை அற்ற பின்பு ‘தப்பாது’ என்று தெளிய அன்றோ அடுப்பது? அது மாட்டுகின்றிலேன். 7‘மாஸூச;- துக்கப்படாதே’ என்றதனை அநுஷ்டானபரியந்தமாக்கிக்கொண்டு நீ கிடந்தால், 1‘ஐயங்கள் எல்லாம் நீங்கி நிலைபெற்ற எண்ணமுடையவனானேன்’ என்று இருக்க அன்றோ அடுப்பது?ஸ்த்திதோஸ்மி கதஸந்தேஹ:’ என்பது, ஸ்ரீகீதை, 18:73.

அது மாட்டுகின்றிலேன். இவள்தனக்கு முடிவு தெளிகிலேன் – 2இவள் நிலை இதுவாக இருக்க, ஒரு ஞான லாபத்தாலே ஆறி இருக்கப்போமோ?

இவளுடைய துக்கத்துக்கு ஒரு முடிவு காண வில்லை
மூன்று பிராட்டி சேர்த்து
ஸ்ரீ பூமி நீளா தேவிமார் புருஷகாரமாக இருக்க இவள் இழக்கவா

இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -துடிக்கிறார்
மயர்வற மதி நலம் அருளின பிரயோஜனம் இவர் துடித்து பாசுரங்கள் பெற்று லோகம் திருந்த –
ஆற்றாமையே திரு விருத்தம் திருவாஸ்ரியம் பெரிய திருவந்தாதி திருவாய்மொழி
அவா வாத்யாராக -உந்த உந்த –
அவஸ்தை பேதம் அடைகிறார் –
துடிப்பு அதிகம் ஆகாமல் இருக்க குணம் காட்டி தரிக்க வைப்பான்
மானச அனுபவம்
சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி
வீற்று இருந்து ஏழு -சந்தோசம் மிக்கு
தீர்ப்பாரை யாம் இனி துக்கம் மிக்கு
தாமான நிலை மாறி தலைமகள் தாயார் தோழி பாசுரங்கள் –
சிந்திக்கும் பல நிலைகள் திருத்தாயார் –
ஆறு பல பெயர் போலே ஆழ்வார் தாயார் தோழி தலைமகள் தாமான பாசுரங்கள்
உபாய அத்யவசாயம் தாய் பாசுரம்
துடிப்பு பல சாதனம் இல்லை அவன் சங்கல்பமே அருளும்
சம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி துணிவு பதற்றம் -அவஸ்தைகள்

எனது மகளை என்ன செய்வதாக இருக்கிறாய் -அவனே பரிகாரம் காணும் குடி
கூரத் ஆழ்வான் பிள்ளைகள் திரு மணம்-ஐதிகம் பார்த்தோம் –
குரு பரம்பரை -பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் -சொல்கிறோம்

ஆசார்யன் -ரகஸ்ய த்ரயம் உபதேசித்த
உத்தாரக ஆசார்யன் -உபகாரக ஆசார்யன் -இரண்டு வகை
பெரிய திரு மந்த்ரத்தை நேரே உபதேசித்த –
நர நாராயணன் -பெருமாள் பிராட்டி -தேர் தட்டில் கிருஷ்ணன் அர்ஜுனன்
மூன்றையும் சேர்த்து பெரிய பெருமாள் பெரிய பிராட்டியாருக்கு உபதேசிக்க
திருவரங்கம் பெரிய கோயில் பிரதானம் இதனால்
இவள் துக்கத்துக்கு முடிவு இன்றி -முடிவு தெரிகிலேன் –
அகலகில்லேன் பிராட்டி சம்பந்தம்
போலே திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்
நில மகள் கேள்வனே என்னும் –
ஆய் மகள் அன்பனே என்னும் -நீளா தேவி அம்சம் தானே நப்பின்னை பிராட்டி
பிற்பட்டவள் பின்னை –
நீளா துங்க -நப்பின்னை கொங்கை மேல் வாய்த்த மலர் மார்பன்
நீளா கூரத் ஆழ்வானும்-அருளிச் செய்கிறார்

தென் திருவரங்கம் கோயில் கொண்டானே என்னும்
பேற்றுக்கு புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேனோ என்கிறாள்-
விசிஷ்டமான அம்சம் விசேஷணம் இல்லை -என் திருமகள் சேர் மார்பனே –
பிராட்டியை தன்னதாக கொண்டு
என் என்கிற இடம் திருமகளில் அன்வயிக்கும் மார்பனே என்பதில் அன்வயிக்காது
விசிஷ்டத்தில் அன்று விசேஷண அம்சத்தில் –
பிராட்டி என் திரு மகள் -நமக்கு என்று எற்பட்டவல்
அவன் கை விட்டாலும் ஸ்வா தந்த்ர்யம்
புகலாக இருப்பவள் பிராட்டி தானே –
கூடி ருந்தும் அனுக்ரகம் செய்யாமல் இருக்கலாமா
அனந்தாழ்வான் தம் பெண் பிள்ளைக்கு என் திரு மகள் திரு நாமம் சாத்தி –
ஆழ்வார் வாக்கு இவருக்கு வாழ்வு ஆனதே
ஸ்ரீ தனமாக அடியேன் -எம்பெருமானுக்கும் நமக்கும் -அயன சம்பந்தம் வேண்டாம்
ஸ்ரீ ரெங்கராஜ கமலா லாலி சீராட்டி வளர்த்த பிள்ளைதானே பட்டர் –

மஞ்சக் காணி ஸ்ரீ தனமாக கொடுப்பது போலே
அவளுக்கு ஸ்ரீ தனமாக வந்தவன்
தன்னுடைய சொத்தாக நினைக்க வேண்டாம்
நாச்சியாருக்கு நல்லன் என்றே நானும் அவனைப் பற்ற
சத்ருக்னன் -பரத ஆழ்வானுக்கு நல்லான்
பரத ஆழ்வானுக்கு உத்தேச்ய பூதர் என்றே பெருமாளை சத்ருனன் பற்றுவது போலே
கடகரி இட்டே இருவரும் பற்றுவது போலே
திரி தந்தாகிலும் தேவ பிரான் உடை கரிய கோல உரு காண்பான் போலே –
அழகிய மணவாள பெருமாள்
அனந்தாழ்வான் சரம தசையில் -பட்டர் விரும்பிய திரு நாமம் –

நம்மைப் போலே இவரை நினைத்து இருக்க -பாஷ்யகாரர் அருளிய படி பட்டரை
அபிமானித்து இருப்பாராம்
திருவேம்கடமுடையான் தனி நிறம் பெரும் அனந்தாழ்வான் வாயால் –
கருவிலே திரு விலாதார் ஐதிகம் -வேம்கடமே வேங்கடமே வாய் வெருவி –
பெரிய பிராட்டியாருக்கு வல்லபன் =அழகிய மணவாள பெருமாள்-

சேர் மார்பன் ரகச்யத்தில் நித்ய யோகம் சொல்லுகிறது –
என்னுடைய ஆவியே என்னும் –
இரண்டு பதமாக அர்த்தம் –
பெருமாளுக்கு -விண்ணப்பம் –
பட்டர் திருமஞ்சன கட்டியம் -அருளிச் செயல் விஷயமாகவே ஸ்லோகம்
நஞ்சீயரை அழைத்து அருளி தாம் அமுது செய்யும் பொழுது
இயல் சாதிக்க சொல்லி -சிந்தனை பண்ணி கேட்டு அர்த்தம் ஸ்புரிக்கும்-
இயலை சேர்த்து அருளிச் செய்ய
என்னும் என்று சொல்கிறாள் அர்த்தத்தில்
இங்கு மட்டும் -சேர்த்து அன்வயித்து -இடை வெளி விடாமல்
கேட்டு அருளி -கையை உதறி ஸ்ரீ ரெங்க நாதா என்று படுகையில் சாய்ந்து அருளி
திரு மேனி விக்ருதி கண்டு பகவத் பிராப்தி அணிதாகிறது -அஞ்சி நஞ்சீயர் –
என்னுடைய ஆவி வாயு விசேஷம் இல்லை -எம்பிரான் மிதுனத்தில் தாரகம் ஆனவன் –
பிராட்டி உடன் சேர்ந்த எம்பிரானே நமக்கு பிராணன் –

நின் திரு எயிற்றால்-இடந்த நில மகள் கேள்வன்
அழிய மாறி செய்தாயே -எனக்கு கார்யம் செய்ய கூடாதா –
என்னை நோக்காமல் பூமிப் பிராட்டி இடம் கார்யம் கொள்ள முடியாதே
கோல வராகம் ஒன்றாய்
நீல வரை இரண்டு பிறை கவ்விநிமிர்ந்தது ஒப்ப – பிறை சந்த்ரனை கவ்விக் கொண்டது போலே
நின் திரு எயிறு -விசேஷணம் சொல்ல முடியாமல் அழகு
நீ இடந்து கொண்டு பூமி பிராட்டிக்கு வல்லபன்
அன்று உரு -உறும் -ஏழு
ஒரு நாள் உதவி
நப்பின்னை விஷயம் அன்று -இன்று நினைத்தாலும் பகிர் –
திரு முலைத் தடத்தை அணைத்தால் போலே ஏழையும் கட்டிக் கொண்டாயே –
அவனை பெற உபாயம்
உரு இடி போல பயங்கரமான எருதுகள்
உரு-விழுக்காட்டு
உக்கு உரு -உப சர்க்கம் சாதம் பிரசாதம் விசேஷணம் போலே
உருவு உடைய எருதுகள் மிடுக்கு இடி உருவமாகி வந்தது போலே
நீ கைக் கொண்டு
என்னை கை விட்டு என் பிராட்டிகள் முகம் கொடுக்க மாட்டார்களே
குற்றம் செய்யாதவன் யார்
குற்றம் வார்த்தையே காதில் விழக் கூடாதே

எனது ஸ்வாமிகள்
என் திருமகள் என் நிலமகள் என் ஆய்மகள் -மூன்று இடத்திலும் அன்வயம்
இவை காலம் கடந்த
இன்றும் தென் திருக் கோயில் -நித்ய வாசம் செய்து அருளி பிற்பாடருக்கு உதவுகைக்கு
கிடந்ததோர் கிடைக்கை -அனைவரும் உஜ்ஜீவித்தால் அல்லது –
பரத ஆழ்வான் மறியல் செய்தது போலே -சத்ரியன் கூடாது என்றார் பெருமாள்
அந்தணனை -அரங்க மேய அந்தணன் -தீர்த்தம் பிரசாதித்து போகாமல் நித்ய வாசம் செய்து அருளி -கோயில் கொண்டான்
இங்கும் உதவாமல் போக –
திரு மணத் தூண்கள் நடுவில் பொகட்டு பெரிய பெருமாள் இடம் கேட்கிறாள் திருத் தாயார்
தெளிவு -அர்ஜுனனுக்கு தெளிவுஎற்பட்டது
மாசுச கேட்டதும் -சங்கை நீங்க
இவளுக்கு சொல்ல வில்லை
முடிவு அறிய வில்லை
ஞான லாபம் நிச்சயம் கிட்டும் -இன்னும் பலிக்க வில்லையே
கார்ய கரம் ஆனால் தான் தரிக்க முடியும்
மானச அனுபவம் மட்டும் போதாது சாஷாத் கார அனுபவம் வேண்டுமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading