விண்மீ திருப்பாய்! மலைமேல் நிற்பாய்! கடற்சேர்ப்பாய்!
மண்மீ துழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண்மீ தியன்ற புறஅண் டத்தாய்! எனதாவி
உண்மீ தாடி உருக்காட் டாதே ஒளிப்பாயோ!
பொ-ரை :- பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல் நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கின்றவனே! பூவுலகத்தில் பல அவதாரங்களைச் செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே! எண்ணுக்கும் அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே! என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?
வி-கு :- முதல் இரண்டு அடிகளில் இறைவனுடைய 1ஐவகை வடிவுகள் கூறப்பட்டுள்ளமை காண்க.
ஈடு :- ஐந்தாம் பாட்டு. 2எல்லாவிடங்களிலும் அண்மையிலிருப்பவனாய் என் மனத்திலும் தெளிவாகப் பிரகாசித்து வைத்து, என் கண்களுக்கு விஷயமாகாது ஒழிந்தால் நான் தளரேனோ? என்கிறார்.
விண்மீது இருப்பாய் – 3எப்பொழுதும் காணும்படியான பாகம் பிறந்தவர்களுக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கும்படி. 4இவர்க்கு இங்குத்தையிற் காட்டிலும் பரமபதத்தில் இருப்புக்காணும் முற்படத்தோற்றுகிறது. மலைமேல் நிற்பாய் – 5நித்திய சூரிகளையும் நித்தியசம்சாரிகளையும் ஒரு துறையிலே நீர் உண்ணப் பண்ணுகிற இடம். என்றது, இங்குள்ளாரும் தன் நிலையின் வாசி அறியும்படி ருசி உண்டாக்குமவனாய் நின்றபடி. வேங்கடத்து ஆடுகூத்தன் அல்லனோபெரிய திருமொழி, 2. 1 : 9.-கடல்சேர்ப்பாய்-கால் நடை தந்து போகவல்ல பிரமன் சிவன் முதலாயினோர்களுக்காகத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்தபடி. 1‘விண்மீது இருப்பாய்’ என்று இருப்பில் வீறு சொன்னார், ‘மலைமேல் நிற்பாய்’ என்று நிலையில் வாசி சொன்னார். ‘கடல் சேர்ப்பாய்’ என்று திருப்பாற்கடலிலே கிடை அழகு நிரம்பப்பெற்றது. மண்மீது உழல்வாய்-அவ்வளவு போகமாட்டாத சம்சாரிகளுக்காக அவதரித்து அவர்கள் கண்வட்டத்தில் திரியுமவனே! 2“தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்புதான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடற்றாலும்பெரிய திருவந். 18.– என்கிறபடியே, அநுகூலராய்க் கட்டுவாரும் பிரதிகூலராய்க் கட்டுவாருமான சம்சாரமாதலின் ‘உழல்வாய்’ என்கிறார்.
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – 3கண்ணாலே காணில் சிவிட்கு என்னுமவர்களுக்கு, அவர்கள் காண ஒண்ணாதபடி மறைந்து வசிக்கின்றவனே! சிற்றின்பத்திலே ஈடு பாடுடைய ஒருவன் ‘தாய் முகத்திலே விழியேன்’ என்றால், தான் மறைய நின்று அவன் உகந்தாரைக்கொண்டு ரக்ஷிக்கும் தாயைப்போலே. 4“அதாவது, சிசுபாலன் முதலாயினோர் நறுகுமுறுகு என்றால், அவர்கள் கண்களுக்குத் தோற்றாதபடி அந்தர்யாமியாய் நின்று நோக்கும்படி. எண்மீது இயன்ற புற அண்டத்தாய் – எண்ணுக்குமேலே இருக்கிற மற்றுள்ள அண்டங்களிலும் 1இப்படி வசிக்கின்றவனே! 2“இப்படிப்பட்ட அண்டங்கள் கோடி நூறு கோடியாக இருக்கின்றன” என்பது ஸ்ரீ விஷ்ணுபுராணம்அண்டாநாம் து ஸஹஸ்ராணாம் ஸஹஸ்ராணி அயுதாநி ச ஈத்ருஸாநாம் ததா தத்ர கோடி கோடி ஸதாநி ச”–என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 2. 7 : 97.
. எனது ஆவியுள் மீது ஆடி – 3என் மனத்தினுள்ளே குறைவறச் சஞ்சரித்து. அன்றிக்கே, என் ஆத்மாவுக்குள்ளும் புறம்பும் சஞ்சரித்து என்னுதல். உருக்காட்டாதே ஒளிப்பாயோ – வடிவுகாணப்பெறாவிட்டால், 4மறந்து பிழைக்கவும் பெறாது ஒழிவதே. 5குணஞானத்தாலே தரிப்பார்க்கே அன்றோ வடிவுகாணாது ஒழிந்தாலும் தரிக்கலாவது?
சர்வத்ர சந்நி ஹிதனாய்-
பஞ்ச நிலையும் அருளி –
எனது உள்ளத்திலும் இருந்து
உருக் காட்டாதே ஒழிக்க லாமா –
விண் மீது இருப்பாய் -நித்யர் போலே
மலை மேல் நிற்பாய்-இருவரும் ஒக்க அனுபவிக்க
பரமபதம் மென்மையும் அறியாதே
திருமலை நீர்மையும் அறியாத ப்ரஹ்மாதிகளுக்கு
கடல் சேர்ப்பாய்
மண் மேல் உழல்வாய் -சம்சாரிகளுக்கு
இவற்றுள் எங்கும் மறைந்து -கான்கையும் அசஹ்யமாய் உள்ளாருக்கு
சத்தியை நோக்குகிறான்
சதா தர்சனம் பண்ண -பக்தி முதிர்ந்த நித்யர்
முற்பட இவருக்கு இதுவே தோற்றுகிறது
அனைவரும் நீர் உண்ணப் பண்ண இடம் திரு மலை
இங்கு உள்ளாறும்
திரு நறையூர் தேனே முன்பே வந்து திரு நறையூர் 100 பாசுரங்கள்
ஆற்றிலே வெள்ளம் வரபுக்கால் பொசித்து காட்டுமே
சினை ஆறு படுகிறது
திருமலை அனுபவம் அப்புறம் வருமே
ருசி ஜனகம் -ஆடு கூத்தன் -வேங்கடத்தில் –
நிலையில் வாசி திருமலையில்
கிடை அழகு
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் அனுபவித்த பின்பு
இனி நடந்தவாறு
அவ்வளவு போக மாட்டாதே
சம்சாரிகள் கண் மட்டத்தில் திரிந்து உழல்வாய்
தாம்பால் ஆப்புண்டவாறும்-
காழியன் -தழும்பு இருந்த தாள் சகடம் சாடி
தழும்பு எங்கும் பாடு உற்றாலும்
சோம்பாது-
அனுகூலராக கட்டுவாரும் பிரதி கூலராய் கட்டுவாரும் இருக்க
சம்சாரத்தில் உழன்று
கண்ணாலே கானில் சிவக்கு -ஆணை இட்டு விலக்கு வாறும் உண்டே -மூட
காண ஒண்ணாத படி அந்தர்யாமித்வம்
இரா மடம் ஊட்டுவாரைப் போலே
மறைந்து நின்று அவன் உகந்தார் மூலம் உண்பிக்கும் தாய்
இருப்பில் பெரு வாசி அங்கு போலே
சிசுபாலாதிகள் நல்கு முல்கு சிடு சிடு சொன்னாலும்
அவர்களையும் நோக்கும்படி
அண்டங்கள் கோடி கோடி
எண்ணில் அடங்காத எண் மீது இயன்ற
ஹிருதயத்துள்
ஆவி உள் மீது ஆடி
உள்ளும் புறமும் சஞ்சரித்து
உருக் காட்டாதே
மறக்கவும் முடியவில்லை
குண ஞானம் வடிவை சேவிக்க ஆசை அதிகரிக்க
ஒழிக்க இருக்கிறாயே
தரிக்க முடியாதே ஞானம் மட்டும் கொண்டு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply