திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

பாயோர் அடிவைத்து அதன்கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனைநாளும்
தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?

பொ-ரை :- ஒரு திருவடியைப் பரப்பிக் கடலால் சூழப்பட்ட உலகங்கள் எல்லாம் அத் திருவடியின் கீழே ஆம்படி தாவி அளந்து, மற்றொரு திருவடியால் மேல் உலகங்கள் எல்லாவற்றையும் தடவின மாயோனே! உன்னைக் காணும்பொருட்டு வருந்தி எல்லாக் காலத்திலும் தீயின் அருகில் சேர்ந்த மெழுகைப் போன்று உலகத்தில் திரியக் கடவேனோ?

  வி-கு :- ஓர் அடி பாய் வைத்து என்க. பாய் – பரப்பி. பாய், தாய் என்பன : வினையெச்சங்கள். தீயோடு – தீயின் ; வேற்றுமை மயக்கம்.

ஈடு :- ஆறாம்பாட்டு. 1‘உம்முடைய அபேக்ஷிதம் செய்யக் கடவோம்; அதில் ஒரு குறை இல்லை; ஆனாலும், பிரயோஜனம் உம்மதானபின்பு நீரும் சில முயற்சிகளைச் செய்யவேணும் காணும்’ என்ன, இந்த மரியாதை என்று தொடங்கிக் கட்டிற்று என்கிறார். அன்றியே, காண்கைக்குத் தாம் தக்கவரல்லர் என்று உபேக்ஷித்தானாக நினைத்து, தகுதி தகுதிஇன்மைகளைப் பாராதே எல்லார் தலைகளிலும் திருவடிகளை வைத்த உன்னாலே இழக்கப்படுவோர் உளரோ? என்கிறார் ஆகவுமாம்.

ஓர் அடி பாய் வைத்து – 2சேதனர்தலைகளிலே திருவடியை வைக்கிறபோது, அவர்கள் எவ்வளவு வருந்தினார்கள்? 3வசிஷ்ட சண்டாள விபாகம் பாராதே வெறும் உன்கிருபையாலே செய்தருளினாய் அத்தனை அன்றோ. ஓர் அடியைப் பரப்பிவைத்து. அதன் கீழ் – அத் திருவடியின் கீழே. பரவை நிலம் எல்லாம் தாய் – கடல் சூழ்ந்த பூமிப்பரப்படங்கலும் அளந்து. 4சங்கல்பத்தாலே செய்தானல்லனே, திருவடிகளைப் பரப்பிப் பின்பே யன்றோ அளந்துகொண்டது. 5பரக்கவைத்து அளந்துகொண்ட பற்பபாதன் அன்றோ-திருச்சந்தவிருத். 32.-. ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – மற்றைத் திருவடியால் பிரமலோகத்தளவும் சென்று தீண்டிய. ‘எல்லா உலகும்’ என்றது, நடுவே உள்ள உலகங்களை. தென்றல் உலாவினாற் போலே இருத்தலின் ‘தடவந்த’ என்கிறார். மாயோன் – தன்னுடைமையைத் தீண்டுதற்குத் தான்வியாமோகம் செய்யுமவன். உன்னைக் காண்பான் வருந்தி – 1என்னளவில் வந்தவாறே என்னை இரப்பாளன் ஆக்குகிறாயோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? எனைநாளும் – அநேக காலம். 2மயர்வற மதிநலம் அருளியபின்பு பேற்றின் அளவும் செல்ல இடையில் உண்டான நான்கு நாள்களும், அவன் எதிர்சூழல் புக்குத் திரிந்த நாள்களைப் போன்று பரப்பாகத் தோற்றுகிறபடி. தீயோடு உடன்சேர் மெழுகாய்-3நெருப்பிலேபட்டுக் கரிந்துபோகவும் பெறாதே, தூர இருந்து அழியாதிருக்கவும் பெறாதே, உருகுவது வலிப்பது ஆகிறபடி. மானச அநுபவத்தாலே உருகுவது வலிப்பது, புறத்திலே காணுதல் பெறாமையாலே உருகுவது வலிப்பதாய்ச் செல்லுகிறபடி. 4நசை வலிக்கப் பண்ண, ஆசை உருகப்பண்ணச் சொல்லுகிறபடி. உலகில் திரிவேனோ – ஒன்றில் ஜீவித்தல், ஒன்றில் முடிதல் செய்யப்பெறாதே, குளிர்ந்த வழியில்லாத தேசத்திலே 5யாதநாசரீரம் போலே நான் ஒருவன் இங்ஙனே திரிவதே!

உம்முடைய அபேஷிதம் செய்யக் கடவோம் –
நீரும் சில யத்னம் பண்ண வேண்டும் -என்பானாய்
இப்படி என்று தொடக்கி இப்படி வைத்து இருந்தாய்
வாமனன் திரி விக்ரமனாக வந்து தீண்டினாயே
தகுதி இப்பொழுது எதற்கு பார்க்கிறாய்

சித்தாந்தம் -உன்னுடைய கிருபையாலே வரையாதே தீண்டி –
அன்றிகே
காண்கைக்கு தான் அயோக்யர் என்று கேட்பதாக
தகுதி பார்க்காமல் தீண்டிய பின்பு
இழக்கப் படுவார் உண்டோ
பிரத்யனமும் யோக்யதையும் வேண்டாமே –
நெருப்பில் விழுந்த மெழுகு போலே துடிக்க
தாய்ந்து -ஓர் அடி வைத்து உலகு எல்லாம் பரவி அளந்து கொண்ட
திருவடியால் தடவி வந்த மாயன்
உருகி திரிவேனோ
எவ்வளவு வருத்தப் பட்டு பிரயத்னம் செய்தார்கள் -உனது திருவடி வைக்க –
வசிஷ்ட சண்டாள விபாகம் பார்க்காமல் உன்னுடைய விருப்பத்தால்
தாவி வைத்து
வைக்க போகிறேன் சொல்லாமல் வைத்து
பாய்ந்து ஓர் அடி வைத்து
கடல் சூழ்ந்த பூமி பரவை அனைத்தும்
சங்கல்ப்பத்தால் செய்யாமல் திருவடியால்
பரக்க வைத்து அளந்து கொண்டான்
பரப்பிய பின்பு அளந்தான்

தடவி வந்த
தென்றல் உலாவினது போலே சுகம்
மாயோன் தன்னுடைய உடைமை ஸ்பர்சிக்கும் ஆச்சர்ய பூதன்
உன்னைக் காண்பான் நான் வருந்தி
என்னை இரபபாளன் ஆக்கி
அங்கு நீ இரபபாளன் ஆனாய்
இரந்ததால் தான் கட்சி கொடுக்க வில்லையே
அநேக காலம்
பிராப்தி அடையும் வரை
அருளின நாள் தொடங்கிஇது வரை
அவன் எதிர் சூழல் புக்கு திரிந்த நாள்கள் விட இது பெரிதாக தோன்றுகிறது

தீயோடு உடன் சேர்ந்த மெழுகு
உருகியும் போகாமல் இருக்கவும் முடியாமல்
சுகம் துக்கம் மாறி
மானச அனுபவத்தால் உருகி வலிப்பது
நசை நப்பாசை
ஆசை –
நைப்பாச்சை நப்பாசை ஏக்கம் உடன் ஆசை உருக பண்ணுகிறது
ஜீவித்தல் முடியல் செய்யப் பெறாதே
யாதனா சரீரம் போலே –
நரகம் துக்கம் அனுபவிக்க கொடுக்கும் சரீரம் –
முடிந்து பிழைக்கலாம் இந்த சரீரம்
அங்கெ அப்படி இல்லை
இப்படி இங்கனே திரிவதே
உலகில் -நரகம் போலே அவனை அனுபவிக்காமல் இருக்க -ஆழ்வாருக்கு தோற்ற
அன்று நான் எங்கே புக்கு இழந்தேனோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading