திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-9-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல்வேறாப்
பிளந்து வீயத் திருக்கா லாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன்இந் திரன்விண் ணவர்சூழ
விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே.

பொ-ரை :- சகடாசுரனுடைய உடலானது கட்டுக்குலைந்தும் நடுவே முறிந்தும் வேறாகும்படி பிளந்து உருமாயத் திருவடியால் காரியம்கொண்ட பெருமானே! பிரமன் சிவன் இந்திரன் மற்றைத்தேவர்கள் இவர்கள் கிளர்ந்து சூழ்ந்து சேவிக்க, உன் முதன்மைதோன்றும்படி நான் காண விண்மீதே ஒரு நாள் வாராய் என்க.

வி-கு :- அசுரர்: இகழ்ச்சியின்கண் வந்தது. வீய ஆண்ட பெருமான் என்க. வீய – இறக்க. கிளர்ந்து சூழ விளங்க விண்மீதே காண ஒருநாள் வாராய் என்க. வாராய்: விதிவினை; வரவேண்டும் என்பது பொருள்.

ஈடு :- நான்காம் பாட்டு. 1தளரக்கடவீர் அல்லீர்; உம்முடைய தளர்த்தியை நீக்கக்கடவோம்; ஆனாலும், தடைகள் கனத்திராநின்றன காணும்’ என்ன, ‘ஓம், அப்படியே; சகடாசுரனைக் காட்டிலும் வலிய தன்றோ என்னுடைய விரோதி?’ என்கிறார். ‘உன்கால் கண்டபோதே போகாதோ?’ என்கிறார். ‘அடிபடின் செய்வது என்?’ என்று சும்மெனாதே கைவிட்டோடும் –  பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 3.
-அன்றோ.

சகட அசுரர் உடல் தளர்ந்தும் முறிந்தும் வேறா பிளந்து வீய – சகடாசுரன் கட்டுக் குலையா, முறியா, உடல்வேறாகப் பிளந்து வீய; 2“ஸ்ரீராமபிரானால், அறுக்கப்பட்டதாகவும் பிளக்கப்பட்டதாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டதாகவும் முறியடிக்கப்பட்டதாகவும்-

சிந்நம் பிந்நம் ஸரை: தக்தம் ப்ரபக்கம் ஸஸ்த்திரபீடிதம் பலம் ராமேண தத்ருஸு: நராமம் சீக்ரகாரிணம்”-என்பது, ஸ்ரீராமா. யுத். 94 : 22.-

கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்” என்கிறபடியே, 1பின்பு, துகளும் காணஒண்ணாத படியாகை. சகடாசுரனைக் கொன்றான் என்று திரளச்சொல்ல அமைந்திருக்க, ‘தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ, பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே. திருக் கால் ஆண்ட – 2அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ 3இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார். 4“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலைவரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்; அவ்வளவிலே பொடி பட்டானித்தனை; 5“உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்” –பெரிய திரு.
10. 8 : 3.
-என்று இவனும் அறிந்துசெய்தானல்லன். 6தன்னை உணர்ந்து பரிமாறும்போது திவ்விய ஆயுதமும், அவை உதவாதபோது கையும், அதுவும் உதவாத போது திருவடிகளுமாய் இருக்கிறபடி. 7நம்முடைய ஆபத்துக்களுக்கே அன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவன; 8திருமேனிதான் அடியார்களுக்காக ஆகையாலே, அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே உறுப்பாயிருக்கை.பெருமானே – 1அன்று சேஷியை உண்டாக்கின உனக்கு, இன்று சேஷவஸ்துவை உண்டாக்குகை பெரிய பணியோ? 2அவன் பிரகாரியானால், பிரகாரமாயுண்டாவது அன்றோ இது. பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் கிளர்ந்து சூழ விளங்க ஒருநாள் காண விண்மீதே வாராய் – 3“கும்பிடு நட்டமிட்டாடி” –திருவாய். 3. 5 : 4.-என்கிறபடியே, வேறு பிரயோஜனத்தைக் கருதாதவரைப் போலே, தம் வசம் அற்றவர்களாய்க்கொண்டு பிரமன் சிவன் முதலானோர்களால், பிரதாநரோடு பிரதான மில்லாதாரோடு வாசியறக் கிண்ணகம் சுழித்தாற்போலே சூழச் சூழப்பட்டு, 4இருட்டில் விளக்குப்போலே 5“ஒளிகளின் திரள்” “தேஜஸாம் ராஸிமூர்ஜிதம்” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா 1. 9 : 67.-என்கிறபடியே தேஜஸ்ஸே வடிவான திருமேனியைக் கொண்டு, ஒருநாள் யானைக்கு வந்து தோற்றினாற்போலே, ஆகாச மடங்கலும் இடம் அடைக்கும்படி வந்து தோற்றவேணும் என்கிறார். இவன் சந்நிதியில் பிரமன் முதலானோர்களுடைய ஒளிகள் ‘இருட்டு’ என்னும்படி இருத்தலின் ‘விளங்க’ என்கிறார். ‘நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள்’ என்று விரும்பினேனோ என்பார் ‘ஒரு நாள்’ என்கிறார். 6நீள்நகர் நீள் எரி வைத்தருளாய் -திருவிருத்தம், 92.-என்கிறேனோ என்பார் ‘காணவாராய்’ என்கிறார். இங்கே வந்து அவதரிக்கச் சொல்லுகிறேனோ என்பார் ‘விண்மீதே’ என்கிறார்.

தளர கடவீர் அல்லீர்
பிரதி பந்தகங்கள் போன பின்பே அனுக்ரகிக்க முடியும் என்பான் என்னில்
சகடாசுரன் காட்டில் வலிடதா என்னுடைய விரோதி
உன்னுடைய கால் கண்ட போதே போகாதோ
துயர் அடி தொழுது எழுந்தேனே
சும்மனாதே கை விட்டு ஓடாதோ –
சும் சொல்லும் முன்பே போகுமே
தூறுகள் சம்சாரிகள் -இடம் போய் சேரும்
தூஷிகள் இடம் பாபம் போகுமே -புண்யம் பாகவதர்கள் இடம் போகுமே-

தேவர் சூழ விளங்க ஒரு நாள் காண வாராய்
விரோதி நிரசன சீலன்
திருக்காலை ஆண்ட பெருமான்
கட்டு குலைந்து முறிந்து உடல் வேறாக பிளந்து விழுந்தான்
சின்னம் பின்னம் சரித்து தத்தம் சாம்பலாகும் ராம பாணத்தால்
துகள் கூட காண ஒண்ணாத படி
தளர்ந்தும் முறிந்தும் தனித் தனியாக சொல்லி
ஒவ் ஒன்றும் தனக்கு இனிதாய் இருக்க
திருக்கால் ஆண்டான் –
அடியாரை ஆண்டால் ஆபத்துகளுக்கு  உதவுவார்களே -அது போலே –
சிறு பாலகனாய் ஒன்றும் அறியாமல் இருக்க -திருவடிகள்
கிடீர் நம்மை நோக்கிற்று -அவனை ரஷித்தது இவரை ரஷிப்பது போல் தான்
முலைப்பால் உண்ண-ஏழு திங்களில் எமுனை நீராடப் போனாள் யசோதை –

காலை உதைத்து அழ அவ்வளவிலே பொடி பட்டது
உருள சகடம் -இவன் அறிந்து செய்ய வில்லை
திவ்ய ஆயுதம் –
உணர்ந்து அழிக்க-திவ்ய ஆயுதம் -கை -அதுவும் உதவாத தசையில் திருவடிகள் உதவ
தூக்கத்தில் காலைத் தூக்க
அவன் ஆபத்திலும் திருவடிகளே உதவ-

திருமேனி ஆஸ்ரிதர் அனுபவிக்கவும் விரோதி போக்கவும் தானே
துகளாக போக
அன்று சேஷியான உன்னையே உண்டாக்கிக் கொண்டாயே
இன்று செஷபூதாணன் எனது விரோதி போக்க பெரிய பணியோ
அவன் பிரகாரி -பிரகாரம் -நாம் -நீ இருக்க எனக்கு என்ன ஆபத்து –
விளங்கு -கும்மிடு  நட்டமிட்டு ஆடி -ஸ்தோத்ரம் பண்ண –
பிரமன் சிவன் இந்த்ரன்  என்று இவர்கள் சேர்ந்து  சூழ -கூத்தாடி –
அநந்ய பிரயோஜனர் போலே தங்கள் வசம் இல்லாமல் –
கலாப காலத்தில் ஸ்ரீ பெரும்பூதூர் உத்சவர் திருவல்லிக்கேணி
எழுந்து அருளி -கூத்தாடி சாத்துமுறை இன்றும் பண்ண –
கிண்ணகத்தில் இழிவாரைப் போலே சூழ்ந்து
விளங்க -இருட்டறையில் விளக்கு போலே ஆனைக்கு
தோற்றினது போலே
இவன் சந்நிதியில் அவர்கள் தமஸ்  போலே இருப்பார்
ஒரு நல
100 ஆண்டு 11000 ஆண்டு வேண்டாம்
கண் முன்னால் காணும் படி வந்தால் போதும்
அசுரர் வதம் பண்ண அவர்கள் அனுப்ப –

பிரயோஜனாந்த பரர் போலே இல்லையே
விண் மேலே ஆகாசத்தில் இருந்தவாறே தொற்றினால் போரும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading