சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்
வாசக் குழலி இழந்தது மாண்பே.
பொ-ரை :- குருந்த மரமானது சாயும்படி முறித்த தனிவீரனுக்கு, சகடாசுரன் இறக்கும்படியாக உதைத்த மணவாளனுக்கு, பூதனையானவள் பிணமாகும்படி முலைப்பாலைக் குடித்த உபகாரகனுக்கு, என்னுடைய, வாசனை பொருந்திய கூந்தலையுடைய பெண்ணானவள் தன் மாண்பினை இழந்தாள்.
வி-கு :- மாய – இறக்க. மாயம் என்று பிரித்து வஞ்சனையுடைய என்னுதல், பேயை : வேற்றுமை மயக்கம் குழலி – கூந்தலையுடையவள்.
ஈடு :- எட்டாம்பாட்டு. 4கிருஷ்ணன், தன் விரோதிகளை அழித்த செயலுக்குத் தோற்று, இவள், தன்னுடைய பெண்மையை இழந்தாள் என்கிறாள்.
குருந்தம் சாய ஒசித்த தமியற்கு – 4அசுர ஆவேசத்தாலே தழைத்துப் பூத்து நின்ற குருந்தத்தை வேரோடே சாய்ந்து விழும்படிமுறித்த தனியற்கு. என்றது, நம்பிமூத்தபிரானை ஒழியவே தனிவீரம் செய்தவனுக்கு என்றபடி. 1தான் அத்தனிமையிலே சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு. மாயச் சகடம் உதைத்த மணாளற்கு – 2வஞ்சனைபொருந்திய சகடம்என்னுதல்; “தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய் பிளந்து வீய” என்கிறபடியே, சகடம் உருமாயும்படி என்னுதல். மணாளற்கு-ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கு வில்லை முறித்தல்போலே, இந்தச் செயலினைக் காட்டியாயிற்று இவளைத் தனக்கே உரியவளாக்கியது. பேயைப் பிணம் படப் பால் உண் பிரானுக்கு – 3சூர்ப்பணகையைப் போலே ஒரு கேட்டினை விளைக்க உயிரோடே விடாதே, பூதனையைப் பிணமாய் விழும்படி முலை உண்ண வல்ல மஹோபகராகனுக்கு. னுன் வாசக்குழலி – 4இயற்கையிலேயே வாசனைபொருந்திய குழலையுடைய என் பெண்பிள்ளை. 5அவனை, “சர்வகந்தா:” என்று சொல்லுகைக்கு அடி இத்தலையை இட்டு. 6வாசஞ்செய் பூங்குழலாள் அன்றோ.-இது திருவாய்மொழி,- 10. 10 : 2.- இழந்தது மாண்பே-தன் ஆண் தன்மைக்குரிய செயல்களை எல்லாம் காட்டி, இவளுடைய பெண்தன்மையைக்கொண்டான். மாண்பு-மாட்சிமை; பெண்தன்மை. மாண்பு என்பதற்கு, அழகு என்றும் சொல்லுவர்.
கிருஷ்ணன் விரோதி நிரசனதுக்கு தோற்று
தன்னுடைய ஸ்த்ரீத்வம் இழந்தாள்
பெண்மையே போயிற்றாம்
குருந்தம்சாய -ஒசித்த -தமியற்கு –
நம்பி மூத்த பிரான் ஒழிய தனியாக செய்த சேஷ்டிதம்
தான் உதவக் காணும் இவளுக்கு நினைவு
குலசேகர ஆழ்வார் ராமருக்கு உதவ போனது போலே
மாய சகடம் கிரித்ரிம சகடம் மாய உதைத்த மணாளர்
குழந்தை மணாளரா நாள்களோ நாள் ஐந்து திங்கள்
இவ்வபதானத்தை காட்டி இவள் தோற்று
சீதைக்கு வில்லை முறித்து காட்டியது போலே
சூர்பணகை விட்டது போலே -அநர்த்தம் விலைக்க உயிர் உடன் விடாதே
மஹோ உபகாரன் -தன்னை ரஷித்து
நிசர்க்கம் வாசனை பிரியாத குழல் சர்வ கந்த -இவள் சம்பந்தத்தால்
இத்தலையை இட்டு வாசம் செய் பூம் குழல்
பும்ஸ்த்வம் காட்டி இவள் உடைய ஸ்த்ரீச்த்வம் அபஹரித்து கொண்டான்
மாண்பு -அழகு பெண்மை
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply