சிந்தை யாலும் சொல்லாலும் செய்கையி னாலும் தேவபி ரானையே
தந்தை தாய் என் றடைந்த வண்குரு கூர வர் சட கோபன்
முந்தை ஆயிரத் துள் இவை தொலை வில்லி மங்கலத் தைச்சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமா லுக்கே.
பொ-ரை :- தேவபிரானையே தந்தை என்றும் தாய் என்றும் மனத்தாலும் வாக்காலும் சரீரத்தாலும் அடைந்த வளப்பம் பொருந்திய திருக்குருகூரிலேயுள்ளவர்கட்குத் தலைவரான ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த பழைமை பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள், திருத்தொலை வில்லிமங்கலம் என்னும் திவ்வியதேசத்தைப் பற்றிச் செந்தமிழால் அருளிச்செய்த இவை பத்துப் பாசுரங்களையும் வல்லவர் திருமாலுக்கு அடிமை செய்வார்கள்.
வி-கு :- தேவபிரானையே தந்தை தாய் என்று சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அடைந்த சடகோபர் என்க-சொன்ன செந்தமிழ் இவைபத்தும் என்க.
ஈடு :- முடிவில் இத்திருவாய்மொழியின் கருத்தை விளக்கிக் கூறுவதாய்க் கொண்டு, இதனைக் கற்றவர்கள் இதற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யப் பெறுவர்கள் என்கிறார்.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் – மனம் வாக்குக் காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட அவன் பக்கலிலே ஈடுபட்டனவாய் இருக்கிறபடி. 2“இரங்கி” என்றும், “மணிவண்ணவோ” என்றும், “தன் கரங்கள் கூப்பித் தொழும்” என்றும் என்னும் இம்மூன்றாலும் இவர்க்கு உண்டான ஈடுபாட்டின் மிகுதியன்றோ இத் திருவாய் மொழியிற்சொல்லிற்று. தேவபிரானையே தந்தை தாய் என்று அடைந்த – அயர்வறும் அமரர்களுக்கு அதிபதியாயிருந்து வைத்துத் தொலைவில்லி மங்கலத்திலே சுலபனாயிருந்தவனே எல்லாவிதமான உறவும் என்று அறுதியிட்டபடியே பற்றுவதும், செய்தவர். ’ண்குருகூரவர் சடகோபன் – அவனே இவர்க்கு எல்லாவித உறவும் ஆனாற்போன்று அவ்வூரிலுள்ளார் ஆழ்வாரையே எல்லா உறவு முறையாகப் பற்றியாயிற்று இருப்பது. 2“அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான்” என்றும், “தாயும் தமப்பனும் மனைவியும் குழந்தைகளும் செல்வமும் மற்றும் எல்லாம் வகுளாபரணர் திருவடிகளே” மாதாபிதா யுவதய: தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதே: வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா”
என்றும் சொல்லுகிறபடியே இருப்பர்கள். முந்தை ஆயிரத்துள் –பழையதான வேதார்த்தத்தை அருளிச்செய்கையாலே. சர்வேசுவரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற் போல, வேதமும் தமிழாய் வந்து இவர் பக்கலிலே அவதரித்தபடி என்னுதல். இவை தொலைவில்லி மங்கலத்தைச் சொன்ன செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலுக்கு அடிமைசெய்வார் – இதனைக்கற்கவல்லவர்கள் திருமகள் கேள்வடுக்கு அடிமைசெய்யப் பெறுவர். செந்தமிழ் – செவ்விய தமிழ்; பசுந்தமிழ்; அர்த்தத்தைத் தெளிவாகக்காட்டுவது. பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளையபெருமாள் அடிமை செய்தாற்போலே, சேர்த்தியிலே அடிமை செய்யப் பெறுவர் என்பார் 2திருமாலுக்கு அடிமை செய்வார்’ என்கிறார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
துவளறுசீர் மால்திறத்துத் தொன்னலத்தால் நாளும்
துவளறுதன் சீலமெல்லாம் சொன்னான் – துவளறவே
முன்னம் அநுபவத்தில் மூழ்கிநின்ற மாறனதில்
மன்னுமுவப் பால்வந்த மால.
கைங்கர்யம் -செய்யப் பெறுவார்
சிந்தையாலும்
மனோ வாக் காயங்கள் மூன்றும் அவன் வழி
சென்னியால் வணங்கி
இரங்கி
மணி வண்ணாவோ
சர்வ வித பந்துவாக
அவரே நமக்கும் சர்வ வித பந்து
குருகூர் மகர் உள்ளாருள்ளும் ஆழ்வாரே
அன்னையாய்
மாதா பித்த சர்வம்
முந்தை ஆயிரம் பழைய காலம்
பண்டை நன் மறை வேதம்
இது முந்தை ஆயிரம்
பழைய வேதார்தம் அருளிக் காட்டியபடி
அப்யசிக்க வல்லவர் ஸ்ரீ ய பதிக்கு விசிஷ்ட வேஷத்தில் அடிமை செய்ய பெறுவார்
சீர் மால் திறத்தை
தொன் நலத்தால்
தம் சீலம் சொல்லி
அனுபவித்தில் மூழ்கிய மாறன்
அந்த முகத்தால் அருளி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply