பின்னைகொல்?நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்
என்ன மாயங்கொலோ? இவள்நெடு மால்என்றே நின்றுகூவுமால்
முன்னி வந்தவன் நின்றிருந் துறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே.
பொ-ரை :- இப்படிப் பிறந்திருக்கும் இவள், நப்பின்னைப்பிராட்டி தானோ? பூமிப்பிராட்டிதானோ? பெரிய பிராட்டியார்தானோ? என்ன ஆச்சரியமோ? இவள் நெடுமால் என்றே நின்று கூவாநிற்பாள்; முற்பட்டு வந்து அவன் நின்று இருந்து உறையும் திருத்தொலைவில்லிமங்கலம் என்னும் திவ்விய தேசத்தைத் தலையால் வணங்குவாள்; அந்த ஊரின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இராநின்றாள்.
வி-கு :- பின்னைகொல் பிறந்திட்டாள், நிலமாமகள்கொல் பிறந்திட்டாள், திருமகள்கொல் பிறந்திட்டாள் எனத்தனித்தனியே கூட்டுக. அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் தொலை வில்லிமங்கலம் என்க.
ஈடு :- பத்தாம்பாட்டு. 4அவனால் அல்லது செல்லாத இவளுடைய ஈடுபாட்டின் மேம்பாட்டினைக் கண்டு, பிராட்டிமாரிலே ஒருத்தியோ? என்று ஐயப்படுகிறாள்.
பின்னைகொல் – நப்பின்னைப் பிராட்டி பிறந்திட்டாளோ? நிலமா மகள் கொல் – அங்ஙன் அன்றியே, பூமிப்பிராட்டி பிறந்திட்டாளோ?
திட்டாளோ? திருமகள்கொல் – அங்ஙன் அன்றிக்கே, 1இந்த ஏற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தானே பிறந்திட்டாளோ? அன்றிக்கே, 2சர்வேசுவரனுடைய செல்வமாக இருக்குமவள் பிறந்திட்டாளோ? அச்செல்வம் விளையும் பூமியாயிருக்குமவள் பிறந்திட்டாளோ? அவ்விளைபூமியினுடைய பல ரூபமாயிருக்குமவள் பிறந்திட்டாளோ என்னுதல். 3அங்ஙன் அன்றிக்கே, அவர்களுக்கு இவள்படி இல்லாமையாலே அவர்கள் ஒப்பு அல்லர்; உலகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி – பிறந்தாளோ? என்றுமாம். 4“வீரியத்தில் விஷ்ணுவை ஒத்தவர்” விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே ஸோமவத் ப்ரிய தர்சந:”- என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.
என்றாற்போலே, நாய்ச்சிமார் பக்கலிலேயும் ஒவ்வொரு வகைக்கு ஒப்புச் சொல்லலாயிருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள். 5“எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ”- “உபமாநம் அஸேஷாணாம் ஸாதூநாம் யஸ்ஸதாபவத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 : 156.-என்கிறபடியே, இவரை எல்லார்க்கும் ஒப்புச்சொல்லலாம், இவர்க்கு ஒப்பாவார் இலர் காணும்.
என்ன மாயம் கொலோ – 6பகவத் விபூதியில் கூடாதது இல்லையாகாதே! இது என்ன ஆச்சரியம்தான்! இவள் நெடுமால் என்றே நின்று கூவும் – தன்பிச்சினைக் காற்கடைக்கொண்டு அவன் பிச்சினைச்சொல்லிக் கூப்பிடாநின்றாள். ஆல் – ஆச்சரியத்தைக் காட்டும் இடைச்சொல். அவன் முன்னி வந்து நின்று இருந்து உறையும் – தன்னுடைய வியாமோகத்துக்கும் அவன் கிருஷி செய்தபடி. முற்பாடனாய் வந்து அவன் நிற்பது இருப்பதாய்க் கொண்டு நித்தியவாசம் செய்கிற ஊர். 1பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே. சென்னியால் வணங்கும் – தன்கரங்கள் கூப்பித் தொழுகையும் 2வேண்டத் தக்கதானபடி. இருந்த இடத்தே இருந்து தலைசாய்க்கும்படி ஆனாள். அவ்வூர்த் திருநாமம் கேட்பது சிந்தையே – அவ்வூர்த் திருநாமம் கேட்கச் செவிதாழ்க்கையிலே 3இவளுக்கு மநோரதம். இவள் ‘அவ்வூர்’ என்றது, பெண்பிள்ளை சொன்னாற்போலே இராமையாலே. ஆயின், ஒருகால் சொன்னாளே என்னில், ‘அது 4வறைமுறுகல் ஆயினமையால் அன்றோ பின்பு தவிர்ந்தது’ என்று அருளிச்செய்வர்.
சர்வேஸ்வரன் சம்பத் இவள்
இவள் உடைய ப்ராவண்யா அதிசயம் கண்டு
பின்னை
பிராட்டி
பூமி பிராட்டி
பிறந்திட்டாள் கொல் -இவள் ஒருத்தி நாலாவது
சமமாக யாரையும் சொல்ல முடியாது
இரண்டு நிர்வாகம்
ஒப்பு அன்று லோகம் எல்லாம் வாழ இவள் பிறந்து
விஷ்ணு வீர்யம் போலே ஒரு வகைக்கு ஓன்று ஒப்பு சொல்ல
கதிர் பொறுக்கி பேசுகிறாள்
உபமானம் இல்லாத படி
எல்லாருக்கும் இவள் ஒப்பு இவளுக்கு ஒப்பு யாரும் இல்லை
பிரகலாதன் -இப்படி சொல்லி புராணம்
ஆழ்வார் பிரபாவம் சொல்லும் திருவாய்மொழி
இது என்ன மாயம்
எம்பெருமான் விபூதியில்
நெடு மால் கூவி வ்யாமொஹம் அன்பு
அவனுக்கு தனது பேர் உள்ள அன்பை
அவன் பித்தை
தனது பித்தை காற் கடைக் கொண்டு
கூவும் ஆல் -ஆச்சர்யம்
தன்னுடைய வ்யாமொஹத்துக்கும் அவன் கிருஷி செய்து முன் வந்து வர்த்திக்கிற திவ்ய தேசம்
என்னை என்னில் முன்னம் பாரித்து வாரி விழுங்கினான்
பச்யன் சோறு பார்த்து படுமா போலே எம்பெருமான் இவளை பாரித்து
கை கொண்டு சேவிக்க முடியாமல் தலை வணங்கி -சென்னியால் வணங்க
காதில் திவ்ய தேசம் அவ்வூர் கேட்க
அவள் போலே சொல்ல முடியுமா பார்க்க தீந்து போனது போலே இருக்க
தவிர்க்க அவ்வூர் சப்தம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply