ஸ்ரீ பெரிய திருமொழி-1-3-2-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

முதுகு பற்றி கைத் தலத்தால் முன்னொரு கோல் ஊன்றி
விதிர் விதிர்து கண் சுழன்று மேல் கிளைக் கொண்டு இருமி
இது என்னப்பர் மூத்தவாறு என்று இளையவர் ஏசா முன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே —1-3-2

———————————

வியாக்யானம் –
முதுகு பற்றி கைத் தலத்தால் –
தௌர்ப்பல்யத்தாலே முதுகு நோமே –
ஒரு  கையால் அத்தைப் பற்றும்

முன்னொரு கோல் ஊன்றி –
முன்பு விழாமைக்கு ஒரு கோலை ஊன்றும் ஆயிற்று
இரண்டருகும் கப்புக்கால் கொடுக்க வேண்டும்படி இறே இருப்பது

விதிர் விதிர்து –
சரீரம் எங்கும் ஒக்க நடுங்கும் ஆயிற்று

கண் சுழன்று –
ஒரோ அவயவங்களுக்கு பிறக்கும் விகாரங்களை எல்லாம் உப லக்ஷணமாக சொல்லுகிறது

மேல் கிளை-
மேற்கு என்று மேலாய்-மேல் இளைப்பு கொண்டு என்னுதல்
அன்றிக்கே
மேலான கிளையை உச்சமான த்வநியைக் கொண்டு

இருமி
கொண்டு இருமி

இது என்னப்பர் மூத்த வாறு –
இதுதான் எல்லாரும்  மூக்கக் கடவது இறே
இத்தனை கழிய மூக்கல்  ஆகாது என்பர்கள் ஆயிற்று –

அப்பர் என்று
பிரகிருதி அதன் மேல் மூப்பு

என்று-இளையவர் ஏசா முன் –
அவர்களுக்கும் அது வ்யவஸ்திதமாய்
தங்களுக்கும் இவை-இளமையும் ஏசுவதும்- வ்யவஸ்த்திதம் ஆனால் போலே இருக்க ஏசா நிற்பர்கள்

மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே –
பெரு பண்ணைப் பாடுகை
அன்றிக்கே வண்டுகள் மது பான மத்தமாய் எல்லாப் பண்களையும் பாடா நிற்கும்

ஆக
இந்த கிலேசங்களை தவிர்க்கும் அளவு அன்றிக்கே
நிரதிசய ஆனந்தத்தைப் பெற்று களிக்கலாம் படியான தேசம் ஆயிற்று –

—————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading