திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -6-4-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்.

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை மால்வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம்மண்ணின் மிசையே?

பொ-ரை :- ஏழ்கடலும் ஏழ்மலையும் உலகு ஏழும் ஒக்கக் கழியச் செலுத்தி, முடியத் தேரைக் கொண்டு சென்ற ஆச்சரியமும் முதலான மற்றும் பலவான ஆச்சரியமான செயல்களையுடைய, சக்கரம் சங்கு இவற்றை வலக்கையிலும் இடக்கையிலுமாகவுடைய மால் வண்ணனை வேறுபடும்படி செய்கிற பாசுரங்களைப் பாடுகின்ற நாக்கினையுடைய எனக்கு இந்த மண்ணின்மேல் ஒப்பாவார் உளரோ?

வி-கு :- மால்வண்ணன் – கரிய நிறத்தை யுடையவன். மலக்குதல் – கலங்கச் செய்தல்.

ஈடு :- ஒன்பதாம்பாட்டு. 1வைதிக புத்திரர்களைக் கொண்டு வந்து தருதல் முதலான வெற்றிச் செயல்களையுடைய சர்வேசுவரனை மலக்கும் நாவீறுடைய என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.

கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகுஎழும் கழியக் கடாய்-ஏழ்கடல் ஏழ்மலை உலகுஏழும் கலக்கக் கழியக் கடாய். கலக்க-ஒக்க: அதாவது, தேரை நடத்துகிறபோது நீரோடு மலையோடு தறையோடு வாசி அற ஒக்க நடத்தினபடி. அன்றிக்கே, கலக்க என்பதனைக் கடலுக்கு அடைமொழியாக்கி, கலங்குதலையுடைய கடல் என்று பொருள் கூறலுமாம். அங்ஙன மன்றிக்கே, ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழையும் கழிய நடத்துகிறபோது அதிர நடத்தி என்றுமாம். கலக்க-அதிர. உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் – காரியமான தேரினைக் காரணமான மூலப்பகுதியிலே நடத்துகிற இடத்தில் அழியாதபடி நடத்தின ஆச்சரியமும். உலக்க-முடிய. உட்பட மற்றும் பல-வைதிக புத்திரர்களை இந்தத் தேசத்தினின்று கொண்டுபோருகையும், போன செவ்வியிலே கொடுவந்து கொடுக்கையும், காலையில் செய்யவேண்டிய யாககாரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும். வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவையுடை மால் வண்ணனை மலக்கு நாவுடையேற்கு – 2இவ்விடத்தைப் பட்டர்அருளிச்செய்யா நிற்கச்செய்தே கஞ்சனூரில் இருந்தவரான வண்டு வரைப்பெருமாள் என்பவர், மால்வண்ணனை ‘மலக்கு நாவுடையேன்’ என்ன அமையாதோ? ‘வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவையுடை’ என்று விசேடித்ததற்குக் கருத்து என்? என்ன, 1“சோளேந்திரசிங்கனை உளுக்காக்கப் பண்ணுகிறேன் என்கிறார் காணும்” என்று அருளிச்செய்தார். ‘சோளேந்திர சிங்கன்’ என்பது, பெருமாளுடைய யானை. உளுக்காக்க
– இருக்கும்படி. என்றது சர்வேசுவரனாகிற மத்த யானையானது பணிந்து
கொடுக்கும்படி செய்கிறேன் என்கிறார் என்றபடி.

2அறப் பெரியவனுக்கு லக்ஷணம் அன்றோ சங்க சக்கரங்கள். 3“ஒன்றிலும் ஆசை இல்லாதவன், மௌனமாக இருப்பவன்” “அவாக்யநாதர:” என்பது, சாந்தோக்யம். 3 : 14.-என்கிற சர்வாதிக வஸ்துவைக் கலங்கச் செய்யும் நாவீறுடையேன் என்கிறார். மால்வண்ணனை – கறுத்த நிறத்தையுடைய சர்வேசுவரனை. மலக்கும் நாவுடையேன் – 4இவர் வார்த்தையில் கலங்குமவனன்றோ அவன்தான். 5இவர் கலங்கிச் சொல்லச் சமைந்தாற் போலேயன்றோ அவனும் கலங்கிக் கேட்கச் சமைந்தபடி. இம் மண்ணின்மிசை மாறு உளதோ – 6பரமபதத்தில் அநுபவம் வாய்புகுநீர் ஆகையாலே அதனை ஒன்றாக நினைத்திருக்கின்றிலர். இனி, உண்டாகில் பூமியிலே; அதிலும் இல்லை என்கிறார்.

அன்றிக்கே, ‘ஒப்பு உண்டு, இல்லை’ என்று ஐயங்கொள்ளுகைக்குத் தான் விஷயமுள்ளது நித்திய விபூதியிலே யன்றோ? ஆதலால், ‘இம் மண்ணின்மிசை மாறுளதோ?’ என்கிறார் என்னுதல்.

வைதிக புத்திரன்
பெரிய சரித்ரம்
அது இது உது
அது -மாதவன் புத்ரனை சாந்தீபன் -12 வருஷம் அடுத்து
பிறப்புகத்தே -நான்கு பிள்ளைகளை
மருமகன் சந்ததியை உயிர் மீட்டான்
மூன்றும் அது –
கடல் ஏழும் மலை ஏழும் உலகு ஏழும்
பூமி -உப்பு -சமுத்ரம் -கரும்பு பால் அமிர்தம்
மலை ஆணி அடித்தாப் போலே
தேரை கொண்டு சென்ற மற்றும் பல
மலக்கு நாவுடையேன்
ஒப்பு யார்
தேரை நடத்தும் பொழுது நீரோடு கடலோடு மலையோடு ஒக்க கடந்து
கலங்கிய கடலை கடந்து
சமுத்ரம் கலங்கும்படி அதிர நடத்தி
கார்யமான தேரை காரணமான மூல பிரக்ருதியில் அழியாமல் நடாத்தி
உலப்பு முடிவு இல்லாதபடி
வைதிக புத்ரர் கொண்டு வந்து கொடுத்து
பிராட்டிமார் சீராட்டி -இவன் திருக் கோலம் காண
உடலோடு கொண்டு கொடுத்தவன்
சன்மம் பல பல திருவாய்மொழி பார்த்தோம்
ந ச புன ஆவர்த்ததே
சாஸ்திரம் இவனுக்கு கட்டுப்பட்டதே
இவன் ஸ்வா தந்த்ரம் யாராலும் கேட்க முடியாதே

பரத்வ சின்னம்
வலக்கை திரு ஆழி இடக்கை பாஞ்ச சன்யம் ஏந்திக் கொண்டு
பட்டர் –
அவிக்ருதமான  வஸ்துவுக்கு –
எனது திருவாய்மொழி கேட்டு தெனா தெனா என்ன
வைக்கும்படி மலக்கு நா உடையேன் என்கிறார்
பட்டத்து யானை -சோழேந்திர சிங்கன் பெயர் -பெருமாள் உடைய யானைக்கு பெயர்
அங்குசம் கொண்டு பாகன் அடக்குவது போலே
உருக்காக்க -வசப்படுதுகிறேன்
சர்வாதிக வஸ்துவுக்கு லஷணம் திவ்ய ஆயுதங்கள் கொண்டு
அவனையே ஆட வைக்கும்
மால் வண்ணன் கறுத்த நிறம்
அவனையே உருக்கி
கலங்கி சொல்வது போலே கேட்கும் பொழுதும் கலங்குகிறான்
வாய் புகு நீர் போலே பரமபதம்
அனுபவித்த பின்பு போகம் இல்லையே
நித்ய விபூதியில் இல்லை இவருக்கு ஒப்பு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading