ஐந்தாம் திருவாய்மொழி – “எங்ஙனேயோ”
முன்னுரை
ஈடு :- 1“மாசறு சோதி” என்ற திருவாய்மொழியில் “நாடும் இரைக்கவே, யாம் மடல் ஊர்ந்தும்” என்று மடல் ஊரப் பாரித்தாள்; பாரித்தபடியே தலைக்கட்டப் பெறாமையாலே 2“ஊரெல்லாம் துஞ்சி” என்ற திருவாய்மொழியில் ‘ஊரெல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்இருளாய் என்று முதலிலே மடல் ஊருகைக்கு விஷயந்தான் இல்லாதபடி பழி சொல்லுவாருங்கூட உறங்கினார்கள்’ என்று வெறுத்தாள்; 3“அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்” என்று, ‘சூரியோதயத்திற்குச் சூசகமும் கூட இல்லையாயிற்று’ என்று வெறுத்தாள்; “நீயும் பாங்கு அல்லைகாண் நெஞ்சமே” என்று, ‘ஒன்றை நினைத்துத் தரிக்கைக்கு விரகு அற்றது’ என்றும் வெறுத்தாள். 1இந்தக் குறைகள் எல்லாம் தீரும்படி போதும் விடியப்பெற்று, “அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்கிற 2இழவு தீரஉகப்பாளும் பொடிவாரும் ஹிதம் சொல்லுவாருமாகப் பெற்றது இத்திருவாய்மொழியில். என்றது, 3பின்னர், உறவினர்கள் அனைவரும் உணர்ந்து, “தீர்ந்த என் தோழி” என்ன வேணும்படி இவளுடைய துணிவு கண்டு உகப்பாளும், “எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்” என்ன வேண்டும்படி பொடிவாரும், “தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்ன வேண்டும்படி ஹிதம் சொல்லி அலைப்பாருமாகப் பெற்றது; 4அவ்வழியாலே அவர்கள்தாம் இவ்விஷயத்தினை நினைப்பூட்டுகின்றவர்கள் ஆவர்களே அன்றோ. 5சூரியனும் உதித்துப் பொருள்களைக் காணவும் பெறுகையாலே வியசனமும் பாலிபாயப் பெற்றது. இவ்வளவு ஆஸ்வாசம் உண்டானவாறே, நெஞ்சு நினைத்துத் தரிக்கைக்கும் துணையாயிற்று என்றபடி.இப்படி இரவு வியசனம் போம்படி போது விடியப்பெறுகையாலே ஒரு தரிப்பும் உண்டாய், அவனை அநுபவிக்கப் பெறாமையாலே ஆற்றாமைக்கும் காரணமாய் நோவுபட்டுச் செல்லாநிற்க, உணர்ந்த உறவினர்கள் அனைவரும், ‘நீ இப்படி இவ்விஷயத்தில் எல்லை இல்லாத காதலையுடையவளாயிருத்தலாகிற இது 2உனக்குக் குடிப்பழி, உன்னுடைய பெண் தன்மைக்குப் போராது, அவன் தலைமைக்கும் போராது’ என்று ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க, ‘இவர்கள் உகந்தருளின நிலங்களின் வாசி அறியார்கள்’ என்று இருந்தாள் இவள், 3‘நீங்கள், சிலர் காட்டக் கண்டீர் கோள் அல்லாமையாலே இவ்விஷயத்தை உள்ளபடி அறிந்திலீர்கோள்; நான் அங்ஙன் அன்றிக்கே, அவன் தானே மயர்வு அற மதிநலம் அருளித் தன்னைக் காட்டக் காண்கையாலே உள்ளபடி கண்டேன்; ஆகையாலே, நம்பியுடைய 4வடிவழகிலும் ஒப்பனை அழகிலும் ஆபரணச் சேர்த்தியிலும் பெருமையிலும் நான் உங்கள் ஹித வசனத்துக்கு மீளாதபடி அகப்பட்டேன்’ என்று இங்ஙனம் தம் படிகளைச் சொல்லாநிற்கச் செய்தே; 5‘தம் முயற்சிகொண்டு அறிவார்க்கு அறிய ஒண்ணாதபடி பெற்றோமே அன்றோ, 1இவ்வஸ்துதான் உண்டாகப் பெற்றால் நாம் பெற்ற போது பெறுகிறோம், பிறர் அறியாது ஒழியப் பெற்றோமேயன்றோ’ என்னும் பிரீதியோடே தலைக்கட்டுகிறது. 2ஆக, போதும் விடிந்து ஹிதம் சொல்லி அலைப்பாரும் உண்டாகப் பெறுகையாலே ஒரு தரிப்பும், அதுதான் நினைத்த விடியலாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்; அவனை நினைக்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும், அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையும்; சூரியன் உதித்துப் பொருள்களைப் பார்க்கப் பெறுகையாலே ஒரு பிரீதியும், அதுதான் அவனைக் காணப் பெறாமையாலே ஒரு பிரீதி இன்மையுமாய்; பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகின்றன.
3“மாசறுசோதி” என்ற திருவாய்மொழியில், பிராப்பியத்தைப் பெற வேண்டும் என்னும் மனோவேகத்தாலே உபாய அத்யவசாயம் கலங்கினபடி; “ஊரெல்லாம்” என்ற திருவாய்மொழியில், அந்த மனோவேகமுங்கூடக் கலங்கினபடி; இத்திருவாய்மொழியில், ‘ரக்ஷகன் அவன்’ என்னும் தெளிவும் செல்லாநிற்க, பிராப்பிய ருசி நலிகிறபடி.
4நன்று; “ஏழையராவி” என்ற திருவாய்மொழியும், ‘உருவெளிப்பாடு’ சொல்லாநின்றதே, அதற்கும் இத்திருவாய்மொழிக்கும் வேற்றுமை என்? என்னில், அதில், “இணைக் கூற்றங்கொலோ” என்றும், “உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அர்க்கர்கட்கும் எவ்விடம்” என்றும் பாதகத்தன்மை உறைத்திருக்கும்; இதில், மேலே உண்டான துக்கம் நீங்குதல் உண்டாம்படி நினைத்துத் தரிக்கவும் பெற்று, அதுதான் அநுபவமாகப் பெறாமையாலே வந்த பிரீதி இன்மையுமாய், இப்படிப் பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாகச் செல்லுகிறதாக இருக்கும். 1ஜாபாலி பகவானும் வார்த்தை சொல்லி, ‘ஸ்ரீ வசிஷ்ட பகவானும் இக்குடியில் போந்த படிகள் எல்லாவற்றையும் சொல்லி, இனி மீண்டு திருவபிடேகம் செய்துகொள்ள அமையும் என்ன, பெருமாள் ‘அங்ஙனம் செய்வது இல்லை’ என்று முடிய நின்றபடியைக் கண்டவாறே, நகரத்து ஜனங்கள் எல்லாம் உகப்பது செய்தார்கள், வெறுப்பதும் செய்தார்கள்; ‘ரக்ஷகனானவன் தொடங்கின காரியத்திலே இப்படி முடிய நின்ற இடம் நம்முடைய ரக்ஷணத்துக்கும் உண்டே அன்றோ’ என்று உகப்பதும் செய்தார்கள்; ‘அதனாலே நாம் பெற்றது என்? இப்போது பதினான்காண்டு இழந்திருக்கும்படி வேண்டி இருந்ததே!’ என்று வெறுப்பதும் செய்தார்களே அன்றோ. பிராட்டியைத் திருவடி தொழுதபோது, ‘நாம் இலங்கையை அடைவதற்குரிய ஆற்றல் உண்டாகப்பெற்றோமே அன்றோ’ என்று உகப்பதும் செய்தான், ‘இவள் அவரைப் பிரிந்து இந்த நிலையில் இருப்பதே!’ என்று வெறுப்பதும் செய்தான். பிராட்டி, திருவடி வார்த்தையைக் கேட்டபோது 2“வாநர! உன்னால் சொல்லப்பட்ட பெருமாள் என்னை அல்லது அறியார், பிரிவாலே தளர்கின்றார் என்ற இரண்டு வார்த்தைகளும் விஷத்தோடு கூடின அமுதம் போல்
இருக்கிறது” என்று, பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது, அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. 1அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன.
487
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது என்நெஞ்சமே.
பொ-ரை :- தாய்மார்களே! நீங்கள் என்னைக் கோவித்துக்கொள்வது எப்படி? நம்முடைய அழகிய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பிறகு, என்னுடைய நெஞ்சமானது, நம்பியின் திருக்கைகளிலே உள்ள சங்கோடும் சக்கரத்தோடும் தாமரை போன்ற திருக்கண்களோடும் சிவந்த கோவைக்கனி போன்ற ஒப்பற்றதாயிருக்கிற திரு அதரத்தோடும் செல்கின்றது. நான் என் செய்வேன்?
வி-கு :- நங்கள் என்பதில் ‘கள்’ அசைநிலை. “திங்களும் மறுவுமெனச் சேர்ந்தது, நங்கள் அன்பென நாட்டி வலிப்புறீஇ” என்றவிடத்து ‘நங்கள்:கள், அசை’ என்றார் நச்சினார்க்கினியர். (சிந். 1334.) நம்பி-பூர்ணன்.
இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
ஈடு :- முதற்பாட்டு. 2திருக்கைகளில் ஆழ்வார்களோடே சேர்ந்த நம்பி திருமுகத்தின் அழகிலே, என் நெஞ்சமானது மிகவும் ஈடுபடாநின்றது என்கிறாள். அன்னைமீர்காள் முனிவது எங்ஙனேயோ – 1ஹிதம் சொல்லத் தொடங்கினவாறே தந்தாமை மறக்குமித்தனையோ. என்னை முனிவது எங்ஙனேயோ – 2ஒன்றை நீக்குவதற்குப் பார்த்தால் அதனுடைய நிதானம் அறிந்து நீக்க வேண்டாவோ. என்றது, என்னுடைய பிராவண்யத்தை நீக்குதற்குப் பார்த்தால், எனக்கு இவ்வளவான பிராவண்யத்தை விளைத்த நம்பியுடைய அழகினை அறிந்து அதனை அன்றோ பொடிவது என்றபடி. என்னை நீர் முனிவது எங்ஙனேயோ – 3என்னுடைய நிலைக்கும் உங்களுடைய ஹிதவசனத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு. நீர் என்னை முனிவது எங்ஙனேயோ – நம்பியுடைய அழகினை அறிந்து அநுபவிக்கிற நீங்கள், அதிலே துவக்குண்டு இருக்கிற என்னை மீட்கப் பார்க்கிறபடி எங்ஙனேயோ? அன்னை மீர்காள் நம்பியை நான் கண்டபின் – 4இந்தக் குல தர்மத்துக்கு நான் ஏதேனும் தப்பநின்றது உண்டோ. “பேராளன் பேரோதும் பெரியோரை” என்றும், “எவரேலும் அவர்” என்றும் நீங்கள் சொல்லுகிற வார்த்தைகளைக்கேட்டு வளர்ந்தவள் அன்றோ நான். 1தாம்தாம் செய்வனவற்றை வயிற்றிற் பிறந்தார் செய்தவாறே குற்றமாமித்தனையேயோ. 2புத்திரர்களாகவுமாம், சிஷ்யர்களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஓர் அடி வர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ; கூரத்தாழ்வார் ஓரளவிலே நங்கையார் திருவடி சார்ந்தவாறே, ‘இன்னமும் ஒரு விவாகம் செய்து கொள்வேமோ’ என்று ஆராய்ந்து, ‘இதுதான் கிரமத்திலே வந்து 3ஆழ்வானுக்கு விரோதமாகத் தலைக்கட்டும்; இனித்தான், 4“பிரஹ்மசாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப்பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்கவேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள்கூட ஓர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லாநின்றது; இந்தச் சாஸ்திரத்தின் அர்த்தத்தை அநுஷ்டிப்போமோ! பாகவத பரிசர்யையைச் செய்வோமோ! என்று ஆராய்ந்து, ‘அந்தச் சாமான்ய தர்மத்திற்காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம்’ என்று அதனைத் தவிர்ந்தார்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் – உங்களை அறியாவிட்டால் அவ்விஷயத்தையும் அறியாது ஒழிய வேணுமோ என்கிறாள். இக்குடிக்கு 5முற்றூட்டுப் போலே காணும் நம்பியுடைய அழகு என்பாள்‘நங்கள் நம்பி’ என்கிறாள். 1சர்வேச்வரனை நோக்கிப் பல விரதங்களை நோற்றுப்பெற்றவர்களைப் போலன்றிக்கே, நம்பியை அடைந்தாயிற்று இவரைப் பெற்றது. ‘உடைய நங்கையார் நம்பியை அடைந்து ஆழ்வாரைத் திருவயிறு வாய்த்தார்’ என்பது பிரசித்தமே அன்றோ. “நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவி” அன்றோ பெற்றது. ‘கோலம்’ என்கிற இது, நகரத்துக்கு வேண்டும் அலங்காரங்களையுடைத்தாயிருக்கும் என்று, திருக்குறுங்குடிக்கு விசேடணம் ஆதல்; அன்றிக்கே, நம்பியினுடைய அழகினைச் சொல்லுதல். தாம் அகப்படுவதற்கு வேண்டிய கல்யாண குணங்களால் நிறைவுற்று இருப்பவன் என்பாள் ‘நம்பியை’ என்கிறாள். அகப்படுத்துகைக்கு அழகு சீலம் முதலிய குணங்களால் அத்தலை குறைவற்றிருக்குமாறு போலே ஆயிற்று, அகப்படுக்கைக்குரிய ஆசையால் இத்தலை குறைவற்றிருக்கிறபடி என்பாள் ‘நம்பியை நான்’ என்கிறாள். 2நீங்களும் நம்பியைக் கண்டன்றோ ஹிதம் சொல்லுகிறது என்பாள் ‘கண்ட’ என்கிறாள். காண்பதற்கு முன்னே மீட்டீர் அல்லீர்கோளே, இனி மீட்கப்போமோ? என்பாள் ‘கண்ட பின்’ என்கிறாள். தண்ணீர் போன பின்னர் அணையைக் கட்டுதல் அன்றோ நீங்கள் செய்கிறது என்றபடி. மீட்கப் போகாதேபடி இப்போது வந்தது என்? என்ன, 3கைமேலே ஒரு முகத்தாலே தான்அகப்பட்டபடியைச் சொல்லுகிறாள் மேல்: சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே – 1இதனால், நீங்கள் ஹிதம் சொல்லுவது நெஞ்சுடையார்க்கன்றோ என்கிறாள் என்றபடி.
சங்கினோடும் – “செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம்போல்” என்கிறபடியே, கருநிறமான திருமேனிக்குப் பரபாகமான வெளுத்த நிறத்தையுடைத்தான ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடும், நேமியோடும் – இந்தக்கைக்கு இது ஆபரணமானால், வேறு ஒன்று வேண்டாதே தானே ஆபரணமாகப் போரும்படி இருக்கிற திருச்சக்கரத்தோடும், தாமரைக்கண்களோடும் – மலர்ச்சி முதலியவைகளால் தாமரை போன்று இருக்கிற திருக்கண்களோடும், இதனால், 2கண் காணக் கைவிட்டுப் போயிற்றுக் காணும். செம்கனிவாய் – கண்டபோது, நான் உன் சரக்கு அன்றோ, “தவாஸ்மி-உன்னுடையவன் ஆகிறேன்” என்ற முறுவலோடும், ஒன்றினோடும் – 3சம்சார யாத்திரையை முக்தன் மறக்குமாறு போலே, இவ்வருகுண்டானவற்றோடு அவ்வருகுள்ளவற்றோடு வேற்றுமை அற எல்லாவற்றையும் மறக்கும்படி செய்ய வல்லதான திரு அதரத்தோடும். 4அன்றிக்கே, சாதி, பொருள்கள்தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, நெஞ்சு அழகுதோறும் சொல்லாநின்றதுஎன்னுதல். 1சர்வேச்வரனோடு சாம்யம் பெற்றதாகிலும் தெரிகிறது இல்லை. அவன் எங்கும் பரந்திருக்கச் செய்தே ஆகாசத்தினது பரப்புப் போலன்றிக்கே பொருள்கள் தோறும் நிறைந்து இருக்குமாறு போலே, இதுவும் அழகுகள்தோறும் நிறைந்து இராநின்றது. செல்கின்றது-2இன்னமும் தறை கண்டது இல்லை. 3நாங்களும் எல்லாம் நம்பியுடைய அழகினை அநுபவித்திருக்கிறோம் அன்றோ, எங்கள் சொற்களை மறுக்கலாகாதுகாண்; என்ன, உங்கள் சொற்களை மறுத்தேனேயாகிலும் நம்பியுடைய திருமுகம் மறுக்க ஒண்ணாது என்கிறாள். எங்களுக்கு இப்படி இராமல் ஒழிவான் என்? என்ன, என் நெஞ்சமே – உங்களைப் போலன்றிக்கே, அவன் தானே காட்டப் பெறுகையாலே முழுக்க அநுபவித்த என் நெஞ்சமானது.
4எங்ஙனேயோ என்னை முனிவது நீர் – 5காதலுக்குக் காரணமாக இருக்கிற நம்பியினுடைய அழகினைப் பொடியாதே, என்னைப் பொடியக் கூடினபடி எங்ஙனேயோ? 6பிராவண்யமே ஸ்வபாவமாம்படி வளர்த்து வைத்து, இப்போதாகப் பொடிகிறபடி எங்ஙனேயோ? முன்பு நீங்கள் கற்பித்துப் போந்து, அது பயன்பட்டவாறே பொடியுமத்தனையோ? கோலம்-உங்கள் ஹித வசனத்துக்கும் மீளாதபடியான அழகு. திருக்குறுங்குடி நம்பியை-பரத்துவத்தில் முதன்மையிலேயோ அகப்பட்டது மீளுகைக்கு. 1நம்பியை-குணங்களில் நிறைவின்மை உண்டாய்த்தான் மீளுகிறதோ. நான் கண்டபின்-இவ்விஷயத்தில் ஆசை இல்லாமல் மீளுகிறேனோ. சங்கினோடும்-2 ஸ்ரீ பாஞ்சசன்யத்தோடே விசேடித்து ஒரு சம்பந்தம் உண்டுகாணும் இவளுக்கு; திருவாயின் அமிர்த இனிமையை அறிந்திருக்கையாலே; ஒரு கலத்திலே ஜீவிப்பாரைப் போலே.
திருக் குறுங்குடி விஷய திருவாய்மொழி
ஆழ்வாருக்கு ப்ரீதி அப்ரீதி கலந்து
மானச அனுபவம் என்பதால் அப்ரீதி
இணைக்குற்றங்களோ -அப்ரீதி மட்டுமே அங்கு
மடலூர பாரித்து –
எரு நீர் இன்றி முடியாமல் –
ஆதித்ய உதய சூசகம் அருணன் கூட இல்லாமல்
நெஞ்சையும் வெறுத்து இருக்க
மாசறு சோதி பிராப்ய த்வரையால் -துடிப்பால் கலங்கி -உபாய அத்யவசாயம் உறுதி இன்றி –
வஸ்துவை அடைந்தால் அல்லது தரிக்க முடியாமல் இருக்க –
நமக்கு சப்தாதி விஷயம் போலே ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில்
அடுத்து அந்த தவறையும் கலங்கி போக இருள் மடல் எடுக்க முடியாமல் செய்ய
இதில் -ரஷகன் அவன் -தெரிந்தும் ஆசை குறையாமல்
அன்னையரும் தோழியரும் துஞ்சாமல் உகப்பாரும் -வைப்பவர்
ஹிதம் சொல்வாருமாக பெற்ற பின்பு
நினைவு மூட்டும் தோழி –
ஆதித்யனும் உதித்து -இந்த்ரியங்கள் –
ஆசுவாசம் உண்டானதும் நெஞ்சு தரிக்க –
அனுபவிக்க -முடியாத துக்கம் –
உணர்ந்த பந்துக்கள் -அதி மாத்திர ப்ராவண்யம் குடிக்கு பலி
ச்த்ரீத்வம் -சேராது அவனுக்கும் கொத்தை ஹிதம் சொல்லி மீட்க பார்க்க
உகந்து அருளின நிலங்கள் பெருமை அறியாமல்
வாசி அறியாமல் –
கைங்கர்யம் பரம பிரயோஜனம்
காஞ்சி ஸ்வாமி அனுஷ்டித்து காட்டு 1207 புஸ்தகங்கள் எழுதினவர் –
அத்யாத்ம கிரந்த நிர்மாணம் -எழுதி வாசித்து
நிறைய பெயருக்கு சொல்லி -போதனம் பண்ணி
அர்ச்சாவதார சேவை
மஹத் பலன் -பாக்கியம் செய்பவர்களுக்கு தான் இவை கிட்டும்
அவனே காட்ட நான் கண்டேன்
பரகத ச்வீகாரம் இல்லை
உள்ளபடி நான் அறிந்து -மயர்வற மதி நலம் அருளி காட்ட
நம்பி உடைய வடிவு அழகு ஒப்பனை அழகையும் ஆபரண செர்த்தியாலும்
கம்பீர ஸ்வபாவம் அகப்பட்டு
வஸ்து -ஸுய யத்னத்தால் காண்பாருக்கு அறிய முடியாதது பெற்றோம் ப்ரீதி கொண்ட –
வஸ்து உண்டாக பெற்றால் -என்றாவது பெறுவோமே -பெற்ற பொழுது பெறுவோம்
அறியாதவர் போலே இல்லையே ப்ரீதி உடன் தலைக் கட்ட
அன்யாபதேசத்தில் ப்ரீதி -நாயகி பாவத்தில் ஆளவந்தார் நிர்வாகம்
நினைத்தபடி பெறாமையால் அப்ரீதி -இரண்டும் சமமாக செல்லும் திருவாய்மொழி
ஏழையர் ஆவி உரு வெளிப்பாடு -அங்கும் -இதே அனுபவம்
அது பொதுவான எம்பெருமான்
இங்கு அர்ச்சை அனுபவம்
அங்கு அழகை வருத்த -இணைக் கூற்றங்கள் பாதகத்வம் தோற்ற
அனுபவம்பாதகத்வம் உறைத்து இருக்கும் ஆவியை உண்ணும்
இது கீழ் பிறந்த துக்க நிவ்ருத்தி தரித்து பேசும்படி ப்ரீதி
ப்ரீதி அப்ரீதி சமமாக போன இடங்கள் –
திரு அபிஷேகம் -பெருமாள் -ஜாபாலி -நாஸ்திக வாதம் செய்து -பெருமாள் கண்டிக்க –
இப்படியாவது மீளுவாரா நப்பாசை உடன் பேசிய வார்த்தை –
வசிஷ்டரும் வார்த்தை சொல்லி இக்குடியில் போந்தார்படி -மூத்தவனே ஆள வேண்டும்
இருவரும் ஒரே விஷயம்
அங்கன் செய்ய மாட்டேன் -உறுதி இருந்து
ஜனங்கள் ப்ரீதி அப்ரிதி
ரஷகன் உறுதி கண்டு மகிழ்ந்து -தொடங்கின கார்யம் விடாமல் இருக்க –
இழந்து போனதால் அப்ரீதி
திருவடி பிராட்டி தொழுத -கண் பெற்ற பயன் -பராக்கிரமம் காட்ட வழி -சந்தோஷிக்க
இவள் இப்படி இருப்பு இருப்பதே வெறுத்தும் –
பிராட்டி திருவடி வார்த்தை கேட்டு -சக்கர்ச்வர்த்தி திருமகன் உறங்காமல் -இரண்டும் சமமாக
அமிர்தம் விஷம் -சம்ச்ப்ருஷ்டம் விஷம் கலந்த அமிர்தம் போலே
பிரிவால் தளர்ந்தது கேட்டு –
மூன்று இடங்கள் திருஷ்டாந்தமாக காட்டி –
மாசறு மாசறு சோதியில் மடலூர தலைப்பட்டாள்
இரவு சூழ்ந்ததால் அது முடியாமல் போக வ்சனப்பட்டாள்
பிரத்யஷ சாஷ்த்காரம் காட்ட
அழகு -கண்டு ப்ரீதி -சாஷாத்காரம் கிடையாமல் அப்ரீதி கலந்து இணைக் கூற்றங்கள் –
நாயகி பாவம் கரு மாணிக்க மலரில் ப்ரீதியில் அன்யபதேசம் -9-8 -திருவாய்மொழி –
இப்படி நடமாடும் -இடங்கள் ஜாபாலி -பேச பெருமாள் பதிலால் ஜனங்கள் ப்ரீதி அப்ரீதி
திருவடி பிராட்டி முதலில் தொழுத பொழுதும் இப்படி
திருவடி வார்த்தை கேட்ட பிராட்டி -இப்படி இரண்டும்
ஏக காலத்தில்
சிந்தயந்தி ப்ரீதி அப்ரீதி
ஆழ்வார் தீர்க்க சிந்தயந்தி -தீர்க்க சரணாகதி திருவாய்மொழி ஆசார்ய ஹ்ருதயம்-
திருக்கையில் ஆழ்வார்கள் உடன் சேர்த்தி அழகை கண்டு மனசு சிதிலமாக
எதற்காக என்னை கோபித்து அன்னைமீர்காள் –பன்மையில் மன்னி தாய் ஸ்தானம்
செவிலி தாயும் உண்டே
அவனது அழகை கோபித்து கொள்ளும்
நாங்கள் கோல திரு குறுங்குடி நம்பி
தாமரைக் கண் செங்கனி வாய் உடன் நெஞ்சு போனதே
ஹிதம் சொல்ல -தம்மையும் நினைத்து பார்த்து சொல்ல வேண்டுமே
இவர்களே மாயக் கோல பிரான் இருந்தமை காட்டிய பின்பு
நோய் நாடி நோய் முதல் நாட வேண்டாமா
‘இந்தக் குலதர்மத்துக்கு’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
பகவானிடத்தில் பிராவண்யம் இந்தக் குலத்துக்குத் தர்மம்
ஆகையாலே நான் செய்ததில் தவறு உண்டோ? என்பது. அப்படி,
பகவானிடத்தில் பிராவண்யம் இந்தக் குலத்துக்குத் தர்மமோ? என்ன,
‘தர்மந்தான்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பேராளன்’ என்று
தொடங்கி. இது, பெரிய திருமொழி, 7. 4 : 4. “எவரேலும் அவர் கண்டீர்”
என்பது, திருவாய்மொழி, 3. 7 : 1. இந்தத் திருப்பாசுரங்களில் பாகவதர்களைச்
சிலாகிக்கையாலே குலதர்மம் என்பது சித்தம் என்றபடி.
வழி வழி ஆட் செய்யும் குலம்
பேராளான் பேர் ஓதும் -அடியவர்களை விடக்கூடாது சொல்லி வளர்த்து
எவரேலும் விடேல்
தாம்தாம் செய்யுமத்தை வயிற்றில் பிறந்த வர்கள் செய்வதை தடுக்கலாமா
கணபுரம் தொழும் பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெருவரோ
“முனிவது எங்ஙனேயோ” என்று கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார்
‘புத்திரர்களாகவுமாம்’ என்று தொடங்கி. இதற்குச் சம்வாதம் காட்டுகிறார்
‘கூரத்தாழ்வார்’ என்று தொடங்கி. கூரத்தாழ்வார்-கூரத்தாழ்வானுடைய
திருத்தந்தையார். நங்கையார்-கூரத்தாழ்வாருடைய திருத்தேவிகள். திருவடி
சார்ந்தவாறே-இறந்தவாறே.
தேவரீர் வார்த்தை சொல்லி வேளுக்குடி ஸ்வாமிகள் சிறியவர்களை
புத்ரர்கள் சிஷ்யர்கள் பகவத் விஷயத்தில் கொஞ்சம் -இருந்தாலும் கௌரவ –
சின்ன ஸ்வாமியை கூப்பிடு தாயார் சொல்லி -டே -சொல்லாமல் –
பெரிய நம்பி எம்பெருமானார் கோஷ்டி சேவித்து
பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் கொண்ட ஆண்டாள்
கூரத் ஆழ்வார் -தேவி மார் ஆசார்யன் திருவடி அடைந்த பின்பு -கூரத் ஆழ்வான் -பாகவத
பரிகிரயை செய்ய -சாமான்ய தர்மம் காட்டில் விசேஷ தர்மம் அனுஷ்டித்து
“ப்ரஹ்மசாரீ க்ருஹஸ்தோ வா வானப்பிரஸ்தோத பிக்ஷுக:
அநாஸ்ரமீந திஷ்டேத்து தினம்ஏகம் அநாபதி”-சாமான்ய தர்மம்-
உங்களை -அறியாவிடில் -அவ்விஷயமும் இருக்க வேண்டுமோ
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பி –
நங்கள் -தாய் மாரையும் சேர்த்து -அருளி இக்குடிக்காக முற்றூட்டாக -பரம்பரைக்கே
பூர்ண அனுபவம்
முற்றூட்டு -ஊட்டு -உணவு
முற்றூட்டு’ என்கைக்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘சர்வேச்வரனை’ என்று தொடங்கி. பல விரதங்களை
நோற்றுப் பெற்றவர்கள்-தேவகீ முதலானவர்கள். நம்பி-திருக்குறுங்குடி நம்பி.
திருவயிறு வாய்த்தல்-கரு தரித்தல். பிரசித்தி மாத்திரமே அன்றி, இவருடைய
திருவாக்கும் உண்டு என்கிறார் ‘நெடுங்காலமும்’ என்று தொடங்கி. இது,
திருவிருத்தம், 37. “கண்ணன் குறுங்குடி” என்கிறபடியே, அங்கு நிற்கிறவன்
கிருஷ்ணன் ஆகையாலே இது, இங்குப் பிரமாணமாகத் தட்டு இல்லை.
2. ‘நீங்களும்’ என்றது, விஷய வைலக்ஷண்யத்தைக் கண்டிருந்தும் மீட்கப்
பார்ப்பது பொருந்துவதாமோ? என்றபடி.
சர்வேஸ்வரன் –
திருக்குறுங்குடி நம்பி பிரார்த்தி உடைய நங்கை காரிமாறன்
அநந்த வ்ரதம் -நாக -தோஷம் முடிவு இல்லாதாத வ்ரதம்
அது போல் இன்றிக்கே நம்பியை ஆஸ்ரயித்து ஆழ்வாரை திருவயிறு வாய்த்து
நோன்பு நோற்று பெற்ற -நெடும்காலம் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற இள மான் இவள்
கோலம் -அழகு
திருக்குருங்குடிக்கும் நம்பிக்கும் விசேஷணம்
நம்பியை -கல்யாண குணங்களால் பரிபூர்ணன் –
நான் -அபூர்ணன்
அகப்படுத்திக் கொள்ள சௌந்தர்யம் -சீலம் அவன் -பூரணன் -ஆசையும் அதிகம் எனக்கு பூர்த்தி
கண்ட பின் நீங்களும் கண்ட பின் ஹிதம் சொல்கிறீர்கள்
முன்னமே சொல்லி இருக்கலாமே
கதே கதே சேது -பந்தம் போலே இனி மீட்கப் போமோ
கை மேலே முகத்தாலே
சங்கு சக்கரம் தாமரைக் கண்ணன் -செங்கனி வாய்
கைமேலே ஒரு முகத்தாலே’ என்பன சிலேடை: கைமேலே
திருக்கைகளின்மேலே இருக்கின்ற ஆழ்வாருடைய சேர்த்தி அழகிலே
என்பது, நேர்பொருள். பிரத்யக்ஷமாக என்பது, தொனிப்பொருள். ஒரு
முகத்தாலே-தாமரைக்கண்கள், செங்கனிவாய் இவற்றினுடைய அழகாலே
என்பது, நேர்பொருள். ஒரே முகமாக என்பது, வேறும் ஒரு பொருள்.
ஹிதம் சொல்வது நெஞ்சு உடையாருக்கு தானே
சங்கு சக்கரம் திருக்கண்கள் திருப்பவளம்
பரபாக -தாமரை போலே கை வெளுத்த சங்கு -தேனை பருக வந்த அன்னப் பறவை போலே
அங்கை -அன்னவசம் செய்யும் சங்கரையா -உண்ட மயக்கம் தொண்டர்க்கும் உண்டே
கருத்த மேனி -வெளுத்த ஸ்ரீ பாஞ்ச -ஜன்யம்
வேறு ஓன்று வேண்டாத -நேமி
தாமரைக் கண்கள்
கண் காண கை விட்டு போனதே
கண்ணை கண்டார் கை ஆழ்வார் மறந்து
விகாசாதிகாளால் செவ்வி குளிர்த்தி நாற்றம் தேஜஸ் ஒப்புமை
செங்கனி வாய் கண்ட போது நான் உனது சரக்கு அன்றோ சொல்லிய -தவாஸ்ய தாஸ்யம்
செங்கனி வாய் -ஒன்றும் ஒப்பற்றது -அனைத்தையும் மறக்க -பண்ணி
-முக்தன் கீழே உள்ளதை மறந்தது போலே
செங்கனி வாய் சங்கு சக்கரம் திருக்கண் மறக்கப் பண்ணி
அன்றிக்கே
ஒன்றினோடும் ஒவ் ஒன்றுக்கும்
ஜாதி வ்யக்தி தோறும் அனுபவிப்பது போலே நெஞ்சு ஒவ் ஒன்றிலும் முழுகி போக
சர்வேஸ்வரன் வ்யாப்தி போலே -பதார்த்தங்கள் தோறும் வியாபித்து
நெஞ்சும் -சாம்யம் பெற்று அழகு தோறும் அனுபவித்து –
செல்கின்றது -சென்றது இல்லை -நிகழ காலம் -இன்னமும் தரை காண வில்லை
என் நெஞ்சமே -நாங்களும் ஈடுபட்டு இருக்கிறோம் சொல்வதை கேள் சொல்ல –
உங்கள் போல் அன்றி அவனே காட்ட –
நெஞ்சை மீட்க -முடியவில்லை
பரத்வத்தில் மேன்மையில் அகப்படாமல் அர்ச்சையில் நீர்மையில் எல்லை நிலம் இங்கே
அகப்பட்ட பின்பு மீள முடியுமோ
சாபல்யம் இன்றி மீளுவேனோ
குண பூரணன் இன்றி மீளுவேனோ
சங்கு போலே அனுபவிக்க பிறந்தவள் -திரு அதர அனுபவம் –
பொதுவாக உண்பதை -மாதவன் தனது வாய் அமுதம் -ஆண்டாள் –
புக்கு ஒருவனே உண்டக்கால் -இதனாலே சங்கு முதலில் சொல்லி
ஒரு கலத்தில் ஜீவிப்பாரைப் போலே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply