திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

உறங்கு வான்போல் யோகுசெய்த பெருமானைச்
சிறந்த பொழில்சூழ் குருகூர்ச் சடகோ பன்சொல்
நிறங்கி ளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்துபோய் வைகுந்தம் சேராவாறு எங்ங னேயோ?

பொ-ரை :- உறங்குவான் போன்று யோகு செய்த பெருமானை, சிறந்த சோலைகளாற்சூழப்பட்ட திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபராலே அருளிச்செய்யப்பட்ட பண்ணோடு விளங்குகின்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்துப் பாசுரங்களால் இச்சரீரத்தைவிட்டு நீங்கி அர்ச்சிராதி மார்க்கமாகச் சென்று பரமபதத்தில் சேராமல் இருப்பது எப்படி? என்கிறாள்.

ஈடு :- முடிவில், 3இவர் பாசுரம் கேட்டார், இவர் தசையை அநுசந்தித்தார் பிழையார்கள் என்கிறார். முடிந்தார் புகலிடம் அதுவாகையாலே சொன்ன இத்தனை.

உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை – 4அவன் வரவு தாழ்க்கையாலே ‘நம்மை மறந்து உறங்குகிறானோ’ என்று சொன்ன இத்தனை, அவன் உறங்குகின்றிலன்; நம்மைக் காப்பதற்குரிய விதத்தைச் சிந்தனை செய்கிறானித்தனை. 1“உலகத்தை எல்லாம் காத்தல் வேண்டும் என்ற சிந்தனையோடு கூடின ஜாகரண ரூபமாகத் திருக்கண் வளர்ந்தருளுகின்றீர்” என்கிறபடியே, வேறு ஒன்றிலும் நோக்கு இல்லாமல் நம்முடைய ரக்ஷண சிந்தனை செய்கிறானித்தனையல்லது, மறந்து உறங்குகின்றானல்லன் என்பார் ‘உறங்குவான் போல்’ என்கிறார். மேல் உஜ்ஜீவிப்பிக்க இருக்கிற சர்வேச்வரன், இவ்வளவிலே தன்படிகளை நினைப்பித்தான். சிறந்த பொழில் குருகூர் – சர்வேச்வரன் ரக்ஷண சிந்தை செய்துகொண்டு கண் வளர்ந்தருளுகிறபடியை நினைத்து இவர் தரித்தவாறே ஊரும் தரித்தது, ஆதலின், ‘சிறந்த பொழில் குருகூர்’ என்கிறது. 2பிரிந்த விரஹதாபத்தால் “மரங்களும் ஸ்ரீ ராமபிரானுடைய பிரிவினாலே உண்டான சோகத்தால் பீடிக்கப்பட்டனவாகி, மலர் அரும்பு இவைகளோடு கருகி உலர்ந்தன” என்றும், ஸ்ரீ ராமபிரானுடைய வரவு அணித்தாயினவாறே “வழியில் உள்ள எல்லா மரங்களும் காலமல்லாத காலத்திலும் பழங்களையுடையனவாகவும் தேன்களைச் சிந்துகின்றனவாகவும் ஆயின” என்றும் சொல்லலாம்படி அன்றோ இருப்பது.நிறம் கிளர்ந்த அந்தாதி – பண்களிலே கிளர்ந்த அந்தாதி. இப் பத்தால் இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ-இப் பத்தையும் சொன்னவர்களுக்குப் பகவானைப் பிரிந்த விரகத்தாலே இவரைப் போன்று, “பேர் என்னை மாயாதால்” என்று முடிவு தேட்டமாய் நோவுபடுமது வேண்டா; இதனைச் சொன்னவர்கள் பிழையார்கள். இப்பாசுரங்களைக் கேட்டு பிழைக்க மாட்டாதவர்கள் புகும் தேசம் பரமபதம் ஆகையாலே ‘வைகுந்தம் சேராவாறு எங்ஙனயோ’ என்று சொன்ன இத்தனை இவ்விடம். இத்திருப்பாசுரத்தால் ஒரு பலம் சொல்லிற்றாகவும் வேணுமே அன்றோ, இது என் சொல்லிற்று? என்னில், பகவத்விஷயத்தில் மூழ்கினவர்களுடைய பாசுரம் கேட்டவர்களுக்குச், சரீரம் நீங்கிய பின்னர், அவர்கள் பேறாக நினைத்திருக்கும் தேசத்தின் சம்பந்தம் தப்பாது என்கை. 1பகவானிடத்தில் ஈடுபாடுடையவர்களுடைய பாசுரம் கேட்டுப் பொறுக்கமாட்டாதே ஈடுபட்டு இந்தச் சரீரம் நீங்கப் பெற்றவர்கள், அவர்களுக்கு உத்தேஸ்யமான தேசத்தைக் கிட்டாது ஒழிய விரகு உண்டோ என்பார் ‘எங்ஙனேயோ’ என்கிறார். 2“நீள் இரவாய் நீண்டதால்”, “ஒண்சுடரோன் வாராது ஒளித்தான்” என்று இந்த உலகத்தில் இருந்து வருந்தாமல் மறைதலில்லாத சூரியனும் மறைதலில்லாத பகலுமான தேசத்திலே புகப்பெறுவர் என்பார் ‘வைகுந்தம் சேராவாறு’ என்கிறார்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

        ஊர நினைந்தமடல் ஊரவும்ஒண் ணாதபடி
கூரிருள்சேர் கங்குலுடன் கூடிநின்று – பேராமல்
தீதுசெய்ய மாறன் திருவுளத்துச் சென்றதுயர்
ஓதுவது இங்கு எங்ஙனே யோ.

நிகமத்தில் –
பாசுரம் கேட்டால் -பரம பதமே இடம் –
இங்கே முடிவார்கள் –
ஆழ்வார் பட்ட துக்கம் அறிந்தால் பிராணன் போகுமே
அடுத்த ஷணம் ஸ்ரீ வைகுந்தம்
யோக நித்தரை செய்து ரஷணம் செய்தான் -ஆழ்வாரை தரிக்க பண்ணினான்
சிறந்த பொழில் சூழ்ந்த திருக் குருகூர்
சொல் என்னைக் கொள் வந்து அமைந்த –
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் –
உறங்கவில்லை –
வரவு தாழ -வாரானால் -பாம்பணையான் –
யோகு செய்த பிரான் ரஷணை சிந்தனம் செய்து

“ஸ்ரீரங்கதாமநி. . . . . ஆர்த்ரயந் (த்வம்) விச்வத்ராண விமர்சன் ஸ்கலி தயா
நித்ராஸி ஜாகர்யயா” இது, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், உத்தர சதகம், 75.
நினைப்பித்தான், ஆதலாலே சொல்லுகிறார்.

பைய துயின்ற பரமன் –
தனது படிகளை நினைப்பூட்டி தரிக்க பண்ணினான் –
உறங்குவான் போல் யோகு செய்யும் பிரான் தன்மையைக் காட்டி –
சிறந்த பொழில் –
அவன் ரஷண சிந்தை -அறிந்த ஆழ்வார் தரிதவாறே பொழில்களும் தளிரும் முளிரும் ஆ க

இவர் தரித்தவாறே ஊரும் தரித்ததற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
‘பிரிந்த விரஹதாபத்தால்’ என்று தொடங்கி.

“விஷயே தே மஹாராஜ ராமவ்யஸன கர்ஸதா:
அபிவ்ருக்ஷா: பரிம்லாநா: ஸ்புஷ்பாங்குர கோரகா:”=  என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 4.

“அகால பலிநோ வ்ருக்ஷா: ஸர்வே சாபி மதுஸ்ரவா:
பவந்து மார்க்கே பகவந் அயோத்யாம் ப்ரதி கச்சத:”-  என்பது, ஸ்ரீராமா. யுத். 127 : 19.

அரிஇனம் சென்ற சென்ற அடவிக ளனைத்தும் வானம்
சொரிதரு பருவம் போன்று கிழங்கொடு கனிகாய் துன்றி
விரிபுனன் செழிந்தேன் மிக்கு விளங்கென விளம்பு கென்றான்
புரியுமா தவனு மஃதே யாகெனப் புகன் றிட்டானால்.-என்பது, கம்பராமாயணம்.

 சடகோபன் சொல் பண்ணிலே -வந்த பா –
வரும் பொழுதே பண்ணிலே பிறந்த அந்தாதி
முடி தேட்டமாய் நோவு பட வேண்டா
அனுசந்த்தார் பிழையார்
புகும் இடம் பரமபதமே தான்
பகவத் விஷயத்தில் ஈடுபட்டவர் வார்த்தை கேட்டவர் பிராப்யம் தப்பாது –

ஆழ்வார் படும் துக்கம் கண்டு முடிய -பரம பதம் நிச்சயம்
பொறுக்க  மாட்டாமல் ஈடுபட்டாருக்கு -உறுதி
இங்கே இருந்து கிலேசிக்க படாமல்
அஸ்தமிக்காத பலர் உள்ள தேசம் புகப் பெறுவார்

நிறம் -பண்
நிறம் கிளர்ந்த அந்தாதி -என்றே அனுசந்திக்க வேண்டும் –
சாரம்
கங்குல் இருள் சேர்ந்த -மடலூர முடியாமல்
மாறனுக்கு தீங்கு செய்த
துயர் ஒர்வது எங்கனயோ
தீது செய்ய மாறன் -தப்பாக
மாறன் திரு உள்ளத்து சென்ற துயர்
ஓதுவது எங்கனயோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

  நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

  வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

  பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading