திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-4-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நின்றுருகு கின்றேனே போல நெடுவானம்
சென்றுருகி நுண்துளியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்
அன்றொருகால் வையம் அளந்தபிரான் வாரான்என்று
ஒன்றொருகாற் சொல்லாது உலகோ உறங்குமே.

பொ – ரை :- நின்று உருகுகின்றவளான என்னைப் போன்று, பரந்த ஆகாசமானது தேய்ந்து சென்று உருகி நுண்ணிய துளியாகிச் செல்கின்ற இந்த இரவிடத்து, மஹாபலி பூமியைக் கவர்ந்த அக்காலத்தில் ஒரு தடவை பூலோகத்தைத் தன் திருவடிகளால் அளந்த உபகாரகன் வாரான் என்று ஒரு வார்த்தையை ஒரு தடவை சொல்லாமல் இந்த உலகமானது உறங்காநிற்கும்; இது என்னே! என்கிறாள்.

வி-கு :- வானம் சென்று உருகித் துளியாகிச் செல்கின்ற கங்குல் என்க. என்று ஒருகால் சொல்லாது உலகு உறங்கும் என்க.

ஈடு :- பத்தாம் பாட்டு. 2இந்த இரவில் என்னுடைய துன்பத்தைக் கண்டுவைத்து அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே உலகமாக உறங்குவதே! என்கிறாள்.

நெடுவானம் சென்று உருகி நுண் துளியாய்ச் செல்கின்ற-எல்லாப் பொருள்கட்கும் இடம் கொடுக்கின்ற பரப்பையுடைய ஆகாசமானது, 3சென்றற்று நுண்ணிய துளியாய் இற்று விழாநின்றது. யாரைப் போன்று எனின், நின்று உருகுகின்றேனே போலே – 4கண்கூடாகக் கண்டதனை அன்றோ உபமானமாகச் சொல்லுவது, ஆதலால்,தன்னையே சொல்லுகிறாள். 1“எவருக்கு, ஜனக குலத்தில் பிறந்த அந்தப் பிராட்டி மனைவியாக இருக்கின்றாளோ அந்தப் புருஷோத்தமனுடைய பராக்கிரமம் அளவிட்டு அறிய முடியாததாக இருக்கிறது” என்கிறபடியே, பெரியவர்களுடைய பெருமையும் தன் சம்பந்தத்தாலேயாம்படி இருக்குமவளன்றோ. ‘திருமகள் கேள்வனாகையாலே சர்வாதிகன்’ என்னக் கடவதன்றோ. கங்குல்வாய்-இப்படிச் செல்லுகிற இரவிடத்து.

அன்று ஒருகால் வையம் அளந்தபிரான் வாரான் என்று சொல்லாது-2“பிரிவாற்றாமையிலும் பிழைத்திருத்தலுக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு. என்றது, வரையாதே எல்லாரையும் ஒருசேரக் காப்பாற்றியவன், தன்னாலே வந்த ஆற்றாமையைப் போக்காது இருப்பானா’ என்னுமதே அன்றோ ஜீவித்திருக்கைக்குக் காரணம், அதுவும் அவனுக்கு, 3புழுக்குறியிட்டது எழுத்தானாற் போன்று எதுவோ ஒருகாலத்தில் வந்தது ஒன்று, அது அவனுக்கு என்றைக்கும் உள்ளது ஒரு தன்மை அன்றுகாண்” என்று சொல்லுகிறார் இலர். 1‘அன்று ஒருகால்’ என்றது, அன்று அங்ஙனே ஒருகால் செய்தானித்தனை, அவனுக்கு எற்றைக்கும் நியதமாய் இருப்பது ஒரு தன்மை அன்றுகாண் என்கிறார் இலர். 2‘பிரான்’ என்னாநிற்கச்செய்தே அன்றோ ‘வாரான்’ என்கிறது. என்றது, “உலக முழுதினையும் அளந்துகொண்ட உபகாரகன் அன்றோ என்று நினைக்கிறாயாகில், பெருக்காறு பெருகினாற்போலே அது அங்ஙனே ஒருகால் செய்து போன இத்தனை, வாராமையே காண் ஸ்வபாவம்” என்கிறார் இலர் என்றபடி. ஒன்று-‘வரும்’ என்ன வேண்டா, ‘வாரான்’ என்ன அமையும். 3‘இன்னம் வருவான்’ என்னும் நசைகொண்டு ஜீவிக்க இருப்பார்க்கே அன்றோ ‘வரும்’ என்றே சொல்ல வேண்டுவது. ‘வரும்’ என்னவுமாம், ‘வாரான்’ என்னவுமாம். 4ஒருகால் – ஒருகால் சொன்னால் பின்னையும் ஜீவிப்பார்க்கே அன்றோ இருகால் மட்டுச் சொல்ல வேண்டுவது. ‘அவன் இனி வாரான்’ என்று அறிந்தபோதே மூச்சு அடங்குமே அன்றோ. உலகு ஓ உறங்குமே – 1“அன்னையரும் தோழியரும் துஞ்சுவர்” என்று

எனக்கு ஆறுதல் சொல்லாமல்
அவனையும் வரச் சொல்லாமல்
அனைவரும் உறங்க
ஒ -வையம் -அளந்த எம்பெருமான் வரவில்லையே
ஊருகிக் கொண்டே போக –
நெடு வானம் சென்று உருகி நுண் இருளாக
ஆகாசமே -சென்று -இற்று இற்று வீழா நின்றது -நுண்ணிய
என்னைப் போலே –
பிரத்யஷமே உபமானம்
நெஞ்சம் உருகுவது போலே –
மஹத் தத்வம் ஆகாசம் -ஆத்மாவும் அழிய வேறு திருஷ்டாந்தம் இல்லையே

பெரிய பொருளான ஆகாசத்துக்கு, அணுப்பொருளாக இருக்கும் தன்னை
உபமானமாகச் சொல்லுதல் கூடுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘எவருக்கு’ என்று தொடங்கி.

“அப்ரமேயம் ஹி தத்தேஜ: யஸ்ய ஸா ஜநகாத்மஜா
நத்வம் ஸமர்த: தாம் ஹர்த்தும் ராமசாபாஸ்ரயாம் வநே”-என்பது, ஸ்ரீராமா-ஆரண். 37 : 18.

மாரீசன் வார்த்தை இது –
தேஜஸ் அளவிடமுடியாது
ராமனே தேஜஸ் அதுக்கு மேலே பிராட்டி கூட சேர்ந்து –
மாரீசன் முதலில் பிரமச்சாரி ராமன் இடம் அடிபட்ட நினைவால்
எம்பெருமானுக்கும் பெருமை கொடுக்கும் பராங்குச நாயகி -மஹத் தத்வமே உருக ஆகாசம் உருக
கேட்க வேண்டுமா -ஸ்ரீ ய பதி -சர்வாதிகன் –

ஜீவிக்கைக்கு நிமித்தம் அவனுடைய அடிப்பாடு
பொதுவாக கார்யம் செயல்
அடியாலே ரஷித்தவன்
மகாபலி மூலம் வந்த ஆபத்தை போக்கினவன் தன்னால் வந்த ஆபத்தை போக்க மாட்டானா
நியத ஸ்வாபம் -ரஷிக்க நினைத்து செய்தானா
புழுக் குறித்தது எழுத்தானது போலே என்பார்

புழுக்குறியிட்டது எழுத்தானாற்போன்று’ என்ற இவ்விடத்தில்,

மானத்து வண்ட லுழவோ ரெழுத்தின் வடிவுற்றசீர்
மானத்து வண்ட வினையாள ராயினும் மால்வளர்வி
மானத்து வண்டல மாமரங் கம்வழி யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட ராம்பதம் வாய்க்குமங்கே.-என்ற திவ்வியகவி திருவாக்கு நினைவுகூர்தல் தகும்.

அன்று ஒரு கால் வையம் அளந்த பிரான்
என்றோ ஒரு நாள் செய்தவன்
பிரான் என்று உபகாரகன்
வாரான்
லோகத்தை அடைய அளந்த உபகாரகன்
வாராமல் இருப்பதே ஸ்வாபம் என்பார்
வெள்ளம் பெருக்காறு -காட்டாற்று வெள்ளம் -போலே விபவம் -மழை சொல்ல வில்லை உதாரணமாக
அடையாளம் சுவடி இன்றி பெருக்காறு –
என்றோ ஒருக்கால் செய்து போன இத்தனை
வாரான் என்ன வண்டாம் வரும் சொல்ல கூடாதா
நப்பாசை
இருக்கால் பட்டு சொல்வது முடிபவர்களுக்கு
வாரான் அறிந்து முடிவாளே
உலகோ ஒ உறங்குமே
லோகத்தை அடைய இன்னார்
அன்னையர் தோழியர் முன்பு சொல்லி இங்கே உலகம் அனைத்தையும் கடிந்து கொள்கிறார்

பிரிந்த அவன் போலே லோகம் ஆனதே -ஹிம்சிக்கிறதே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading