வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண்துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர்தீர்ப் பாரினியார்? நின்றுருகு கின்றேனே.
பொ-ரை :- இந்த இரவானது, செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் சேர்ந்து கொடிய நெருப்பினைக்காட்டிலும் மிக அதிகமாக எரித்து வருத்தா நின்றது, அழகிய பிரகாசத்தையுடைய சூரியனது அழகிய பெரிய தேரும் தோன்றுகிறதில்லை; சிவந்த பிரகாசம் பொருந்திய தாமரைபோன்ற கண்களையுடைய செல்வனும் வருகின்றான் இலன்; நிலைபெற்று உருகிக்கொண்டிருக்கின்ற என்னுடைய மனத்துன்பத்தை நீக்குகின்றவர்கள் யார்? என்கிறாள்.
வி-கு :- சுடரில்: ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. ஒப்புப் பொருளுமாம். தான் – இரவு. உருகுகின்றேன் – வினையாலணையும் பெயர்.
ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 3இரவும் நலியாநின்றது, சூரியோதயமும் ‘நமக்கு’ என்றவாறே வேண்டத்தக்கதாய் விட்டது, காக்கின்றவனும் தோன்றுகின்றிலன், என் மனத்தின் துன்பத்தை இனிப் போக்குவார் யார்? என்கிறாள்.
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் – இராவணன் மாரீசனைத் துணையாகக் கொண்டு வந்து தோற்றினாற் போலே ஆயிற்று, நுண்ணிய துளியோடே செறித்த இருள் வந்து தோன்றினபடி. 1இரண்டும் இன்பத்திற்கு ஏகாந்தமாய் இருப்பன அன்றோ, “ஒழுகு நுண் பனி” என்கிறபடியே, கார்காலத்தில் கைக்குள்ளே அடங்க அணைக்க வேணும். இருள்தானே போகத்தை வளர்ப்பதே அன்றோ. அதற்குமேலே, வளர்ந்த 2இருளும் நுண்ணிய பனியும், வெவ்விய சுடரிற் காட்டில் அடா நின்றது என்னுதல். வெவ்விய சுடர் போலே அடா நின்றது என்னுதல். 3இவற்றில் பிரதானம் யாது? என்னில், அது வேணுமோ, ‘பாதகங்கள் இரண்டு உண்டு’ என்ன அமையாதோ. இனி, இத்திருவாய்மொழியில் சொல்லுவது, இரவின் துன்பமே அன்றோ; ஆன பின்னர், இருளுக்கே முதன்மை சொல்லிற்றாகக் கோடலும் அமையும். அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால்-தன்னுடைய தோற்றரவிலே துன்பங்களை எல்லாம் போக்குதலையுடைய அழகிய சுடர் பொருந்திய சூரியனும்வருகின்றிலன். 1இது, இளைய பெருமாள் அகல நின்றாற்போலே ஆயிற்று. 2பிரளயத்தில் சிறிது தூரம் எஞ்சி இருக்க நீந்தி, ‘கரையைக் கிட்டினோமோ, கிட்டினோமோ!’ என்று பார்ப்பாரைப் போலே காணும், இரவு முழுவதும் நோவுபட்டு, ‘விடிந்ததோ, விடிந்ததோ, என்று பார்க்கிறபடி.
செம்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்-சிவந்த சுடரையுடைய தாமரை போன்ற திருக்கண்களையுடைய செல்வத் திருமாலும் வருகின்றிலன். 3சூரியன் வந்தாலும் இருள் வருவதற்குச் சம்பாவனை உண்டே அன்றோ, மறையாத சூரியனும் வருகின்றிலன் என்னுதல். 4அந்தச் சூரியனுடைய பிரகாசமும் எல்லா இடங்களிலும் இராதே அன்றோ, உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்யுமவன் அன்றோ இவன். 5“பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன்” என்னக்கடவதன்றோ. 6“காலையில் சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரைமலர் எவ்வண்ணம் இருக்குமோ அவ்வண்ணமே அந்தப் பரப்பிரஹ்மமான ஸ்ரீமந் நாராயணனுடைய திருக்கண்களும்” என்கிறபடியே, சூரிய மண்டலத்திலே எழுந்தருளியிருக்கிறவனும் வருகின்றிலன். என்றது, 1சூரியனுடைய வரவுக்கு அருணோதயம் போலே இருப்பது ஒன்றே அன்றோ, அந்தச் செல்வத் திருமாலுடைய வரவுக்குச் சூரியனுடைய தோற்றரவு என்றபடி. நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் – 2மனத்திலே உள்ள துன்ப இருளைப் போக்குவார் யார்? புற இருளைப் போக்குமவனன்றோ அந்தச் சூரியன்; மனத்திலே உள்ள இருளானது வயிரம் பற்றின இடரே அன்றோ; அதனைப் போக்கும்போது நிலவனுமாய் அந்தரங்கமானவனுமே வேணுமே. 3“ஞானமாகி ஞாயிறாகி” என்னக் கடவதன்றோ. நின்று உருகுகின்றேனே – 4விலக்ஷண விஷயத்தில் உண்டான பிரிவானது, உருகிற்றாய் தர்மிலோபம் பிறக்கவும் ஒட்டாது, தரிக்கவும் ஒட்டாது, முடியஉருகினபடியே நிற்குமித்தனை. 1‘இன்னம் ஒருகால் காணலாமோ’ என்னும் நசை முடிய ஒட்டாது, அப்போதைய இழவு பிழைத்திருக்க ஒட்டாது.
இரவும் நலியா நின்றது
ரஷகன் தோற்ற வில்லை
மநோ துக்கம் போக்குவார் யார்
நுண் துளி கூட்டிக் கொண்டு வர
ராவணன் மாரீசன் கூட்டி வந்து
நுண் பனி இரவில் தோன்றுமே
வர்ஷா காலத்தில் போகம் வர்த்தகம்
போகத்தை வளர்ப்பது ஆகையாலே “இருள்” பாதகமாம்; “துளி” பாதகம்
ஆமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இரண்டும்’ என்று
தொடங்கி. துளியும் போகத்தை வளர்ப்பது என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘ஒழுகு நுண்பனி’ என்று தொடங்கி.
முழுதிவ் வையகம் முறைகெட மறைதலும் முனிவனும் முனிவெய்தி
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை அடங்கஅம் சிறைகோலித்
தழுவு நள்ளிருள் தனிமையின் கடியதொர் கொடுவினை அறியேனே
என்பது, பெரிய திருமொழி 8. 5 : 8. இத்திருப்பாசுரத்திற்குக் கருத்து,
பாதகங்கள் இரண்டு சொல்லாமல்
இருளுக்கே பிரதான்யம்
அம் சுடர் அழகிய –
ஆதித்யனும் வர வில்லை -இளைய பெருமாள் அகல் நின்ற துக்கம் போலே
மாரீசன் சகாயம் ராவணனுக்கு போலே
பிரளயம் அல்ப சேஷம் இன்று நீந்துவாரைப் போலே கரை காண ஆசை கொண்டு
விடிந்ததோ விடிந்ததோ பார்க்கும்படி
“அஞ்சுடர வெய்யோன்” என்றதனை அடுத்து, “செஞ்சுடர்த் தாமரைக்கண்
செல்வன்” என்றது, சூரியனைக்காட்டிலும் இவனுக்குள்ள வேறுபாட்டினைக்
காட்டுவதற்காக என்று, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்யத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘சூரியன் வந்தாலும்’ என்று தொடங்கி.
உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச் செய்வதற்கு மேற்கோள் காட்டுகிறார்
‘பகற்கண்டேன்’ என்று தொடங்கி. என்றது, ‘நாரணனைக் கண்டேன்’
என்றதனால், உபய விபூதிகட்கும் நாதனாம் தன்மையைச் சொல்லி,
‘பகற்கண்டேன்’ என்கையாலே, உபய விபூதிகட்கும் பிரகாசத்தைச்
செய்கின்றவன் என்பது போதரும் என்றபடி. இது, இரண்டாம் திருவந். 81.
6. “அஞ்சுடர வெய்யோன் அணிநெடுந்தேர் தோன்றாதால்” என்றதன் பின்,
“செஞ்சுடர்த் தாமரைக்கண் செல்வனும் வாரானால்” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘காலையில்’ என்று தொடங்கி.
“தஸ்யயதா கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ”-என்பது, சாந்தோக்யம். 1 : 6.
வர வில்லை
அருணோ உதயம் ஆதித்ய உதயம் போலே இவன் வரும் முன் ஆதித்யன் வர
செல்வன் -ஸ்ரீ மான் அச்தமிதியாத ஆதித்யன் –
சூர்ய ஒளி ஒரு பிரதேசத்தில்
இவன் உபய விபூதியிலும் பிரகாசம் கொடுப்பவன் -செல்வன்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் போலே -அஸ்தமிதியாத ஆதித்யன் –
தமஸை -ஆந்தரமான அஜ்ஞ்ஞானம் போக்கும் -வைரம் பற்றின இடர்
அந்தரங்கன் -சாமர்த்தின் ஞானமாகி ஞாயிறாகி வர வேண்டுமே –
விலஷண விஷய விச்லேஷம் -உருகி கொண்டே இருக்க வைக்குமே
மன இருளை இவன் போக்கும் விதம் யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஞானமாகி’ என்று தொடங்கி. என்றது, மன இருளைப்
போக்கும் ஞானமுமாய்ப் புற இருளைப் போக்கும் சூரியனுமாய் என்றபடி.
ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீதுபோய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே!
ஞானமாகி ஞாயிறாகி ஞால முற்றும் ஓர்எயிற்று
ஏனமா யிடந்த மூர்த்தி எந்தைபாதம் எண்ணியே.-என்பது, திருச்சந். 114.
இன்னும் ஒரு கால் காணலாமே முடிய ஒட்டாத நப்பாசை
துக்கம் வாழ ஒட்டாது
உருகிக் கொண்டே இருக்கும்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply