காப்பார்ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய்த்
தூப்பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
பொ-ரை :- இந்தச் சமயத்தில் காப்பவர்கள் யார்தாம்? செறிந்த இருளோடும் நுண்ணிய துளிகளோடும் நெடுமையினையே இயல்பாகவுடைய ஊழிக்காலமாகிச் செல்கின்ற இந்த இரவுக்காலத்தில், பரிசுத்தமான தன்மையுடைய வெண்மை நிறம் பொருந்திய சங்கையும் சக்கரத்தையுமுடைய என் தலைவன் தோன்றானால்; தீயின் தன்மையையுடைய கொடிய வினைகளைச் செய்த என்னுடைய தெய்வங்களே! நான் என் செய்வேன்? என்கிறாள்.
வி – கு :- கங்கு – கரை. இருளோடும் பனித்துளியோடும் ஊழியாகச் செல்கின்ற கங்குல் என்க. தூ – பரிசுத்தம். தீ – நெருப்பு. பால – தன்மையையுடைய. பால் – தன்மை.
ஈடு :- ஏழாம் பாட்டு. 3இரவுப்பொழுதாகிற யுகம் செல்லா நிற்க அவன் வந்து தோற்றாமையாலே, கண் மூடாதவர்கள் ஆகையாலே உறங்காத தெய்வங்களைக் குறித்து, நான் என் செய்வேன்? என்கிறாள்.
இவ்விடத்துக் காப்பார் ஆர் – 4எல்லாரையும் காக்கின்றவனானவன் காவாதிருக்க, இவ்வளவில் பாதகர் ஆனார்காக்கின்றவர் ஆகவோ. 1பாதுகாக்கின்றவன் வரவு தாழ்த்தாலும் இப்புத்தி பிறவாதிருக்கக்கூடிய இவள் இப்போது ‘காப்பார் ஆர்’ என்று இவ்வார்த்தை சொல்லும்படி காணும் இவளுக்குப் பிறந்த நிலைவேறுபாடு, 2“சரைஸ்து ஸங்குலாம் கிருத்வாலங்காம் – திருவடி, பிராட்டியைப் பார்த்து ‘பெருமாள்பக்கல் 3இனி எழுந்தருள அமையாதோ?’ என்ன, இராக்ஷசர்கள் நெருங்கியிருக்கிற இதனை இராமசரம் நிறைவுற்றதாக்கிக்காண் நாம் போவது, வேற்று மனிதர் முகத்தில் விழித்துப் போகவோ? பரபுரார்த்தந:-அவரோடே பகைகொண்டு இதற்கு முன்னர் உய்ந்து போனதும் ஒரு படைவீடு உண்டோ? மாம் நயேத்யதி – 4‘நயாமி பரமாம் கதிம்-மேல்கதிக்குக் கொண்டு போகிறேன்’ என்கிறவர் இரண்டு வார்த்தை சொல்லுவரோ? காகுஸ்த்த :- இந்திரனுடைய பகைவர்களையும் போக்குங்குடியிலே பிறந்தவர் தம் காரியத்தில் சோர நிற்பரோ? தத் தஸ்ய சத்ருசம் பவேத்-
1அவர்க்குத் தகுதியாகவுள்ளவற்றைச் செய்து போக வேண்டிய நாம், நம்முடைய ஆற்றாமையை நீக்குவதற்காக அவர்க்கு நிறக் கேடானவற்றைச் செய்யவோ?”
2‘இராமன் தேவியை ஓர் அரக்கன் பிரிக்க, அவள் சபித்துப் போனாள்’ என்னுதல், ‘ஒரு குரங்கு மீட்டது’ என்னுதல் செய்கையாகிற இது, அவர் வில்வலிக்கு வசையாம் காண்; 3அவர் வம்சத்துக்குக் கொத்தையாம் காண்; 4அவர் விஷயத்தில் இராவணன் செய்ததனை நாமும் செய்யவோ? 5இராம தனத்தை ‘என்னது’ என்றாரோடுஒப்பர்கள் ஆவரே அன்றோ அவருடைய காத்தலைத் தம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளுமவர்கள். எவையேனும் அச்சத்திற்குக் காரணங்கள் உள ஆனாலும் அஞ்சாதே இருக்கக்கூடிய இவள் பிரிவாற்றாமைக்கு அஞ்சினபடியாலே அன்றோ ‘காப்பார் ஆர்’ என்ற இவ்வார்த்தை சொல்லியது. 1“ஸ்ரீ ராமபிரானுடைய திருக்கைகளை அடைந்திருந்தாளாகையாலே யானைக்கூட்டங்களையும் சிங்கக்கூட்டங்களையும் புலிக்கூட்டங்களையும் கண்டு அச்சத்தை அடையவில்லை;” ஸ்வரூபத்தோடு கூடியிருக்கின்ற பெண்தன்மை போயிற்று, கணையத்துக்குள் இருப்பவர்கள் அச்சத்திற்குக் காரணமான பொருள்களைக் கண்டு அஞ்சமாட்டார்கள் என்றபடி. யானைக்கூட்டங்கள் சிங்கக் கூட்டங்கள் அல்லவே அன்றோ இது. காப்பார் ஆர் இவ்விடத்து-2‘காக்கப்படுகின்ற பொருள் இவை, காக்கின்றவன் அவன்’ என்று தெளிந்து அறுதியிட்டு, ‘அம்ம’ என்று அப்புத்தட்டி இருந்தவளே அன்றோ, இப்போது காப்பார் ஆர்’ என்கிறாள்; பிறந்த ஆற்றாமையின் மிகுதியாலே. அவனுடைய சர்வரக்ஷகத்வம் 3ஓர் அச்சாய் அன்றோஇருப்பது. இவர் அல்லிலே கிடந்து நோவுபடுகிறாரே அன்றோ. 1அவன் உண்டாயிருக்க, முதலிலே ஒருவர்க்கும் வருத்தம் இல்லையே அன்றோ.
கங்கு இருளில் – எல்லையான இருள் என்னுதல்; தடித்த இருள் என்றபடி. கங்கு-எல்லை. அன்றிக்கே, கங்குலில் இருள் என்னுதல்; ‘தச ராத்ரம், சப்த ராத்ரம்’ என்றால், பத்துநாள், ஏழுநாள் என்று நாள்களைக் காட்டுவது போன்று இங்குக் ‘கங்குல்’ என்பதும் இரவாகிற காலத்தைக் காட்டுகிறது. இரவிடத்தில் என்பது பொருள். ‘மருங்குல்’ என்பது ‘மருங்கு’ என வருமாறு போன்று, கங்குல் என்பது, கங்கு எனக் கடைக்குறைந்து வந்த விகாரம். நுண் துளியாய் – நுண்ணிய துளியுமாய். சேண்பாலது ஊழியாய்ச் செல்கின்ற கங்குல்வாய் – மிக்க நெடுமையை ஸ்வபாவமாக உடைத்தான கல்பமாய்க்கொண்டு செல்லுகிற இரவிடத்து. 2தமிழர்க்கு அகத்தியரைப் போன்று இருப்பான் தமிழாசிரியன் ஒருவன், செல்கின்ற கங்குல் வாய் என்பதற்குச் செல்கின்ற நாளகத்து என்று உரை எழுதி வைத்தான். தூப் பால வெண்சங்கு சக்கரத்தன் தோன்றானால் – இருளைப் போக்கும்போது சந்திர சூரியர்கள் சேர உதித்தாற்போன்று இருக்கின்ற திவ்விய ஆயுதங்களையுடையவன் வருகின்றிலன். 3அந்தச் சந்திரசூரியர்கள் வேணுங்காணும் இந்த இருளைப் போக்கும் போது. 1“ஆங்கத் திகிரி சுடரென்றும் வெண்சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து” என்று சொல்லக் கடவதன்றோ.
2பண்டே இவள் கைகண்டு வைத்தமையன்றோ இவைதாம். 3இருளோடே சீறுபாறு என்று போக்குவான் ஒருவனும், இருளோடே கண்கலந்து நின்று போக்குவான் ஒருவனுமாயிற்று. தூய்மையை ஸ்வபாவமாகவுடைத்தான வெண்சங்கு ஆதலின் 4‘தூப்பால வெண்சங்கு’ என்கிறாள். அன்றிக்கே, பால் என்பது, இடமாய், குறைவற்ற இடத்தையுடைத்தான 5வெண்சங்கு என்னுதல்; 6“பெரு முழக்கு” என்றும், 7“நன்றாக நிரம்பின மத்தியினின்றும் வெளிக்கிளம்பின ஒலியையுடையஸ்ரீபாஞ்சசன்னியம்” என்றும் சொல்லப்படுவது அன்றோ. ஆயின், ‘தூய்மை’ என்ற சொல் குறைவறுதல் என்றபொருளைக் காட்டுமோ? எனின், ‘அவன் இவ்வர்த்தத்தில் குறைவற்றவன்’ என்று சொல்ல வேண்டுவதனை ‘அவன் இவ்வர்த்தத்திலே தூயன்காண்’ என்று வழங்கும் வழக்கு உண்டே அன்றோ. இலக்ஷணை இருக்கிறபடி. அன்றிக்கே, தூய்மையாலும் வெண்மையாலும், வெளுப்பின் மிகுதியைச் சொல்லுகிறதாகவுமாம்; அப்போது 1வேறுசொல் இடையில் வரலாகா. வந்திருப்பதனால், அவ்வாறு பொருள் கூறுதல் பொருத்தம் அன்று.
தீப் பால வல்வினையேன்-தீய தன்மையையுடைத்தாய்ப் பேர்க்கப் பேராதபடி மிகுந்த பாவத்தைச் செய்த நான். என்றது, 2காப்பாற்றுதலையே தனக்குச் சங்கல்பமாகக் கொண்டு, காப்பாற்றுதற்குச் சம்பந்தமுள்ளவனாய், அதற்காகவே கருவி பிடித்திருக்கிறவனுங்கூட உதவாதபடியான பாபம் என்றதனைத் தெரிவித்தபடி. தெய்வங்காள் என் செய்கேனோ-3தெய்வங்களோடு இவளுக்கு ஓர் ஒப்புமை உண்டு; அவர்கள் பிறப்புத் தொடங்கியேஉறங்காதவர்கள்; இவளோ எனின், “உண்டோ கண்கள் துஞ்சுதல்” என்றிருப்பவள். அதற்குமேல் இப்போது இருளுக்கு அஞ்சியும் உறங்காள். தன் நிலையைக் கண்டு அதற்கு அவர்கள் உறங்காதே இருக்கிறார்களாகக் கொண்டு, அவர்களைத் தஞ்சமாக நினைத்துக் கேட்கிறாள், சிறை உறவு போன்று. தோழிமாருங்கூட உறங்கா நிற்கச் செய்தே அவர்கள் உறங்காதிருக்கையாலே, அவர்களைக்காட்டிலும் இவர்களை அன்னிய உறவாக நினைத்துச் சொல்லுகிறாள். “ஆயும் அமருலகுந் துஞ்சிலும்” என்று தாய்மாரோடு ஒரு சேர எடுத்துப் பேசப்படுகிறதே அன்றோ தேவர்களையும். துன்பம் மிக்கால் ‘அம்மே! என் செய்வேன்’ என்றாற்போலே இருக்கிறது காணும்.
அநிமிஷர் -தேவர்கள் -கூப்பிட்டு –
சக்கராயுதம் ஏந்திய மாயவன் –
அநிமிஷத்தால் இவருக்கு சாம்யம்
தோழி மாறும் உறங்கும் பொது இவர்கள் கண் முழித்து இருக்க
தனது ஆற்றாமை பொறுக்க முடியாமல் உறங்க வில்லை என்று நினைத்து –
காப்பார் யார் இவ்விடத்து
கங்குலும் இருளும் சேர்ந்த
ஊழி காலம் நீண்டு போய் இருக்க
தெய்வங்காள் என் செய்கேன்
பாதகர் யானவர் காப்பாரோ -ரஷகரும் உதவாமல் இருக்க –
அவனை தவிர வேறு யாரும் ரஷிக்க இல்லையே
ஸ்வரூபம் அத்யந்த பாரதந்த்ர்யம் உண்டே –
மற்றவர் ரஷகர் நினைப்பதே தப்பு தானே சீதை பிராட்டி வார்த்தை –
ரக்ஷகன் வரவு தாழ்த்தாலும் இந்தப் புத்தி பிறவாமல், ‘அவனே ரக்ஷகன்’
என்று அறுதியிட்டிருந்தாளோ? என்ன, ‘இருந்தாள்’ என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘சரைஸ்து சங்குலாம்’ என்று தொடங்கி.
ஸரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபுரார்த்தந:
மாம் நயேத் யதி காகுஸ்த்த: தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 39 : 30. பிராட்டி திருவடியைப் பார்த்துக் கூறியது.
ஸ்தந்த பிரஜை போலே நாம் –
காகுத்தனே காப்பது தது தத் சத்ருசம் –
பெருமாள் பாடே எழுந்து அருள அமையாதோ திருவடி கேட்க
ராஜாசர் நிறைந்த இலங்கை ராமன் அம்புகளால் நிறைந்த இலங்கை ஆக வேண்டுமே
விரோதித்து ஜீவித்து போன -பரர் புரங்களை அபகரித்து –
நயாமி பரமாம் கதி -அவனே கூப்பிட்டு போவேன் சொல்லி -வராக சரம ஸ்லோகம்
வேறு ஒரு வார்த்தை சொல்லுவாரா
“மாம் நயேத்யதி – என்னைக் கொண்டு போவாராகில்” என்கைக்குக்
கொண்டுபோதல் நிச்சயமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
“நயாமி பரமாம் கதிம்” என்று. இது, வராக சரமஸ்லோகம்.
ககுஸ்த வம்சத்தில் அவதரித்தவர் வேற
அவனுக்கும் கௌர்வ கேடு வர கூடாதே
நிறக்கேடாம் பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘இராமன் தேவியை’ என்று
தொடங்கி. இங்கு,
அல்லன் மாக்கள் இலங்கைய தாகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவும்என்
சொல்லி னாற்சுடு வேன்அது தூயவன்
வில்லி னாற்றற்கு மாசுஎன்று வீசினேன்.
அன்றி யும்பிறி துள்ளதொன் றாரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும் வேறினி
நன்றி என்பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ.
வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனியல் லால்இடை
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண்எனக்
கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?- என்ற கம்பராமாயணச் செய்யுள்கள் நினைவு கூர்தல் தகும்.
ராஷசர் கூட்டிப் போக பிராட்டி சபிக்க -குரங்கு மீட்டினால் -வில் வலிக்கு வசை –
காகுஸ்த வம்சத்துக்கும் கொத்தையாகுமே
அவர் விஷயத்தில் ராவணன் செய்ததை நாமும் செய்வதோ
ராவணன் -ராமன் உடைமையை அபகரித்தான்
நாமே ரஷித்தாலும் அதே கார்யம் -தானே
ராம தனத்தை என்னது சொல்வது போலே
ரஷணமே அவன் தனம் -அபஹரிக்கலாமா –
ஏதேனும் பய ஹேதுக்கள் -வந்தாலும் -நாம் ஒன்றும் செய்யாமல் -அஞ்சாமல் இருக்க கடவ
அப்படி இருப்பவள் காப்பார் யார் சொல்லும்படி -பிரிவாற்றாமை
அச்சத்திற்குக் காரணங்கள் உளவானாலும் அஞ்சாதிருந்தாளோ? என்ன,
‘அஞ்சாதிருந்தாள்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘ஸ்ரீராமபிரானுடைய’ என்று தொடங்கி.
“கஜம் வா வீக்ஷ்ய ஸிம்ஹம் வா வியாக்ரம் வா வனம் ஆஸ்ரிதா
நாஹாரயதி ஸந்த்ராஸம் பாஹூராமஸ்ய ஸம்ஸ்ரிதா”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 60 : 20.
ராமஸ்ய -பாஹு -திருத் தோள்களை அண்டை கொண்ட பலத்தால் பயம் இன்றி –
ஸ்வரூப பிரயுக்தமான் ஸ்ரித்வம் போக -அச்சம் போக
கணையதுக்கு உள்ளே இருப்பார் பய ஹேதுகளுக்கு அஞ்சுவார்களா
கணையம் -கோட்டை -தோள் வலி
safaari போலே பயம் இன்றி இருக்கலாமே
அந்த எம்பெருமான் வர வில்லையே
இருள் -ஆனை சிம்ஹம் விட கொடியதாக இருக்க -காப்பார் யார் –
அறுதி இட்டு – அம்ம -என்றவள்
எல்லாம் ரஷ்யம் அவனே ரஷகன் -அம்மாடா நிம்மதி அப்பு கட்டி சௌக்யமாக இருக்கிறவள்
இப்பொழுது காப்பார் யார் -ஆற்றாமை அதிசயத்தால்
ரஷகத்வம் அச்சாக இருக்க
அல்லிலிலே பிறந்து நோவு படுகிறாள்
அல் -இரவு
அச்சு எழுத்து அல் எழுத்து மெய் எழுத்து
அகாரம் -ரஷகன் –
மகாரம் நினைத்து துக்கிகிறாள்
அம்ம,
அ
ம காரம் இரண்டும் காட்டி –
பிரணவத்தில், அகாரத்திலே சொல்லுகிற அவனுடைய ரக்ஷகத்வத்தையும்,
மகாரத்தில் சொல்லுகிற தன்னுடைய ரக்ஷ்யத்வத்தையும் நினைத்து அச்சம்
அற்று இருக்குமவள் கண்டீர் கலங்கினாள் என்று சுவாப தேசத்திலே
அருளிச்செய்கிறார் ‘காக்கப்படுகின்ற பொருள்கள்’ என்று தொடங்கி.
‘அம்ம’ என்பது, சிலேடை: அம்மா என்று மகிழ்ச்சியினால் சொல்லும்
வார்த்தை என்றும், அகாரவாச்சியனான சர்வேச்வரனுக்கு மகாரவாச்சியனான
ஆத்மா காக்கப்படுகின்ற பொருள் என்றும் பொருளாம். அப்புத்தட்டி-துடை
தட்டி என்றும், நினைத்து என்றும் பொருளாம்.
3. ‘ஓர் அச்சாய்’ என்றது, சிலேடை: அச்சிலே அந்தர்ப்பூதமான அகாரத்தாலே
சொல்லப்படுகின்ற பொருளாய் என்பது நேர்பொருள். ஏக ரூபமாய் என்பது
வேறும் ஒரு பொருள். ‘அல்லிலே’ என்றதும், சிலேடை: ஹல்லான மகாரத்தால் சொல்லப்படுகின்ற ஆத்ம ஸ்வரூபத்தை
நினைத்து என்பது நேர்பொருள். இரவிலே என்பது வேறும் ஒருபொருள்.
ஆக, ‘ஓர் அச்சாயன்றோ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு,
அகாரவாச்சியனான சர்வேச்வரனை நினைத்து, பாரம் அற்றவளாய் இருக்க
வேண்டியவளாக இருக்க, மகாரவாச்சியனான ஆத்மாவை அநுசந்தித்து,
‘நம்மை நாம் எங்கே காத்துக்கொள்ளப் போகிறோம்’ என்று
நோவுபடுகிறாள் என்பது கருத்து. அச்சு-உயிர். அல்-மெய்.
அவன் உண்டாய் இருக்க கிலேசம் இல்லையே ஒருவருக்கும்
இவர் துக்கம் மிகுதி
கங்குல் இருள் எல்லையான இருள் -கடைக்குறை கங்கு இருள்
மருங்கு மருங்குல் ஆனது போலே
கங்குல்வாய் -என்ற இடம் -கால பரமாகிறது –
தசராத்ரி தீட்டு -பத்து நாள் சொல்ல மாட்டார்கள் –
தடித்த இருள் -துளி துளியாக நகர –
தமிழாச்சார்யன் ஒருவன் -அர்த்தம் –
சந்திர ஆதித்யர் போலே திவ்ய ஆயுதங்கள் கொண்டு இருக்கிறவன் இருளை போக்க வரவில்லை
சங்கு சக்கரங்களைச் சந்திர சூரியர்களாகக் கூறியதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘ஆங்கத்திகிரி’ என்று தொடங்கி. இது, மூன்றாந் திருவந். 67.
மலரும் குவியும் அடித்தாமரை -ஆங்கு -ஓங்கு கமலத்தில் ஒண் பூ
சந்திர மண்டலம் போலே கையில் ஏறி ஆண்டாள்
முன்னே கையில் கட்டி
சிறு பாறு போக்கும் இருவரும் -சண்டை போட்டு -போக்கும் சூர்யன் -கூட இருந்து சந்தரன் –
பால இடம் தூ தூய்மை குறைவற்ற இடமுடைத்தாய்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply