இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்து எல்லை -இதுவோ தான்
வேதம் தமிழ் செய்து மெய்ப் பொருட்கும்
உட்பொருளாய் ஓதும் சடகோபனூர்
————————————————————————————————————
மெல்லிய பஞ்சடி வுந்துவராடையும் மேகலையும்
வல்லியை வென்ற மருங்கும் உத்தார வன முலையும்
சொல்லியல் வன்மையும் வில்லிபுத்தூர் அம்மை தோள் அழகும்
முல்லையை வென்ற நகையும் எல்லாம் என் தன் முன் நிற்குமே-
வாழி திருப்பாவை பாடு மடப்பாவை
வாழி யரங்க மணவாளர் -வாழி யவன்
மாடு நிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடு நிற்கும் வேதாந்தப் பா –
——————————————————————————————————————-
எம்பெருமானார் மேல் நாட்டில் இருந்து திருவரங்கம்
திரும்பியதும் திருவரங்கம் பெரிய கோயிலார் பாடி அறிளியது –
வையம் குருடு அன்றோ மா மறையும் பொய் அன்றோ
ஐயன் உரைத்த தமிழ் ஆர் அறிவார் -வையகத்துக்கு
ஊன்று கோல் எந்தை எதிராசர் உத்தரித்த
மூன்று கோல் காண்பதற்கு முன் –
———————————————————————————————————————————-
Leave a Reply