நிகமத்தில் இப்ப்ரபந்தத்தையே தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு
வாசபூமி பரமபதம் -என்கிறார்
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கெலாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -11–
அன்பன் –
வாத்சல்யத்தையே நிரூபகமாக உடையவன் ஆயிற்று ஈஸ்வரன் –
இன்னானுக்கு அன்பன் என்று விசேஷியாமையாலே
ரிபூணாமபி வத்சலா -என்கிறபடியே-சர்வ விஷயம் ஆயிற்று அவனுடைய வாத்சல்யம் இருப்பது -அதுக்கு ஹேது என் என்னில் சர்வேஷா மேவ லோகா நாம் பிதா மாதா ச மாதவ -என்றும்–தேவா நாம் தாநவாநாஞ்ச சாமான்யமதி தைவதம் -என்றும்
ஜனகத்வ பிரயுக்தமான சம்பந்தம்-சர்வ சாதாரணமாய் இருக்கையாலே
வாத்சல்யமும் பொதுவாய் இருக்கும் –
தன்னை அடைந்தவர்கட் கெலாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பி-
ஆழ்வாருடைய அன்பு அங்கன் பொதுவாய் அன்றே இருப்பது
பரமனைப் பயிலும் திருவுடையார் எவரேலும் அவர் எம்மை ஆளும் பரமர் -என்கிறபடியே
பகவத் சம்பந்த நிபந்தனமாய் இ றே இருப்பது -(கீழே அன்பு -வாத்சல்யம் -இங்கு பக்தி -என்றவாறு )தம்மைப் போலே -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்பார் எல்லாரையும் தமக்கு நாதராக-வாயிற்று நினைத்து இருப்பது –
தென் குருகூர் நகர் நம்பி –
அடியார் அடியார் தம் அடியார் -என்று தத் சம்பந்திகள் அளவும் பண்ணின பிரேமத்தாலே
பூரணராய் இருப்பர்
நம்பிக்கு அன்பனாய் –
பகவத் விஷயத் தளவும் அன்றிக்கே -ததீயர் அளவும் அன்றிக்கே-ஆசார்ய விஷயத்திலே சக்தராய் –
தனக்கு புருஷார்த்தம் வேண்டி இருக்கில் பகவத் விஷயத்தை பற்ற -அமையும்
அங்கன் தான் உகந்தது அன்றிக்கே -ஈஸ்வரன் உகப்பே புருஷார்த்தம் -என்று இருக்கில்
பாகவதர்களைப் பற்ற அமையும் -ஜ்ஞா நீத்வாத்மைவ மே மதம் என்றும் மம ப்ராணா ஹி பாண்டவா -என்றும் பாண்டவர்களை தனக்கு தாரகராக இ றே நினைத்து இருப்பது –ஈச்வரனோடு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு வாசியற எல்லாருடைய உகப்பும் புருஷார்த்தம் என்று இருக்கில்-ஆச்சார்யனைப் பற்ற அடுக்கும்-ஆசார்ய வான் -என்று ஆயிற்று ஸ்ரீ வைஷ்ணவர்கள் உகப்பது-பிரதமத்திலே -1-ஆசார்யன் தனக்கு அஜ்ஞாத ஜ்ஞாபந முகத்தாலே-ஸ்வரூப ஜ்ஞாநத்தைப் பிறப்பித்து-2-பகவத் சமாஸ்ரயண வேளையிலே புருஷகார -பூதனாய்–3-தன்னுடைய அனுஷ்டாநத்தாலே இவனை நல் வழியே கொண்டு போய்-4-ப்ராப்தி தசையிலும் சாத்ய வ்ருத்தியை பண்ணிக் கொடுக்கக் -கடவனாய் இப்படி பஹூ முகத்தாலே உத்தேச்யனாய் இ றே -இருப்பது-
மதுரகவி சொன்ன -சொல்
ஆழ்வாரைத் தாம் சொன்ன பாசுரம் தமக்கு இனிதாய் இருக்கையாலே-மதுரகவி -என்கிறார் (குருகூர் குயில் போலே -தானாய் தன்னைப் பாடிக்கொ ண்டார் -கண்ணன் இவரை இட்டு பயாடிக் கொண்டால் போலே )
சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
இனிதாய் இருந்தில்லை யாகிலும்-(மதுரகவி சொல் போதுமே -சொன்ன – நடுவில் -சொன்னதாக வள வள பேச்சாக இருந்தாலும் என்றவாறு )-இப்பிரபந்தத்தை தஞ்சமாக நினைத்து இருக்குமவர்களுக்கு-வஸ்தவ்ய தேசம் பரம பதம் –
ஆழ்வார் உத்தேச்யர் ஆனால் திரு நகரி அன்றோ ப்ராப்யமாவது -என்னில்
திரு நகரியில் -பொலிந்து நின்ற பிரான் ஆணையும்-ஆழ்வார் ஆணையுமாய் இரு புரியாச் செல்லும்-அங்கன் இன்றிக்கே ஆழ்வார் ஆணையே யாய்ச் செல்லும் -பரமபதம்
அடியார் நிலாகின்ற வைகுந்தமோ –என்றும் /வானவர் நாடு -என்றும் /சொல்லக் கடவது இ றே /நம்பி திரு வழுதி வள நாடு தாசர் –நம்புவார் பதி வைகுந்தம் -என்று
அவர்கள் இருந்த தேசம் காணும் பரமபதம் –என்று சொல்லுவர் –
உரைக்க வல்லார்க்கு வைகுந்தமாகும் தம்மூர் -எல்லாம் -என்னக் கடவது இ றே-(உள்ளுவாருக்கு உம்பர் ஊரே -அநந்த புரம் பதிகம் -உம்பர் -ஊர் திரு நாடு / திரு வனந்த புரம் / வசிக்கும் ஊர் மூன்றும் -சாண்ட்லி விவகாரத்தில் கண்டோமே -இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே -போலே )
கூரத் ஆழ்வான் மகன் பிறந்த பின்பு சம்சாரமும் பரம பதமும் இடைச் சுவரைத் தள்ளி
ஒரு போகி யாயிற்று காண் -என்று பெற்றி பணித்தார் -என்று பிள்ளை அருளிச் செய்வர் –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply