( ஆட் புக்க காதல் அடிமைப்பயன் -சொல்லி உடனே பயன் இல்லை பாங்கு இல்லை என்கிறீரே -அவர் திருத்த திருந்தி உள்ளீர் -பாங்கும் உண்டே -என்னில் தம்மைப் பார்த்தால் இப்படி தின்றும் -அவர் செய்து அருளினை உபகாரம் அனுசந்தித்த வாறே இப்படி தோற்றும் -)ஆழ்வார் தமக்கு உபகரித்த உபகாரத்தை அனுசந்தித்தவாறே
தாம் இதுக்கு முன் ஆழ்வார் விஷயத்தில் நின்ற நிலை யடங்க
முதலடி இட்டிலராகித் தோற்றுகையாலே –அவர் பண்ணின உபகாரத்தைப் பேசுகிறார் –
ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் இல்லையோ என்னில் –
க்ருத்ஸ்நாம் வாப்ருதிவீம் தத்யான்ன தத் துல்யம் கதஞ்சன -என்கிறபடியே-
பஞ்சாசத் கோடி விச்தீர்ணையான பூமியும் சத்ருசமம் அல்ல என்று இ றே சாஸ்திரம் -(பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ – )அவன் இவனுக்கு உபகரித்தது சர்வாதிகமாய் இருப்பதொரு மிதுனைத்தை யானால்-அப்படியே இருப்பதொரு மிதுனத்தை உபகரித்தால் இ றே இவன் பிரத்யுபகாரம் பண்ணினான் ஆவது –
ஆகையால் -ஆச்சார்யர் விஷயத்தில் எல்லாம் செய்தாலும் -அவன் பண்ணின
உபகாரத்தைப் பார்த்தால் -ஒன்றும் செய்திலேன் நான் -என்று முகக் குறைவாளனாய்
போரும் இத்தனை –
பயனன் றாகிலும் பாங்கலராகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்றார் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே-10-
பயனன் றாகிலும் –
நாட்டிலே ஒருவனை -உபகரிப்பது ஒரு பிரயோஜனத்தைப் பற்றி இ றே
அங்கன் ஒரு பிரயோஜனம் இல்லாது இருக்கச் செய்தேயும் –
பாங்கலராகிலும் –
பிரயோஜனம் இல்லாவிட்டால் -சொல்லுகிறபோது ஹிதம் கேட்க்கைக்கு
பங்காய் இருக்கலாம் இ றே
அங்கன் பாங்கு இன்றிக்கே இருந்தார்களே -ஆகிலும்
இப்படி இருக்குமவர்களுக்கு ஹிதம் சொல்லுகைக்கு ஹேது என் என்னில் –
இவர்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமை இ றே
இப்படி உபதேசிப்பார் உண்டோ -என்னில் –
ராவணனுடைய துர்கதியைக் கண்டு மித்ர மௌபயிகங்கர்த்தும்-என்று-அவனுக்கு ஹிதம் சொன்னாள் இ றே பிராட்டி-(தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்கும் -இதில் சீதை மட்டும் காட்டி )-ஒருவன் தலைக் கடையையும் புழைக் கடையையும் அடைத்துக் கொண்டு-அகத்துக்குளே கிடக்க அகம் நெருப்பு பட்டு வேகா நின்றால் கண்டு நின்றாரவிக்கும் போது-தங்களுக்கு ஒரு பிரயோஜனத்தைப் பார்த்தல் -உள்ளே கிடந்தவன் அபேஷித்ததுக்காக-வரதல் அன்றி இ றே அவிப்பது -இப்படி யாயிற்று ஆழ்வார் படியும்-
செயல் நன்றாகத் –
தனக்கு ஒரு பிரயோஜனம் இல்லை யானாலும்-எதிர்தலை பாங்கின்றியே ஒழிந்தால்
அவன் உஜ்ஜீவிக்கும்படி என் என்னில் –
தன்னுடைய செயலாலே எல்லாம் நன்றாம்படி பண்ணி –
இவன் செயல் தான் நன்றாம்படி –என்னவுமாம்
திருத்திப் பணி கொள்வான் –
தீர்ந்த வடியவர் தம்மைத் திருத்தி பணி கொள்ள வல்ல -(-3-5-)என்று-ப்ராப்யமும் ப்ராபகமும் தானே -என்று அத்யவசித்து இருக்குமவர்கள் உடைய-விரோதியைப் போக்கி அடிமை கொள்ளுமவன் என்றது இ றே சர்வேஸ்வரனை –
அங்கன் இன்றிக்கே
இவை ஒன்றும் இன்றிக்கே -இருக்குமவர்களையும் திருத்திப் பணி கொள்ளுமவர் இ றே ஆழ்வார் –பணி கொள்வான் –குருகூர் நம்பி -என்று அந்வயம்-(கொள்வான் -கொள்ளுகைக்காக -)
குயில் நின்றார் பொழில் சூழ் -என்ற இடம்-திருத்திப் பணி கொள்ளும்படிக்கு த்ருஷ்டாந்தம்-
இவர் ஒரு காலத்திலே-ஆற்றாமையாலே -காண வாராய் -என்று கூப்பிடுவதும் ஒரு பாசுரம் உண்டு
யாவர் நிகர் அகல் வானத்தே -என்று களித்துச் சொல்லும் ஒரு பாசுரம் உண்டு
இவர் பாசுரத்தைக் கேட்ட குயில்களும் செவியோத்து அத்தாலே இப்பாசுரத்தை சொல்லும்-ஆக இரண்டு பாசுரதுக்கும் குயில்கள் ஆயிற்று பயிற்றுவன –
குருகூர் நம்பி –
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே -என்று சேதனர் உடைய அளவு அன்றிக்கே
திர்யக்குகள் அளவும் ஏறும்படி யாயிற்று ஆழ்வாருடைய பூர்த்தி இருப்பது –
முயல்கின்றேன் உன் தன் மொய் கழற்கன்பையே –
உன்னுடைய ஸ்லாக்கியமான திருவடிகளுக்கு அன்பையே முயல்கின்றேன் –
அர்த்தியா நின்றேன் –
செய்கிற அடிமையால் பர்யாப்தி பிறவாமையாலே
திருவடிகளிலே எனக்கு அபிநிவேசம் பிறக்க வேணும் -என்று அர்த்திக்கிறார் இ றே
என்னைத் தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் -என்று ஆழ்வார் தாம்
அவ்விஷயத்தில் தடு மாறினாற் போலே-
பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் காணாமையாலே தடு மாறுகிறார்-
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply