ஈடு :- பொய்யே கைம்மை சொல்லி என்றும் -சில கூத்துச் சொல்ல -என்றும் –
உள்ளன மற்றுளவாப் புறமே சில மாயம் சொல்லி -என்றும் பகவத் விஷயத்திலேயும் பொய் சொல்லிப் போந்தேன்- என்றார் –
இப்படி பொய்யன் ஆகைக்கு நிபந்தனம் எது என்று பார்த்தார் -பிரகிருதி சம்சர்க்கமாய் இருந்ததீ
மெய்யே பெற்று ஒழிந்தேன் -கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் என்ற வற்றை மறந்தார் –
இந்த பிரக்ருத சம்பந்தத்தால் இதர விஷயங்களில் ப்ரவணமான மனஸை அவற்றில் நின்றும் மீட்டி –
உன் பக்கல் பிரவணமாம் படி தேகத்தில் காட்டில் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்கைக்கு ஷமன் ஆகிறிலேன் –
நீயே என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ள வேணும் -என்கிறார்
என்று –பட்டர் அருளிச் செய்யும் படி –
அன்றிக்கே -கண்டு கொண்டேன் உய்ந்து ஒழிந்தேன் -என்றார் –
அது ஞான அனுசந்தான காட்சியாய் இருந்தது –
காட்சிக்கு அநந்தரம் பாஹ்ய சம்ச்லேச்ச அபேஷை பிறந்து கை நீட்ட -அகப்படக் கண்டிலர் –
அத்தாலே தளர்ந்து -இதுக்கு அடி தேக சம்பந்தமாய் இருந்தது –
இத்தைக் கழித்துக் கொள்ளுகைக்கு ஈடாய் இருபத்தொரு சாதன அனுஷ்டான ஷமன் ஆகிறிலேன் பக்தி பாரவசயத்தாலே
ஆனபின்பு நீயே என் விரோதிகளை போக்கி உன் திருவடிகளில் அழைத்துக் கொண்டு அருள வேணும் என்கிறார் –
என்று நிர்வஹிப்பாரும் உண்டு
க்ரமத்திலே வரும் பக்தி தமக்கு உண்டாக நினைத்திரார் இறே
(அஜ்ஞ்ஞானத்தாலே பிரபன்னர் ஆழ்வார் -பட்டர் நிர்வாகம்
ஞானாதிக்யத்தாலே -பிரபன்னர் ஆச்சார்யர்கள்
பக்தி பாரவச்யத்தாலே பிரபன்னர் -ஆழ்வார்கள் -முன்புள்ள முதலிகள் -நிர்வாகம் –)
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும் –
பரம ஏகாந்திகள் போலே உன்னை ஒழிய நான் எத்தைக் கொள்வன் என்று
இங்கனே வாயாலே சொல்லா நிற்கச் செய்தேயும்
வன் கள்வனேன்
களவாவது -பர த்ரவ்ய அபகாரம் –
வலிய களவு சோரேண ஆத்ம அபஹாரிணா –என்கிறபடியே
பகவத் அதீயமான ஆத்ம வஸ்துவை அன்றோ -நான் என்னது என்று இருந்தது
(நன்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்)
விறகு களவு கண்டார் அளவு இல்லை அன்று இறே ரத்ன அபகாரம் செய்தவர் அளவில் தோஷம்
த்ரவ்யங்களை உபாதானம் பண்ணுகிற இடத்தில் ஆத்மவஸ்துவை பிரதானமாகச் சொன்னார்கள் இறே
த்ரவ்யம் விலக்ஷணமாவது -உடையவன் சர்வேஸ்வரன் ஆவது -இனிச் சொல்ல வேண்டா இறே
(பெரியவன் இடம் பெரியவற்றை திருடி
கௌச்துப ஸ்தாநீயம்-புருடன் மணி வரமாக)
மனத்தை வலித்து-
இதர விஷயங்களில் பிரவண மான மனஸை அவற்றின் நின்றும் மீட்டு-
மனத்தை மீட்டு என்னாதே -வலித்து-என்கிறது அவற்றில் நெஞ்சு பட்ட உறுதியை நினைத்து –
நான் இந்திரிய ஜெயம் பண்ண நினைக்கை யாவது அவை என்னை மேலிடுகை –
இந்திரியாணி பிரமாதீநி ஹரந்தி பிரசவம் மன
கண்ண நீர் கரந்து
அவற்றினுடைய அலாபத்தாலே பாய்கிற கண்ண நீரையும் மாற்றி
நின் கண் நெருங்க வைத்தே
அம் மனசை உன் பக்கலிலே கொண்டு போந்து மூட்டி நிரந்தரமாக அனுசந்தித்து
எனது ஆவியை நீக்க கில்லேன்
இத்தேகத்தில் காட்டில் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்க ஷமன் ஆகிறிலேன்
என் கண் மலினம் அறுத்து
இதுக்கு அடி என் பக்கல் உண்டான மாலின்யம் இறே –
மலினம் -மாலின்யம் -அதாவது பிரகிருதி சம்பந்தம் -மெய்யனாகக் கெட்டேன் என்கிறார் —
மெய் -சரீரம் -அத்தை அறுத்து உன் திருவடிகளில் என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும் –
கண்ணனே –
சோக நிவர்த்தகன் அன்றோ -நீ எனக்குச் செய்து அருள வேண்டியது –
அழகிய வடிவைக் காட்டி மா ஸூ ச -என்னும் அத்தனை அன்றோ –
அவ்வடிவைக் கண்டால் மற்று ஒன்றினைக் காணா என்னும்படியாய் இறே இருப்பது –
அதவா –வேறு ஒரு நிர்வாகம்
ஸ்வரூப அனுரூபமான பாசுரத்தை வாயாலே சொல்லி நிற்கச் செய்தேயும்
வன் கள்வனேன்
உத்தேச்ய வஸ்துவை -கடுக லபிக்கப் பெறாத இன்னாப்பாலே –
மஹா பாபி -என்பாரைப் போலே வன் கள்வன் என்கிறார்
மனத்தை வலித்து-இத்யாதி –
பக்தி பாரவச்யத்தால் சிதிலமாகிய – மனஸை திண்ணியதாக்கி
தன் கேழில் ஒண் கண்ண நீர் கொண்டாள்-என்கிற கண்ணநீரையும் மாற்றி
நின் கண் நெருங்க வைத்தே
கால் ஆளும் நெஞ்சு அழியும் என்கிறபடியே
உன்னைக் கிட்டியவாறே உடை கொலை பண்ணும் மனஸை தரித்து நின்று உன்னை அனுசந்திக்கும் படி பண்ணி –
இச் சரீரத்தின் நின்றும் ஆத்மாவைப் பிரிய அனுசந்திக்க ஷமன் ஆகிறேன் அல்லேன் சேர்க்கும் சக்தன் அல்லன்
இவன் தான் தன விரோதியைப் போக்கி கிரமத்திலே வந்து கிட்டுகிறான் என்று ஆறி இராதே
நினைத்த கார்யம் தலைக்கட்ட வல்ல நீயே ஏன் விரோதியைப் போக்கி என்னை அழைத்துக் கொண்டு அருள வேணும்
கண்ணனே
பக்தி உபாயம் அன்று என்று சோகித்தவனுக்கு -(உன் திருவடி- )நல் விரகு சொல்லிக் கொடுத்தவன் அன்றோ நீ
பொய் சொல்வதருக்கு கரணம் பிரகிருதி சம்பந்தம்
கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன் சொன்னாரே
மானச அனுபவம் அது -பெற்றது போலே
பிரகிருதி சம்பந்தம் பார்த்து -அத்தை மறந்து
மனசை மீட்டு உனது பக்கலில் பிரவணராய் பண்ணும் படி பண்ணி
விரோதி போக்கி திருவடியில் சேர்த்து அருள வேண்டும் என்கிறார் -பட்டர் நிர்வாஹம்
அன்றிக்கே
கண்டு கொண்டு உய்ந்து 0ஒழிந்தேன் காட்ஷி தானே
கட்டி கொள்ள பார்த்தார்
கை வீசினால் அகப்பட வில்லை
அதுக்கு அடி தேக சம்பந்தம்
பக்தியில் மூழ்கி வேறு சாதனம் அனுஷ்டிக்க முடியாமல்
கூரத் ஆழ்வான் -பகவத் விஷயம் கேட்க ஆசை கொண்டார் எம்பெருமானார்
திரு விருத்தம் வியாக்யாதால் போலே -உயர்வற உயர் நலம் உடையவன் அருளி மோகித்தார்
இத்தை வந்து சொல்லி -தரித்து நின்று சொல்ல முடியாமல் –
நீயே விரோதி போக்கி திருவடியில் கொள்ள வேண்டும் சரண் அடைகிறார்
இரண்டு நிர்வாஹங்கள் இப்படி
“பெற்றொழிந்தேன்”, “கண்டுகொண்டொழிந்தேன்” என்று முன்னும் பின்னும்
பிரீதியாக இருக்க,
இப்பாசுரத்திலும் மேற்பாசுரத்திலும் துக்கமாயிருக்கைக்கு அடி என்? என்ன, அதற்குப் பூர்வாசாரியர்கள்
அருளிச்செய்த இருவகை நிர்வாஹங்களையும் அருளிச்செய்கிறார்
“பொய்யே கைம்மை சொல்லி” என்று தொடங்கி. ‘சரீரத்தின்
சேர்க்கையாயிருந்தது’ என்றது, “மலினம்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
‘எப்படியாகிலும் பல சித்தி உண்டாயிற்று’ என்றாரே?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் “மெய்யே பெற்றொழிந்தேன்” என்று தொடங்கி.
‘அவற்றில் நின்றும் மீட்டு’ என்றது, “வலித்து” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
“நின்கண் நெருங்கவைத்தே” என்றதனை நோக்கி ‘உன் பக்கலிலே
ஈடுபடும்படி செய்து’ என்கிறார். “அறுத்துக் கூவியருளாய்” என்றதனை
நோக்கி ‘நீயே என் விரோதியைப் போக்கி’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். பட்டர் நிர்வாகத்திலே ‘அஜ்ஞானத்தாலே பிரபந்நர்
ஆழ்வார்’ என்ற அர்த்தம் போதரும்.
1. ‘அன்றிக்கே’ என்றது முதல், ‘உண்டாக நினைத்திராரே அன்றோ’ என்றது
முடிய, பூர்வர்கள் நிர்வாகம். இவர்கள் நிர்வாகத்திலே ‘பக்தி
பாரவஸ்யத்தாலே பிரபந்நர்’ என்ற அர்த்தம் போதரும். ‘தம்முடைய
இந்தப் பக்தி சாதனமாகாதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘முறைப்படி வரும்’ என்று தொடங்கி. ‘முறைப்படி வரும் பக்தி’ என்றது,
கர்ம ஞானங்களை அநுஷ்டித்து அந்த அடைவிலே வரும் பக்தி.
மெய்யே பெற்று ஒழிந்தேன் மானச அனுபவம் தான்
இதுவே மீண்டும் மீண்டும் வரும்
அஞ்ஞானத்தால் பிரபன்னர் -அஸ்மாதாதிகள்
ஞாநாதிக்த்தால் பிரபன்னர்கள் ஆசார்யர்கள்
பக்தி பாரவச்யத்தால் பிரபன்னர்-ஆழ்வார்கள் போலே மூன்று வகைகள் உண்டே
என் கண் மாலின்யம் அறுத்து கூவிக் கொள்ள வேண்டும் -என்கிறார்
வன் கள்வன் -ஆத்மவஸ்துவை திருடி –
பாரம ஏகாந்திகள் போலே -ஏகாந்த பக்தி உக்தர் –
எம்பெருமானே எல்லாம்
ஆயுஷ் ஹோமம் கூட செய்யாதவர் திரு நாராயணபுரத்தில் -பரமை ஏகாந்திகள்
ஸுய வியாபாரத்தை விட்டு
அது போலே நான் வாயால் சொல்ல நிற்க செய்தேயும் -வன் கள்வன்
களவு -பெரிய அபஹாரம் ஆத்ம அபஹர்ரம்
யோந்யதா சந்தம் ஆத்மாநம் அந்யதா பிரதிபத்யதே
கிம் தேந ந கிருதம் பாபம் சோரேண ஆத்மா பஹாரிணா”
என்பது, பாரதம் உத்யோகபர்வம். திருதராட்டினைப் பார்த்துச் சனத்சுஜாதர்
கூறியது.
3. ‘ஆத்மாவைத் திருடுதல் கொடியதோ?’ என்ன, ‘விறகினை’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
4. ‘இவ்வாத்ம வஸ்து அப்படி உயர்ந்ததோ?’ என்ன, ‘திரவியங்களை’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
“ஆத்மாநம் அஸ்ய ஜகதோ நிர்லேபம் அகுணாமலம்
பிபர்த்தி கௌஸ்துபமணி ஸ்வரூபம் பகவான் ஹரிஃ”
என்றதனைத் திருவுள்ளம்பற்றிச் ‘சொல்லிப் போந்தார்களே அன்றோ’?
என்கிறார். ‘சொல்லிப் போந்தார்கள்’ என்றது, பராசராதிகளை.
விறகு களவு போலே அன்றி ரத்னம் அபஹாரம்
த்ரவ்யம் விலஷணம் இங்கே
உடையவனும் பரமாத்மா –
“இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரசபம் மந:” இது, ஸ்ரீ கீதை, 2 : 60.
வலித்து -மனசை மீட்டு -உறுதி நினைத்து சப்தம்
அழைத்து கொண்டு வா வலித்து வா இழுத்து கொண்டு வா என்பதால்
அவை என்னை மேலிட்டு இந்திரியங்கள் விஸ்வாமித்ரர் -மேகலை –
மண்டோதரி இந்திரியங்கள் தான் ராவணனை வென்றன -கோபம் கொண்டு பழி தீர்த்து கொண்டன –
கண்ண நீர் பெருக -வேற விஷயங்கள் கிடைகாமல் துக்கித்து –
நின் கண் நெருங்க வைத்து
மூட்டி நிரந்தரமாக அனுசந்திக்க வைத்து
திருடன் –
மனசை வைக்க முடிய விலை
கண்ணா நீரை மறைக்க முடிய வில்லை
உன் மேல்
மெய்யனாய் கேட்டேன்
உண்மை
உடம்பு இருப்பதால் கேட்டேன்
சரீர சம்பந்தம் அறுத்து
கண்ணனே -மாசுச சொல்லி சிக்க நிவர்தகன்
அழகிய வடிவை காட்டி மாசுச
வடிவை கண்டால் மற்று ஒன்றினைக் காணாவே
அமுதினைக் கண்ட கண்கள்
அமுதனைக் கண்ட கண்கள்
மற்று ஓன்று அக்ரிணை சப்தம் என்பதால் அதுக்கு சேர அமுது -என்று இருக்க வேண்டுமே
நீல மேனி ஐயோ
அன்றிக்கே
பாசுரங்கள் சொல்லியும் -வன் கள்வனே உத்தேச்ய வஸ்துவை பெறாமல் சொல்கிறார்
மனதை வலித்து -பக்தி பாரவச்யத்தால் இருக்கும் மனசை -வலிமையாக ஆக்கி
சிதிலமாக போன மனசை திண்ணியதாக்கி
கண்ண நீரை மாற்றி
நின் கண் கிட்டியவாறே தரித்து நின்று அனுபவிக்க பண்ணி
சரீரம் போக்கி உனது திருவடிகளில் -க்ரமத்தில் வருவான் என்று ஆறி இராமல்
கண்ணனே -பக்தி யோகம் உபாயம் ஆகாதே சோகித்தால் மாசுச சொல்லி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply