கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேஓர் உடம்பி லிட்டுத்
1திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போரவைத்தாய் புறமே.
பொ-ரை :- கண்ணபிரானாக அவதரித்தவனும், விண்ணோர்கட்குக் கருமாணிக்கம் போன்றவனும், அமுதமயமாயவனுமான உன்னைச் சேர்ந்தும் சேராதவனாக இருக்கின்றேன்; என்னை? எனின், என்னை நடுவே ஓர் உடம்பிலே சேர்த்து, செய்யப்பட்டவைகளான கொடிய பல வினைகளாகிற கயிற்றால் இறுக அழுந்தக் கட்டிப் புண்கள் தோன்றாதவாறு வரிந்து புறத்திலே போர வைத்திட்டாயே என்கிறார்.
வி-கு :- இட்டு அழுந்தக் கட்டி மறைய வரிந்து புறமே வைத்தாய் என்க. வரிந்து – மேல்பூச்சுப்பூசி. போர-மிகவும்.
ஈடு :- ஐந்தாம்பாட்டு. ‘நீர் “மலினம்” என்கிறது எதனை?’ என்ன, 2இன்னதனை என்கிறார்.
விண்ணோர் கருமாணிக்கத்தைக் கண்ணபிரானை – 3“அந்தப் பரமபதத்தில் மேதாவிகளும், துதித்துக்கொண்டிருத்தலையே இயல்பாகவுடையவர்களும், எப்பொழுதும் ஜாக்கிரதையோடு கூடினவர்களாய்க் கொண்டு பிரகாசிக்கிறார்கள்” என்கிறபடியே, நித்தியசூரிகளுக்கு அநுபவிக்கக் கூடியதான வடிவழகை எனக்குக் கொடுப்பதற்காகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனை. அமுதை – இப்படி அவதரித்துத் தன்னுடைய இனிமையை ஆயிற்று இவரை அநுபவிப்பித்தது. நண்ணியும் நண்ணகில்லேன் – பெற்று வைத்தே பெறாதார் கணக்கானேன்.1பிறந்த ஞானலாபத்தை நினைத்து ‘நண்ணியும்’ என்கிறார். சரீர சம்பந்தத்தோடே இருக்கிற இருப்பை நினைத்து ‘நண்ணகில்லேன்’ என்கிறார். நடுவே ஓர் உடம்பில் இட்டு – 2ஆத்மாவுக்குச் சரீரத்தின் சேர்க்கை அநாதியாக இருக்கச் செய்தேயும், அது ஒளபாதிகமாய்த் தோற்றுகையாலே ‘நடுவே ஓர் உடம்பு’ என்கிறார். 2சலகில் கிடந்த முத்துக்கும் பொன்னுக்கும் அழுக்கு ஏறின நாள் அறிவார் இல்லை, பின்பு கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றாநின்றதே அன்றோ? அப்படியே, பகவானை அடைவதனாலே கழியக் காண்கையாலே ‘இது வந்தேறி’ என்று தோற்றுமே அன்றோ? 4இராஜ புத்திரன் வழியிலே போகாநிற்கச் செய்தே வேடர் கையிலே அகப்பட்டுத் தன்னை வேடனாகவே எண்ணுமாறு போலே இருப்பது ஒன்றே அன்றோ, சேதனன் தேகத்திலே அஹம் புத்தி பண்ணி “நான் தேவன்” என்று இருக்கும் இருப்பு?
திண்ணம் அழுந்தக் கட்டி – அவித்தை முதலியவைகளாலே உறுதியாகக் கட்டி. பல செய் வினை வன் கயிற்றால் – தாம் பலவாய்ச் செய்யப்பட்டிருந்துள்ள வினைகளாகிற வலிய கயிறுகளால் உறுதியாகக் கட்டி. புண்ணை மறைய வரிந்து – தோலை மேவிக் 5கைப்பாணி இட்டு மெழுக்கு வாசியிலே மயங்கும்படி பண்ணின இத்தனைஒழிய, 1அகவாய் புறவாய் ஆயிற்றாகில் காக்கை நோக்கப் பணி போருமித்தனையே அன்றோ? என்னை – என்னைக் காப்பாற்றிக் கொள்வதில் அசக்தனாய்ச் சம்பந்தம் இல்லாதவனுமாய் இருக்கிற என்னை. போர வைத்தாய் புறமே – 2ஏகாந்த போகத்துக்காகப் போந்த பிராட்டி அசோகவனத்திலே இருந்தாற்போலே தோன்றாநின்றதாயிற்று, சொரூப ஞானம் பிறந்த பிறகு தேகத்திலே இருக்கிற இருப்பு. புறமே – உன் குணங்கள் நடையாடாத சம்சாரத்திலே வைத்தாய். 3தம்முடைய சொரூபத்தைப் போன்று ‘கர்மங்களும் அவனைக் குறித்தபோது பரதந்திரங்கள்’ என்று இருக்கும் பரமவைதிகர் ஆகையாலே ‘போரவைத்தாய்’ என்று அவன் செய்தானாகச் சொல்லுகிறார்.
என்பினை நரம்பிற்பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயிலாக்கி ஊன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்.–என்பது, சிந். 1577.
போர வைத்தாய் புறமே திண்ணம் அழுந்த கட்டி
புண்ணை மறைத்து –புண்ணார் ஆக்கை -புண்ணாக்கு சப்தம் அசத் அர்த்தம் –
மூட்டை கட்டி -அந்த காலத்தில் -பஞ்ச கச்சம் கட்டுவது போலே சொல்லிக் கொடுத்து -சதாபிஷேக ஸ்வாமிகள்
நடுவே உடம்பை இட்டு –
நன்னிலும் நண் ண கில்லேன்
கண்ண பிரான் கரு மாணிக்கம் அமுதம் விட ஒண்ணாத –
நித்ய சூரிகள் விளித்து கொண்டு ஸ்தோத்ரம் செய்யும் வடிவு அழகை
விண்ணார் கருமாணிகம் -கண் ண பிரானாகி ஆக்கி -அமுதாக்கி என்னை அனுபவிக்க
நண்ணுதல் ஞான பாகம்
நண்ணாதது -பாஹ்ய சம்ச்லேஷம்
அசித் சம்சர்கம் ஆத்மாவுடன் அநாதி -யஸ்ய ஆதி -தெரியாதது இல்லாதது -அநாதி சப்தம்
சரீரம் -நடுவே ஒரு உடம்பு உபாதியால் சம்பந்தம் கர்மம் அடியாக
சாக்கடையில் முத்து மாணிக்கம் அழுக்கு கழிய இருந்த பிரகாசம் வெளி காட்டுமா போலே
பகவத் சமாஸ்ரயணம் -கந்தல் கழிந்தால்
ராஜ புத்திரன் -வேடனாக பிரதிபத்தி பண்ணி -கதை போலே
தேகத்தில் அஹம் புத்தி பண்ணி -இருக்கும் இருப்பு
திண்ணம் -அவித்யதிகளால் திடமாக -அட்டைப்பெட்டி
செய்வினை பாச்ங்கள் -கயிறு பந்திக
புண்ணை மறைய வலிந்து தோலை மேவி -கைப்பானை இட்டு மெருகு ஏற்றி
காஞ்சிபுரம் பொம்மை போலே மெழுகு
படாச்சாரம் -வஸ்த்ரம் கொண்டு
திருமேனி எம்பெருமானார் திரு மேனி கோயில்
தொட்டு பார்க்கலாம் அத்யாபகர் சதாபிஷேகம் ஸ்வாமிகள்
திருமேனியே தப்பாக சொல்வார்கள்
திருமேனி கீழே -பஞ்ச உபநிஷத் -மயமான திரு மேனி
பார்த்தசாரதி திரு மேனியும் இப்படி -அங்கே
ஆழ்வார் திருநகரி குதித்தார் அஞ்ஞானம் -திருவடி சேவை இன்றி இருந்ததாம்
சதாபிஷேக சுவாமி கற்ப கிருகம் கழித்து காட்டி அருளினாராம்
அகவாய் -காக்கை ஓட்ட பணி
மாக்கேழ் மடநல்லாய்! என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை – யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.–என்பது, நாலடியார்.
“மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்கோய் இதனைப் புறமறிப் பராய்”–என்பது, மணிமேக. பளிக்கறை. 113 – 121.
என்னை அசக்தனாய் இருக்கும் என்னை
போர -அசோகா வனத்தில் பிராட்டி வைத்தால் போலே
ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு
வார்த்தா மாலை முதலியாண்டான் வார்த்தை
பிரகிருதி அசோகவனம்
பந்துக்கள் ராஷசிகள்
திரிசடை போலே ஸ்ரீ வைஷ்ணவர்
திருவடி ஆசார்யன்
விரோதிகள் களைத்து ஜீவாத்மாவை கை கொள்கிறான்
புறமே -சம்சாரத்தில்
போர வைத்தே அவன் செய்ததாக சொல்லி
நாமே செய்து கொள்கிறோம் இந்திரியங்கள் ஆக்கையின் வழி சென்று
ஸ்வரூபம் போலே கர்மமும் அவனால் பரதந்த்ரம் மிக்கு பேசுகிறார் –
தெருவிலே இடறி -அம்மாவை குத்துவது போலே -பிரஜை
பிள்ளையை வாங்காது ஒழிந்தால் இவளே தள்ளினாள் என்பரே -போலே
சம்சாரத்தில் சாகரம் அழுந்தி கிடக்க வேடிக்கை பார்த்து இருந்தானால்
கர்மமும் அவன் இட்ட வழக்கு என்று இருக்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply