திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-1-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பொய்யே கைம்மே –உள்ளன மற்றுளவாதல்- சில சொன்னதை விவரியா -நின்று
வாக் மாத்ரத்தாலே உன்னைப் பெற்ற பின்பு உன்னை ஒழிய வேறு ஒன்றை ஆசைப் படேன்-

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

உள்ளன மற்று உளவா
ஹிருதயத்தில் உள்ளன வேறு சில உளவாக -அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்க –
புறமே சில மாயம் சொல்லி
புறப் பூச்சாக சில பொய்களைச் சொல்லி
இத்தாலே கூத்துக்களைச் சொல்ல -என்ற இடத்தைச் சொல்லிற்று
வள்ளல் மணி வண்ணனே
பரம ஔதாரன்
பெரு விளையனான ரத்னம் போலே ஸ்லாக்யமான வடிவை எனக்கு உபகரித்தவனே
என்று என்றே –
வீப்சை -அபுத்யா சொல்லா நிற்கச் செய்தேயும் சஹ்ருதயமாகச் சொல்கிறான் என்று தோற்றும்படியாகப் பல காலும் சொல்லி
உன்னையும் வஞ்சிக்கும் கள்ள மனம்
உள்ளுவார் உள்ளத்து எல்லாம் -உடன் இருந்து அறியும் உன்னையும் -சர்வஜ்ஞ்ஞன்-சர்வ அந்தர்யாமியான நீயும் மெய் என்று கருதும் படி உன்னையும் பகட்டும் க்ருத்ரிம யுக்தமான மனசை

தவிர்ந்தே-
அஹ்ருதயமாக இழிந்தாரையும் மேல் விழும் படி முழுகும் விஷயம் இ றே
உன்னை
மித்ரா பாவேன-வந்தாலும் -நத்யஜேயம் -என்னும் உன்னை
வேஷம் கொண்டு வந்தாரையும் -ப்ராப்தனும் போக்யமுமான உன்னை
உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
ஒரு படி காண வல்லோமே
நிதி எடுத்தாரைப் போலே லபித்து
அசந்நேவ என்று இருந்த நான் உஜ்ஜீவிக்கப் பெற்றேன்
கண்டு கொண்டாலே போதுமா
ந பிபந்தி -அம்ருதம் த்ருஷ்ட்வா த்ருப்த்யந்தி -சாப்பிடாமல் குடிக்காமல் கண்டு கொண்டே -சாந்தோக்யம்
இனி நீர் செய்யப் பார்க்கிறது என்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே
பரமபதத்தை விட்டு ஷீராப்தியிலே -இவ்வேலையிலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாக கொண்டு கண் வளர்ந்து அருளுகிறவனே
இனி
உனக்கு சத்ருசமான பரமபதத்தை விட்டு விசத்ருசமான சம்சாரத்திலே என்னுடைய ரக்ஷண அர்த்தமாகக் கொண்டு கண் வளர்ந்து அருளின பின்பு
உன்னை விட்டு
நான் விட்ட அன்றும் என்னை விட மாட்டாத இருக்கிற உன்னை ஒழிய -முன்னும் பின்னும் பக்க வாட்டிலும் நின்று -அவசர ப்ரதீஷனனாக நீ இருக்க –
என் கொள்வனே
பச்சை கொண்டு -பல வேளையிலே -நிஷ் பலங்களாக –இருக்கும் விஷயங்களைப் பற்றவோ
ஆராதிக்கும் இடத்தில் துரரதரராய் -வருந்தி ஆராதித்தாதிலும் கிடைப்பது ஒன்றும் இல்லாதவர்களைப் பற்றவோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply