மகாயாம் மகரே மாஸே
சக்ராம்ஸம் பார்க்க உத் பவம்
மஹீ சார புரா தீஸம்
பக்தி சாரம் அஹம் பஜே –
தையில் மகம் என்று காசினியீர்
சக்கரத்தாழ்வார் அம்சம்
த்வாபர யுகம் அவதாரம் முதல் ஆழ்வார்களும் இவரும்
பேயாழ்வாரால் திருத்திப் பணி கொள்ளப் பட்டவர்
ஜெகந்நாத பெருமாள்
பார்க்கவி –மஹா லஷ்மி தாயாருக்கு சகோதரர்
திரு மழிசைக்கு நிர்வாஹகர்
உறையில் இடாதவர்
பார்க்கவ முனி -கனகாங்கி கர்ப்பம் -பிண்டமாக
மூங்கில் புதரில் போட்டு தேவ லோகம் போக
மஹா லஷ்மி தாயார் -ஜகந்நாதர் பிரசாதத்தால் கைகால்களை பெற்று அழத்தொடங்க
திருவாளன் -பங்கயச்செல்வி -மூங்கில் கூடை செய்து விற்று -பிரம்பு அறுத்து ஜீவிப்பவர்
வளர்க்க –
பால் குடிக்காமல் வளர -திவ்ய திருமேனி -திருமால் கடாக்ஷம்
பால் கொடுக்க -சேஷம் கொடுத்து -குழந்தை -ஆச்சார்யன் பிரசாதம் கனி கண்ணன் பிறக்க -பிரதான சிஷ்யர் –
சமணம் கற்றோம் சாக்கியம் கற்றோம் –
சிவ வாக்யர் –
வேர் மேல் -உடைந்த பானையில் தண்ணீர் -மாற்றிச் செய்ய -காரணந்து த்யேய
பேயாழ்வார் திருவடி ஆஸ்ரயித்து -திருமழிசை ஆழ்வார் ஆனார்
சிவபிரான் பார்வதி-வலது கால் கட்டை விரல் கண் காட்டி – -பக்தி சாரார் -திரு நாமம்
திருமழிசைப் பிரான் -ஆராவமுத ஆழ்வார்-
—————–
ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்
அவதாரிகை –
தருச்சந்தப் பொழில் –
இதில் திருச்சந்த விருத்தம் செய்து அருளின திரு மழிசைப் பிரான் அவதார ஸ்தலமான
திருமழிசை வளம் பதியும் -ஒரு தேசமே என்று அதில் ஆழம் கால் படும்படி -சொல்லுகிறது –
தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
திருச்சந்த விருத்தம் செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கு மண நாறும்
திருச்சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –
வியாக்யானம் –
தருச்சந்த பொழில் தழுவு தாரணியின் துயர் தீரத்
தரு –கல்பகத் தரு
சந்து -சந்தனம்
சந்தகப் பூ மலர் சோலை இறே
இரண்டு சோலையாலும் சூழப் பட்ட –
தாரணி -பூமி
பொழில் தழுவி இருக்கிற பூமியில் உண்டான மனுஷ்யர் துக்கம் தீர
அவர்கள் பகவத் விஷயத்தை இழந்து இருக்கிற துக்கம் தீர –
அவர்கள் தான்
போக்ய -போக உபகரண -போக ஸ்தானங்களை விரும்பி –
பகவத் விமுகராய்த்து இருப்பது
அதுக்கு மேலே -அறியார் சமணர் அயர்த்தார் பௌத்தர் சிறியார் சிவப்பட்டார் -என்று இறே
அவர்கள் அந்ய சேஷ பூதராய் அனர்த்தப் படுகிறது –
அவற்றை நிவர்ப்பித்து
சத்வ வ்ருத்தர் ஆக்குகைகாக ஆய்த்து –
திருச்சந்த விருத்தம்
என்கிற திவ்ய ப்ரபந்தம் செய்து அருளிற்று –
அதிலே
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்துண்டு -நும் முறுவினைத் துயருள் நீங்கி உய்மினோ -என்றும் –
நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ -என்றும் –
பகவத் பஜநத்தையும் -தேவதாந்தர அஞ்ஞான அசக்திகளையும் –
காணிலும் உருப்பிலார் -69
குந்தம்-70
வண்டுலாவும் -71
போதில் மங்கை காணில் -72
போன்ற பாசுரங்களில் -ஸூவ்யக்தமாக தர்சிப்பித்தும் திருத்தி அருளிற்று –
திருச்சந்த விருத்தம் –
சந்தோ ரூபமான விருத்தம் -என்றபடி –
கலித்துறை -விருத்தம் -வெண்பா -என்றால் போலே சொல்லக் கடவது இறே
செய் திரு மழிசைப் பரன் வருமூர் –
ஏவம் வித பிரபந்த நிர்மாண கரராய் -திருமழிசைக்கு நாதரான ஆழ்வார் அவதரித்த ஊர்
இருக்கும்படி சொல்லுகிறது
செய் திரு மழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ்
ஆகரத்தில் சந்தநா தருக்களாலும் பரிமளிதமாய்
கோங்கு மண நாறும்
கோங்கு என்கிற வர்ஷத்தின் உடைய புஷ்ப பரிமளத்தையும் உடைத்தாய்
எல்லா வற்றாலும் மிக்க பரிமளத்தை உடைத்தது ஆகையாலே
வேரி மாறாத பூ மேல் இருப்பாளாய் –
ஸ்ரீ என்ற திரு நாமத்தை உடையவளான
பெரிய பிராட்டியாருடன் பொருந்தி இருக்கும் திருமழிசை
திருச் சந்ததுடன் மருவு திருமழிசை வளம் பதியே –
இந்த புவியில் இது ஒரு தேசமே
கோங்கு -என்று பரிமளமாகவும்
வளம் -அழகும் சம்பத்தும்
ஆழ்வாராலே ஊரும் உத்தேச்யமாய் இருக்கிறது –
—————————————————————————————
ஸ்ரீ திருக் கச்சி நம்பி அருளிச் செய்த தனியன்
அவதாரிகை –
உலகும் மழிசையும் –
இதில் -திருமழிசை -மஹீஸார ஷேத்ரம் -என்று மஹத்தையை சொல்லுகிறது –
உலகும் மழிசையும் உள் உணர்ந்து தம்மில்
புலவர் புகழ் கோலால் தூக்க -உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது –
வியாக்யானம் –
உலகும் மழிசையும்
லோகங்களையும் விலஷணமான திருமழிசையையும்
உள் உணர்ந்து
மகாத்ம்யங்களை மனசிலே மனனம் பண்ணி
தம்மில் புலவர்
பார்க்கவாதி மகர்ஷிகளானே மகா கவிகள்
புகழ் கோலால் தூக்க –
இவற்றின் புகழை என்னுதல்
புகழ் கோலாலே என்னுதல்
தூக்க
துலைப்படுத்தி நிறுத்த
உலகு தன்னை வைத்தெடுத்த பக்கத்தும்
லோகத்தை வைத்தெடுத்த துலையைக் காட்டிலும்
மா நீர் மழிசையேவைத்தெடுத்த பக்கம் வலிது –
மிக்க ஜல ஸ்ம்ர்த்தியை உடைய மஹீஸார ஷேத்ரத்தை வைத்தெடுத்த துலையே
அதுலமாய் இருந்தது
அகஸ்த்ய துர்வாசாதிகள் இருந்த பக்கம் போலே ஆழ்வார் அவதார-அவதரண -ஹேதுவான தேசமும்
தாழ்ந்து காட்டிற்று இறே
ஜகன் நாதன் இறே அங்கே நித்ய வாஸம் பண்ணுகிறது –
சிந்தயேத் ஸ ஜகந்நாதம் விஷ்ணும் ஜிஷ்ணும் சநாதனம் -என்னக் கடவது இறே
என்று இறே தத் த்யான பரர் இருப்பது -அத்தாலே வைத்தெடுத்த பக்கம் வலிதாய்த்து
தாத்ரா துலிதா லகு மஹீ -என்னக் கடவது இறே
மா நீர் மழிசை -தீர்த்தம் திருமண்ணுண்டான ஸ்தலம்
மழ சாடு கண்டீர் மருந்து -என்னக் கடவது இறே
பக்தியான பாசனமான பக்தி ஸார அவதரணத்துக்கு அநுகுணமாய் இருக்கும் தேசம் என்று
அந்த திவ்ய தேச வைபவம் சொல்லிற்றாய்த்து
துலயாம லவே நாபி ந ஸ்வர்கம் ந புநர்பவம்
பகவத் ஸங்கி ஸங்கஸ்ய மர்த்யாநாம் கிமுதா சிஷ-என்று இறே ததீய வைபவம் இருப்பது
—————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை பிரான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply