விளம்பும் ஆறு சமய மும்,அவை
ஆகியும் மற்றும்தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய
ஆதிப்பி ரான்அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகுஆய
திருக்குரு கூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை
உயக்கொண்டு போகுறிலே.
பொ-ரை : சொல்லப்படுகின்ற ஆறு புறச் சமயங்களும், மற்றுமுள்ள குத்ருஷ்டிகளும் சபையாகத் திரண்டு வந்தாலும், தன் விஷயத்தில் அளவிட்டுக் காண்பதற்கு அரியனாய், இருக்கிற ஆதிப்பிரான் அவன் எழுந்தருளியிருக்கின்ற, வளப்பம் பொருந்திய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்து அழகாய் இருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தை, நீங்கள் உங்களை உய்வித்துக்கொண்டு நடக்கவேண்டியிருந்தீர்களாகில், மனக்கண்ணிலே வையுங்கோள்,’ என்கிறார்.
வி-கு : ‘ஆறு சமயமும் மற்றும் அவை ஆகியும்’ என்க. அவை -சபை. ‘அமரும் திருக்குருகூர்’ என்க. ‘உம்மை உய்யக்கொண்டு போகுறில், அதனை உளம்கொள் ஞானத்து வைம்மின்,’ என்க.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘நீங்கள் உய்வு பெறுவதற்கு அவ்வளவும் செல்ல வேண்டுமோ? அவன் தங்கியிருக்கிற திருநகரியை உங்கள் ஞானத்துக்கு விஷயமாக்க அமையும்,’ என்கிறார்.
விளம்பும் ஆறு சமயமும் – 2சிலவற்றைச் சொல்லா நின்றால், தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லாநிற்பர்களத்தனை போக்கி, பிரமாணத்திற்கு அநுகூலமான தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உத்திசாரமேயாயிருக்கிற புறச்சமயங்கள் ஆறும். புறச்சமயங்கள் ஆறாவன: சாக்கிய உலூக்கிய அக்ஷபாத க்ஷபண கபில பதஞ்சலி மதங்கள். இது பாஷ்யகாரர் அருளிச்செய்தது. மற்றும் அவை ஆகியும் – மற்றும் அவற்றோடு ஒத்த குத்ருஷ்டிகளும். 3புற மதத்தில் உள்ளவர்களும் குத்ருஷ்டிகளும் மோக்ஷ பலனைப் பெறாதவர்கள். அவர்கள் தாமத குணமுடையவர்கள் என்று எண்ணப்படுகின்றார்கள். தன்பால் அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும் – பிரமாணத்திற்கு மாறுபட்ட தர்க்கங்களால் ‘இவ்வளவு’ என்று அளவிட்டு அறிய ஒண்ணாதபடி இருக்கிற உலக காரணன் விரும்பித் தங்கியிருக்கிற; 4தன்னளவில் வந்தால் ‘இல்லை’ என்கைக்கும் ‘இவ்வளவு’ என்று அளவிட அரிதாய் இருக்கும்; 5‘இல்லை’ என்னும் போதும்,
வஸ்துவை ‘இது’ என்று அளவிட வேண்டுமே? அதாவது, ‘இவனுடைய சொரூப ரூப குண விபூதிகள் புறம்பான குத்ருஷ்டிகளால் அசைக்கமுடியாதனவாய் இருக்கும்,’ என்றபடி. 1‘அதற்கு அடி என்?’ என்றால், ‘ஆதிப்பிரான்’ என்கிறார். என்றது, 2‘என்னுடைய தாய் மலடி என்ன ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனை – செல்வத்தையுடைத்தாய்ச் சிரமத்தைப் போக்கக் கூடியதான நீர் நிலங்களாலே சூழப்பட்டு, கண்டார்க்கு வைத்த கண் வாங்க ஒண்ணாதபடி காட்சிக்கு இனியதான திருநகரியை. உளம்கொள் ஞானத்து வைம்மின் – 3ஞானம் உதித்து, புறத்தேயுள்ள இந்திரியங்களாலே புறப்பொருள்களில் செல்வதற்கு முன்னே, மனக்கண்ணுக்குத் திருநகரியை விஷயம் ஆக்குங்கோள். உளம் கொள் ஞானம் – மானச ஞானம். என்றது, 4‘புறத்திலே செல்லாதபடி ஞானத்தை உள் விஷயத்தில் (திருநகரியில்) ஈடுபடும்படியாகச் செய்யப் பாருங்கோள்,’ என்றபடி. உம்மை உய்யக் கொண்டு போகுறிலே – ‘இவனை இருக்கின்றவனாக அறிகிறார்கள்’ என்கிறபடியே, உம்முடைய இருப்பைப் பெற்றுப் போகவேண்டியிருக்கில். 5‘இல்லாதவனாக ஆகிறான்’ என்கிறபடியே, ‘சென்றற்றது’ என்றே இருக்கிறார்
ஆயிற்று இவர். 1‘மஹாத்மநா – தன்னில் தான் வாசி சொல்லுமத்தனை போக்கிப் புறம்பு ஒரு ஒப்புச் சொல்ல ஒண்ணாதபடியான பெருமாளோடே விரோதம் உண்டு; ஆகையாலே, இலங்கையும் இல்லை; இராவணனும் இல்லை; நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறினாற்போலே.
ஜீவனத்துக்கு அவன் வேண்டுமே
மலை ஒன்றுமே தொழ வினை மாயுமே போலே
திரு குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைத்து
விளம்பும் ஆறு சமயம்
வார்த்தை பட்டால் -மட்டுமே பிரமாணங்கள் ஒன்றும் இன்றி
உக்தி ஒன்றாலே
பாஹ்ய சமயங்கள்
சாக்கிய -போல்வன
மற்றும் -குத்ருஷ்டி சங்கர யாதவ போல்வன
‘விளம்பும்’ என்ற விசேஷணத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார்,
‘சிலவற்றை’ என்று தொடங்கி. ‘சிலவற்றைச் சொல்லா நின்றால்’ என்றது,
‘வேதாந்திகள் பிரமாண அநுகூலமாகச் சில தர்க்கங்களைச் சொல்லாநின்றால்’
என்றபடி. சாக்கியமதம் – பௌத்த மதம். உலூக்கியமதம் -சார்வாகமதம்.
அக்ஷபாதமதம் – கௌதம மதம். க்ஷபணமதம் – ஜைநமதம்.
இல்லை என்னும் போதும் இது காட்டி சொல்ல முடியாமல்
ஆதி பிரான் மூல காரணம் அனைவருக்கும்
இல்லை என்பாருக்கும் மூல காரணம்
மே மாதா மலடி சொல்வது போலே இவர்கள் வார்த்தைகள்
அளவு சொல்ல முடியாதபடி
வைத்த கண் வாங்காத படி தர்சநீயமான
மானஸ ஞானத்துக்கும் திரு நகரி யை விஷயமாக்கி
மனஸை வெளி விஷயங்களில் போக விடாமல்
உம்மை உயக் கொண்டு போக இத்தை செய்யும்
அசந்மேவ என்கிறபடி
கீழ் கழிந்த காலம் வீண் தானே
நேயம் அஸ்தி புரி லங்கா -திருவடி வார்த்தை
அவர்கள் சத்தை உண்டு என்றிருக்க, இப்படி ‘இல்லை’ என்று சொன்ன பேர்
உளரோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மஹாத்மநா’ என்று
தொடங்கி. என்றது, தன்னைக் கட்டிக் கொண்டு போகின்ற இராக்கதர்களைப்
பார்த்து, ‘பெருமாளோடு உங்களுக்கு விரோதம் வந்த காரணத்தாலே,
இலங்கையும் இராவணனும் நீங்களும் இல்லை,’ என்று திருவடி கூறியதைத்
தெரிவித்தபடி. இது, ஸ்ரீராமா சுந். 43 : 25. ‘தன்னில் தான் வாசி
சொல்லுமத்தனை போக்கி’ என்றது, ‘அவதார வேடத்தோடே நின்ற
ஸ்ரீராமபிரானாகிய தனக்கு, பரத்துவ ஆகாரமே ஒப்பு என்று சொல்லுமத்தனை
போக்கி, ஒப்பாகச் சொல்லத்தக்க வேறு பொருள் இல்லை,’ என்பதனைத்
தெரிவித்தபடி.
மஹாத்மா -ஒப்பார் மிக்கார் இலயாய மா மாயன்
உம்மை உய்யக் கொண்டு போக திரு குருகூர் திவ்ய தேசத்தை உள்ளத்தில் வையும் கோள் என்கிறார்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply