திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.

    பொ-ரை : ‘இலிங்கபுராணத்தைப் பிரமாணமாகவுடைய நீங்களும் சமணர்களும் பௌத்தர்களும் மேலும் மேலிட்டு வாது செய்கின்ற வைசேடிகர்களான நீங்களும் நீங்கள் வணங்குகின்ற தெய்வங்களும் ஆகி நிற்கின்றவன், செந்நெற்பயிர்கள் மிக ஓங்கி வளர்ந்து கவரியைப் போல வீசுகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எல்லாக் குணங்களோடும் பொலிந்து நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானே ஆவான்; ஆதலால், யான் கூறுகின்றவை சிறிதும் பொய்யில்லை; அவனையே துதிசெய்யுங்கோள்,’ என்கிறார் என்றவாறு.

    வி-கு : ‘இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் ஆகி நின்றவன், நும் தெய்வமும் ஆகி நின்றான்; ‘அவன் யார்’ எனின், ‘பொலிந்து நின்ற பிரான் கண்டீர்’ என்க. நின்றான் – வினையாலணையும் பெயர். ‘பொலிந்து நின்ற பிரான் ஆகி நின்றான்,’ என முடிக்கலுமாம்.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1இலிங்கபுராணம் தொடக்கமான குத்ருஷ்டி ஸ்மிருதிகளையும், வேதத்திற்குப் புறம்பான ஸ்மிருதிகளையும் பிரமாணமாகக் கொண்டு வந்தவர்களை விலக்குகிறார்.

    இலிங்கத்திட்ட புராணத்தீரும் – இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணத்தையுடைய நீங்களும். 2சாத்துவிக

புராணங்களைக்காட்டிலும் இராஜஸமாயும் தாமஸமாயும் உள்ள புராணங்களுக்கு வேற்றுமை இதுவாயிற்று. 1அவற்றை நிச்சயம் பண்ணுதல் அந்த அந்தப் புராணங்களினுடைய தொடக்கத்திலே காணலாய் இருக்கும்; 2‘ஓ பிராமணோத்தமரே! இந்த உலகமானது எதனை ஆத்துமாவாகவுடையது? இந்தச் சராசரங்கள் எங்கிருந்து உண்டாயின? எப்படி எங்கே இலயத்தை அடைந்தன? எங்கு இலயத்தை அடையப் போகின்றன?’ என்று பொதுவிலே வினாவ, 3‘உலகமெல்லாம் விஷ்ணுவின் சமீபத்தினின்றும் உண்டாயின. அந்த விஷ்ணுவினிடத்திலேயே இலயப்படுகின்றன. அந்த விஷ்ணுவே இந்த உலகங்கட்கெல்லாம் வாழ்வையும் சாவையும் கொடுப்பவர், அந்த விஷ்ணுவே அந்தரியாமியாகவும் உலகமே உருவமாயும் காணப்படுகின்றார்,’ என்று கொண்டு 4கோல்விழுக்காட்டாலே விடையாக இருத்தல் அன்றிக்கே.

    5ஒரு பொருளைக் குறித்துச் சொல்லி, ‘அதற்கு உயர்வினைப் பண்ணித் தரவேண்டும்,’ என்று கேட்டவனும்

தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாகிக் கேட்க, சொன்னவனும் தமோ குணத்தால் மறைக்கப்பட்டவனாய்ச் சொல்ல, ஓர் இலிங்க விஷயமாக இடப்பட்ட புராணமாகும் அது. 1‘இளி கண்ணனைப் புண்டரீகாக்ஷனாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும், ‘எருமையை யானையாகக் கவிபாடித் தரவேண்டும்’ என்றும் சொல்ல, அப்படியே, கவி பாடுவாரைப் போலே இருப்பது ஒன்றே அன்றோ, ‘அவர்களுக்கு இல்லாத உயர்வுகளை இட்டுச் சொல்லுமது?’ 2தான் சொல்லப் புக்க பொருளுக்கு உயர்வினைச் சாதிக்க மாட்டாமல், மற்றுள்ளவற்றினுடைய உயர்வினைக் கழிக்க மாட்டாதே இருப்பது ஒன்றாயிற்று அது.

    சமணரும் – சைனர்களும். சாக்கியரும் – பௌத்தர்களும். மற்றும் வலிந்து வாது செய்வீர்களும் – 3மிக உயர்ந்ததான பிரமாணத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று பிரமாணங்களுக்கு அநுகூலமான தர்க்கங்களை ஒழியக் கேவல தர்க்கங்களைக்கொண்டு அர்த்தத்தைச் சாதிக்கப் பார்க்கும் புறச்சமயத்தாரில் எஞ்சியவர்களும். 4‘எவை, வேதத்திற்குப் புறம்பான ஸ்ம்ருதிகள்? யாவை சில, குத்ருஷ்டி ஸ்ம்ருதிகள்? அவை யாவும் மறுமை இம்மைகட்குப் பயனற்றவை; அவை தமோ குணமுடையவைகள்,’ என்கிறபடியே, தமோகுணமுடையராய் இருக்கை எல்லார்க்கும் ஒத்ததே அன்றோ? ஆகையாலே, புறச்சமயத்தாரையும் குத்ருஷ்டிகளையும் ஒரு சேரச்

சொல்லுகிறார். நும் தெய்வமும் ஆகி நின்றான் – 1உங்களோடு நீங்கள் பற்றுகின்ற தேவர்களோடு வேற்றுமை அற ஆத்துமாவாய் நின்றான். என்றது, ‘நீங்கள் அவ்வத்தெய்வங்கட்கு உயர்வுகளைச் சொல்லும் போது பகவானுடைய பரத்துவத்தை அங்கீகரித்துக்கொண்டு நின்று சொல்ல வேண்டும். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அவ்வத்தெய்வங்களினுடைய சொரூபம் நிலைபெறுதல் முதலானவைகள் அவன் அதீனமாய் இருக்கையாலே,’ என்பதனைத் தெரிவித்தபடி.

    ‘இனித்தான் மதங்கள்தோறும், 2‘முற்றறிவினன், ‘ஈசுவரன்’ என்றாற்போலே ஒவ்வொரு தெய்வமும் கொள்ளக் கூடியதாய் இருக்குமே அன்றோ? ‘அவ்வத் தெய்வங்களுடைய சொரூபம், நிலைபேறு முதலானவைகள் அவன் அதீனம்,’ என்ற இது, சுபக்கத்தாலே சொல்லுகிறதோ, பரபக்கத்தாலே சொல்லுகிறதோ?’ என்னில், ‘இரண்டும் ஒழியப் பிரமாணங்களின் போக்கினாலே சொல்லுகிறது. ‘எங்ஙனே?’ என்னில், 3ஒரு தேவன் பக்கலிலே மக்கள் செயலுக்கு அப்பாற்பட்டதாய் இருப்பதொரு செயலைக் கண்டு, ‘இதற்கு அடி என்?’ என்ன, 4‘அளவிடற்கு அரிய ஒளியையுடையவனும் பூஜிக்கத் தக்கவனுமான சிவனுக்கு விஷ்ணு அந்தராத்துமாவாய் இருக்கின்றார்.’ என்கிறபடியே, சர்வேசுவரன் அந்தராத்துமாவாய் நிற்கையாலே என்றதே அன்றோ?சர்வேசுவரன் தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று, சிவன், அதர்வ சிரஸ்ஸிலே நின்று, 2தன்படிகளைச் சொல்லி, ‘அவன் தானே இங்ஙனம் சொல்லுகைக்கு அடி என்?’ என்று ஐயங்கொண்டு, 3‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்’ என்கிறபடியே, ‘பரமாத்தும பிரவேசத்தாலே சொன்னேன்,’ என்றானே. 4‘என்னிடத்திலிருந்து எல்லா உலகங்களும் உண்டாகின்றன; அநாதியான என்னிடத்தில் எல்லாம் இலயம் அடைகின்றன. யானே எல்லாப் பொருள்களுமாய் இருக்கிறேன்; யானே அழிவில்லாதவனும் முடிவில்லாதவனும் ஆகிறேன்; பரமாத்துமாவை ஆத்துமாவாகப் பெற்றுள்ளேன்,’ என்றான் பிரஹ்லாதாழ்வான். 5பிரஹ்லாதாழ்வான் பக்கல் பரத்துவம்

உண்டாமன்று ஆயிற்று, சிவன் பக்கல் பரத்துவம் உள்ளது.

    மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூரதனுள் – செந்நெற்பயிர்கள் கதிர்களின் கனத்தாலே அவ்வருகுக்கு இவ்வருகு அசைகிற போது சாமரை வீசினாற்போலே ஆயிற்று இருப்பது. என்றது, ‘இப்படி எல்லாப் பொருள்கட்கும் அந்தராத்துமாவாய் இருக்கிற சர்வேசுவரன் ‘தூரத்தில் உள்ளான்’ என்ற கண்ணழிவும் இல்லாதபடி திருநகரியிலே வந்து அண்மையில் இருப்பவன் ஆனான்; எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடாய் இருக்கிற அவன் இங்கே வந்து நிற்கையாலே, அறிவுடைப்பொருள் அறிவில்லாப்பொருள் என்ற வேறுபாடு இல்லாமல், 1‘நீ வனத்தில் வசிப்பதற்காகவே படைக்கப்பட்டாய்,’ என்று சொல்லப்பட்ட இளைய பெருமாளைப் போன்று அநுகூலமான தொழில்களைச் செய்கிறபடியைத் தெரிவித்தவாறு.

    பொலிந்து நின்ற பிரான் கண்டீர் – பரமபதத்தை விட்டு இம்மக்கள் நடுவே வந்து புகுந்த இடத்து அவர்கள் படுகின்ற கிலேசத்தைத் தானும் ஒக்கப்படுகை அன்றிக்கே, இவ்வருகே போதரப் போதரச் சொரூப ரூப குண விபூதிகள் மேன்மேலென விஞ்சி வாராநின்றன ஆயின. அன்றிக்கே, ‘சொன்னார் சொன்னவற்றுக்கும் எல்லாம் அவ்வருகாயிருக்கும்,’ என்னுதல். ஒன்றும் பொய் இல்லை – 2மற்றைத் தேவர்கட்குச் சொல்லுகிற உயர்வுகள் ஒன்று ஒழியாமல் பொய்யாய் இருக்குமாறு போலே, பகவான் சம்பந்தமாகச் சொல்லுமவற்றில் ஒன்றும் பொய்யில்லை. 3அவ்வத்தேவர்கட்கு இயல்பிலே உயர்வு இல்லாமையாலேமெய் ஒன்றும் இல்லை; பகவானுடைய உயர்வுக்கு எல்லை இல்லாமையாலே, பொய் சொல்லுகைக்கு இடம் இல்லை. போற்றுமினே – 1நீங்கள் விரும்பாதிருக்க, நானே இப்படிச் சொல்லுகிறது, எனக்கு உங்கள் பக்கல் உண்டான ‘அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே,’ என்கிறபடியே, மிக்க அருளாலே அன்றோ? அவ்வருளின் காரியம் பிறக்க வேண்டுமே. 2‘கிரமத்திலே செய்கிறோம்’ என்று ஆறியிராமல், சடக்கென அவன் திருவடிகளிலே அடைவதற்குப் பாருங்கோள்.

லிங்க புராணம்
குத்ருஷ்டி ஸ்மரதி
பாஹ்ய ஸ்மரதி
கண்டிக்கிறார் இதில்

இலிங்கத்து இட்ட புராணத்தீர்’ என்று விசேடிக்கையாலே, இராஜஸ தாமச
புராணங்களினுடைய பக்ஷபாதித்துவமும், சாத்துவிகபுராணங்களினுடைய
அபக்ஷபாதித்துவமும் தோற்றுகிறது என்கிறார். ‘சாத்துவிக புராணங்களை’
என்று தொடங்கி. ‘வேற்றுமை இதுவாயிற்று’ என்றது, ‘இலிங்க விஷயமாகக்
கற்பித்துச் சொன்னது ஆகையாலே, நிகர்ஷமே வேற்றுமை’ என்றபடி.
நிகர்ஷம் – தாழ்வு.

குத்ருஷ்டி சைவ உப லஷணம்
பாஹ்ய ஜைன பௌதர் உப லஷணம்
பொலிந்து நின்ற பிரான் உத்சவருக்கு மங்களா சாசனம்
இட்ட புராணம் -இலிங்கத்தை குறித்து எழுதின புராணம் -ஆண்ட புழுகு ஆகாச புழுகு
ஸ்ரீ விஷ்ணு புராணம் பொதுவாக கேள்வியில் தொடங்கி

தொடக்கத்திலே காணலாயிருக்கும் பிரகாரத்தை அருளிச்செய்கிறார், ‘ஓ
பிராமணோத்தமரே!’ என்று தொடங்கி.

  ‘யந்மயஞ்ச ஜகத் பிரஹ்மன் யதஸ்சை தச் சராசரம்
லீநம் ஆஸீத் யதா யத்ர லயமேஷ்யதி யத்ரச’

  என்பது, ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 1 : 6.

3. ‘விஷ்ணோ: ஸகாஸாத் உத்பூதம் ஜகத் தத்ரைவச ஸ்திதம்
ஸ்திதிஸம்யம கர்த்தாஸௌ ஜகதோஸ்ய ஜகத்சஸ:’

  என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 1 : 32.

ஒரு பொருளை’ என்றது, சிவலிங்கத்தை.

  ‘தஸ்மாத் பவந்தம் பிருச்சாம : சூதபௌராணி காத்யது
புராண சம்ஹிதாம் புண்யாம் லிங்க மகாத்மிய சம்யுதாம்’

  என்ற சுலோகம் இங்கு அநுசந்தேயம். ‘இலிங்க மகாத்மியத்தோடு கூடிய ஒரு
புராண சம்ஹிதையை இப்பொழுது செய்து தரும்படி, சூதபௌராணிகர்களாகிய
நாங்கள் உங்களைக் கேட்கிறோம்,’ என்பது அச்சுலோகத்தின்
பிண்டப்பொருள்.

இவற்றின் உடைய நிஷ்கர்ஷம் உபக்ரமத்திலே காணலாம்படி இருக்குமே –
வ்யக்தியை உத்தேசித்து -அதுக்கு தமோ குணம் மிக்கு கேட்டு அருளி –
கூத்து ஆட -இராமாயண வேஷம் கொண்டு கிருஷ்ண வ்ருத்தாந்தம் கேட்டு நடிப்பது போலே
இட்ட புராணம் –
ஒன்றைக் கண்ணணனை புண்டரீகாட்ஷன் கவி பாட சொல்லி
எருமையை யானையாக கவி பாட சொல்லி

ஏத்தி வைத்து கவி பாட -இருக்கும் புராணங்கள்
சொல்லப்  புக்க வஸ்துவுக்கு உத்கர்ஷம் ஏற்க முடியாத
சமணர் சாக்கியர்
கேவல தர்க்கம் -வேதத்துக்கு புறம்பாகவும் கோணலாகவும் அர்த்தம்
சங்கர பாஸ்கர யாதவ –
சாக்கிய  உலுக்கிய –
மான் தாகம் -கானல் நீர் கண்டு ஏமாறி -பாஹ்ய மதம்
நீர் உள்ள இடம் கண்ட மான் முதலை சுறா உள்ள துறையில் இறங்கி -குத்ருஷ்டிகள்
ஒக்க சொல்லுகிறார் இருவரையும் –
உங்களோடு நீங்கள் ஆஸ்ர்யிக்கும் ஆத்மாவாக இருப்பவன் அவனே
அந்தராத்மாவாக இருப்பதால் மேன்மை அவனது ஆதீனம் என்றால் ஒத்துக் கொள்வேன்
ஸ்வ பஷமா பர பஷமா
இரண்டும் இல்லை வேத பஷம் என்கிறார் பிரமாணம் உண்டே
ஒரு தேவதை ருத்ரன் இடம் அதி மானுஷ்ய முப்புரம் எரித்த கார்யம்
அவனே விஷ்ணு ஆத்மா -அவி -தேஜச்த அபரிமித தேஜஸ் உடன் -விஷ்ணு ஆத்மாவாக
இருப்பதால் அவனே சொல்லி இருக்க –

‘விஷ்ணுராத்மா பகவதோ பவஸ்ய அமித தேஜஸ:
தஸ்மாத் தநுர்ஜ்யா ஸம்ஸ்பர்ஸம் ஸ விஷேஹே மஹேஸ்வர:’

  என்பது மஹாபாரதம், கர்ணபர்வம்.

                      ‘பணிவில்சீர்ச்
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித்
தொல்புகழ் தந்தாரும் தாம்.’

  என்பது பரிபாடல்.

‘சர்வேசுவரன், தன் சர்வாத்தும பாவத்தைச் சொல்லுமாறு போன்று’ என்றது,
ஸ்ரீ கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் 20 முதல் 42 முடிய உள்ள
சுலோகங்களைத் திருவுள்ளம் பற்றி.

2. ‘தன் படிகளைச் சொல்லி’ என்றது, ‘அஹம் ஏக: பிரதமம் ஆஸம் வர்த்தாமிச
பவிஷ்யாமிச நாந்ய: கச்சின் மத்தோ வியதிரிக்த இதி’ (அதர்வசிகை) என்ற
வாக்கியங்களைத் திருவுள்ளம் பற்றி.

3. ‘ஸ: அந்தராத் அந்தரம் பிராவிசத்,’ இது, அதர்வசிகை.

  ‘ஸ :- அந்தச் சிவபிரான், அந்தராத் – தேக இந்திரியங்களைக் காட்டிலும்
உள்ளே இருக்கிற ஜீவாத்துமாவாகிற தன்னினின்றும். அந்தரம் –
பரமாத்துமாவை, பிராவிசத் – அடைந்தார். என்றது, ‘சிவபிரான் பரமாத்தும
பாவத்தை அடைந்தார்’ என்பது கருத்து. ‘அன்றிக்கே, ஸ :- அந்தப்
பரமாத்துமா, அந்தராத் – தேக இந்திரியங்களைக்காட்டிலும் உள்ளே
இருக்கின்ற ஜீவாத்துமாவின், அந்தரம் – உள்ளே, பிராவிசத் –
பிரவேசித்தார்,’ என்னலுமாம். என்றது ‘பரமாத்துமா சிவபிரான் உள்ளே
பிரவேசித்தார்; ஆதலால், பரமாத்தும பாவத்தைச் சிவன் அடைந்தார்,’
என்பது கருத்து.

4. ‘பரமாத்தும பிரவேசத்தாலே இப்படிச் சொன்ன பேர் உளரோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘என்னிடத்திலிருந்து’ என்று தொடங்கி.

  ‘மத்தஸ் ஸர்வம் அஹம் மபிசர்வம் சநாதநே
அஹமேவ அவ்யய: அநந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:’

  என்பது, ஸ்ரீ விஷ்ணு புராணம், 1. 19 : 95.

  ‘கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்’

  என்ற திருவாய்மொழி இங்கு அநுசந்தேயம்.

5. ‘பிரஹ்லாதாழ்வானைத் திருஷ்டாந்தமாகச் சொன்னதற்குக் கருத்து என்?’
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பிரஹ்லாதாழ்வான் பக்கல்’ என்று
தொடங்கி.

எல்லாம் நான் தான் எனக்கு உள்ளே உள்ள பகவான் பரவி இருப்பதால்
என்னை சரீரமாக கொண்ட பரமாத்மா எங்கும் உளன் பிரகலாதன்
அது போலே ருத்ரனும் எல்லாம் நான் என்கிறான் –
மலிந்து செந்நெல் கவரி வீசும் –
அசந்நிகிதன் -கண் அழிவு இல்லாதபடி திரு நகரியில் எழுந்து அருளி
சேதன அசேதன விபாகம் இன்றி அனைவரும் அனுகூல வ்ர்த்தி செய்ய
செந்நெல் பயிர் களும் சாமரம் வீச
பொலிந்து நின்ற பிரான்
கிலேசம் தானும் ஒக்க பட்டு -இன்றிக்கே
இவ்வருகில் பொலிந்து பிரகாசமாக புகர் மிக்கு
மேன்மை விஞ்சி
பெருமை மிகுந்து
ஒன்றும் பொய் இல்லை இவனை சொல்லும் பொழுது
மற்றவர்களைப் போலே இல்லை
அங்கு மெய் ஒம்ன்றும் இல்லை
இங்கே பொய் ஒன்றும் இல்லை
போற்றுமினே உங்கள் பக்கல் உள்ள அனுக்ரக காரணத்தால் உபதேசிக்கிறேன்
கேட்க்காமல் இருக்க செய்தேயும் செய்கிறேன்
க்ரமத்தில் செய்கிறோம் ஆறி இராமல் சடக்கென ஆஸ்ரயிக்க வாரும் கோள் என்கிறார் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading