திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன்மோக் கத்துக் கண்டுகொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்துஅழ காய திருக்குரு கூர்அதனுள்
ஈசன் பால்ஓர் அவம்பறைதல் என்னாவது இலிங்கி யர்க்கே?

    பொ-ரை : ‘பேசப்படுகின்ற சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் மற்றைத் தேவர்கட்கும் தலைவன் அவனேயாவன்; இதனைக் கபாலம் விடுபட்ட சரிதையாலே கண்டுகொள்ளுங்கோள்; ஒளி பொருந்திய பெரிய மதில்கள் சூழ்ந்து அழகாய் இருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரன் விஷயத்தில் பயனில்லாத வார்த்தைகளை ஏற்றிப் பேசுதல் அநுமானத்தைப் பிரமாணமாக உடையவர்கட்கு என்ன பயனைத் தருவதாம்?’ என்கிறார்.

    வி-கு : கபாலம் – பிரமனது மண்டை ஓடு. மோக்ஷம் – விடுபடுதல். தேசம் – ஒளி. அவம் – பயன் இன்மை. ‘இலிங்கியர்க்கு என்னாவது?’ என்க. இலிங்கியர் – அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்; அவர் ஆவார், பாசுபத நையாயிக வைசேடிகர்.

    ஈடு : நாலாம் பாட்டு. 1வியோமாதீத நையாயிக வைசேடிகர்கள் முதலானவர்கள் வந்து கிட்டினவர்களாய், 2‘உலகம் உறுப்புகளோடு கூடியிருக்கையால் காரிய ரூபமாய்இராநின்றது; 1ஆகையாலே, இதற்கு ஒரு கருத்தாவேண்டும்; 2இந்த உலகந்தான் விசித்திரமான அமைப்பை உடைத்தாய் இருக்கையாலே இதற்குத் தக்க ‘உபாதாந உபகரண சம்பிரதாந பிரயோஜன அபிஜ்ஞ கர்த்தா’ – உபாதானமும் உபகரணமும் சம்பிரதாநமும் பிரயோஜனமும் அறிகைக்குத் தகுதியான விசித்திரமான ஞான சத்தி முதலியவைகளையுடையனாய் இருப்பான் ஒருவன் கர்த்தாவாக வேண்டும்,’ என்கிறபடியே, இங்ஙனே அநுமானத்தாலே ஒருவனைக் கற்பித்து, 3வேதத்தை ஆப்தவசனமாக்கி இதற்குத் துணை செய்வதாகக் கொண்டு, அநுமானப் பிராதான்யத்தாலே ஈசுவரனைச் சாதித்து, அவனாகிறான், 4‘ஈசன், ஈசானன்’ என்று இங்ஙனே வேதத்திலே பிரசித்தமாகப் பெயர்கள் உண்டாயிரா நின்றன. இந்தப் பெயர்களாலே அவற்றால் சொல்லப்படுகிற அவனே ஈசுவரன் ஆகிறான்’ என்று அநுமானத்தாலும் சமாக்யைகளாலும் ஆகப் பகவானுக்கு வேறுபட்டவன் ஒருவனுக்கு உயர்வினைச் சாதித்தார்கள். அவர்களைப்

பார்த்து, ‘நீங்கள் சொல்லுகிற 1அநுமானம் சுருதியின் முன்பு நேர் நில்லாது; இலிங்கத்தின் முன்பு சமாக்யை நேர் நில்லாது,’ என்று சுருதி இலிங்கங்களாலே அநுமானத்தையும் சமாக்யையும் தள்ளிப் பகவானுடைய பரத்துவத்தைச் சாதிக்கிறார்.

    2‘அது செய்கிற வழிதான் என்?’ என்னில். 3‘வேதத்தின் முதலிலும் வேதத்தின் முடிவிலும் சொல்லப்படுகிற ஸ்வரமாகிறது பிரணவம்; உலகத்திலுள்ள எல்லாச் சொற்களும் அதிலே இலயம் அடைகின்றன; அந்தப் பிரணவந்தான் இயல்பிலே அமைந்த அகாரத்திலே இலயம் அடைகின்றது; அந்த அகாரத்துக்குப் பொருளாய் இருப்பதனாலே பரனாய் இருக்கிறான் யாவன் ஒருவன்? அவன் மஹேஸ்வரன்

என்று கூறுகின்ற சுருதியாலும், 1‘ஈசன், ஈசானன்’ என்கிற பெயர்களால் தோற்றுகிறவர்களும் தலையறுப்புண்பாரும் தலையறுத்துப் பாவமுடையராய் நிற்பாருமாய் இராநின்றார்கள்; இவன் அவர்களுக்குத் துக்கத்தைப் போக்குமவனாய் இராநின்றான்; ஆனால், ‘அவர்களைப் ‘பரன்’ என்னவோ, இவனைப் ‘பரன்’ என்னவோ?’ என்ற இலிங்கத்தாலுமாக அநுமானத்தையும் சமாக்யையையும் தள்ளிப் பகவானுடைய பரத்துவத்தை நிலையிடுகிறார்.

    ஆக, இப்படிகளாலே, ‘எல்லா உபநிடதங்களாலும் பிரசித்தமாகச் சொல்லப்படுகின்றவனான நாராயணனே பரம்பொருள்’ என்று அறுதியிட்டு, 2காலாத்யயாபதிஷ்டமாகிற தூஷணத்தாலே அவர்களை மறுக்கிறார்.

    பேச நின்ற சிவனுக்கும் – 3‘நீர் சுருதி சொன்னீராகில் நாங்களும் ஒரு சுருதி சொல்லுகிறோம்,’ என்று ‘அநந்யபரமான நாராயண அநுவாக சித்தன்’ என்று  நான் சொன்னால், அதற்கு மாறாக, புறம்பே உபயோகிக்கப்பட்டதாய், கர்மவிதி சேஷமாயிருப்பன சில புனைந்துரைகளாலும் தாமச புராணங்களாலும் சொல்லலாம்படி முட்டுப்

பொறுத்து நின்ற சிவனுக்கும். அன்றிக்கே, ‘நீங்கள் ‘பரன்’ என்று பேசும்படி நின்ற சிவனுக்கும்’ என்னவுமாம். ‘சொற்களின் பொருட்டு முட்டுப் பொறாது; பேசுகைக்குப் பற்றுக்கோடு மாத்திரமே உள்ளது’ என்பார், ‘நின்ற’ என்கிறார். 1மற்றையோரை ‘ஈசுவரர்கள்’ என்னாதே இவனைச் சொல்லலாம்படி இருக்கிறது ஓர் ஏற்றம் உண்டே அன்றோ இவனுக்கு?

    பிரமன் தனக்கும் – அவனுக்கும் தமப்பனான பிரமனுக்கும். 2‘பிரமனுக்கு ஜேஷ்டபுத்திரனாகிச் சிறப்பை அடைந்த’ என்றும், ‘பிரமனுக்குப் புத்திரனாகச் சிவன் தோன்றினான்’ என்றும் சொல்லப்படுதல் காண்க. 3‘மஹாத்துமாவான  சிவன் சர்வமேதம் என்னும் யாகத்தில் ஆத்துமாவை ஓமம் செய்து தேவ தேவனாக ஆனார்,’ என்கிறபடியே, சிவனுடைய ஈசுவரத்துவம் பகவானுடைய திருவருளாலே வந்தது. பிறர்க்கும் – 4இவர்தம் திருவுள்ளத்தால் அவர்களோடு இவர்களோடு வாசி அற்று

இருக்கிறபடி. அவர்கள் தங்கள் தங்கள் நினைவாலும் அப்படியே அன்றோ?’ 1பிரமன் சிவனை நோக்கி, ‘உனக்கும் எனக்கும் அந்த விஷ்ணு அந்தரியாமியாய் இருக்கிறார்; மற்றும் எவர்கள் சரீரம் படைத்தவர்கள் என்று பெயர் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாருக்கும் அந்த விஷ்ணுவானவர் சாக்ஷியாய் இருக்கிறார்,’ என்றான். நாயகன் அவனே – 2இக்காரியத்திற்குத் தகுதியான காரணத்தைக் கற்பிக்கிலும் அவனையே கொள்ள வேண்டும். சுருதிப் பிரசித்தியை நினைத்து ‘அவனே’ என்கிறார். 3அநந்ய பரமான நாராயண அநுவாகப் பிரசித்தியையும், ‘ய: பரஸ்ஸ மஹேஸ்ர:’ என்கிற அகரத்தின் பொருளாய் உள்ள பிரசித்தியையும் நினைக்கிறார்.

    4‘இவனையும் ஒக்கச் சொல்லாநிற்க ‘அவனே’ என்பான் என்?’ என்னில், ‘கபால நன்மோக்கத்துக் கண்டு கொண்மின்’ என்று 5கையோடே காட்டிக்கொடுக்கிறார். நீங்கள் இப்படிச் சொன்னால் மறுமாற்றம் சொல்லுகைக்கு இது ஒன்று உண்டாகப் பெற்றோமே!’ 6‘தத்ர நாராயண:

ஸ்ரீமாந் – ‘தாம் தாம் செய்த கர்மத்தின் பலத்தைத் தாம் தாம் அனுபவிக்கிறார்களாகில், நாம் என்?’ என்றிருக்கும் ஈசுவர சுவாதந்தரியம் தலை தூக்காதபடி ‘குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்,’ என்பாரும் அருகே உண்டு என்கிறான். ஸூஸ்ரோணி – உன் வடிவழகாலே வந்த சௌபாக்கியம், நான் சர்வேசுவரன் பக்கலிலே சென்ற அளவிலே உதவிற்றுக்காண். ஸ்வப்ந லப்தம் – அனுபவம் செல்லா நிற்கச் செய்தே விழித்துப் பார்க்குங்காட்டில் இல்லையாய் இருந்தது; ஆகையாலே, ‘நன்மோக்கம்’ என்கிறது. 1‘உங்களுக்கு இப்போது மறுமாற்றம் சொல்லலாம்படியாக இது ஒன்று உண்டாயிற்று’ என்கிறாராதல்; ஸ்வப்நலப்த தநம் யதா – ‘கனவில் கிடைத்த தனம் போலே போன வழி தெரியாமலே போயிற்று,’ என்கிறாராதல்.

    நீங்கள் ஈசுவரர்களாகச் சந்தேகப்படுவதற்குரியவர்கள் இருவரும் நின்ற நிலை கண்டீர்களே! ஒருவன் தலை கெட்டு நின்றான்; ஒருவன் ஓடு கொண்டு பிராயஸ்சித்தம் செய்ய வேண்டியவனாய் நின்றான். ஓட்டை ஓடத்தோடு ஒழுகல் ஓடமாய் உங்கள் குறை தீரப் பற்றுகிற நீங்கள் உங்களிலும் பெருங்குறைவாளரையோ பற்றுவது! ‘பாவமுடையவனாய்ப் பிச்சை புக்குத் திரிந்தான்,’ என்று நீங்களே சொல்லி வைத்து, அவனுக்கே பரத்துவத்தைச் சொல்லவோ?’ 2ஒருவனுடைய ஈசுவரத்துவம் அவன்

தலையோடே போயிற்று. மற்றவனுடைய ஈசுவரத்துவம் அவன் கையோடே காட்டிக்கொடுக்கிறார்; கண்டுகொண்மின் – ‘முன்னே நின்று பிதற்றாமல், உந்தம் ஆகமங்களிலே நீங்கள் எழுதியிட்டு வைத்த கிரந்தங்களைப் பார்த்துக் கொள்ள மாட்டீர்களோ?’ என்கிறார்.

    தேச மா மதிள் சூழ்ந்து அழகாய – பகைவர்களுக்குக் கிட்டுதற்கும் முடியாத ஒளியையுடைத்தாய், அரணாகப் போரும்படியான மதிளையுடைத்தாய், காட்சிக்கு இனியதாய் இருக்கிற. திருக்குருகூரதனுள் ஈசன்பால் – விட்டுப் பிரியாத தன்மையை உடையவனாகையாலே, 1சௌலப்யத்திலே அந்த மேன்மை குலையாதிருக்கிற ‘ய : பரஸ்ஸமஹேஸ்வர:’ என்கிற சர்வேசுவரன் பக்கலிலே. 2மேலே நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி வைத்து, அகாரத்தின் பொருளாய்ப் பரனானவனையே மஹேஸ்வரன் என்கையாலே, மஹேஸ்வரன் என்ற சொல்லால் சொல்லப்படுகின்ற பொருளானவன் நாராயணனே என்பது சுருதியாலே அறுதியிடப்பட்டிருக்கையாலே இந்தச் சுருதியாலே உன்னுடைய அநுமானம் தள்ளப்பட்ட விஷயமாகும். ‘கண்டுகொண்மின்’ என்கிற சொற்பொருள்களின் ஆற்றலோடு (லிங்கம்) முரண்பட்ட சமாக்யை நேர் நில்லாது; ஆகையாலே ‘இவனே பரன்,’ என்கிறார்.

    ஓர் அவம் பறைதல் – மற்றுள்ள க்ஷேத்ரஜ்ஞரோடு ஒக்க ஸ்ரீமந் நாராயணனுக்கு ஈசுவரத் தன்மை இல்லை என்பதற்குச் சாதகமாக ஏதேனும் போலி வார்த்தைகளைச் சொல்லுமது. அவற்றைத் தம் வாயால் சொல்ல மாட்டாமையாலே, ‘அவம்’ என்கிறார். தங்கள் கூட்டத்தில்மறைவாகச் சொல்லுமது ஒழிய எல்லாரும் அறியச் சொல்லுதல் இல்லையாதலின், ‘பறைதல்’ என்கிறார். 2மஹாபலி, ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான் பக்கலிலே வந்து, ‘ராஜ்யமடைய ஒளி மழுங்கி வாராநின்றது; என் பலமும் குறைந்து வாராநின்றது; இதற்கு அடி என்?’ என்ன, ‘நீ சர்வேசுவரன் பக்கல் பண்ணின அபராதத்தாலேகாண்,’ என்ன, ‘இந்த விஷ்ணு எவன்?’ என்பது போன்று விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றை அவன் பேச, ‘எனது தலையை அறுப்பதைக்காட்டிலும் பெரிது இந்த வார்த்தை’ என்கிறபடியே, என் தலையை அறுத்து என் கையிலே தந்தாயாகில் ‘என் பேரன் செய்த உபகாரம்’ என்று இருப்பேன் யான்; ‘என் முன்பே பகவானை நிந்தை செய்தாய், நீ இராஜ்யப் பிரஷ்டன் ஆவாய்’ என்று சபித்து விட்டான்; 3இதனை இப்படியே பட்டர் அருளிச்செய்தவாறே, ‘பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கிற இவன் ஆத்துமாவுக்குக் குறைவு வருவது ஒன்றனைச் சபியாமல், ‘இராச்சியத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’ என்று சபிப்பான் என்?’ என்று கேட்க, ‘நாயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகையே அன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையால், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே அன்றோ?’ என்று அருளிச்செய்தார்.

    இலிங்கியர்க்கு என் ஆவது – அநுமானத்தைப் பிரமாணமாகக் கொண்டவர்க்கு என்ன பிரயோஜனம் உண்டு? என்றது, ‘அந்தத் தேவிற்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; அத்தேவினைப் பற்றியதற்கு ஒரு பலம்பெற்றிகோள் அன்று; இதனால், உங்களுக்கு ஓர் உயர்வு பெற்றிகோள் அன்று; என்றிய பட்டிகோள்’ என்கிறார் என்றபடி.

நான்காம் பாசுரம்
சைவர் யோகாதீதர் -சதாசிவ பரமம்
நையாயிகம்
வைசேஷிகம்
அவயவம் உடன் கூடி இருப்பது கார்யம் குணம் கார்யம்
மண் கார்யம் இல்லை அவயவம் இல்லை என்பதால்
காரயமாக ஆக்கினவன் ஒருவன் இருக்க வேண்டுமே
ஜகத் -அவயவம் உடன் இருப்பதால் -கர்த்தா இருக்க வேண்டுமே
அனுமானம் வைத்து நிலை நாட்டுபவன்
அல்ப சக்திகனாக நிர்ணயிப்பார்

நாயகன் அவனே,’ என்று சுருதிப் பிரசித்தியையும், ‘கபால நன்மோக்கத்துக்
கண்டுகொண்மின்’ என்று அர்த்த சாமர்த்திய ரூபலிங்கத்தையும்
அருளிச்செய்கிறார், ‘வியோமாதீத’ என்று தொடங்கி. ‘வியோமாதீதர்’ என்பது.
பாசுபத மதத்தினராய சைவர்களைச் சொல்லுகிறது. வியோம சப்தவாச்சியனான
சர்வேசுவரனைக்காட்டிலும் மேம்பட்டதொரு பொருள் உண்டு என்று
சொல்லுகின்றவர்கள் ஆகையாலே, இவர்களே ‘வியோமாதீதர்’ என்கிறார்.
வியோமம் – ஆகாசம்.

      இவர்கள் ‘ஈசன், ஈசானன்’ என்கிற பெயர்களாலே சிவபரத்துவத்தைச்
சாதிப்பவர்கள். நையாயிக வைசேடிகர்கள் அநுமானத்தாலே சிவனுக்குக்
காரணத்துவத்தைச் சாதிப்பார்கள். ஆக, வியோமாதீதர்க்குப் சமாக்யை
பிரதாநம். நையாயிக வைசேடிகர்கள், தார்க்கிகரில் அவாந்த்ரபேதம்.

2. இலிங்கியரை ஆநுமாநிகர் என்றும், சமாக்யைப் பிரதாநர் என்றும் இரண்டு
வகையாகப் பிரித்து, இவர்களில் சமாக்யைப் பிரதாநராகிறார், ‘ஆகாச சப்த
வாச்சியனான விஷ்ணுவுக்குப் புறம்பே உருத்திர தத்துவம் உண்டு’ என்று
சொல்லுகிற பாசுபதர் என்றும், ‘அநுமானப் பிரதாநராகிறார், நையாயிக
வைசேடிகர்கள்’ என்றும் பிரதிஜ்ஞை செய்து, இவர்கள் இருவரும் அநுமான
சமாக்யையாலே உருத்திர காரணத்துவத்தைச் சாதிக்கும் பிரகாரத்தைக்
காட்டுகிறார், ‘உலகம்’ என்று தொடங்கி. ‘எது எது அவயவத்தோடு கூடியது?’
அது அது காரியம்:  குடத்தைப் போல’ என்கிறபடியே, காரிய ரூபம் உலகம்
என்பதற்கு ‘உறுப்புகளோடு கூடியிருக்கை’ நியாமகம். என்றது, ‘உலகம் மண்,
மலைகள் முதலான அவயவத்தோடு கூடியதாய் இருக்கின்றதே அன்றோ?’
என்றபடி.

உபாதானம் மண்
உபகரணம் சக்கரம் அறிந்து
சம்ப்ரதானம் பண்ணும் சக்தி
பிரயோஜனம் அறிந்தவன் தானே குயவன்
அறிக்கைக்கு ஈடான ஞான சக்தி உடையவன் கர்த்தா அனுமானித்து
வேதத்தை அதுக்கு ஆப்த வசனம் ஆக்கி –
பிரதம பிரமாணம் அனுமானம்
அடுத்த பிரமாணம் வேதம்
என்பார்கள் சிலர்
பகவத் வ்யதிக்ர்த்த ஒருவனுக்கு உத்கர்ஷம் காட்டுவார்கள்
அவர்களைப் பார்த்து ஸ்ருதி தான் பிரமாணம்
அனுமானம் புருஷன் மூலம்
லிங்கம் முன்பு சமாக்யை நில்லாது
தனிப்பட்ட அடையாளம் லிங்கம்
உபய விபூதி உபய லிங்கம்
ஸ்ருதி ஒன்றாலே பகவத் பரத்வத்தை ஸ்தாபிக்கிறார்
அகார வஸ்து ரஷிப்பவன் ஜகத் பிரசித்தம் அவன் ஒருவனே
பிரணவம் சொல்லுமே
லோக வாக்யங்கள் அகர முதல எழுத்து எல்லாம் அகாரத்தில் லயிக்க
வேத அந்தேச -தஸ்ய பிரகிருதி லீனச்ய தத் பர மகேச்வர –
வாச்யதையாய் இருப்பவனே மகேஸ்வரன்
தலை பரி கொடுத்தவன்-பறித்தவன் இருவரும் – கபால நல நோக்கம்
துக்கம் போக்கினவன் இருவருக்கும் இவன் ஒருவனே
அவர்களை பரன் என்பதா இவனை பரன்  என்பதா
நாராயணனே பரதத்வம் என்று நிர்ணயித்து
மற்றவர்களை நிராகரிக்கிறார்

அனுமானம் -மலை மேலே புகை பார்த்து நெருப்பு இருப்பதாக ஊகிப்பது –
திருமடைப்பள்ளி புகை -அடுப்பு -கண்டதால் –
கண்ணாலே பார்க்காமல் அனுமானம் கொண்டு ஸ்தாபிப்பது –
அர்த்தமே முக்கியம் சப்தம் இல்லை -நையாககிகர் -அனுமானம் மட்டுமே பிரமாணம்
யானை வந்து போனதும் -காலடி பார்த்து -யானை வந்து போனதே என்பானாம்
பிரத்யட்ஷமாக பார்த்தும் ஒத்துக் கொள்ளாமல் –
சாஸ்திரமே பிரதான பிரமாணம் நமக்கு
அதீந்த்ரிய விஷயங்கள் புத்திக்கு எட்டாதவை –
அகடிகடனா சாமர்த்தியம் உண்டு என்பதை சாஸ்திரம் கொண்டே ஸ்திக்க முடியும் –
சாஸ்திரம் கொண்டே -உள்ளே புகுந்து -வயிற்றில் அடக்கி -போன்ற செஷடிதங்கள் –
அவயவங்கள் கொண்ட வஸ்துவுக்கு கர்த்தா வேண்டுமே –
கடம் கார்யம் -மண் காரணம் -கர்த்தா குயவன்
ஜகம் -கார்யம் -காரண கர்த்தா இருக்க வேண்டுமே ஈஸ்வரன்
இந்த அனுமானம் கொண்டு சர்வ சக்தனை நிரூபிக முடியாதே
அல்ப சக்தன் இல்லையே -நிறைய ஈஸ்வரன் வேண்டும் என்பர்
உண்மையான ஸ்வரூபம் அறிய முடியாதே அனுமானம் கொண்டு
சாஸ்திர யோநித்வாத் அதிகரணம் -வேத வியாசர்
சாஸ்திரம் ஒன்றாலே  யோநி -நிரூபிக்க படுபவன் யஸ்ய -ஸ்ரீ பாஷ்யம் விஸ்தாரமாக காட்டி அருளி
வையம் தகளியா -அனுமானம் கொண்டே -வியாக்யானம் செய்து –
ஜலத்தில் கரையாமல் பூமி நியமிதவன் உண்டே
வைய கதிரோன் -உதிக்கும் மறையும் சமயம் நிர்ணயித்து கட்டளை செய்தவன் உண்டே
விவஸ்தை ஒவ் ஒன்றுக்கும் உண்டே
அனுமானம் கொண்டு சொல்லி –
சாஸ்திரம் விருத்தம் இல்லாத அனுமானம் கூடும்

சமாக்யை ஒரே பெயர் கொண்டவனை லிங்கம் கொண்டு நிர்ணயிப்பது போலே
இப்படிகளாலே நாராயணனே பரத்வம் காட்டி அருளி –
காலாத்வ்ய தோஷம்
ஜலம் வஸ்து -ஜில்
அக்நி பதார்த்தம் ஜில் இருக்கும் என்பவனை -தொட்டுப்பார்
நியாய சாஸ்திரம் -பதார்த்தம் ஒன்றே கொண்டு அனுமானம்
தள்ள வேண்டிய பிரமாணம் பிரத்யட்ஷத்தால் அறியலாமே
மரம் மேலே கிளி பார்த்து -கிளி இல்லை என்பவன் –
ஒரு கிளையில் கிளி இருப்பதை பார்த்து சொல்வது போலே
மற்ற கிளைகளில் இல்லாதவை கொண்டு இல்லை என்கிறான் –
வாதம் -காலாத்வய அபதிஷ்டம் -தோஷம் இது –

பேச நின்ற சிவன் -பர தேவதை என்று பேசும்படி
நாயகன் சர்வேஸ்வரனே
கபால மோஷத்தால் அறியலாம்
திரு குருகூர் ஈசன்
ஒரு அவம் குறை சொல்லுதல் இலின்கியருக்கு என்ன ஆவது
அவர்களும் பேச -நாங்களும் சொல்கிறோம் என்று
நாராயண அனுவாதம் -சொல்ல இவர்கள் யாகம்செய்ய ஆராதிக்க தேவதை சொல்லும் அர்த்த வாதம்
கர்ம விதி சேஷமான சிலவற்றை சொல்லி
பணம் வாயு -உபாசனம்
வாயு உயர்ந்த தேவதை -யாகம் பண்ணு சொல்லும் இடத்தில் சொல்வது
அநந்ய பரம் நாராயண அனுவாகம்
பாராட்டு விழாவில் பாராட்டி பேசுவது போலே

குற்றம் இருக்க நற்றம் பாராட்டி பேசுவது போலே
தாமஸ புராணங்களில்
முட்டு பொறுத்து நின்ற சிவன் –
பேச நின்ற -இத்தால் நிற்கிறான் -பொம்மை முட்டுக் கொடுத்து நிற்க வைக்கிறீர்கள்
இவர்கள் பேச அவன் நின்ற
நீங்கள் பரன் என்று பேசுகிற
அர்த்தம் உண்மை இல்லை –
அல்லாதாரை ஈஸ்வரனை என்னாமல் இவனை பேசும்படி நின்ற
பிரம்மாவுக்கு அன்றே போக –
பிரமன் தனக்கும் -ஜெய்ஷ்டாக ஸ்ரேஷ்டாகா –
ருத்ரன் ஈச்வரத்வம் பகவன் அனுக்ரகத்தால்
மகா தேவா -சர்வம் ஏத யாகம் தன்னையே ஹைவிர்பாவம் கொடுத்து தேவ தேவன் ஆனான்
பகவத் பிரசாதத்தால் பெற்றான்
பிறருக்கும் -இந்திரன் அக்னி -போல்வாருக்கும் -இவர்களைப் போலே ருத்ரனும்
சவ அந்தராத்மா -ருத்ரனை நோக்கி பிரம்மா சொல்லி -மம அந்தராத்மா –
நாயகன் அவனே -கார்யம் அனுரூபமான காரணம் அவனே –
விசித்திர காரணம் ஆக இருக்க –
வேதத்தால் ஒத்துக் கோலப் பட்ட அனுமானம் ஒத்துக் கொள்ள வேண்டும்
கட்டடம் பார்த்து -வியந்து -பட்டாம் பூச்சி சமுத்ரம் -கண்டு -கர்த்தா இல்லை என்பரை இகழ்ந்து
அவனே -ஏவகாரம் ஸ்ருதி பிரசித்தி
ஏக நாராயண அனுவாதயத்ரயச்ய மகேஸ்வர -அவனே

சுருதியை நோக்குமிடத்து அநுமானத்திற்குப் பலம் இல்லாத தன்மையை
விரித்துப் பேசுகிறார், ‘வேதத்தின் முதலில்’ என்று தொடங்கி. 

  ‘யத்வேதாதௌ ஸ்வர: ப்ரோக்தோ வேதாந்தேச பிரதிஷ்டித:
தஸ்ய ப்ரக்ருதி லீநஸ்ய ய: பரஸ்ஸ மஹேஸ்வர:’

  என்பது, தைத்திரீய நாராயண உப. 6 : 10.

  ‘ஆதி யந்தம் அரியென யாவையும்
ஓதி னாரல கில்லன உள்ளன
வேத மென்பன மெய்ந்நெறி நன்மையன்
பாத மல்லது பற்றிலர் பற்றிலார்.’


‘ஓமெனும் ஓரெழுத் ததனி னுள்ளுயிர்
ஆமவன் அறிவினுக் கறிவு மாயினான்;
தாமமூ வுலகமும் தழுவிச் சார்தலால்
தூமமுங் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்.’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.

  ‘நன்று; மஹேஸ்வரன் என்ற சொல், சர்வேசுரனைக் காட்டும் என்பதற்கு
நியாமகம் யாது?’ எனின், அந்த மஹேஸ்வரனை அகார வாச்சியனாகச்
சொல்லுகையாலே, ‘அக்ஷராணாம் அகாரோஸ்மி’ என்றும், ‘அகாரோ விஷ்ணு
வாசக:’ என்றும், ‘அ இதி பிரஹ்ம’ என்றும், அகாரவாச்சியன் விஷ்ணுவாகச்
சொல்லப்படுகையாலே, இங்கு அகாரவாச்சியனான மஹேஸ்வரன்
சர்வேசுவரனேயாவன் என்பது சித்தம்.

கையோடே காட்டிக் கொடுக்கிறார்
கபால நல நோக்கு
இந்த சரித்ரம் இருக்க நான் பிழைத்தேன்
தாத்ரநாராயண ஸ்ரீ மான் -தாம் தாம் செய்த கர்ம பலன் -தாம் தாம் அனுபவிக்காமல்
பிராட்டி இருந்ததால் பிழைத்தேன் என்கிறான் ருத்ரனும் இங்கே
ஈஸ்வரன் ஸ்வா தந்த்ரம் ஜீவியாதபடி -என்பாரும் அருகில் உண்டே
பிஷை கேட்டு -எங்கும் திரிய –
உலகு ஏழும் திரியும் பெரியோன்
விஷ்ணு பிரசாதத்தால் கபாலம் நொறுங்கி
பார்வதி இடம் ருத்ரன் சொல்லி –
சொபன கிடைத்த தனம் சுவடி இன்றி போனது போலே போனதே
உனது வடிவு அழகால் வந்த சௌபாக்கியம் இது என்றான் ருத்ரன்
நல்  நோக்கம் -சுவடி இன்றி போக
உங்களுக்கு சொல்லைந்த சித்த விஷயம் உண்டே
இருவர் நிலையம்
தலை கேட்டு நின்றான்
ஓடு கொண்டு நிற்க ஒருவன்
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம்

பற்றுவதால் என்ன பலன்

பாதகியானவன் -கபாலி -என்ற பெயர் –
ரிஷப வாகனம் -கருட வாகனம் இங்கே
நாச்சியார் திருக்கோலம்
பிஷாண்டி திருக்கோலம் அங்கே
கண்டு கொண்மின் -உங்கள் புராணங்கள் கூட சொல்லுமே
உண்டான ஆகமங்களிலே உண்டே

கையோடே காட்டிக்கொடுக்கிறார்’ என்பது, ரஸோக்தி. கை ஓடே –
கையிலுள்ள ஓட்டினை  (கபாலத்தை) என்பதும், கைமேலே என்பதும்
பொருள்.

6. கபால மோக்கத்திற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘தத்ர’ என்று தொடங்கி.

  ‘தத்ர நாராயண: ஸ்ரீமான் மயாபிக்ஷாம் பிரயாசித:
ததஸ்தேந ஸ்வநம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்]
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ்ஸிருதா
விஷ்ணு பிரஸாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸபுடிதம் பஹூதா யாதம் ஸ்வப்ந லப்தம் தனம்யதா’

  என்பது மாத்ஸ புராணம்.

  ‘ஸ்ரீமாந்’ என்ற பதத்திற்கு பாவம், ‘தாம் தாம் செய்த’ என்று தொடங்குவது,
‘குற்றம் செய்யாதார்’ என்பது, ஸ்ரீ ராமா. யுத். 116 : 45. 

      ‘உன் வடிவழகாலே வந்த சௌபாக்கியம் நான் சர்வேசுவரன் பக்கலிலே
சென்ற அளவிலே உதவிற்றுக்காண்’ என்றது, சிவன், தன் மனைவியாகிய
பார்வதியைப் பார்த்துக் கூறியது. மனைவியின் தன்மையால் தனக்கு நன்மை
கிடைத்ததைத் தெரிவித்தபடி.

அஜக்த ஸ்வா பாவம் ஈசன்
அவன் பக்கலிலே
கண்டு கொண்மின் இவனே பரன் என்கிறார்
‘மேலே, நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி வைத்து’ என்றது, தைத்திரீய
நாராயண உபநிடதத்தில் ‘யத்வேதாதௌ’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு
மேலே, ‘யத: பிரஸூதா ஜகத: பிரஸூதீ’ என்றும், ‘சர்வேநிமேஷா ஜஜ்ஞிரே
வித்யுத: புருஷாததி’ என்றும், ‘யமந்தஸ் ஸமுத்ரே கவயோவயந்தி’ என்றும்,
‘நதஸ்ய ஈஸேகச்சந’ என்றும் வருகின்ற வாக்கியங்களாலே
‘காரணனாயிருத்தல், கடலில் சயனித்திருத்தல், நியமிக்கின்றவனாயிருத்தல்
ஆகிற நாராயண சப்தார்த்தத்தைச் சொல்லி வைத்து’ என்றபடி. மேற்கூறிய
மூன்று பொருள்களும் நாராயணன் என்ற திருப்பெயருக்குரிய
பொருள்களாதலைக் தெள்ளியார்பால் கேட்டுத்தெளிதல் தகும்.

அவம் குறை சொல் லுதல் இவனுக்கு
ஆபாச யுக்திகளை சொல்லுமது
விஷ்ணு பக்தி இல்லாதவர் ஆசூர
கருப்பு தாமசம் தூங்குவார் ஜனங்களை மயக்கி பரத்வம் கூடாது
தெய்வத்தின் குரல் விஷ்ணு த்வேஷம் செய்தவர்
ஸ்மார்த்தர்
ஆதி சங்கரர் விஷ்ணு பரத்வம் ஸ்தாபிக்க இப்படி குறைகளை சொல்லி
பாஷண்டிகளுக்கு பிரசித்தம் கலி யுகத்தில்
தமது வாயாலே சொல்ல  மாட்டாமல் அவம் என்கிறார்
மகா பலி பிரகலாதன் சம்வாதம்
-விஷ்ணு த்வேஷி யாக இருப்பதால்
ராஜ்ஜியம் போகும் சபிக்க –
தலையை அறுபதை விட பெரிய ஹிம்சை இது என்றானே

பிரகிருதி புருஷம் விவேகம் அறிந்த பிரகலாதன்
ராஜ்ஜியம் போக சபிப்பான் என்ன
அல்பம் அஸ்தரம் இது தானே
பட்டர் -நாயை தண்டிக்க எலும்பை போடாமல் இருப்பது தானே –
நெய்யில் செய்த பதார்த்தம் அது வேண்டாம் என்பதை விலக்கி என்ன பலன்
ஐஸ்வர்ய காமன் என்பதால் இப்படி சபித்தார்
லிங்காயாத் -லிங்கம் அடையாளம் -ஜகத் சிருஷ்டிக்கு மூல காரணம் -தேவதையாக வழி பட்டு
என்ன பிரயோஜனம்
தேவதையை கேவலம் ஆக்கி
ஆஸ்ரய பலனும் இன்றி
உங்களுக்கும் மேன்மை இன்றி
என்ன ஆவது

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading