திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

பரந்ததெய்வமும் பல்உல கும்படைத்து அன்றுஉட னேவிழுங்கிக்
கரந்துஉ மிழ்ந்து கடந்துஇடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்க ளால்அம ரர்வணங் கும்திருக் குருகூர் அதனுள்
பரன்திற மன்றிப் பல்லுல கீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.

    பொ-ரை : பரந்திருக்கின்ற தெய்வங்களையும் அவர்களுக்கு உறைவிடமான பல வகைப்பட்ட உலகங்களையும் படைத்தும், பிரளயம் வந்த அக்காலத்தில் உடனே விழுங்கியும், பிரளயம் அறியாதவாறு மறைத்தும், பின்னர் வெளி நாடு காண உமிழ்ந்தும், திருவிக்கிரமாவதாரத்தில் இரண்டு அடிகளால் அளந்தும், வராஹ அவதாரத்தில் பிரளயத்தினின்று எடுத்தும் செய்து போன காரியங்களைப் பார்த்திருந்தும், ‘அவனே யான்; அவனுக்கேயுரியது உலகம்’ என்பதனைக் தெளியமாட்டுகின்றிலீர்; தேவர்கள் தலைகளாலே வணங்குகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற சர்வேசுவரனுக்குச் சரீரமாய் அல்லது ஸ்வதந்தரத்தோடு கூடியிருக்கிற வேறு தெய்வம் இல்லை: இருக்குமேயாயின், பல வகைப்பட்ட உலகத்தில் உள்ளவர்களே! என்னோடு வந்து பேசுங்கள்.

    வி-கு : ‘பல் உலகீர்! கண்டும் தெளியகில்லீர்! திருக்குருகூரதனுள் பரன் திறம் அன்றி மற்றுத் தெய்வம் இல்லை; பேசுமின்,’ எனக் கூட்டுக. ‘அன்றி இல்லை’ என்க. திறம் – பிரகாரம்; சரீரம்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘உலகத்தை விழுங்குதல் முதலிய தெய்வத்தன்மை வாய்ந்த செயல்களாலும் இவனே பரன்; இதனை உடன்படாதார் என்னோடு வந்து கலந்து பேசிக்காணுங்கோள்,’ என்கிறார்.

    பரந்த தெய்வமும் – 2கொள் கொம்பு மூடப் படர்ந்து இறைவனோடு ஒக்க எடுத்துக் கழிக்க வேண்டும்படி, கை விஞ்சின தேவசாதியும். பல் உலகும் -அவர்கள் பரப்புக்கெல்லாம்

போரும்படியான உலகங்களும். அன்றிக்கே, ‘அவர்கள் நியமிக்கின்றவர்கள் ஆகைக்குக் காரணமாக 1நியமிக்கப்படுகின்றவர்களான மற்றைய ஆத்துமாக்களையும்’ என்னலுமாம். படைத்து – உண்டாக்கி. 2இவருக்கு அந்தத் தேவர்களோடு அல்லாதாரோடு வாசி அற்று இருக்கிறபடி. அன்று உடனே விழுங்கி – ‘அந்தப் பரமாத்துமா முன்னே பிரமனைப் படைத்தார்,’ என்கிறபடியே, 3படைக்கிறபோது முறையாகப் படைத்தான்; ஆபத்து வந்தால், அங்ஙனம் முறை பார்க்க ஒண்ணாதே, பிரளயாபத்திலே ஒருகாலே வயிற்றில் வைத்து. கரந்து – ‘பிரளயம் வந்தாலும் இங்கு உண்டோ?’ என்று இளைத்துக் காட்டலாம்படி மறைத்து.

    உமிழ்ந்து – ‘உள்ளே இருந்து நோவுபடுகின்றனவோ?’ என்று வெளி நாடு காண உமிழ்ந்து. கடந்து – நடுவே மஹாபலி போல்வார் பருந்து இறாஞ்சினாற்போலே பறித்துக்கொள்ள, எல்லை நடந்து மீட்டுக்கொண்டு. இடந்தது – பிரளயத்திலே அழுந்தி அண்டப் பித்தியிலே சேர்ந்த இந்த உலகத்தை மஹாவராஹமாய்ப் புக்கு ஒட்டு விடுவித்து எடுத்து. இப்படிச் செய்த இவற்றை, கண்டும் – 4இவர்க்குப் பிரத்தியக்ஷத்திலும் சாஸ்திரம் விளக்கமாகக் காணப்படுகிறதுகாணும். தெளியகில்லீர் – மக்கள் செயலுக்கு அப்பாற்பட்ட இத்தகைய செயல்களைக்கொண்டே ‘அவனே அடையத்தக்கவன்’ என்று அறியலாய் இருக்க, அறிய மாட்டுகின்றிலீர்கோள். இவர்கள் தெளிவும் தெளியாமையும் ஒழிய, உண்மைநிலையில் மாறாட்டம் அற்று இருக்கிறது ஆதலின், ‘கண்டும் தெளியகில்லீர்’ என்கிறார். ‘உங்கள் கலக்கமும் தெளிவும் ஒழிய, அவனை ஈஸ்வரன் அல்லனாகச் செய்தல், இவர்களை ஈஸ்வரர்கள் ஆக்குதல் செய்ய ஒண்ணாதே அன்றோ?’ என்றபடி.

    அமரர் சிரங்களால் வணங்கும் – ‘எல்லாப் பொருள்களையும் படைத்தவனும் அல்லன்; ஆபத்திற்குத் துணைவனும்அல்லன்’ என்று இருந்தீர்கோளேயாகிலும், நீங்கள் அடைகிற தேவர்கள் செய்கிறது முன்னம் நீங்கள் கண்டால் தெளியலாமே! 1அவர்கள், ‘தலை படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று வணங்குகிறபடியைக் கண்டாகிலும் நீங்கள் அவனைப் பற்றப் பாருங்கோள். 2‘தாமரை போன்று ஒளியுள்ளதும், பிரமன் சிவன் இவர்களால் அருச்சிக்கப்பட்டதுமான திருவடிகளால் தடவினார்,’ என்றும், 3‘பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும், துன்னிட்டுப் புகலரிய’ என்றும், 4‘நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய முறையால் ஏத்த’ என்றும் கூறப்படும் பிரமாணங்களைக் காண்க. திருக்குருகூர் அதனுள் பரன் – 5மனித வடிவத்தில் பரத்துவத்துக்கும் அவ்வருகே ஒரு பரத்துவமே அன்றோ இது? 6இவ்வருகே போரப் போர உயர்வு மிகுமத்தனை. 7குணத்தாலே அன்றோ பொருளுக்கு உயர்வு? 8குணங்களுக்குப் பெருமை உள்ளது இங்கேயேயன்றோ? 9‘அவர்கள் இருவரில் சேதனன் கருமபலத்தை இனிமையாக அனுபவிக்கிறான்; மற்றவனான ஈசுவரன் கர்மபலத்தை அனுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்!’ என்கிறபடியே, இவ்வுயிர்கள் சரீரத்தோடே கலசக்கலச

ஒளி மழுங்கி வாராநிற்கச்செய்தே, அவனுக்கு நியமிக்கும் தன்மையால் வந்த புகர் அற விஞ்சி வருமாறு போன்று, இம்மக்கள் நடுவே போரப்போர ஆயிற்று, முதன்மை – மேன்மை பிரகாசிப்பது.

    திறம் அன்றி – அவனுக்குச் சரீரமாய் அல்லாது. திறம் – சரீரம். தெய்வம் மற்று இல்லை – சுதந்தரமாய்த் தனக்கு உரித்தாய் இருப்பது ஒரு தெய்வம் இல்லை. 1தேவர்களுடைய சொரூபத்தை விலக்குகிறார் அன்று, ‘அவனுக்கு விபூதி வேண்டும்’ என்று இருக்கிறவர் ஆகையாலே; அவர்களுடைய சுவாதந்தரியத்தை விலக்குகிறார். 2‘மற்றைத் தேவர்களை அவனுக்குச் சரீரமாகப் புத்தி பண்ணி அடைந்தீர்கோளாகில், அவனுடைய ஆஸ்ரயணத்திலே புகும்; அவர்கள் சுவதந்தரர்கள் என்று புத்தி பண்ணிப் பற்றினீர்கோளாகில், சுவதந்தரமாய் இருப்பதொரு வேறு தெய்வம் இல்லை; 3‘சுவதந்தரப் பொருள் இங்குப் பல இல்லை’ என்றும், 4‘எவர்கள் பிதிரர்களையும் தேவர்களையும் அக்கினியோடு கூடிய பிராமணர்களையும் பூஜிக்கிறார்களோ,  அவர்கள் எல்லா ஆத்துமாக்களுக்கும் அந்தரியாமியாயிருக்கிற விஷ்ணுவையே பூஜிக்கிறார்கள்,’ என்றும் வருவன காண்க. 5பேசுமின் – நான் ‘அவனுக்குச் சரீரமாய் அல்லது சுவதந்தரமாயிருப்பது ஒரு தேவதை இல்லை,’ என்றேன்; ‘இப்படி வேறு ஒருவருக்கும் வசப்பட்டிராத நியமிக்குந் தன்மையையுடைய இவனைத் தனக்குச் சரீரமாகவுடையது ஒரு தெய்வம் உண்டு,’ என்றுசொல்ல வல்லார் உண்டாகில், வாய் படைத்தார் என் முன்னே நின்று சொல்லிக்காணுங்கோள்,’ என்கிறார்.

ஜகத் படைத்து -உமிழ்ந்து -சர்வ திவ்ய செஷடிதங்களாலும் -இவனே பரன்
நிரூபிக்கிறேன் வாதம் பண்ண வாறும் என்கிறார்
பரந்த தெய்வம் பரவி இருக்கிற தெய்வமும் பல் உலகும் படைத்தது
அளந்து
இடந்து
கண்டும் தெளிய கில்லீர்
திருக்குருக்கூர் அவன் திறம் அன்றி -பிரகாரமாக அல்லது மற்று தெய்வம் இல்லை
முடிந்தால் வாதம் செய்ய வாரும்
பரவி போனதே தெய்வங்கள்
நியாமகர் உடன் ஒக்க எடுத்துக் கழிக்கும் படி
கொடி -கொழு கொம்பு இருப்பதால் செடி தரித்து இருக்க –
கொம்பை மறைத்து செடி கொடி வளர –
அனைத்துக்கும் ஆதாரம் அவன்
நன்றாக பரந்ததால் அந்தர்யாமியாக இருப்பதை மறைத்து
அவனால் சிருஷ்டிக்கப் பட்ட ஒரு தேவதை எடுத்து அவனை போலே பரத்வம் இல்லை சொல்ல வேண்டும்படி
முட்டாளை ஒத்து பேசினால் பண்டிதன் வருந்துவது போலே
தங்கம் குந்துமணி க்கு சமமாக பேசுவது போலே
கை விஞ்சி போனதே
நியாமகர் அடிக்கான சேதனர்களையும் படைத்தது –
சாமான்ய சேதனர் போலே இந்த தேவதைகள்
சிருஷ்டிக்கும் பொழுது க்ரமத்தில்
பிரளயத்தில் மொத்தமாக விழுங்கி -ஆபத்து வரும் பொழுது க்ரமம் பார்க்க ஒண்ணாதே

வாரிக் கட்டிக் கொண்டு போகும் வியாபாரி போலே
கரந்து -வயிற்றில் ஏகதேசத்தில் -உண்டோ என்று இளைத்து காட்டலாம் படி
வெளி நாடு காண உமிழ்ந்து
எல்லை கடந்து மீட்டுக் கொண்டு -திரிவிக்ரமன்
மகா வராகமாய் எடுத்து
கண்ணாலே கண்டு இருந்தும் -கண்டும்
பிரத்யட்ஷம் விட – சாஸ்திரம்
பிரமாணங்கள் -சாஸ்திரம் பிரதமம் –
வேத நூல் ஓதுவது உண்மை அல்ல இல்லை -கண்ணாலே காண்பதை விட உண்மை
ஆதலால் இப்படி அருளுகிறார்
இந்த செஷ்டிதன்களால் அவன் ஒருவனே ஆஸ்ரயநீயன் என்று தெளிவு இல்லாவிடில்
உண்மை அது தான்
அவனை அநீச்வரன் ஆக்குதல் இவர்களை ஈஸ்வரன் ஆக்குவது முடியாது
தெளிவும் கலக்கமும் உண்டே
சர்வ ஸ்ரஷ்டாவும் அல்ல
ஆபத் சாகனும் அல்ல
என்று இருந்தாலும்
தேவதைகள் செய்வதை காணும்
வாய் பெற்ற பிரயோஜனம் என்று ஏத்த
பாதேன -பிரம ருத்ரர் அர்ச்சிதேன திருவடிகள் –
துன்னிட்டு புகலரிய
நாத்தழும்ப ஏத்த
திருக்குருகூரில் பரன்
மனுஷ்யத்வே பரத்வம் விட உயர்ந்தது அர்ச்சாயா பரத்வம்
மேன்மை உடையவன் தாழ விட குணம் மிக்கு
குணாதிக்யம் மிக்கு
சம்சாரத்தில் புக  புக புகர் மிக்கு
பல பிறப்பாய் ஒளி வரும்
சம்சாரிகள் நடுவில் வர்ச் வர பிரகாசம் மிக்கு
திறம் பிரகாரம்
தேவதைகள் இல்லை என்று சொல்ல விலை
பரன் திறம் அன்றி மற்று இல்லை
அடிமை பட்டு கீழ் பட்டு சரீர பூதராய்  உண்டு
விபூதி வேணும் என்று இருப்பார்கள் இவர்கள்
பிரமம் ரூபம் குணம் ,கிடையாது என்பார் மற்றவர்
ஸ்வா தந்த்ர்யம் கிடையாது -தனக்கு உரித்தாக இருப்பவர் இல்லை
அவனுக்கு பிரகாரம் என்று நினைத்து ஆஸ்ரயித்தால் அவனுக்கு போகுமே
சரீரத்துக்கு செய்பவை ஆத்மாவுக்கு சுகம் கொடுப்பது போலே

ஸ்வ தந்தரமாக இல்லையே
அக்னி உடன் ஆராதனம் சர்வ பூத அந்தராணாம் விஷ்ணும் ஏவ யஜந்தி
பேசுமினே வந்து சொல்லிக் காட்டும் என்கிறார்
நியாமகத்வம் இவன் ஒருவனுக்கே
முடிந்தால் சொல்லிப் பாரும் கோள் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading