திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-10-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நாடிநீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன்ப டைத்தான்
வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பி ரான்அவன் மேவி உறைகோயில்,
மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுல கீர்!ப ரந்தே.

    பொ-ரை : ‘பல வகைப்பட்ட நாடுகளிலும் நகரங்களிலும் உள்ளவர்களே! நீங்கள் விரும்பி வணங்குகின்ற தெய்வங்களையும் உங்களையும் ஆதி காலத்திலேயே படைத்தான், அழிதல் இல்லாத கல்யாண குணங்களையும் புகழையுமுடைய ஆதிப்பிரான். அவன் மனம் விரும்பி வசிக்கின்ற கோயில், மாடங்களும் மாளிகைகளும் சூழ்ந்து அழகு நிறைந்திருக்கின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தைப் பாடி ஆடித் துதித்துப் பரந்துசெல்லுங்கோள்,’ என்றவாறு.

    வி-கு : ‘உலகீர்! நீர் திருக்குருகூரதனைப் பாடி ஆடிப் பரவிப் பரந்து சென்மின்,’ எனக் கூட்டுக. ‘படைத்தானாகிய ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்’ என்க. ‘கோயிலாகிய திருக்குருகூர்’ என்க. அன்றி, ‘கோயிலையுடைய திருக்குருகூர்’ எனலுமாம்.மாயோன் மேய காடுறை உலகமும்’ என்புழிப்போன்று, ஈண்டு ‘உலகு’ என்றது, உலகின் உட்பகுதிகளைக் காட்டிற்று.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1அடைகின்ற உங்களோடு, அடையப்படுகின்ற அந்தத் தேவர்களோடு வாசி அற எல்லாரையும் உண்டாக்கினவன் நின்றருளுகையாலே அடையத்தக்கதான திருநகரியை அடையுங்கோள்,’ என்கிறார்.

    நீர் நாடி வணங்கும் தெய்வமும் – 2இயல்பாகவே அமைந்தது ஓர் உயர்வு இல்லாமையாலே அவைதாம் இறாயாநிற்கச்செய்தே. வசன ஆபாசங்களாலும் யுக்தி ஆபாசங்களாலும் நீங்கள் பொரி புறந்தடவி வருந்திச் சேமம் சார்த்தி வைத்து அடைகின்ற தேவர்களையும். கள்ளரைத் தேடிப் பிடிக்குமாறு போலே தேடிப் பிடிக்க வேண்டி இருப்பவர்களாதலின், ‘நாடி’ என்கிறார். ஆடு திருடின கள்ளர்களே அன்றோ இவர்கள்தாம்? 3அணங்குக்கு அருமருந்து என்று அங்கே ஆடு கட்டினவர்கள் ஆகையாலே, தேடிப் பிடிக்க வேண்டுமே? 4‘கள்ளர்

அச்சம் காடு கொள்ளாது,’ என்று தன்னை அடைய வருகிறவர்களையும் தன்னைக் கட்ட வந்தார்களாகக் கொண்டு போகிறபடி. நீர் – இராஜஸராயும் தாமஸராயும் உள்ள நீர். அன்றிக்கே, ‘நீர்’ என்று, அவர்களோடு தமக்கு ஒட்டு அறச் சொல்லுகிறார் என்னலுமாம். ஆக, ‘நீர் நாடி வணங்கும்’ என்றதனால், ‘உங்கள் நினைவு ஒழிய அவர்கள் பக்கல் ஓர் உயிர் இல்லை’ என்பதனைத் தெரிவித்தபடி.

    நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் – நீங்கள் வணங்குகின்ற இராஜசராயும் தாமசராயும் உள்ள தேவர்களையும் உங்களையும். முன் படைத்தான் – படைக்கிற இடத்தில் முற்பட அவர்களைப் படைத்துப் பின்னர் உங்களைப் படைத்தான். 1‘உலகங்களைப் படைப்பதற்கு முன்னே பிரமனைப் படைத்தார்’ என்கிறபடியே, பிரமனைப் படைத்துப் பின்பே அன்றோ இவ்வருகு உள்ளாரைப் படைத்தது? அவன் படைத்திலனாகில், நீங்கள் மற்றைத் தேவர்களை அடையும்படி எங்ஙனே?’ என்பார், ‘படைத்தான்’ என்கிறார்.
2
‘அவன் படைத்திலனாகில் எங்ஙனே உண்ண இருப்பீர்கோள்?’ என்றபடி. 3‘உங்களுக்கு இறைமைத்தன்மை உண்டாகும் அன்றே அன்றோ, அவர்களும் இறையவராவது?’ என்பார், ‘உம்மையும் படைத்தான்’ என்கிறார்.

    வீடு இல் சீர் – இயல்பாகவே அமைந்துள்ளதான செல்வத்தையுடையவன். என்றது, ‘நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய ஐஸ்வரியம் போலே ஒருவனுடைய புத்திக்கு வசப்பட்டதாய், அவன் நினைத்திலனாகில் இல்லையாய், அது தனக்கு அடி கர்மமாய், அந்தக் கர்மம் குறைந்தவாறே அழியக் கூடியது அன்று ஆதலின், ‘வீடு இல் சீர்’  என்கிறது. வீடு – அழிவு. சீர் – செல்வம். அன்றிக்கே, நீங்கள் அடைகின்ற தேவர்களுடைய செல்வம் போலேஅவதியுடன் கூடியிருப்பது அன்று. என்றது, 2‘கர்மம் அடியாய் அதிலே ஒன்று குறையக் குறைதல், பலத்தைக் கொடுக்கின்றவனுடைய திருவருள் குறையக் குறைதல் இல்லாதது.’ என்றபடி. 3‘எல்லாப் பலன்களும் அந்தப் பரம்பொருளிடத்திலிருந்துதான் பெறப்படுகின்றன,’ என்றதே அன்றோ? அன்றிக்கே, ‘வீடு இல் சீர்’ என்பதற்கு, ‘அழிவில்லாத கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல். 4‘அவனிடத்தில் எந்தக் குணம் உள்ளதோ, அதுவும் தியானிக்கத் தக்கதே,’ என்கிறபடியே, அவனைப் போன்றே அவன் குணங்களும் உபாசிக்கத் தக்கவை என்னுமிடம் சொல்லுகிறது.

    புகழ் – எல்லாரையும் பாதுகாத்து, அவ்வாறு பாதுகாத்தலால் வந்த புகழையுடையவன். 5பாதுகாப்பதால் வந்த புகழையுடையவன் அன்றோ அடையத் தக்கவன் ஆவான்? ‘கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்,’ என்னக் கடவதன்றோ? ஆதிப்பிரான் – பாதுகாத்துப் புகழைப் படையாமல் பழி படைத்தாலும் விட ஒண்ணாத சம்பந்தத்தை ‘ஆதி’ என்கிற பதத்தால் சொல்லுகிறது. ‘கேவலம் சம்பந்தமே அன்று, உபகாரகன்’ என்பதனைச் சொல்லுகிறது ‘பிரான்’ என்ற சொல். 6உபகாரகனுமாய்

சம்பந்தத்தையுடையனுமாய், கீர்த்தியாளனுமாய். ஐஸ்வர்யம் என்ன, அழியாத கல்யாண குணங்கள் என்ன, இவற்றையுடையவனை ஒழிய, இவை இல்லாதாரை அடையத் தகுதி இல்லை. 1காரண வஸ்துவே அன்றோ உபாசிக்கத் தக்கது? 2‘காரண வஸ்துவே தியானிக்கத் தகுந்தது’ என்னாநின்றதே அன்றோ?

    அவன் மேவி உறை கோயில் – 3அவன் பரமபதத்திலே உள் வெதுப்போடேகாணும் இருப்பது. 4இம் மக்கள் படுகிறத்துக்கத்தை நினைந்து, ‘இவை என் படுகின்றனவோ?’ என்கிற திருவுள்ளத்தில் வெறுப்போடே ஆயிற்று அங்கு இருப்பது. 5‘முத்தன் ஜனங்களின் மத்தியில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினையாமலே நாலு பக்கமும் சஞ்சரிக்கின்றான்,’ என்கிறபடியே, இங்குத்தைத் துக்கத்தை நினையாது ஒழிய வேண்டுவது, பண்டு துக்கத்தையுடையவனாய் இருந்து இவ்வுலகத்தினின்றும் போனவனுக்கே அன்றோ?’ 6‘இங்குத்தைத் துக்கத்தை நினைக்குமாகில், அனுபவிக்கின்ற சுகத்துக்குக் கண்ணழிவு ஆகாதோ?’ என்னும் கண்ணழிவு இல்லையே அவனுக்கு?

‘பரமபதத்திலும் சமுசாரிகள் படுகிற துக்கத்தை நினைத்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று எழுந்தருளியிருப்பது,’ என்று பட்டர் அருளிச்செய்ய, ‘பண்டிதர்’ என்கிறவர், ‘ஆச்சானும், பிள்ளையாழ்வானும் 2இத்தைக் கேட்டுப் பரமபதத்திலே ஆனந்தத்தால் நிறைந்தவனாய் இருக்கிற இருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வியசனத்தோடே இருந்தான் என்கை உசிதமோ என்கிறார்கள்,’ என்று வந்து விண்ணப்பஞ்செய்ய, 3‘‘மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் தானும் மிகவும் துக்கிக்கின்றான்’ என்றது, ‘குணப் பிரகரணத்திலேயோ, துக்கப் பிரகரணத்திலேயோ?’ என்று கேட்கமாட்டிற்றிலீரோ? 4இது குணமாகில், ‘குணம்’ என்று பேர் பெற்றவற்றில் அங்கு இல்லாதது ஒன்று உண்டோ?’ என்று அருளிச்செய்தார். ‘எல்லாக் கல்யாண குணங்களையும் இயல்பாகவேயுடையவன்,’

என்னக் கடவதன்றோ? 1தன் இச்சை ஒழியக் கர்மம் காரணமாக வருபவை இல்லை என்னுமத்தனை போக்கி, திருவருளின் காரியமாய் வருமவை இல்லை எனில், முதலிலே சேதனன் அன்றிக்கே ஒழியும். 2‘அந்தப் பரம்பொருள் உயிர்க்கூட்டம் எல்லாம் பிரகிருதியில் இலயப்பட்டிருக்கும் காலத்தில் தான் தனியாய் இருந்துகொண்டு துக்கத்தை அடைந்தான்,’ என்றது, நித்தியவிபூதியும் குணங்களும் உண்டாயிருக்கச்செய்தே அன்றோ?

    ஆதிப்பிரான் அவன் மேவி உறைகோயில் – 3பரமபதத்தில் தன்னில் குறைந்தார் இல்லாமையாலே, அவ்விடத்தை விட்டு, நல்ல படுக்கையையும் போகத்துக்கு ஏகாந்தமானவற்றையும் காற்கடைக்கொண்டு, குழந்தையினுடைய தொட்டிற்காற்கடையிலே கிடக்கும் தாயைப் போலே, காப்பாற்றுவாரை விரும்புமவர்களான இம் மக்கள் இருக்கிற இடமாகையாலே விரும்பி வசிக்கும் இடம் இவ்விடம் ஆயிற்று. மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக்குருகூர் – மாடங்களாலும் மாளிகைகளாலும் சூழ்ந்து காட்சிக்கு இனியதாய் இருக்கும் திருக்குருகூர். 4உங்களுக்குதான் நல்ல தேசம் தேட்டமே; ‘முத்தனாகிற

பேற்றினைக் கொடுக்கும் தேசம், என்று தோற்றுகிறதில்லையோ?’ என்றபடி. அதனைப் பாடி ஆடி – பிரீதியினாலே தூண்டப்பட்டவராய்க்கொண்டு பாடி, உடம்பு இருந்த இடத்தில் இராமல் ஆடி, கிரமமின்றியே கூப்பிட்டுக் கொண்டு. 1இதனால், ‘அதனுள் நின்ற ஆதிப்பிரான்’ என்ற இடம் மிகை என்கிறார். என்றது, 2‘பகவான் எழுந்தருளியிருக்கும் ஊரில் வசிக்கக்கடவன்,’  3‘இந்தத் தேசமானது, புண்ணியத்தைக் கொடுக்கக் கூடியது; விரும்பியனவற்றை எல்லாம் கொடுக்கக் கூடியது. என்கிறபடியே, இதுதானே பேறு,’ என்றபடி. 4அந்தத் தேசம் என்றால் தம் திருவுள்ளம் இருக்குமாறு போலே இருக்கும் என்று இருக்கிறார்காணும் எல்லார்க்கும்.

    பல் உலகீர் – ஒருவன் சமித்தைக் கையிலே உடையவனாய் ஐம்பொறிகளையும் அடக்கியவனாய் வர, அவனுக்கு நலத்தை உபதேசம் செய்கிறார் அல்லர்; ‘இவை என்ன உலகியற்கை!’ என்று, உலகம் கிலேசப்படுகிறபடியைக் கண்டு எல்லார்க்கும் சொல்லுகிறாரே அன்றோ? ஆதலால், ‘உலகீர்’ எனப் பொதுவில் அழைக்கிறார். பரந்தே – 5‘பெரிய திருநாளுக்கு எல்லாத் திக்குகளினின்றும்

வந்து ஏறுமாறு போன்று, பல திக்குகளினின்றும் பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள்.

‘விரும்பினவை எய்தும்; வினையனைத்தும் தீரும்;
அரும்பரம வீடும் அடைவீர் ;- பெரும்பொறிகொள்
கள்ளம்பூ தங்குடிகொன் காயமுடை யீரடிகள்
புள்ளம்பூ தங்குடியிற் போம்.’

  என்ற திவ்விய கவியின் திருவாக்கு நினைவு கூர்தல் தகும்.

4. ‘சமுசாரிகள் பாடி ஆடுவார்களோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அந்தத் தேசம்’ என்று தொடங்கி.

  ‘வளந்தழைக்க உண்டால்என்? வாசம்மணந் தால்என்?
தெளிந்தகலை கற்றால்என்? சீசீ! – குளிர்ந்தபொழில்
தண்குருகூர் வாவிச் சடகோபன் ஊர்எங்கள்
வண்குருகூர் என்னாத வாய்.’

ஆஸ்ரயிகிற உங்களையும் அவர்களையும் வாசி அற படைத்தவன்
ஓட்டை ஓடம் ஒழுகல் ஓடம் -இரண்டும் முழுகுமே

ஸ்பஷ்டமாக பரத்வம் ஸ்தாபித்து அருளுகிறார் இதில் –
காரணத்வம் பிரதி பாதித்து முதல் பாசுரத்தில்
ஆஸ்ரயக்கிற உங்களையும் ஆஸ்ரயிக்கும் தேவதைகளும் படைத்தவன் நின்று அருளும்
நாடி நீர் வணங்கும் தெய்வம் –
உம்மையும் முன் படைத்தான் –
வீடில் சீர் புகழ் ஆதிப் பிரான் -முடிவில்லாத கல்யாண குணங்கள் உடைய
மேவி விரும்பி எழுந்து அருளி இருக்கும்
திருக் குருகூர் அதனையே பாடி ஆடும் கோள்
அவனை சொல்லாமல் திவ்ய தேசமே அமையும்
வசன யுக்தி ஆபாசங்களாலும் -ஆராதிக்கிற
நீர் நாடி வணங்கும் –
உண்மையாக ஒன்றும் இல்லை -பேணிலும் -மிடுக்கு இல்லாத
வசன ஆபாசம் இல்லாதவற்றை சொல்லி
யுக்தி ஆபாசம் -கோணா மாணா யுக்திகளை கல்பித்து சொல்லி
அவைகளுக்கு மேன்மை இன்றி -அவையே இறாய்க்கும் -படி –
நாளைய முதல் அமைச்சரே போஸ்டர் அடித்து அவனுக்கே கேடு விளைத்து –
கொண்டாட்டமும் ஆபத்து விளைக்குமே
வசன ஆபாசங்கள்’ என்றது, ‘ஏக ஏவ ருத்ர: ந
த்விதியாய தஸ்தே’ என்பது போன்றவைகளை. ‘யுக்தி ஆபாசங்கள்’ என்றது,
‘கிருஷ்ணனுக்கு வரங்கொடுத்தான்’ என்பது போன்றவைகளை. ஆபாசம் –
போலி. போலி வசனங்கள், போலி உத்திகள். ‘பொரி புறந்தடவி’ என்றது,
புறஞ்சுவர் கோலஞ்செய்தலைக் குறித்தபடி.
மேலே தடவி
பொம்மைகள் காஞ்சி புரத்தில் -குதிரை சாணம் வைத்து பண்ணி மேலே பூசி வைக்க –

நாடி நீங்கள் தான் நாடுகிறீர்கள்
தேடிப்பிடிக்குமா போலே -கல்லறை தேடிண்டு போவது போலே
ஆடு திருடிய கள்ளர்கள் இவர்கள் இ றே
‘ஆடு திருடியது எங்கே?’ என்ன. ‘அணங்குக்கு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். ‘ஆடு கட்டினவர்கள்’ என்றது, ‘ஆட்டினைக்
கட்டுவித்துக்கொண்டவர்கள்’ என்றபடி. பெரியவர்களுக்குத் தெரியாமல், சிறியவர்களைக் கொண்டு
ஒன்று வாங்கினால் அவர்களைக் கள்ளர் என்று கூறப்படும் வழக்கு
உண்டேயன்றோ?

இவனை ஆஸ்ரயிக்கிற வருபவனை -தன்னை கட்ட வந்தவர்கள்
நீர் -தமக்கு ஓட்டற சொல்லுகிறார்
உங்கள் பிரதி பத்தி ஒழிய வேறு ஒன்றும் இல்லை
தேவதைகள் -ராஷசர் தாமசர்
முன் படைத்தான் -முற்பட அவர்களை ஸ்ருஷ்டித்து
பரன் சென்று சேர் திருவேம்கடம் போலே
பிரம்மாவை சிருஷ்டித்து
முன்னால் படைத்திலன் ஆகில் -எப்படி நாடுவீர்
வீடு இல் சீர் -மற்றவர் புத்தி அதீனமாய் -கர்மம் அடியாக அன்றி ஸ்வதஸ் சித்தமான புகழ்
அவன் ஒருவனுக்கு மட்டும்
ருத்ரன் ஈச -நியமிக்க பட்டவன்
பகவான் ஈஸ்வரன் -வரஸ் பிரத்யயம்
ஈஸ் நியமனம்
நியமன சாமர்த்தியம் ஸ்வா பிகமாக இயற்கையாக உள்ளவன்
மற்றவர்களுக்கு காரணத்தாலே
அழிக்கிறவன் ஹரதி -ருத்ரன்
நாராயணன் ஹரி -இதே அர்த்தம் -ஸ்வாபிக -நிச் பிரத்யயம் –

ஹரிகி சப்தம் நாராயணன் ஒருவனுக்கே பொருந்தும்

வ்யாகரணமே இப்படி நிர்ணயிக்க
சாவதி முடிவை உடையது அல்ல
கர்மம் அடியாக இன்றி
பிரம்மா கல்பம் முடிந்து –
பலம் அனைத்தும் அவன் இடத்தில் இருந்து தான் ஞானம் சக்தி பரி பூரணமாக இருக்க
வீடில் சேர் புகழ் -நித்ய சித்தமான கல்யாண குணங்கள்
அவனை போலே குணங்களும் உபாஸ்யம்
அனைவரையும் ரஷணததால் வந்த புகழ்
புகழுக்கு எல்லாம் ஒரே இருப்பிடம்
ஆதி பிரான் -ராஷிக்கா விடிலும் பிராப்தி உடையவன்
பிரான் உபகாரகன்
இதர தேவதை ஆஸ்ரயிக்க கூடாதே
ஐஸ்வர்யம் நித்ய சித்தமான கல்யாண குணங்கள் உடையவன்
மேவி -பரம பதத்தில் கூட துக்கம்
உண்டது உருக்காட்டாதே அங்கே -அந்தமில் -பேரின்பம் உள்ள ஸ்தானம் ஆகிலும்
சம்சாரிகள் படுகிற கிலேசம் அனுசந்தித்து இவன் என்ன படுகிறதோ
இங்கே மேவி பொருந்தி இருக்கிறான் –
இங்குத்தை துக்கம் நினையாத நோபஜனம் ஸ்மரம் முக்தன் –

பண்டு துக்கித்து -சம்சாரத்தில் நின்று போனவனுக்கு இது –
அங்கு சுகம் அனுபவிக்க இத்தை மறக்கிறான்
இந்த கண் அழிவு இல்லையே இவனுக்கு
ஆனந்தம் – எதிர் தட்டு துக்கம் -அகில ஹேய பிரத்யநீகன் தானே அவன்
துக்கம் வருமா அவனுக்கு -விசாரம்
பட்டர் அருளிய சமாதானம் –
சம்சாரிகள் படும் கிலேசத்தை -பரமபதத்திலும் எம்பெருமான் அனுசந்தித்து வெறுப்புடன் எழுந்து அருளி துக்கித்து
ஆச்சானும் பிள்ளை பிள்ளை ஆழ்வானும் கேட்டு -உசிதமோ ஆனந்தம் எல்லை மீறி செல்லும் ஸ்தானம்
தங்களுக்குள் பேசிக் கொண்டு போக
கேட்ட பண்டிதர் பட்டர் இடம் விண்ணப்பம் செய்ய
வ்யசேநாம் மனுஷ்யாணாம் -பெருமாள் திருக்கல்யாண குணங்களை அயோத்யா வாசிகள் சொல்லிய வார்த்தை –

குடி மக்கள் துக்கம் ஆனந்தம் பெருமாள் அடைய -குணமா தோஷமா -இது –
துக்கம் தனக்கு வந்த கஷ்டத்துக்கு துக்கப் படுவது தோஷம்
பிறருக்கு பட்ட துக்கம் கண்டு குணம் தானே இது
இடுக்கண் வரும் கால் நகுக -வள்ளுவர்
தவளை பாம்பின் வாயில் துக்கம் பட்டதை கண்டு ஆழ்வான் மோகித்தது குணம் தானே
இது குணம் ஆகில் -அங்கு இருப்பதில் என்ன குறை –
சமஸ்த கல்யாண குணங்கள் உடன் கூடியவன் என்பதால் இதுவும் உண்டே
தனது இச்சை ஒழிய கர்ம நிபந்தனம் இன்றி –
இது கூட இல்லாமல் இருந்தால் அதேனதுக்கு ஒக்குமே
ந நமேதா தனியாக இருப்பதாக அவனை -வேதாந்தம் சொல்லி

தன்னில் குறைந்தார் இல்லாதாகையாலே
படுக்கையும் போகத்துக்கு எகாந்தமனவற்றையும் விட்டு
ரஷக அபேஷமான சம்சாரிகள் பக்கல்
குழந்தை பக்கம் உள்ள தாய் போலே
முக்த ப்ராயர் தேசம்
ஆதிப்பிரான் -வேண்டாம் குருகூர் திவ்ய தேசம் போதுமே
விஷ்ணு ஆயதனோ வச -கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
திருநாரயணபுரத்தில் குடில் கட்டி
பாடி ஆடி -அக்ரமாக

தன்னைப் போலே அனைவருக்கும் இருக்கும் என்று நினைத்து

விரும்பினவை எய்தும்; வினையனைத்தும் தீரும்;
அரும்பரம வீடும் அடைவீர் ;- பெரும்பொறிகொள்
கள்ளம்பூ தங்குடிகொன் காயமுடை யீரடிகள்
புள்ளம்பூ தங்குடியிற் போம்.’

  என்ற திவ்விய கவியின் திருவாக்கு நினைவு கூர்தல் தகும்.

சமுசாரிகள் பாடி ஆடுவார்களோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அந்தத் தேசம்’ என்று தொடங்கி.

  ‘வளந்தழைக்க உண்டால்என்? வாசம்மணந் தால்என்?
தெளிந்தகலை கற்றால்என்? சீசீ! – குளிர்ந்தபொழில்
தண்குருகூர் வாவிச் சடகோபன் ஊர்எங்கள்
வண்குருகூர் என்னாத வாய்.’

  என்றார் திவ்விய கவி.

பல்லுலகீர் அனைவருக்கும்
கிருபையால் அனைவருக்கும் அருளுகிறார்
பெரிய திருநாளுக்கு சர்வ திக்குகளில் இருந்து வருவது போலே வாறும் என்கிறார்

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading