கூட்டுதிநின் குரைகழல்கள்; இமையோரும் தொழாவகைசெய்து,
ஆட்டுதிநீ; அரவணையாய்! அடியேனும் அஃதுஅறிவன்;
வேட்கைஎலாம் விடுத்துஎனைஉன் திருவடியே சுமந்துஉழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.
பொ-ரை : ‘ஞானமில்லாதவரேயாயினும், நீ உகந்தாரை’ ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிகளிலே கூட்டிக்கொள்ளுகின்றாய்; நீ உகவாதாரை, அவர்கள் தேவர்களேயாயினும், உன்னைத்தொழாதபடி செய்து விஷயங்களிலே திரியும்படி செய்கின்றாய்; அதனை அடியேனும் அறிவேன்: அரவணையாய்! வேட்கை எல்லாம் விடுத்து உன் திருவடிகளையே சுமந்து திரியும்படியாக, தன் முயற்சியால் ஒருவராலும் அடைய முடியாத திருவடிகளிலே என்னைச் சேர்த்தாய்; நான் பார்த்தேன்,’ என்கிறார்.
வி-கு : ‘குரைகழல்கள் கூட்டுதி,’ என்க. பின்னர், ‘இமையோரும்’ என வருவதனால், இங்கு ‘ஞானமில்லாத சிறியாராயினும் அவர்களை’ எனச் செயப்படுபொருள் வருவித்து அதனைக் ‘குரை கழல்கள் கூட்டுதி’ என்றதனோடு முடிக்க.
ஈடு : ஒன்பதாம் பாட்டு. 2இவர் இவ்வுலக வாழ்வினை நினைத்தமையால் வந்த துன்பம் எல்லாம் தீரும்படி, திருநாட்டில் இருந்த இருப்பைக்காட்டியருள, ‘கண்டு அனுபவிக்கப்பெற்றேன்,’ என்று மனம் நிறைவு பெற்றவர் ஆகிறார்.
நின் குரைகழல்கள் கூட்டுதி – அறிவில்லாதவர்களாகவுமாம். நீ உகந்தாரை உன் திருவடிகளிலே சேர்த்துக்
கொள்ளுதி. குரை – 1பெருமை; அன்றிக்கே, ‘ஆபரணங்களின் ஒலி’ என்னுதல். இமையோரும் தொழாவகை செய்து ஆட்டுதி நீ – பிரமன் முதலான தேவர்களேயாகிலும், நீ நினையாதாரை வந்து கிட்டாதபடி செய்து அலையச்செய்வை. ‘அரவணையாய்!’ என்ற இவ்விளி, 2‘கூட்டுதி’ என்றதற்கு உதாஹரணம். 3அடியேனும் அஃது அறிவன் – உலக வேதங்களிலே பிரசித்தமான உன் படியை நானும் அறிவேன். 4‘அறிந்தபடிதான் என்?’ என்னில், வேட்கை எல்லாம் விடுத்து – எனக்கு உன்னை ஒழிந்தவை ஆமத்தனை அன்றோ ஆசைப்படுகைக்கு? உன் உலகத்தில் நான் ‘எனக்கு, எனக்கு’ என்னாதது உண்டோ? 5யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்திலையோ? உன் திருவடியே சுமந்து உழல – புறம்பான விஷயங்களிலே உண்டான ஆசை எல்லாம் உன் பக்கலிலேயாய், உன் திருவடிகளையே நான் ஆதரித்து, அதுவே வாழ்க்கையாய்ச் செல்லும்படிக்காக. கூட்டரிய திருவடிக்கள் எனைக் கூட்டினை – யாவர் சிலர்க்கும் தந்தாமால் சேர்த்துக்கொள்ள அரிய திருவடிகளை நான் சேரும்படி என்னைச் சேர்த்துக்கொண்டாய். நான் கண்டேனே – 6இது கேட்டார் வாய்க் கேட்டு நான் சொல்லுகிறேன் அல்லேன்: அனுபவத்தாலே சொல்லுகிறேன்.
தான் இருக்கும் இருப்பை காட்டி அருள
திருப்தியாக பாசுரம் அருளுகிறார் இதில்
ப்ரமாதிகளையும் ஆட்டி வைக்கிறாய்
உனது திருவடி கண்டு விட்டேன்
நினைத்தால் அனுக்ரகம் செய்கிறான்
உகந்தாரை நீ சேர்த்து கொண்டு
ஆய்ச்சியாய் பெற்றும் பிரம்மாவும் இழந்து
திரு நாபி கமலத்தில் இருந்தும் -திருவடி கண்ணுக்கு அறியாதபடி –
கடி கமலத்தும் உள்ளிருந்தும் கண்ணன் அடிக்கமலம் காண்கிலான்
குரை -தொனி
ஆட்டுதி -அலைக்கழித்து
அரவணையாய் கூட்டியதருக்கு உதாரணம்
அடியேனும் அஃது அறிவேன் –
வேட்கை எல்லாம் விடுத்து
உனது விபூதியில் -யாதானும் பற்றி நீன்கும்விரோதம் -நல் வீடு செய்து போக்கி
என்னை உனது திருவடியில் ஆசையை பெருக்கி
மற்ற விஷய போக்யங்கள் எல்லாம் இதிலே
யாத்ரையாக கொண்டு
தம் தாமால் சேர்க்க முடியாத திருஅடி க்குள்
கண்டேனே கேட்டு சொல்ல வில்லை நானே கண்டேன் அனுபவத்தால் சொல்ல்கிறேன்
பெற்று விட்டதாக சொல்கிறார்
மானஸ அனுபவம்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply