காட்டிநீ கரந்துஉமிழும் நிலம்நீர்தீ விசும்புகால்
ஈட்டிநீ வைத்து அமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்
கோட்டையினிற் கழித்துஎனைஉன் பொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?
பொ-ரை : ‘நீ உலகத்தை உண்டாக்கிக் காட்டிப் பிரளயம் வந்தவாறே உண்டு மறைத்துப் பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்த நிலமும் நீரும் தீயும் ஆகாயமும் காற்றும் ஆகிய ஐந்து பூதங்களையும் சேர்த்துச் சமைத்து வைத்த, தேவர்கள் வாழ்கின்ற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் நீக்கி என்னை உன்னுடைய மிக்க ஒளியோடு கூடிய பரமபதத்திலே பெறுதற்கு அரிதான திருவடிகளிலே எப்பொழுது கூட்டுவாய்?’ என்கிறார்.
வி-கு : ‘உமிழும் முட்டை, வைத்து அமைத்த முட்டை, இமையோர் வாழ் முட்டை, தனி முட்டை’ என்று தனித்தனியே கூட்டுக. முட்டை – அண்டம். கொழுஞ்சோதி உயரம் – பரமபதம்.
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘நாமே செய்யப் புக, நீர் ‘வேண்டா’ என்றவாறே அன்றோ தவிர்ந்தது? இதற்கு நம்மைக் காற்கட்ட வேண்டுமோ?’ என்ன, ‘செய்யக் கடவதாகில், அது செய்வது என்று?’ என்கிறார். ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றாரே முன்னர்.
காட்டி – முன்பு 2தானே தான் ஆம்படி இவற்றை அடையத் தன் பக்கலிலே சேர்த்துச் ‘சத்’ என்னும் நிலையினதான உலகத்தை, 3‘பிரமன் முன்னிருந்தபடியே படைத்தான்,’ என்கிறபடியே, இதனை உண்டாக்கிக் காட்டி. ‘காட்டி’ என்ற சொற்போக்கால், 4‘ஐந்திரஜாலிகரைப் போலே இதனை உண்டாக்கிக் காட்டுகிறான்’ என்பதுபோதரும். நீ கரந்து உமிழும் – படைத்தவனான நீயே பிரளயம் வந்தவாறே உள்ளே வைத்துக் காப்பாற்றி, அது கழிந்தவாறே வெளிநாடு காண உமிழுகின்ற, அன்றிக்கே, 1‘நீ கரந்து காட்டி, உமிழ்ந்து காட்டும்’ என்னலுமாம். நிலம் நீர் தீ விசும்பு கால் – இப்படி உண்பது உமிழ்வதான மண் முதலான ஐந்து பூதங்களாலே. ஈட்டி – திரட்டி, 2திரிவிருத்கரணத்தைச் சொன்னபடி. 3‘மண் முதலிய பூதங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து எல்லாவற்றிலும் எல்லாம் உள்ளன,’ என்கிறபடியே, இவை தனித்தனியும் காரியத்தைப் பிறப்பிக்க மாட்டா; கூடினாலும் எல்லாம் ஒத்ததாய் நிற்கில் காரியம் பிறப்பிக்க மாட்டா; 4செதுகையும் மண்ணையும் நீரையும் கூட்டிக் குயவன் குடம் முதலியனவற்றைச் செய்யுமாறு போலே, தேவர்கள் முதலான பல காரியங்களும் பிறக்கும்படி முக்கியப் பொருள்களாகவும்
முக்கியம் இல்லாத பொருள்களாகவும் 1நிற்கும். 2ஒன்றற்கு ஒன்று காரணம் ஒரே தன்மையாய் நிற்கில் காரியமும் ஒரே தன்மையாய் இருக்குமே அன்றோ?
ஆக, இப்படி இவற்றைத் திரட்டி இவற்றாலே, நீ வைத்து அமைத்த – நீ சமைத்து வைத்த. இமையோர் வாழ் தனி முட்டைக் கோட்டையினிற்கழித்து – பிரமன் முதலானோர் 3வன்னியம் செய்கிற ஒப்பற்ற அண்டமாகிற கோட்டையினின்றும் என்னைப் புறப்பட விட்டு. 4கோட்டை என்பது, புறம்புள்ளாரால் புகுர ஒண்ணாததுமாய், உள் உள்ளாரால் புறப்படவும் ஒண்ணாதே, புக்க இடமும் புறப்பட்ட இடமும் தெரியாததாய் இருக்குமே அன்றோ? அப்படியே, இந்த உலக வாழ்வும் இருத்தலின், இதனைக் ‘கோட்டை’ என்கிறது. 5‘என் மாயை ஒருவராலும் தாண்ட முடியாதது’ என்றானே அன்றோ அவனும்?
என்னை – இக்கோட்டையிலே அகப்பட்டுப் புறப்பட வழி அறியாதிருக்கிற என்னை. அன்றிக்கே, 6‘எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்,’ என்று நீ சொன்னபடியே உன்னையே பற்றின என்னை’ என்னுதல். ‘இதனைக் கழித்து உம்மைக் கொடு போகச் சொல்லுகிறது எங்ஙனே?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்: உன் கொழுஞ்சோதி உயரத்து – சமுசார சம்பந்தம் சிறிதும் இல்லாததாய்ச் சுத்த சத்துவமயமாய் எல்லை இல்லாத
தேஜோரூபமான பரமபதத்திலே. கூடு அரிய திருவடிக்கள் – தன் முயற்சியால் அடைய முடியாதனவான திருவடிகளை. எஞ்ஞான்று கூட்டுதி – 1‘துக்கியாதே’ என்று ஒரு வார்த்தையைச் சொல்லிலும் 2 ‘மனம் நிறைவு பெற்றவனாய் இருக்கிறேன்’ என்று இருக்கலாய் அன்றோ இருப்பது? அப்படியே, ‘நான் கூட்டக் கடவேன்’ என்று ஒரு வார்த்தை அருளிச்செய்ய வேண்டும். 3‘பிறகு ஸ்ரீ பரதாழ்வான் பாதுகைகளைத் தலையில் வைத்துக்கொண்டு அப்போது ஆனந்தமடைந்தவராய்ச் சத்துருக்னாழ்வானோடு கூடினவராய்த் தேரில் ஏறினார்’ என்னலாம்படி ‘பதினான்கு வருஷங்களும் முடிந்து வருகிறேன்’ என்றதைப் போன்று வார்த்தை அருளிச்செய்தருளவேண்டும்.
4‘இதனைக் கழிக்க வேண்டும்’ என்று இருக்கிற என்னை, எஞ்ஞான்று கூட்டுதி – ‘நீ உகந்தாரைக் கொடு போய் வைக்கும் தேசத்திலே, அளவிலாத ஆற்றலையுடையனான நீயே என்று கொடுபோய் வைக்கக்கடவை?’ என்றது, ‘இக்கோட்டை இட்ட இவன்தானே கழிக்க வேண்டும்?’ என்றபடி. 5‘எவர்கள் என்னையே சரணம் அடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்’, 6‘அந்தச் சர்வேசுவரனையே சரணமாக அடைவாய்; அவன் திருவருளாலே பரமபதத்தை அடைவாய்,’என்கிறபடியே. விரோதியைப் போக்கிலும் இவனைப் பற்ற வேண்டும்: தன்னைப் பெறிலும் தன்னாலேபெறவேண்டும். 1‘ஒரு குருவி பிணைத்த பிணை ஒருவராலவிழ்க்க ஒண்ணுகிறது இல்லை; ஒரு சர்வசத்தி, கர்மத்திற்குத் தகுதியாகப் பிணைத்த பிணையை. அவனைக் காற்கட்டாதே இவ்வெலி எலும்பனான சமுசாரியால் அவிழ்த்துக் கொள்ளப்போமோ?’ என்று பணிப்பர் பிள்ளை திருநறையூர் அரையர்.
கண்டிப்பாய் சேர்த்து கொள்வேன் என்ன
அது என்று என்கிறார் இதில்
கூட்ட அரிய திருவடிகளின் கீழே என்றைக்கு சேர்ப்பாய்
காட்டி நீ -கரந்து
காட்டிய பின்பு உமிழ்ந்தானாம்
தனி முட்டை அண்டம் -தட்டை இல்லை முட்டை -ஆச்சர்யம் –
கொழும் சோதி உயரம் பரம பதம்
ஜகத்தை உண்டாக்கி காட்டி –
பிரளயம் தானே தானாகும் படி -சூஷ்ம ரூபம் அடைந்து -அசித் சித் அறிய முடியாதபடி கலந்து
ஜகத் அனைத்தும் தன்னுள்ளே -இல்லை என்னும் படி -நித்ய தத்வம்
கரண களேபரங்கள் இன்றி –
பிரளயம் முடிந்து சிருஷ்டி -யதா பூர்வம் எப்படி இருந்ததோ அப்படியே படைத்து –
கர்மம் படி மாறுதல் உண்டு
நீயே கரந்து உமிழ்ந்து –
உண்டதும் உமிழ்ந்தும் ஈட்டி திரட்டி -பஞ்சீகரணம்
திரிவிருத்கரணம் – பூமி தண்ணீர் நெருப்பு இவற்றைக் கூட்டுதல்.
திரிவிருத்கரணத்தைக் கூறியது, பஞ்சீகரணத்துக்கும் உபலக்ஷணம்.
பஞ்சீகரணமாவது, ஐம்பெரும்பூதங்களையும் கூட்டுதல். கூட்டுதலாவது,
ஆகாசம் முதலிய பூதங்கள் ஐந்தனையும் தனித்தனியே இரண்டு கூறாக்கி,
அவற்றில் ஒவ்வொரு கூற்றையும் நான்கு கூறாக்கி, மற்றைப் பூதங்களில்
ஒவ்வொரு கூறு கூட்டிவிடுதல். இதனால், எல்லாப் பூதங்களிலும் எல்லாக்
குணங்களும் கலந்து நிற்கும்.
பஞ்ச பூதங்களும் ஒன்றோடொன்று கலக்கும்போது பிரதான
அப்பிரதானங்களாய்க் கலப்பதனால் காரியம் உண்டாகிறது என்பதனைத்
திருஷ்டாந்த மூலம் விளக்குகிறார், ‘செதுகையும்’ என்று தொடங்கி. செதுகை
– பதரும் கூளமும். ‘இவை கூடினாலல்லது காரியகரம் ஆகாமையாலே,
மண்ணையும் மணலையும் நீரையும் சேர்த்து ஒரு திரவியமாக்கிச் சுவர்
இடுவாரைப் போலே ஈசுவரன் இவற்றை எல்லாம் தன்னிலே சேர்த்து ஓர்
அண்டமாக்கி அதுக்குள்ளே சதுர்முகனைச் சிருஷ்டித்தருளும்,’ என்பது,
தத்துவத்திரயம், அசித் பிரகரணம், சூ. 34.
இப்படி இவற்றை திரட்டி பஞ்சீகரணம் செய்து
நீ வைத்து அமைத்த -அமைத்து வைத்த
இமையோர் பிரமாதிகள்
அண்டம் கோட்டை -உள்ளார் வெளியில் போக முடியாத -வெளியில் உள்ளார் புக முடியாதபடி
புக்க இடமும் புறப்பட்ட இடமும் அறியாமல் –
அவன் மாயை -கீதை –
உன்னையே பற்றின என்னை
கடக்க- மாம் ஏ வையே பிரபத்தி மாயை தாண்ட உன்னை பற்றினேன் –
சம்சார வாசனை இன்றி சுத்த சத்வ மாயம் நிரவதிக தேஜஸ் ரூபமாய்
கூட்ட அரிய
திருவடிக்கள் திருவடிக்கு உள்ளே
எஞ்ஞான்று -எப்பொழுது
மாசுச வார்த்தை சொல்லி -கரிச்ஹ்வே வசனம் அர்ஜுனன் சொல்லி
கூட்டக் கடவேன் வார்த்தை அருளிச் செய்ய வேண்டும்
14 வருஷம் சம்சயம் இன்றி பரதன் இடம் சொல்லி
சந்தோஷத்துடன் தேரில் ஏறினான் இத்தை கேட்டு தரித்து நின்றான்
சர்வ சக்தன் நீயே கூடிக் கொள்
இக்கோட்டை இட்ட இவன் தானே கழிக்க வேண்டும்
கோடு என்றும் அர்த்தம்
விரோதி நீயே போக்கி அருள வேண்டும்
தமேவ சரணம் கச்ச
மாம் ஏவ
ஏவகாரம்
மாம் ஏக சரணம்
பிள்ளை திரு நறையூர் அரையர் வார்த்தை குருவி -கட்டின கூட்டை பிரிக்க முடியாமல்
அவனை கால் கட்டாத எலி எலும்பன் துர்பலன் –
சம்சாரம் அறுத்து கொள்ளப் போகுமோ
கட்டி வைத்தவனே அவிழ்க்க வேண்டும்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply