ஆயேஇவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற்று ஒருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயேமூப்பு இறப்பிறப்புப் பிணியேஎன் றிவைஒழியக்
கூயேகொள் அடியேனைக் கொடுஉலகம் காட்டேலே.
பொ-ரை : ‘இந்த உலகத்திலே நிற்கின்ற பொருள்களும் திரிகின்ற பொருள்களும் நீயேயாகி, உன்னைத் தவிர வேறு ஒரு பொருளும் இல்லாதபடி நீ நின்ற காரணத்தாலே, நோய் மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவைகள் ஒழியும்படியாக அடியேனைக் கூவிக் கொள்வாய்; இந்தக் கொடிய உலகத்தை எனக்குக் காட்டாதே,’ என்கிறார்.
வி-கு : முதலிலே உள்ள ‘ஆய்’ என்ற சொல்லை ‘நீயே’ என்ற சொல்லோடு சேர்த்து, ‘நீயேயாய் நின்றமையால்’ எனக் கூட்டுக. ஆய் -வினையெச்சம். அன்றி, ‘ஆயே’ என்பதனை விளிப்பெயராகக் கோடலுமாம். ‘நின்றமையால் இவை ஒழிய அடியேனைக் கூயே கொள்,’ என்க. என்றது, ‘சரீரத்திற்கு வருகின்ற நோய் முதலானவைகளை ஆத்துமா நீக்குவது போன்று, உனக்குச் சரீரமாய் இருக்கின்ற எனக்கு வரும் நோய் முதலானவற்றையும் சரீரியாகிய நீயே நீக்க வேண்டும்,’ என்பது கருத்து.
ஈடு : ஏழாம் பாட்டு, 1விரும்பியவை அப்போதே கிட்டாமையாலே, ‘பேறு தம்மதான பின்பு தாமே முயற்சி செய்து வருகிறார்,’ என்று இறைவன் நினைத்தானாகக் கொண்டு, ‘எல்லாப் பொருள்களும் உனக்கு அதீனமான பின்பு நீயே உன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேண்டும்,’ என்கிறார்.
ஆயே – தாயே! என்றபடியாய், 2‘மாதா பிதா’ என்கிறபடியே, ‘எனக்கு எல்லாவிதமான உறவின் கூட்டமும் ஆனவனே!’ என்கிறார். அன்றிக்கே, ‘இவ்வுலகத்து
நிற்பனவும் திரிவனவும் நீயே ஆய்’ என்று கொண்டு கூட்டி, இந்த உலகத்திலே தாவரங்களாயும் சங்கமங்களாயும் கூடியிருக்கின்ற எல்லாப்பொருள்களும் ‘நீ’ என்கிற சொல்லுக்குள்ளே ஆம்படி சரீரமாய் அற்று, 1நீ ஒருவனுமே சரீரியாய்’ என்று பொருள் கோடலுமாம். ‘உலகம் பரமாத்துமாவுக்குச் சரீரம் என்ற புத்தி எப்பொழுது இவனுக்கு உண்டாகிறதோ, அப்பொழுது தனித்த ஒரு சாதனத்தாலே, தனித்த ஒருவனைப் பார்க்கக் கடவன்,’ என்பது உபநிட வாக்கியம்.
2மற்று ஒரு பொருளும் இன்றி – ‘இவ்வுலகில் பல பொருள்கள் பரமாத்துமாவை நீங்கித் தனித்து இயங்குகின்றன என்று எவன் எண்ணுகிறானோ, அவன் நனி பேதை ஆவான்; (ஆதலால்) இவ்வுலகில் பல இல்லை என்று மனத்தால் எண்ணக்கடவன்,’ என்று சொல்லுகிறபடியே, பரம்பொருளினின்றும் நீங்கி நிற்பதாய்ச் சுதந்தரமாய் இருப்பது ஒரு பொருளை ஆயிற்று, ஈண்டு ‘இல்லை’ என்கிறது. நீ நின்றமையால் – நீ இப்படி நின்ற பின்பு. நோயே மூப்பு இறப்புப் பிறப்புப் பிணி என்ற இவை ஒழிய – 3சரீரத்துக்கு வந்தவற்றுக்குச் சரீரியான ஆத்துமா இன்புறுதல் துன்புறுதல் செய்யுமதனைப் போன்று, எனக்கு வந்தவற்றுக்கு இன்புறல் துன்புறல் செய்வாய் நீ ஆம்படி சம்பந்தம் உண்டாய் இருந்த பின்பு, பிறவி காரணமாக வருகின்ற இந்தத் துன்பங்களைக் கழித்து. 4நோயும் பிணியும் – ஆதி வியாதிகள். கூயே கொள் – ‘இவன் தானே வருகிறான்,’ என்று இராமல், நீயே அழைத்துக்கொண்டருள வேண்டும். கொடு உலகம் –
உன்னை விட்டு ஐம்புல இன்பங்களால் போது போக்கி இருக்கிற உலகம்.
காட்டேல் – 1திட்டிவிடம் போலே காணில் முடிவன். 2‘இந்த உலக வாழ்வு என் கண்களுக்கு இலக்கு ஆகாதொழிய வேண்டும் என்கையாலே, இந்த உலக வாழ்வு இவர் கண்களில் பட்டது இல்லையாய் இருந்தபடி. 3மயர்வு அற மதிநலம் அருளினதைப் போன்று சர்வ சத்தியானவன் இதனைக் காட்டில் காணுமித்தனை. 4‘ஆனால், ‘இவை என்ன உலகியற்கை,’ என்றதனோடு சேரும்படி என்?’ என்னில், ‘பரஹிதம்’ என்கிற புத்தியாலே முன்பு நினைந்தார்; ‘இதுதான் வந்து தம்மைக் கிட்டாதபடி பண்ணவேண்டும்,’ என்கிறார் இத்திருப்பாசுரத்தில்.
தன்னுடைய உடைமையை தான் பெற முயல வேண்டுமே
அனைத்தும் உனது ஆதீனம்
கொடு உலகம் காட்டேல்
கூவிக் கொள்ள வேண்டும்
நோய் மூப்பு இறப்பு பிறப்பு பிணி அனைத்தும் போக வேண்டும்
ஆயே -தாயே -அன்னை -ஆயா சம்போவனம் -யாய் யும் பிறரும் அறியாத -இதுவும் மாதா
இவ் உலகத்து நிற்பவன திரிவனவும் நீயே -அனைத்தும் உனது ஆதீனம்
உன்னை தவிர மற்று பொருள்கள் இல்லையே -அந்தர்யாமி நியந்தாவாக கொள்ளாமல்
ஒன்றும் இல்லையே
மாதா பிதா சர்வ வித பந்துவும் நீயே அனைத்துக்கும்
பிரகாரம் அனைத்தும் -சரீரி நீ
நீ ஒருவனுமே சரீரமாய்’ என்றது, சாமாநாதிகரண்யம்; சரீர சரீரி பாவ
நிபந்தனம். இதற்குப் பிரமாணம், ‘உலகம் பரமாத்துமாவுக்கு’ என்று
தொடங்குவது. இது, பிரு. உப. 6 : 5.
2. ‘‘மற்று ஒரு பொருளுமின்றி’ என்றதனால், சொரூப ஐக்கியம்
சொல்லுகிறதோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவ்வுலகில்
பல பொருள்கள்’ என்று தொடங்கி. இது, கடவல்லி, உப, 2. 4 : 11.
பிரமத்தை ஆத்மாவாக அனைத்தும் கொண்டது
ஸ்வ தந்தரமாக இருக்கும் பதார்த்தம் இல்லையே
நோய் இத்யாதி –சரீரத்துக்கு வந்தவற்றுக்கு ஆத்மா சுக துக்கம் அனுபவிப்பது போலே
நீ தானே அனுபவிக்க வேண்டும் உனக்கு தானே கேடு என்கிறார்
எனக்கு வந்தவற்றுக்கு சுகித்தல் துக்கித்தல் உனக்கு தானே
நோய் பிணி இரண்டு சொல்லி
மனசால் சரீரத்தால் வரும் துக்கம் ஆதி வியாதி இரண்டும்
இவன் தானே வருகிறான் என்று இராமல் நீயே கூட்டிக் கொள்
கொடிய உலகம் உன்னை விட்டு சப்தாதி விஷயங்கள்
கண்ணாலே காட்டாதே காணிலே முடிவேன்
திருஷ்டி விஷம் போலே -இவை இவருக்கு
லோக யாத்ரை இவர் கண்ணில் பட்டதாக இல்லை
இது வரை கொடு உலகம் கண்ணாலே பார்க்க வில்லை
விபரித்தது ஞானத்தால்
மயர்வற மதி நலம் என்பதில் இவை உண்டே ஞானத்துக்கு இலக்கு பிரத்யட்ஷம் இல்லை
ஆழ்வாரும் சம்சார பீதங்களை காண வில்லை
இவை என்ன உலகு இயற்க்கை என்று இதனால் அருளுகிறார்
பர ஹிதம் என்கிற புத்தியால் அருளுகிறார்
அனுபவித்து சொல்ல வில்லை
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply