மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப்பொருளை அறிந்துஓரார்; இவைஎன்ன உலகியற்கை!
வெறித்துளவ முடியானே! வினையேனே உனக்குஅடிமை
அறக்கொண்டாய் இனிஎன்னா ரமுதே!கூய் அருளாயே.
பொ-ரை : ‘உலகத்து மக்கள் ஒருவரை ஒருவர் மனத்தினைக் கலக்கிக் கொடிய வலையிலே அகப்படச் செய்து வருத்திப் பின்கொன்று அவர்கள் பொருள்களைக்கொண்டு தாங்கள் ஜீவிப்பர்; தர்மமாகிற பரம புருஷார்த்தத்தை அறிந்து அதனை ஆராயார். இவை என்ன உலகியற்கை! வாசனை பொருந்திய திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தீவினையையுடைய என்னை உனக்கே அடிமையாகும்படி செய்தவனே! உனக்கு அடிமையான பின்பு, எனக்கு அரிய அமுதமாய் இருப்பவனே! அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.
வி-கு : ‘ஓரார்’ என்பதற்கு மக்கள் என்னும் எழுவாயை வருவித்து முடிக்க. ‘உண்பர், ஓரார்’ என்க. வெறி – வாசனை.
ஈடு : ஆறாம் பாட்டு. ‘இம்மாக்களுடைய 2பகவத்வைமுக்யாதி தோஷங்களை நினைத்து ஈசுவரனை இன்னாதாகை
தவிர்ந்து, தாம் வாழ்வதன்பொருட்டுப் பிறரைத் துன்புறுத்துகின்ற சமுசாரிகள் நடுவினின்றும் என்னை உன் திருவடிகளிலே அழைத்தருள வேண்டும்,’ என்கிறார்.
முதல் அடியாலே, கிராமணிகள் செல்வத்தைத் தேடிச் சேர்க்கும்படியை அருளிச்செய்கிறார்: மறுக்கி – சாது என்று தோற்ற வாழ்கின்ற ஒருவன், ஒரு தேசத்திலே வாழா நின்றால், அச்சம் இன்மைக்காகப் பற்றுக்கோடாக ஒருவனைப் பற்றியிருக்கவேண்டும்,’ என்று ஒரு கிராமணி பக்கல் சென்று சேர்வான்; ‘இவன் சாது’ என்று அவனுக்குத் தோற்றினவாறே, ‘உன்னை இன்னாரும் இன்னாரும் இன்னபடி சொன்னார்களே!’ என்பான்; அவன் அஞ்சினவனாய், ‘இவன் நம்மைப் பாதுகாப்பவன்’ என்று இவனை அவன் நம்பினபடியாலே, ‘அதற்குப் பரிஹாரம் என்?’ என்று இவன்தன்னையே கேட்பான்; ‘உனக்கு ஒன்று வந்தால் சொல்லலாவது இல்லாதபடி என் வீட்டிலே உனக்குள்ள செல்வத்தையும் போகட்டு உன் நிலம் முதலாயினவற்றையும் என்மேலே 1திரிய விட்டு வை,’ என்பான்; இப்படி அவன் நெஞ்சைக் கலங்கச் செய்து. 2வல் வலைப் படுத்தி – இவன் இனி இவை கொண்டு தப்ப ஒண்ணாதபடி தன் பக்கலிலே அகப்படுத்தி. குமைத்திட்டு – பின்னர் இவன் கொடுத்த செல்வத்தை அடையத் தன் பேரிலே செலவு எழுதிச் 3சிகைக்கு அடிப்பிக்கும். கொன்று – ‘இவன் இருக்குமாகில் ஒரு நாள் வரையில் சிலரை அடைந்து தொடரிலோ?’ என்று இவனைக் கொல்லுவான். உண்பர் – இப்படிச் செய்தால் தான் செய்வது வயிறு வளர்க்கையே அன்றோ?
அறப்பொருளை அறிந்து – ‘தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஒரு ஆத்தும வஸ்து உண்டு; நாம் இப்போது செய்கிறவை அதிலே வந்தவாறே 4தட்டுப்படும்,’ என்று தர்மத்தின் உண்மையை அறிந்து. ஓரார் – அதனுடைய
தன்மையிலே முதலிலே இழியார்கள். அன்றிக்கே, ‘பிறரைத் துன்புறுத்துவதினின்றும் நீங்கார்’ என்றுமாம்; ஓர்தல் – ஒருவுதலாய். ஒருவுதல் -நீங்குதல் என்றபடி. 1அன்றிக்கே, ‘செல்வமாகிய புருஷார்த்தம் ஒன்றையுமே அற விரும்பி. நன்மை தீமைகளை ஆராய்ந்து பாரார்’ என்னுதல். இவை என்ன உலகு இயற்கை – இது ஒரு உலகவாழ்வு இருக்கும்படியே பிரானே! வெறித் துவள முடியானே – வாசனையையுடைய திருத்துழாயை முடியிலே உடையவனே! என்றது, ‘இம்மக்கள் நடுவே இருக்கிற என்னை உன்னுடைய இனிமையைக் காட்டி அடிமை கொண்டவனே!’ என்றபடி.
வினையேனை – 2ஐம்புல இன்பங்களிலே ஈடுபட்டிருக்கிற இவர்களிலே ஒருவனாகப் பிறப்பதற்கு அடியான பாபத்தையுடைய என்னை. உனக்கு அடிமை அறக்கொண்டாய் – நான் நின்ற நிலைக்குச் சேராதபடியான உன் திருவடிகளில் அடிமையை 3ஒரு காரணமும் இன்றியே என்னைக் கொண்டருளினாய். இனி -அடிமை கொண்ட பின்பு. என் ஆர் அமுதே – எனக்கு எல்லை இல்லாத இனியன் ஆனவனே! கூய் அருளாயே – நான் இவர்கள் நடுவே இருக்கிற இருப்பை விட்டு உன் திருவடிகளிலே சேரும்படி அழைத்துக்கொண்டருள வேண்டும். 4அன்றிக்கே, ‘இனி என் – அவர்கள் ஒரு படியாலும் பேற்றிலே நெஞ்சு வையாரான பின்பு, நான் அவர்கள் கேட்டிற்குக்கரைந்ததற்குப் பிரயோஜனம் என்? அதனை விடலாகாதே?’ என்னை முதல் அங்கே அழைத்துக்கொண்டருளவேண்டும்,’ என்னுதல்.
பகவத் வைமுகமாக இருக்கும் சம்சாரிகள் நடுவில்
ஜீவனாம்சமாக பர ஹிம்சை செய்து சம்சாரிகள் இருக்க
ஈஸ்வரனை இன்னாதாவனாக தவிர்ந்து
தன்னை நீக்க பிரார்த்திக்கிறார்
மறுக்கி -ஹிம்சை பிராணிகளை செய்வது போலே
தம்முடைய வலையில் கொண்டு
துழாய் வாசனை உடன் சூடி
வினையேனை இனி -இதுவும் ஒரு இனி -கடைசி இனி இது
கூவி அருளாய்
மறுக்கி
வல்வினைபடுத் தி
குமைத்து
கிராமணி -சாது இவன் என்று அறிந்து -இன்னாரும் இன்னாரும் இன்னபடி சொன்னார்கள்
இவன் பீதனாய் இவனே ரஷகன் என்று விஸ்வசித்து
உனது ஷேத்ரங்களை எனக்கு எழுதி வை
உனக்கு ஓன்று வந்தால் ஒன்றும் ஆகாத படி இப்படி நெஞ்சை மறுக்கப் பண்ணி
தப்ப ஒண்ணாத படி அகப்படுத்தி -வலை
இவர் இருக்குமாகில் -திரும்ப பெறலாம் என்று ஹிம்சித்து -குமைத்து -கொன்றும்
தாம் செய்வது வயிறு வளர்க்கைகாக
அறப் பொருளை அறிந்து -ஆராயாமல் தப்பில் இழிந்து
பர ஹிம்சையில் நீங்காமல் இருப்பார்கள்
அர்த்த புருஷார்த்தம் ஒன்றையே கொண்டு அறம் -தர்ம புருஷார்த்தம் நினைத்து பாராமல்
வெரி துழாய் போக்யதை கொண்டு என்னை அடிமை கொண்டாய்
வினையேனை இவர்கள் நடுவில் பிறந்த என்னை அடிமை கொண்டாயே
இனி கூவி கொள்ள வேண்டாமா
இவர்கள் அநர்த்தம் -காண முடியவில்லை
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply