தளிர்நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த
களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.
பொ-ரை : தளிர் போன்ற நிறத்தாலே குறைபாடு இல்லாத, தனித்த சிறையிலே பிரசித்தமாக இருந்த கிளி போன்ற சொற்களையுடைய பிராட்டி காரணமாக, கிளர்ச்சியையுடைய இராவணனது நகரமாகிய இலங்கையை எரித்த, தேன் பொருந்திய மலர்களையுடைய திருத்துழாய் மாலையானது வாசனை வீசுகின்ற திருமுடியையுடையவனும், கடலாற்சூழப்பட்ட இவ்வுலக மக்களிடத்தே திருவருள் மிகுந்தவனுமான சர்வேசுவரன் விரும்பாத அறிவினால் ஒரு பயனையும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு : ‘குறை இல்லாத கிளிமொழியாள்’ என்றும், ‘விளப்புற்ற கிளிமொழியாள்’ என்றும், தனித்தனியே கூட்டுக. ‘காரணமாக நகர் எரித்த முடியன்’ என்க.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘பரம காதலனாய் எல்லாரையும் காக்கின்றவனான சக்கரவர்த்தி திருமகன் விரும்பாத அறிவினால் என்ன பிரயோஜனம் உண்டு எனக்கு?’ என்கிறாள்.
தளிர் நிறத்தால் குறை இல்லா – 2‘தன் திருமேனியின் ஒளியால் எல்லாத் திக்குகளையும் இருள் இல்லாதபடி செய்கிறவள்’ என்கிறபடியே, பிராட்டி பத்து மாதங்கள் திரு மஞ்சனம் பண்ணாமையாலே திருமேனியில் புகர் மங்கியிருக்கும்படி, பத்துத் திக்குகளிலும் உண்டான இருளைப் போக்குமளவாயிற்று; 3‘வருத்தம் இருள் இவைகளைப் போக்க வல்ல பிள்ளை என்று பேர் பெற்ற ஒளி’ என்பது இரகு வமிசம். தனிச்சிறையில் – 4ஒளியையும் ஒளியை
உடைய பொருளையும் (சூரியனையும்) பிரித்து வைத்தாற் போலே இருப்பது ஒன்றே அன்றோ அரக்கியர் நடுவில் தடைபட்டவளாய் இருந்தபடி? விளப்புற்ற – 1‘கண்ணீரால் நிறைந்த முகமுடையவளும், இரங்குவதற்குரியவளும், ஆகாரம் இன்மையால் இளைத்திருப்பவளும்’ என்கிறபடியே, ‘தன்னைப் பேணாதே இருந்தாள்’ என்று திருவடியாலே பெருமாளுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டவள் என்னுதல்; அன்றிக்கே, ‘தெய்வப் பெண்கள் கால்களில் விலங்கை வெட்டி விடுகைக்காகத் தன்னைப் பேணாதே அங்கே புக்குத் தன் காலிலே விலங்கைக் கோத்துக் கொண்டவள்,’ என்று நாட்டிலே பிரசித்தையானவள் என்னுதல்.
கிளி மொழியாள் காரணமா – திருவடி வாயிலே ஒன்று தங்கிய அவள் வார்த்தையைக் கேட்டு, அவ்வழியாலே 2‘இனியவளும் இனிய வார்த்தையையுடையவளும்’ என்றாரே அன்றோ? அதனை நினைத்துக் ‘கிளிமொழியாள்’ என்கிறது. ‘அப்படிப்பட்ட வார்த்தையையுடையவள் காரணமாக’ என்றபடி. கிளர் அரக்கன் – ‘கொழுத்தவனான இராவணனுடைய’ என்கிறபடியே, 3தாயும் தமப்பனும் சேர இருக்கப் பொறாதபடியான கிளர்த்தியையுடைய இராவணன். நகர் எரித்த – 4இராவணனுடைய எல்லா
வற்றாலும் நிறைவுற்றிருந்த நகரத்தை எரித்துச் சாம்பல் ஆக்கின. என்றது, ‘பையல் குடியிருப்பை அழித்து 1மூலையடியே வழி நடத்தின’ என்றபடி.
களி மலர்த்துழாய் அலங்கல் கமழ் முடியன் – தேனையுடைத்தான மலரோடு கூடின திருத்துழாய் மாலை கமழா நின்றுள்ள திருமுடியையுடையவனை. 2அவன் தான் மக்கட் பிறவியை மேற்கொண்டு அவதரித்தால், பிரகிருதி சம்பந்தம் இல்லாத பொருள்களும் அதற்குத் தகுதியான வடிவைக் கொண்டு வந்து தோன்றுவன இத்தனையேயன்றோ? ஆகையாலே, அவன் கலம்பகன் கொண்டு வளையம் வைத்தாலும் இவர்கள் எடுத்துச் சொல்லுவது திருத்துழாயை இட்டேயாம். 3தனக்கேயுரிய சிறப்புப் பொருள்களைக் கொண்டே அன்றோ கவி பாடுவது? பாண்டியர்கள் மற்றையார் கருமுகை மாலையைக் கொண்டு வளையம் வைத்தாலும், அவர்களுக்கே உரியதான வேம்பு முதலானவற்றையிட்டேயன்றோ கவி பாடுவது? கடல் ஞாலத்து அளி மிக்கான் – சமுசாரத்தில் தண்ணளி மிக்கவன் ஆயிற்று. மக்கள் படுகிற துன்பத்தை நினைத்து, ‘இதைப் போக்கவேண்டும்’ என்று திருவுள்ளம் 4இங்கே வேரூன்றினபடி. என்றது, பிராட்டியைப் பிரிப்பது, இளையபெருமாளை அகற்றுவதாய், பின்னர், ‘அவதாரத்துக்குக் காலமாயிற்று’ என்று தேவ காரியத்திலே ஒருப்படுவித்துக் கிளப்ப வேண்டும்படியன்றோ இங்கேவேரூன்றினபடி?’ என்றவாறு. கவராத அறிவினால் குறை இலம் -அப்படிப்பட்டவன் விரும்பாத அறிவினால் காரியம் உடையோம் அல்லோம். 1பிராட்டியுடைய இரண்டாம் பிரிவிற்கு அடியான வனவாச ஞானம் போலே இருக்கிற இந்த அறிவால் என்ன பிரயோஜனம் உண்டு? 2பிரிவோடே சேரும்படியாய் அன்றோ அது இருப்பது?
அறிவினால் என்ன பலன் –
சீதா பிராட்டி -பிரணீயன் -விரும்பாத ஞானத்தால் என்ன பிரயோஜனம்
நிறத்தால் குறை இன்றி
தனிமை சிறையில்
தேஜஸ்
உடன் கிளி மொழியாள்
புகர் -தேஜஸ் குறையாமல் -சிறை இருக்க –
திசைகளை எல்லாம் தேஜஸ் குறையும் படி -திரு மஞ்சனம் செய்யாமல் –
அந்தகாரம் போக்குமவள்
தனிச்சிறை பிரபை ப்ரபாவான் பிரித்து வைத்து –
பாச்கரேண ப்ரபா
விளக்குற்ற -தன்னை பேணாமல் இருந்த -விண்ணப்பம் செய்யப்பட்ட -திருவடியால் விளக்கப் பட்ட
விளங்கப் பெற்ற பெருமை -தானே வழிய சிறை புகுந்து தேவ ஸ்திரீகள் விலங்கை மீட்ட தான் விலங்கு பூட்டிக் கொண்ட பெருமை
சிறை இருந்தவள் ஏற்றம் -இந்த பாசுரம் கொண்டே வியாக்யானம் –
கிளி மொழியாள் -மதுரா மதுரா லாப -கொண்டாடி -வரத்தாலே பலத்தாலே பையல்
குடி இருப்பை அழித்து –
களி மலர் துழாய் -எதை அணிந்து இருந்தாலும் திரு துழாய் அம்சம்
அவன் மனுஷ்யனாக அவதரிக்க திரு துழாயும் -கலம்பகமும் வர்ணங்கள் கொண்ட கதம்பமாகவும்
பாண்டிய ராஜர் வேம்பு போலே கவி பாடுவார் போலே
சம்சாரிகள் துக்கம் போக்கும்
பிராட்டி இளைய பெருமாள் அகற்றி -தேவதைகள் பிரார்த்திக்க -தர்ம கார்யம் செய்ய எம தர்மனுக்கு வேலை இன்றி
துர்வாசர் மூலம் -செய்தி அனுப்பி -கிளப்ப வேண்டும்படியாய் இ றே இருப்பது
கடல் ஞாலத்து அளி மிக்கவன்
அவனும் விரும்பாத ஞானத்தால் என்ன பலன்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply