திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நிறையினால் குறையில்லா நெடும்பணைத்தோள்
மடப்பின்னை
பொறையினால் முலைஅணைவான், பொருவிடைஏழ்
அடர்த்துஉகந்த
கறையினார் துவர்உடுக்கைக் கடையாவின்
கழிகோல்கைச்
சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறையிலமே.

    பொ-ரை : ‘நிறை என்னும் குணத்தாலே குறைவற்றிருக்கின்ற, நீண்ட மூங்கில் போன்ற தோள்களையுடைய மடப்பம் பொருந்திய நப்பின்னைப்பிராட்டியின் தனங்களைச் சேரும்பொருட்டுப் பொறையினாலே, போர் செய்கின்ற இடபங்கள் ஏழனையும் கொன்று மகிழ்ந்த, கறை தோய்ந்த துவர் ஊட்டின உடுக்கையினையும், கடையாவினையும் கழிகோலினையுமுடைய கையினையுடைய சறையினார் விரும்பாத தளிர் போன்ற நிறத்தால் யாதொரு பயனையும் உடையோமல்லோம்,’ என்கிறார்.

    வி-கு : ‘குறை இல்லாப் பின்னை’ என்க. ‘பின்னையினது முலை அணைவான் பொருவிடை ஏழனைப் பொறையினால் அடர்த்து உகந்த சறையினார்,’ என்க. ‘துவர் உடுக்கைச் சறையினார்’ என்றும், ‘கடையாவினையும் கழிகோலினையுமுடைய கையையுடைய சறையினார்’ என்றும் ‘தனித்தனியே கூட்டுக. ‘கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழிகோற்கைச் சறையினார்’ என்றதன் பொருளை வியாக்கியானத்திற் காணலாகும்.

    ஈடு : நான்காம் பாட்டு. 2‘தன்னைப் பேணாமல், பெண் பிறந்தாரைப் பேணும் கிருஷ்ணன் விரும்பாத நிறம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.

நிறையினால் குறை இல்லா – 1கிருஷ்ணன், தன்னைப் பெறுகைக்கு எருதுகளின்மேல் விழுகிற செயல்களில் தான் வேறுபடாதவளாய் இருக்கிற பெண் தன்மையில் குறைவற்றிருக்கை. என்றது, வேறுபடுதற்குக் காரணம் உண்டாய் இருக்கத் தான் வேறுபடாதவளாய் இருந்தபடி. நெடும்பணைத்தோள் -மேல் ஆத்தும குணம்சொல்லிற்று; இங்கு உருவத்தின் குணம் சொல்லுகிறது. 2‘நெடியதாய்ப் பணைத்த தோள்’ என்னுதல்; ‘நெடிய மூங்கில் போலே இருந்த தோள்’ என்னுதல். இதனால், 3‘அரியன செய்தும் பெற வேண்டும்படிகாணும் வடிவழகு இருப்பது’ என்பதனைத் தெரிவித்தபடி.

    மடம் பின்னை – மிருதுத்தன்மையுடையவள். முலை அணைவான் -சேர்க்கைக்காக. பொறையினால் – துன்பத்தைப் பொறுக்குந்தன்மையனாய். என்றது, ‘எருதுகளின் கொம்பாலும் குளம்பாலும் நெருக்குண்ட இதனை, அவள் முலையாலே பிறந்த 4விமர்த்தமாக நினைத்திருந்தான்,’ என்றபடி. பொரு விடை ஏழ் அடர்த்து – கேவலம் இடபங்கள் அல்ல கண்டீர், அசுர ஆவேசத்தாலே யுத்த சன்னத்தங்களாய் வந்தவை ஆதலின், ‘பொரு விடை’ என்கிறது. ஒன்று இரண்டு அல்ல; ஏழு ஆதலின், ‘ஏழ்’ என்கிறது. அவற்றை ஒருகாலே ஊட்டியாக நெரித்து. உகந்த – ‘இனி நாம் இவளைப் பெற்றோமே!’ என்று உகந்தான். நப்பின்னைப்பிராட்டியை 5விடைகொண்டு வந்து காணும் கைப்பிடித்தது. ‘நிறையினால் குறையில்லா நெடும்பணைத் தோள் மடப்பின்னை முலை அணைவான் பொறையினால் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த’ எனக் கூட்டுக.

கறையினார் துவர் உடுக்கை – கறை மிக்குத் 1துவர் ஊட்டின சிவந்த தோலாயிற்று உடுக்கை. காட்டில் பழங்களைப் பறித்து இடுகையாலே கறை மிக்கு இருக்கும்; அதனால், கறைமிக்க துவர் ஆயிற்று உடுக்கை;’ அதனை நோக்கிக் ‘கறையினார் துவர்’ என்கிறது. ‘உடுக்கை’ என்றது, ஆயர்கள் காட்டிற்குப் போகும் போது முள் கிழியாமைக்கு உடுக்கும் உடைத்தோலைச் சொல்லுகிறது. 2இதனால், ‘அரையில் பீதகவண்ண ஆடை வேண்டாள் ஆயிற்று இவள்; பசுக்களைக் காப்பாற்றின வடிவோடே அணையக் கணிசிக்கிறாள்,’ என்றபடி.

திருப்பீதாம்பரத்தைச் சொல்லாமல், தோலைச் சொல்லுவான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இதனால்’ என்று தொடங்கி.

  ‘பெண்ணின் வருத்த மறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை
கொண்டுஎன்னை வாட்டந் தணிய வீசிரே.’

  என்பது நாய்ச்சியார் திரு. 13 : 1.

  கணிசிக்கிறாள் – விரும்புகிறாள்.

கடையாவின்கை – உரிய காலங்களிலே கறப்பதற்குக் கையிலே கடையவும் கொண்டாயிற்றுத் திரிவது; கடையா – மூங்கிற்குழாய். கழிகோல்கை -மூங்கிற்குழாயையும் வீசுகோலையும் கையிலேயுடையவர். கழிகோல் – வீசுகோல்.  அன்றிக்கே, 3 ‘கொடுவைப் பசுக்களை நியமித்துக் கறக்கைக்கு வீசுகோலைக்  கையிலே கொண்டு திரியுமவர்’ என்னலுமாம். அன்றிக்கே, ‘கழிகோல்’ என்பதற்கு, ‘முன்னணைக்கன்று  பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்குக் கொறுக்கோல் என்பது ஒன்றனை அதன் முகத்திலே கட்டிவிடுவார்கள்; அதனைச் சொல்லுதல்’ என்னுதல். 4சந்யாசிகள் தந்தாமுக்கு என்ன ஓர் இருப்பிடம் இல்லாமையாலே மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக் கொண்டு திரிவார்கள் ஆயிற்று; அவர்கள் போன்று பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ளவிடத்திலே தங்குவார்களித்தனையன்றோ இவர்களும்?சறையினார் – 1சறைகைமணி என்று ஒரு மணி உண்டாயிற்று, ஆயர்கள் அரையிலே கோத்துக்கட்டி முன்னே போகாநின்றால் அந்த ஒலியின் வழியே பசுக்கள் எல்லாம் ஓடி வரும்படியாய் இருப்பது ஒன்று; அதனையுடையவர்கள். அன்றிக்கே, ‘சறை’ என்று தாழ்வாய்’ ‘முதன்மை பெற்ற சாதிகளில் ஒக்க எண்ண ஒண்ணாத தாழ்ந்த ஆயர் குலத்திலே பிறந்தவர்’ என்னுதல். அன்றிக்கே, ‘சறை’ என்று சறாம்புகையாய், ‘மற்றைய ஆயர்கள் விஷூ அயந சங்கிரமணங்களுக்கு உடம்பு இருக்கத் தலை குளித்தல், உடம்பிலே துளி நீர் ஏறிட்டுக்கொள்ளுதல் செய்வர்களாகில், இவன் அவ்வாறு செய்வதற்கும் காலம் இன்றி இருக்குமாயிற்றுப் பசுக்களின் பின்னே திரிகையாலே,’ என்னுதல். 2பாதுகாக்கப்படுகின்ற பொருள்களைப் பாதுகாத்தலுக்காகத் தன்னைப் பேணாத அவ்வடிவை அணைப்பதற்காயிற்று இவள் ஆசைப்படுகின்றது. என்றது, 3‘பிராட்டி, ஆசாரத்தை முக்கியமாகக் கொண்ட ஜனககுலத்திற் பிறந்தவளாகையாலே, ‘தீக்ஷிதம்’ என்ற சுலோகத்திற்கூறிய அவ்வடிவை விரும்பியது போன்று, ஆசார நிர்ப்பந்தமில்லாத ஆயர் குலத்தில் பிறந்தவளாகையாலே இவ்வடிவை விரும்பினாளாயிற்று இவள்,’ என்றபடி.

    கவராத தளிர் நிறத்தால் குறை இலம் – அவன் விரும்பாத பிரமசாரி நிறத்தால் என்ன காரியம் உண்டு? என்றது, 4இராவணனைக் கொன்ற பின்பு பிராட்டி நீராடி

எழுந்தருளின போதை நிறம்போலே அவனுடைய வெறுப்புக்கு விஷயமான நிறம் நமக்கு என் செய்ய?’ என்றபடி. 1‘இவளைப் போன்று மற்றைப்பிராட்டிமாரில் இப்படி நிறத்தைப் பற்றிச் சொன்னார் இலரே? முதற்பாட்டில் ‘மணி மாமை குறையிலம்’ என்றாள்; இப்பாட்டில் ‘தளிர் நிறத்தால் குறையிலம்’ என்கிறாள்; இவற்றுக்கு வாசி என்?’ என்னில், அங்கு, ‘மணிமாமை’ என்று அழகையும் மென்மையையும் சொல்லிற்று; இங்கு, நிறத்தைச் சொல்லிற்று. அன்றிக்கே, அங்கு நிறத்தைச் சொல்லிற்றாகில், இங்குச் சேர்க்கையால் உண்டாய அழகிய நிறத்தைச் சொல்லுகிறது.

    2தீக்ஷிதம் – ‘உறுப்புத்தோலும் வெண்ணெய் பூசின உடம்புமான யஜமான வேஷத்தோடே நின்ற நிலையைக் காண ஆசைப்படாநின்றேன்’ என்கிறாள். விரத சம்பந்நம் – முனிவன் ஒரு பட்டினி விடச்சொன்னானாகில், ‘இவன் நம்முடைய மென்மைத் தன்மைக்குப் பொறாது என்று சொன்னானித்தனை,’ என்று நினைத்து, நான்கு பட்டினி விட ஒருப்படுவாராயிற்றுத் தர்ம சிந்தையாலே. வராஜிந தரம் – கூறையுடையையும்  காற்கடைக்கொள்ள வேண்டும்படியிருக்கை. சுசிம் – ‘ஒரு பெண்ணையும் தீண்டலாகாது; தர்மபத்நியாகையாலே பிராட்டியைத் தீண்டினால் வருவதொரு குற்றம் இல்லையேயன்றோ?’ ஆன பின்னர், அஃதொழியப் பரிஹரிப்பது’ என்றால், அது தன்னிலும் ஐயங்கொண்டு, பிராட்டியுடைய திருப்பரிவட்டம் தாக்கினாலும் முழுகத் தேடா நிற்பர். குரங்கசிருங்கபாணிஞ்ச – ‘வில்லையுடையவர், ஏகவஸ்திர தரோ தந்வீ – ஒரே வஸ்திரத்தைத் தரித்தவர்,’ என்னுமதைக்காட்டிலும், கையும் கலைக்கொம்புமாய் இருக்குமதுதானே போந்திருக்கை? பஸ்யந்தீத்வா பஜாம்யஹம் – பகவானைத் துதி செய்வார் செய்வனவெல்லாம் இவ்வுலக இன்பத்துக்கேயன்றோ? ஆகையாலே, இவ்வுலக

இன்பத்துக்காகத் துதிக்கிறாள்காணும். 1அங்கும் ‘சதாபஸ்யந்தி – எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருப்பதேயன்றோ?

    ‘நன்று; வழியில் கண்ணெச்சில் வாராமல் மங்களாசாசனம் செய்கிற இடத்தில், திருவபிஷேகத்திற்கு அங்கமானவற்றை ஆசைப்படுவான் என்?’ எனின், மேல் வரும் பலத்தை விரும்பவே, நடுவில் உள்ளது தன்னடையே வருமே அன்றோ என்னுமதனைப் பற்றச் சொல்லுகிறாள். என்றது, ‘வழிப்போக்கில் கண்ணெச்சில் வாராதொழிய வேண்டும்’ என்றேயன்றோ மங்களாசாசனம் பண்ணுகிறது? மேல் வரும் பலத்தை விரும்பவே, அது தன்னடையே வருமே அன்றோ?’ என்றபடி. 2சாவித்திரி தன் கணவனைக் காட்டி, ‘இவனுக்கு நான் பல பிள்ளைகளைப் பெறவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டாளே அன்றோ?    

அவன் விரும்பாத நிறமும் வேண்டாம்
தன்னைப் பேணாமல் பெண்ணை பேணும்
நிறையினால் குறை வில்லா -பணைத் தோள் -நப்பின்னை அடைய
எருதுகளை அடர்த்து
கறையினார் துவர் உடுக்கை
கழி கோல் கை சறை -உடுக்கை
பூர்த்தி -கிரிஷ்ணனை பெற -அவன் எருதுகள் மேல் விழுந்தாலும் கவலை இன்றி –
அறிவாள் அவன் வெல்வான் என்று -ஸ்த்ரீத்வம் பூரணமாக இருந்த நப்பின்னை பிராட்டி
இத்தாலே ஆத்ம குணம் சொல்லி மேலே ரூப குணம் -நெடிதாய் பணைத்த தோள்

பணை’ என்பதற்குப் பருத்த என்றும், மூங்கில் என்றும் இரு பொருள் உண்டு.    

அரியன செய்து பெற வேண்டும்படி இருக்கும் படி
மடப்பின்னை மிருதுவான
பொறையினால் -கொம்பால் பொறு விடை -ஏழு எருதுகளையும் கட்டி நெறித்து
ஊட்டி கழுத்திலே உணவாக
உகந்த -நப்பின்னை பிராட்டியை -விடை கொண்டு வந்து காணும் கைப் பிடித்தது
உடுக்கை கறை பட்ட -பழங்கள் -துவர்
முள் கிழியாமை என்பதருக்கு உடுத்த
பீதக வாடை வேண்டாமல் இடைச்சி பாவம்மிக்கு
கடையா -மூங்கில் குழாய்
கழி கோல் -மேய்க்க வைத்த கோல்
கடையா -துஷ்ட பசுக்களை கறக்க கோலை கொண்டு
கொறு க்கொல் மூஞ்சிலே கன்றுக்கு கட்டுவதாம்
சன்யாசிகள் கமண்டலம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு போவது போலே
இவனும் அனைத்தும் கொண்டு போவானே
மணி ஓசை கேட்டு பசுக்கள் பின் வருமாம்

சறகை மணி
சறை -தாழ்ந்த இடையர் குலம்
விஷூ அயன சங்கிரமண ங்களுக்கு குளிப்பார் -உடம்பு இருக்க தலை குளிப்பர் மற்றையவர்
இவன் அது கூட இன்றி பசு பின்பே போவானாம்
தன்னை பேணாமல் பசுக்களை பேணி பின் செல்வானே
ரஷ்ய வர்க்கத்துக்கு தன்னை பேணாமல் -அந்த வடிவை அணைக்க ஆசைப் படுகிறாள்
தீஷிதம் இது, ஸ்ரீராமா. ஆரண். 18 : 12.

நிறத்தால் முதலில் சொல்லி
இங்கும்
அங்கு அழகும் மென்மையும் இங்கு நிறத்தை சொல்லி
அங்கு நிறத்தை சொல்லி இங்கு சேர்க்கையால் வந்த நிறம் –
ஷத்ரியன் நிறம் சேவிக்க சீதை பிராட்டி ஆசைப்பட்டது போலே இவள் ஆயர் குல வேஷம் விரும்பி

நப்பின்னை பிராட்டியும் பராங்குச நாயகியும் இடைச்சி பாவத்தால்
கையும் கோலுமான -கறை கொம்பை கையில் கொண்ட கோபாலானை காண –
வ்ரதம் -ரிஷி ஒரு நாள் இருக்க சொன்னாலும் ஈடுபாடு மிக்க நாலு பட்டினி விட்டு பெருமாள் இருக்க –

ஸ்திரீகள் தீண்ட கூடாது -பிராட்டி புடவைத் தலைப்பு பட்டாலும் தீர்த்தமாடி -நிற்பர்
ஆசார்ய சீலன் –
பார்த்தால் -அனைத்துக் கொள்ள தானே வருமே –
பஸ்யந்தி -பகவத் குணம் அனுபவிப்பார் த்ருஷ்ட பலத்துக்கு -இந்த லோக பலனுக்கு
அத்ருஷ்ட பலத்துக்கு ஸ்தோத்ரம் பண்ண
இவரும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார் –
அங்கும் சதா பஸ்யந்தி  இ றே

கண் எச்சில் வாராமல் இருக்க மங்களா சாசனம் செய்பவர்கள்
சாவித்திரி பர்தாவைக் காட்டி அநேகம் பிள்ளைகளை பெற வேண்டும் வரம் கேட்டு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading