அறிவினால் குறையில்லா அகல்ஞாலத் தவர்அறிய,
நெறிஎல்லாம் எடுத்துஉரைத்த நிறைஞானத்து ஒருமூர்த்தி,
குறியமாண் உருவாகி, கொடுங்கோளால் நிலங்கொண்ட
கிறிஅம்மான் கவராத கிளர்ஒளியால் குறையிலமே.
பொ-ரை : ‘அறிவு ஒன்றில் மாத்திரம் குறைபாடு இருப்பதை அறியாத அகன்ற உலகிலேயுள்ள மக்கள் அறியும்படியாக உபாயங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கூறிய நிறை ஞானத்து ஒரு மூர்த்தியும், சிறிய பிரமசரிய வடிவங்கொண்டு கொடிய செயலாலே உலகத்தை அளந்துகொண்ட விரகையுடைய தலைவனுமான சர்வேசுவரன் விரும்பாத மிக்க ஒளியால் யாதொரு பயனையும் உடையேம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு : ‘மூர்த்தியாகிய அம்மான், ஆகிக் கொண்ட அம்மான்’ என்க. கிறி – விரகு; உபாயம்.
ஈடு : ஆறாம் பாட்டு. 3‘அறிவில்லாதார்க்குத் தன்னை அடைவதற்குரிய உபாயங்களை உபதேசித்து, அறிவு பிறத்தற்குத் தகுதியில்லாதாரை வடிவழகாலே தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன் விரும்பாத மிக்க ஒளியால் என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.
அறிவினால் குறை இல்லா – அறிவினால் குறைவுபட அறியாத. அறிவு ஒன்றிலும் ஆயிற்றுக் குறைவுபட
அறியாதது. என்றது, ‘நாட்டார் 1அன்னம் பானம் முதலிய எல்லாவற்றாலும் காரியமுடையராய் இருப்பார்களே அன்றோ? அறிவால் காரியம் இன்றிக்கே இருப்பார் ஆயிற்று,’ என்றபடி. அகல் ஞாலத்தவர் அறிய – பரப்பையுடைத்தான பூமியில் அறிவில் குறைவுபட அறிவார் ஒருவரும் இலர் ஆயிற்று; ஆதலால், கல்லைத்துளைத்து நீரை நிறுத்தினாற்போலே இவர்கள் நெஞ்சிலே படும்படி செய்தானாதலின், ‘அறிவினால் குறை இல்லா அகல் ஞாலத்தவர் அறிய’ என்கிறது. நெறி எல்லாம் எடுத்து உரைத்த – கர்மயோகம் முதலாகப் பிரபத்தி யோகம் முடிவாக எல்லா உபாயங்களையும் விளக்கமாக உபதேசித்தபடி. 2ஆத்துமாக்களினுடைய பேதங்களைப் போலே போருமே அன்றோ உபாயங்களினுடைய பேதங்களும்? ஆதலின், ‘நெறி எல்லாம்’ என்கிறது. என்றது, ‘கர்ம ஞான பத்திகள், அவதார ரஹஸ்ய ஞானம், புருஷோத்தமவித்தியை, ஆத்துமாவினுடைய உண்மைத்தன்மை, விரோதிகள் போவதற்குப் பிரபத்தி, கைவல்யத்தை அடைவதற்குப் பிரபத்தி, பகவானை அடைதற்குப் பிரபத்தி இவை அடங்க விளக்கமாக அருளிச்செய்தவன்,’ என்றபடி.
3கர்மயோகத்தை உபதேசிக்க, அவன் ‘இந்திரியங்களை அடக்குதல் அரிது,’ என்ன, ‘ஆகில், என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று கர்மத்தை அநுஷ்டித்தாரைச் சொல்லி, அங்ஙனம் சொல்லுமுகத்தாலே அவதார ரஹஸ்யத்தைஉபதேசித்து, பின்னர் ஞானயோகத்தை உபதேசித்து, ‘ஞானத்தின் தெளிவிற்கு உறுப்பாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று பின்பு பத்தியோகத்தை உபதேசித்து, அங்கு ‘விரோதியாகிய பாபங்கள் அழிவதற்கும் பத்தி அதிகரிப்பதற்குமாக என் பக்கலிலே நெஞ்சை வை’ என்று, பின்னர், 1‘எந்த இறைவனிடத்திலிருந்து சமுசாரத்தின் சம்பந்தமானது நீண்ட காலமாகப் பரவி இருக்கிறதோ, 2அந்தச் சர்வேசுவரனையே அடைக்கலமாக அடைவாய்,’ என்றும், 3‘சத்யசங்கல்பம் முதலான குணங்களோடு கூடின என்னையே எவர்கள் சரணம் அடைகின்றார்களோ,’ என்றும் அவற்றுக்கு உறுப்பாகப் பிரபத்தியை விதித்து, அவ்வழியாலே சொரூப ஞானத்தைப் பிறப்பித்து, 4‘என்னுடைய இந்த மாயைதானே மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் இந்த எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது,’ என்று தொடங்கி, 5‘ஜீவசொரூபமானதும் எனக்கு வயப்பட்டது ஆனதுமான பிரகிருதியைச் சிரேஷ்டம் என்று அறி,’ என்கிறபடியே, அறிவுடைப்பொருள்களும் அறிவில் பொருள்களும் தனக்குச் சரீரம் என்று கூறி, அவ்வழியாலே ஒருவன் தன் பேற்றுக்கு உபாயமாக ஒன்றனைச் செய்வதற்குத் தனக்குத் தகுதியின்றிக்கே இருக்கிறபடியைக் காட்டி, 6‘இவைதாம் செய்து தலைக்கட்டப்போகாது,’ என்று சொல்லும்படி இதன் அருமையை அவன் நெஞ்சிற்படுத்தி, 7அவன்தான் அறிந்து கேட்டவற்றிற்குப் பரிஹாரம் சொல்லி, 8அவன் அறியாதே கேட்க மாட்டாதவற்றையும்
தானே அறிவித்து, பிரபத்தி மார்க்கம் முடிவாக உபதேசித்தபடியைச் சொல்லுகிறது.
‘ஒருவன் சொன்னான்’ என்ற அளவில் அது பிரமாணமாமோ? நம்பத் தக்கதாக வேண்டாவோ?’ என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார் மேல் : நிறை ஞானத்து ஒருமூர்த்தி – நிறைந்த ஞானத்தை உடைத்தான ஒப்பற்றதான சொரூபத்தையுடையவன். என்றது, ‘இத்தலையில் அறிவு இன்மையால் இவனுக்கு அழிவு வாராதபடியான ஞானபூர்த்தியையுடையவன்’ என்பதனைத் தெரிவித்தபடி. 1பிரமாணமாய் எல்லார்க்கும் ஞானத்தைப் பண்ணிக் கொடுப்பதான வேதத்தினுடைய என்றும் உளதாம் தன்மையும், புருஷனால் செய்யப்படாத தன்மையும் தன் அதீனமாம்படி அவற்றை நினைத்துச் சொல்லுமவனாய் உள்ளவன். 2வேதார்த்தத்தை விரித்து அருளிச்செய்தவன். குறிய – கோடியைக் காணியாக்கிக்கொண்டாற்போலே, வளர்ந்த போதையிற்காட்டிலும் கவர்ச்சிகரமாய் இருக்கிறபடி. மாண் உருவாகி – 3பிறந்த போதே இரப்பினை மேற்கொண்டு, அதுவே பயிற்சியாய் இருந்தபடியாலே, ‘பிறப்பதற்கு முன்பெல்லாம் இதுவேயோ செயல்?’ என்னும்படிக்குத் தகுதியாக ஆயிற்று, 4‘உண்டு’ என்று இட்ட போதோடு ‘இல்லை’ என்று சொல்லிக் கதவு அடைத்த போதோடு வாசி அற முகமலர்ந்து போகும்படிக்குத் தகுதியாக ஆயிற்று இரப்பிலே தழும்பு ஏறினபடி. ஆக, ‘அறிவிக்கக் கேளாதாரை 5வடுக விடுநகம் இட்டு வடிவழகாலே
தனக்கு ஆக்கிக்கொள்ளுமவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.
கொடுங்கோளால் – 1வெட்டிய கோளாலே; என்றது, வடிவழகைக் காட்டி அவனை வாய் மாளப் பண்ணினபடியைத் தெரிவித்தபடி. அன்றிக்கே, ‘கொடு’ என்றதனைக் ‘கோடு’ என்றதனுடைய குறுக்கல் விகாரமாகக் கொண்டு, ‘கோடு’ என்பதற்கு விலங்குதல் என்று பொருள் கூறி, ‘விலங்குதலாவது, செவ்வைக்கேடு’ என்று கொண்டு, ‘செவ்வைக் கேடாவது, மூன்று அடி கேட்டு இரண்டு அடிகளாலே அளப்பது; சிறு காலைக் காட்டிப் பெரிய காலாலே அளப்பது; ஆக, இப்படிகளாலே அவனை வஞ்சித்தபடியைச் சொல்லுகிறது என்னுதல். என்றது, தீய உபாயத்தைப் பிரயோகம் செய்தவர்களுக்கு அதற்குத் தகுதியாக உத்தரம் சொல்லுவாரைப் போலே, அவன் செவ்வைக்கேட்டிற்குத் தகுதியாகத் தானும் செவ்வைக் கேடனாய்க்கொண்டமையைத் தெரிவித்தபடி. கிறி அம்மான் – அவன் தரும் விரகு அறிந்து வாங்க வல்ல பெருவிரகனான சர்வேசுவரன். 2‘பெருங்கிறியான்’ –திருவிருத்தம், 91.-என்னக் கடவதன்றோ? கவராத கிளர் ஒளியால் குறை இலமே – செவ்வை கெடவாகிலும் தன்னுடைமையைத் தனக்கு ஆக்கிக் கொள்ளுமவன், முன்னரே இசைந்து தன்னைப் பெறவேண்டும் என்றிருக்கிற எனக்கு வந்து முகங்காட்டித் தனக்கு ஆக்கிக்கொள்ளாத பின்பு எனக்கு இத்தால் காரியம் உண்டோ? கிளர்ஒளி – மிக்க ஒளி; என்றது, சமுதாய சோபை.
அறிவு இல்லாதாருக்கு உபாயம் உபதேசித்து
வடிவு அழகால் எழுதிக் கொண்ட
கிளர் ஒளியால் என்ன பலன் –
நெறிகள் உபாயம்
குள்ளமான வடிவம் கொண்டு
உபாயம் அறிந்த வாமனன்
அறிவினால் குறை இல்லா
கீதை லோகத்தாருக்கு உபதேசித்து
அறிவு உள்ளவர்களுக்கு இல்லை
நம்பிள்ளை -அன்னம் பானம் இல்லாமல் குறை இருக்கலாம்
அறிவு இல்லை என்று யாரும் குறை பட வில்லையே
கல்லை துளைத்து நீரை நிரப்புவது போலே உபதேசித்து
ஆசை பல விதம்
கீதை
கர்ம யோகம் முதலாக பிரபத்தி வரை உபதேசித்து
நெறி எல்லாம் எடுத்து உரைத்து
கர்ம ஞான பக்தி யோகம் அவதார ரகசியம் புருஷோத்தமா வித்தை விசத தமமாக
ஸ்வரூப யாதாத்ம்யம்
விரோதி நிவ்ருதிக்கு பிரபத்தி
பகவத் லாபத்துக்கு பிரபத்தி
சர்வ பலத்துக்கும் பிரபத்தி உண்டே
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply