திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-8-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

மடநெஞ்சால் குறையில்லா மகள் தாய்செய்து ஒருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத்து அணைக்கிடந்த பருவரைத்தோட் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறையிலமே.

    பொ-ரை : ‘மடப்பம் பொருந்திய நெஞ்சத்தால் குறைவில்லாத தாய்மகளாகத் தன்னைச் செய்துகொண்டு வந்த ஒரு பேயாகிய பூதனையினது மிக்க விஷத்தையுடைய முலையைச் சுவைத்துப் பால் குடித்த மிகுந்த ஞானத்தையுடைய சிறிய குழவியும், படத்தையுடைய பாம்பின் படுக்கையிலே சயனித்திருக்கின்ற பெருத்த மலை போன்ற தோள்களையுடைய பரம்புருடனும், நெடுமாயனுமான சர்வேசுவரன் விரும்பாத நிறை என்னும் குணத்தால் யாதொரு பயனுமுடையோம் அல்லோம்,’ என்றவாறு.

    வி-கு : மனித வடிவிலே தாய் உருவத்தோடு வந்தவளாதலின், ‘மகள் தாய்’ என்கிறாள். மகள் என்பது, மக்கள் என்ற சொல்லின் சிதைவு. ‘விடம் நஞ்சம்’ என்பன, ஒரு பொருட்சொற்கள். ‘மிகு ஞானம்’ என்றது, ஈண்டுச் சுவை உணர்வையுணர்த்திற்று. குழவி – குழந்தை. பரம்புருடன் – புருடோத்தமன்.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 2‘பகைவர்களை அழிக்கும் ஆற்றலையுடையனாய், வேறுபட்ட மிக்க சிறப்பினையுடையனாய்,

முன்னர் என் பக்கல் மிக்க காதலையுடையன் ஆனவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா,’ என்கிறாள்.

    மடம் நெஞ்சால் குறை இல்லா – மடப்பமாவது, மென்மை; அதாவது, நெஞ்சில் நெகிழ்ச்சி. என்றது, 1முலை உண்ணும்போது யசோதைப்பிராட்டிக்குப் பிறக்கும் பரிவையும் ஏறிட்டுக்கொண்டு வந்தபடி. 2‘அகவாயில் உள்ளது பகைமையாய் இருக்கச்செய்தே, அத்தை மறைத்துக்கொண்டு, அன்பு தோற்ற வந்தவள்’ என்பதனைத் தெரிவித்தபடி. மகள் தாய் செய்து – தாய் மகள் செய்து; என்றது, ‘பேயான தான் மனித வேடத்தைக் கொண்டு, அதுதன்னிலும் 3‘பெற்ற தாய் போல்’ –பெரிய திருமொழி, 1. 3 : 1.-என்கிறபடியே, தாய் வடிவைக் கொண்டு வந்தவள்’ என்றபடி. மகள் என்பது மனிதர்கட்குப் பெயர். மகள் – மக்கள். ஒரு பேய்ச்சி – இஃது என்ன வஞ்சனைதான்! ‘வஞ்சனைக்கு ஒப்பற்றவள்’ என்றபடி. அன்றிக்கே, ‘நலிய வந்தாள்’ என்னும் கோபத்தாலே விருப்பம் இல்லாத வார்த்தையாகவுமாம்.

    விடம் நஞ்சம் – விஷம் என்றும், நஞ்சம் என்றும் மீமிசைச் சொல்லாய், ‘நாட்டில் விஷங்கள் எல்லாம் அமிருதம் என்று சொல்லக் கூடியதான விஷம்’ என்னுதல். அன்றிக்கே, பேய்ச்சிவிட – பேயானவள் உயிரை விடும்படி, நஞ்சம் முலை சுவைத்த – ‘நஞ்சு முலையை அமுது செய்த’ என்னுதல். என்றது, ‘அம்முலை வழியே உயிரை வற்ற வாங்கி உண்ட வாயான்’ என்கிறபடியே, பாலும் உயிரும் ஒக்க வற்றி வரும்படி சுவைத்தமையைத் தெரிவித்தபடி. 4‘உயிரோடு குடித்தான்’ என்னக் கடவதன்றோ?

மிகு ஞானச் சிறு குழவி – 1இளமைத்தன்மையில் கண்ணழிவற்று இருக்கச்செய்தேயும், சுவை உணர்வாலே, ‘இது தாய் முலை அன்று; வேற்று முலை,’ என்று அமுது செய்தான். 2அன்றிக்கே, ‘அவள் தாயாய் வந்தாலும், இவன் ‘தாய்’ என்றே முலை உண்டாலும், பொருளின் தன்மையாலே வருமது தப்பாதே அன்றோ? அத்தாலே தப்பிற்றித்தனை,’ என்னுதல்.

    படம் நாகத்து அணைக் கிடந்த – 3உணவுக்குத் தகுதியாகக்காணும் கிடந்தபடியும். நஞ்சை உண்டு நஞ்சு அரவிலே அன்றோ கிடக்கிறது? நஞ்சுக்கு நஞ்சு மாற்றே அன்றோ? 4விரோதியை அழியச் செய்து படுக்கையிலே சாய்ந்தபடி. 5அன்றிக்கே, ‘திருவனந்தாழ்வானாகிற கட்டிலை விட்டுவிட்டு’ என்கிறபடியே, படுக்கையை விட்டுப் போந்து விரோதியைப் போக்கினபடி’ என்னுதல். 6அடியார்களுடையக்கக்குரல் கேட்டால்  போகத்திலே நெஞ்சு பொருந்தாதே அன்றோ? சர்வேசுவரன் திருமேனியிலே சாய்கையால் உண்டான சந்தோஷத்தாலே விரிந்த படங்களையுடையவனாதலின், ‘படநாகம்’ என்கிறது. 1அசுரர்களுடைய கூட்டம் கிட்டினால் ‘வாய்ந்த மதுகைடபரும் வயிறு உருகி மாண்டார்’ என்று முடியுமாறு போலே ஆயிற்று, அன்புள்ளவர்கள் கூட்டம் கிட்டினால் வாழும்படி.

    பரு வரைத் தோள் – 2திருவனந்தாழ்வானுடைய சம்பந்தத்தால், ஒரே தன்மையதான விக்கிரஹத்துக்குப் பிறக்கும் வேறுபாட்டைச் சொல்லுகிறது. 3‘கர்மங்காரணமாக வருகின்ற வேறுபாடுகள் இல்லை’ என்ற இத்தனை போக்கி, அடியார்களுடைய சேர்க்கையில் வேறுபாடு இல்லை எனில், அவ்வஸ்துவை அணைய ஆசைப்பட வேண்டாவே? பரம்புருடன் – தகட்டில் அழுத்தின மாணிக்கம் நிறம் பெறுமாறு போன்று, திருவனந்தாழ்வான் மேலே சாய்ந்த பின்பாயிற்று ‘அறப்பெரியன்’ என்று தோன்றிற்று. நெடு மாயன் – 4என் மடியில் சுவடு அறிந்த பின்பு படுக்கையில் பொருந்தி அறியாதவன். கவராத நிறையினால் குறை இலமே –

நெடுமாயன்’ என்பதற்கு மிக்க வியாமோகத்தையுடையவன் என்று பொருள்
கூறத் திருவுள்ளம் பற்றி, ‘மிக்க வியாமோகத்தை உடையனாகையாவது யாது?’
என்ன, ‘என் மடியில்’ என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
மடி – வயிறு. சுவடு – இனிமை. ‘என் மடியில் சுவடு’ என்ற இவ்விடத்தில்,
‘கண்ணன் என் ஒக்கலையானே’ என்னும் மறைமொழி அநுசந்திக்கத்தகும்.
  திருவாய். 1. 9 : 4

அப்படி ஆதரித்தவன் இப்படி உபேக்ஷித்த பின்னர், எனக்கு என்னுடைய பெண்மையால்என்ன காரியம் உண்டு? 1நிறை அடக்கம்’ என்றது, ‘தன்னகவாயில் ஓடுகிறது பிறர்க்குத் தெரியாதபடி இருக்கும் பெண் தன்மை.’

நிறை -அடக்கம் வேண்டாம் என்கிறார் இதில்
பூதனை நிரசனம்
அத்யந்த விலஷணன்
மடப்பமான நெஞ்சு -இல்லாமல் வந்த
தாய் போலே வந்த
விட நஞ்சு மீமிசை போலே
மிக்க ஞானம் உடைய -சிறு குழவி –
பாம்பணை மேல் சேர்ந்த பரம் புருடன்
நெஞ்சில் நெகிழ்ச்சி இன்றி -யசோதை போலே ஏறிட்டு கொண்டு -தாய் உருவாக்கி கொண்டு –
தாய் மக்கள் -தாய் மகள் மனுஷ்ய வேஷம் கொண்ட பேய் -தாய் வேஷம் கொண்ட பேய்ச்சி
வஞ்சனைக்கு ஒப்பு இன்றி
விடம் நஞ்சம் -மீ மிசை அதிக விஷம் -நாட்டில் விஷம் எல்லாம் அமிர்தம்
பேய்ச்சி உயிர் விட நஞ்சை அமுது செய்தான் -என்றுமாம்
நச்சு முலை அமுது செய்த

மிக ஞான சிறு குழவி
தாயாக வந்தாலும் -வேற்று முலை என்று அறிந்தவன்
வஸ்து ஸ்வாபம் தப்பாது
ஜீவாத்மா சேஷத்வம் தானே ஸ்வரூபம் அவனை பற்றி தன்னடையே வரும்
பூதனைக்கும் அவனைப் பற்றி தனது ஸ்வாபம் கிடைத்ததே
நெருப்பு சுடும் தெரியாமல் பட்டாலும் சுடுமே –
பட நாகத்து அணை கிடந்த -உண்ட நஞ்சுக்கு ஈடாக இங்கே சயனித்து அருளி

நஞ்சுக்கு நஞ்சு மாற்று இ றே
விரோதியை அழித்த ஆயாசம் தீர படுக்கையிலே சாய்ந்தபடி
படுக்கை விட்டு போந்து விரோதி அழித்த
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -ஷீராப்தி -மதுராபதி -போலே
துக்க குரல் கேட்டால் படுக்கை பொருந்துமோ
விகசிதகமான படங்கள் –
திரு வநந்த ஆழ்வான் ஸ்பர்சத்தாலே -ஏக ரூபமான
அவனுக்கும் தோள்கள் பணைத்து -பரு வரைத் தோள்
பரம் புருடன் -சர்வாதிகன் தோன்றுமே தகட்டில் அழுந்திய மாணிக்கம் போலே பிரகாசிக்கும்
நெடு மாயன் -எனது மடியில் சுவடு அறிந்து படுக்கை பொருந்தாதே
இப்பொழுது உபேஷித்து
நிறை அடக்கம் ஸ்த்ரீத்வம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading