மணிமாமை குறையில்லா மலர்மாதர் உறைமார்பன்
அணிமானத் தடைவரைத்தோள் அடல்ஆழித் தடக்கையன்
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைஇலமே.
பொ-ரை : ‘மணி போன்ற ஒளியையுடைய அழகிலே யாதொரு குறைவும் இல்லாத பெரிய பிராட்டியார் நித்தியவாசம் செய்கின்ற மார்பையுடையவனும், அழகிய பெருமை பொருந்திய விசாலமான மலை போன்ற தோள்களையும் பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் உடையவனும், கைங்கரியத்தின் அளவிலே தவறாமல் அடியேனை அடிமை கொண்ட நீலமணி போன்ற நிறத்தையுடைய மாயவனுமான சர்வேசுவரனால் விரும்பப்படாத மடநெஞ்சால் ஒரு காரியத்தையுடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு : ‘குறை இல்லாத மாதர்’ என்க. அடல் – கொல்லுதல். பணி -தொண்டு. மானம் – அளவு.
ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘மேற்பாசுரத்திற்கூறிய சீலத்துக்கும் அடியான பிராட்டியோடே கூட வடிவழகைக் காட்டி அடிமை கொண்டவன் விரும்பாத உரிமைப்பட்ட நெஞ்சால் என்ன காரியம் உண்டு?’ என்கிறாள்.
மணி மாமை குறை இல்லா மலர் மாதர் உறை மார்பன் – ‘மணி மாமை குறை இல்லா மாதர்’ என்கையாலே, தன்னைப்போன்று ‘மணிமாமை குறை இலமே’ என்ன வேண்டாதவள் என்பதனைத் தெரிவிக்கிறாள். 2அவள் எப்பொழுதும் அண்மையில் இருப்பதாலே என்னை அடிமை கொண்டவன். ‘குற்றம் செய்யாதவர் ஒருவரும் இலர்’ என்கிறவளும் கூட இருக்கச்செய்தே என்னை விரும்பாதிருக்குமாகில், என் உடைமையால் 3எனக்குதான் பிரயோஜனம் என்? மலரில் மணத்தையே
வடிவாக வகுத்தாற்போலே இருக்கையாலே ‘மலர் மாதர்’ என்கிறாள். ‘நிறமே அன்றிக்கே, பிரியத் தகாத மென்மைத்தன்மையும் உடையவள்,’ என்பாள், ‘மாதர்’ என்கிறாள். மாது – மிருதுத்தன்மை. உறை மார்பன் – அவள் நித்திய வாசம் செய்கிற திருமார்வையுடையவன். மலரில் பிறப்பு மாத்திரமேயாய், நித்தியவாசம் செய்வது மார்பிலேயாதலின், ‘உறை மார்பன்’ என நிகழ்காலத்தாற் கூறுகிறாள். 1தான் பிறந்த மலர் நெருஞ்சிக்காடு ஆம்படியான மார்வு படைத்தவன் என்பதாம்; 2‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்,’ என்றானேயன்றோ? 3முத்தன் இவ்வுலகவாழ்க்கையை நினையாதாப்போலே பூவை நினையாமலே வசிக்கும் மார்வு படைத்தவன். 4பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினைத்தாலாயிற்று, இவள் தான் பிறந்த மலரை நினைப்பது. 5அவள் ‘அகலகில்லேன்’ என்கிற மார்வை நான் இழப்பதே!
அணி மானம் தடவரைத் தோள் – 6‘எல்லா ஆபரணங்களையும் அலங்கரிக்கத் தக்க திருத்தோள்கள்’ என்கிறபடியே, ‘ஆபரணத்துக்கு ஆபரணமான தோள்’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். 7‘நீண்டும் அழகாய்த் திரண்டும் உலக்கையை ஒத்தும்’ என்கிறபடியே, ‘நீட்சியையுடைத்தாய்ச் சுற்றுடைத்தாய் ஒருவரால் சலிப்பிக்க
ஒண்ணாத தோள் படைத்தவன்’ என்பதாம். அணி – ஆபரணம். மானம் – அளவு; நீட்சி. அன்றிக்கே, ‘அணி என்று அழகாய், மானம் என்று பெருமையாய், அணி பெருகிய தோள்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர். 1அதனாலும், ‘ஆபரணத்துக்கு ஆபரணம்’ என்கிறபடியாய் இருக்கை.
அடல் ஆழித் தடக்கையன் – 2பிராட்டியும் தானுமான சேர்த்திக்குப் பரமபதத்திலுங்கூட என் வருகிறதோ என்று ஐயங்கொண்டு எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய்ப் பகைவர்களைக் கொல்லும் தன்மையையுடைய திருவாழியைத் தடக்கையிலேயுடையவன். 3இவனுடைய விருத்தம் கைமேலே காணலாய் இருக்கிறபடி. பணி மானம் பிழையாமே – 4‘நான் உமக்கு எல்லா அடிமைகளையும் செய்வேன்,’ என்கிறபடியே, கைங்கரியத்தில் ஓரளவும் குறையாமல். பணி – கைங்கரியம். மானம் – அளவு. அடியேனைப் பணி கொண்ட – இளைய பெருமாளை அடிமை கொண்டாற்போலே, இருவருங்கூட இருந்துகாணும்
அடிமை கொண்டது. 1‘குமரிருந்து போகாமே’ என்பார், ‘அடியேனைப் பணிகொண்ட’ என்கிறார். என்றது, ‘இச் சரீரம் இறைவனுக்கு உரிமைப்பட்டதாக இருக்க, அவனுக்கு உறுப்பு அன்றிக்கே போகாமல்’ என்றபடி. இங்கே அருளிச்செய்யும் வார்த்தை: 2உடையவர் எழுந்தருளியிருக்கிற மடத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, ஆச்சான் தண்ணீரமுது பரிமாறுகிறவர், ஓர் அருகே சாய நின்று பரிமாறினார்; அத்தை உடையவர் கண்டு, ஓர் அடி வந்து முதுகிலே மோதி, ‘நேரே நின்றன்றோவுடோ பரிமாறுவது?’ என்றார்; என்ன, ‘பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.
பணி கொண்ட மணி மாயன் – நீல இரத்தினம் போன்ற கறுத்த நிறத்தையுடையவன்; என்றது, ‘தஹ பச – சுடு அடு’ என்று அன்று அடிமை கொண்டது; 3‘பிடாத்தை விழி விட்டு வடிவைக் காட்டி அடிமை கொண்டான்’ என்றபடி. கவராத மடநெஞ்சால் குறை இலமே – வடிவில் சுவட்டை அறிவித்து என்னை அனுபவிப்பியானாகில், பணிவையுடைய நெஞ்சால் என்ன காரியம் உண்டு? 4நஞ்சீயர் இவ்விடத்திலே அருளிச்செய்வது ஒரு வார்த்தை உண்டு; ‘பூசுஞ்சாந்து என் நெஞ்சமே’ என்கிறபடியே, அன்று அப்படியே இத்தை விரும்பினவன் இன்று இப்படியே உபேக்ஷிக்கையாலே, ‘நாயகன் வரவு தாழ்த்தான்’ என்றுவன் முன்னே சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே, ‘என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கிறாள்’ என்பது. 1‘பிராட்டி அவனோடே சேர இருந்திலளாகில் நான் ஆறி இரேனோ? தோள் அழகை எனக்குக் காட்டிற்றிலனாகில், நான் ஆறி இரேனோ? கையும் திருவாழியுமான அழகைக் காட்டிற்றிலனாகில், ‘சம்பந்தம் இல்லாத விஷயம்’ என்று ஆறி இரேனோ? வடிவழகால் அன்றிக் குணத்தாலே என்னை அங்கீகரித்தானாகில் நான் ஆறி இரேனோ?’ என்கிறாள்.
மடநெஞ்சால் குறையிலம்’ என்கிறவளுடைய மனோபாவத்தை
ஆப்தசம்வாதத்தாலே விளக்குகிறார், ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி. ‘பூசும்
சாந்து என் நெஞ்சமே’ என்றவிடத்தில், நெஞ்சின் காரியமான நினைவினைச்
சாந்தாகச் சொன்னதை நோக்கி, நெஞ்சைச் சாந்துப்பரணியாகக் கொண்டு,
‘சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே’ என்று திருஷ்டாந்தம்
அருளிச்செய்கிறார். நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு
சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ்வாக்கியம், ரசோக்தி.
மட நெஞ்சால்
சீலம் மூலம் பிராட்டி தானே –
கூடி இருக்கும் வடிவு அழகை காட்டி என்னை அடிமை கொண்டான்
மாமை குறை இல்லாதபடி இறையும் அகலகில்லேன் என்று இருக்கும் பிராட்டி உடன்
பணி -தொண்டு கைங்கர்யம்
கொண்ட ஆச்சர்யமான திருமேனி கொண்டவன் –
மணிமாமை குறை இல்லா என்ன வேண்டாதவள்
அவள் உறை மார்பன் –
பிரிந்தால் தரிக்காத மென்மை உடையவள்
பிறப்பு தான் பூவில் நித்யவாசம் திரு மார்பில்
உறைமார்பன்’ என்று நிகழ்காலத்தாற் கூறுகின்றவளுடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘அவள்’ என்று தொடங்கி. ‘அகலகில்லேன்’ என்பது
திருவாய்மொழி.
சீதை மிதிலை நினையாத மாதிரி -சக்ரவர்த்தி திரு மகனை கைப்பிடித்த பின்பு
நெறிஞ்சி முள் -முக்தன் சம்சாரம் நினைக்காதது போலே –
அணி ஆபரணம் -ஆபரணமான தோள் -நஞ்சீயர்
சர்வ பூஷண பூஷண -திருவடி வார்த்தை –
ஆபரணத்தை இட்டு மறைத்தால் ஆகாதோ –
ஏகாந்தமாக இருக்கும் அழகை -திருமஞ்சனம் -கண்டு ஆனந்திக்கலாமே –
அடல் ஆழி தடக்கையன் -நெருப்பை -உமிழும் -பிரதிபந்தத்தை அடக்கும் –
இதனுடைய வ்ருத்தம் கை மேலே காணலாமே –
கைங்கர்யம் அஹம் சர்வம் கரிஷ்யாமி -குறையாதபடி அடியேனைப் பணி கொண்ட
மிதுனத்தில் இளைய பெருமாளைப் போலே
அடியேனை -அடிமை தன்மை -வ்யர்தமாக போகாமல்
குமர் இருந்து போகாமே’ என்றது, ‘அடியேன் என்ற சேஷத்வம் பயன்
அற்றுப் போகாமல்’ என்றபடி. அதனை விவரிக்கிறார், ‘என்றது’ என்று
தொடங்கி.
கிடாம்பி ஆச்சான் -ஐதீகம் எம்பெருமானார்
தண்ணீர் அமுது பரிமாற -சாய நின்று பரிமாற –
தீர்த்தம் வலது கையாலே தானே குடிக்க வேண்டும் –
உடையவர் ஓடி வந்து முதுகிலே அடித்து நேரே நின்று தானே பரிமாற வேண்டும் –
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட’ என்று பணித்தார் ஆச்சான்.
பணி கொண்ட மணி மாயன் -பச்சை வடத்தை காட்டி அடிமை கொண்டான்
மடநெஞ்சால் குறையிலம்’ என்கிறவளுடைய மனோபாவத்தை
ஆப்தசம்வாதத்தாலே விளக்குகிறார், ‘நஞ்சீயர்’ என்று தொடங்கி. ‘பூசும்
சாந்து என் நெஞ்சமே’ என்றவிடத்தில், நெஞ்சின் காரியமான நினைவினைச்
சாந்தாகச் சொன்னதை நோக்கி, நெஞ்சைச் சாந்துப்பரணியாகக் கொண்டு,
‘சாந்தைப் பரணியோடே உடைப்பாரைப் போலே’ என்று திருஷ்டாந்தம்
அருளிச்செய்கிறார். நெஞ்சு பரணியாகவும் அதிலுண்டான நினைவு
சாந்தாகவும் கொள்க. பரணி – சிமிழ். இவ்வாக்கியம், ரசோக்தி.
குணத்தாலும் மட்டும் ஆள் கொள்ள வில்லை
வடிவு அழகைக் காட்டி அடிமை கொண்டானே
மறக்க முடியுமோ
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply