எட்டாந்திருவாய்மொழி – ‘ஏறாளும்’
முன்னுரை
ஈடு : 1மேல் திருவாய்மொழியிலே, கேட்டார் அடைய நீராகும்படி கூப்பிட்டார்; ‘இப்படிக்கூப்பிடச் செய்தேயும், சர்வேசுவரன் நமக்கு முகம் தாராதிருந்தது நம் பக்கல் விருப்பம் இல்லாமையாலேயாக அடுக்கும்,’ என்று பார்த்து, 2‘சம்பந்தமுள்ளவனுமாய், சுசீலனுமாய், விரோதிகளை அழிக்கிற தன்மையனுமாய் இருக்கிறவன் இது வேண்டா என்று இருக்குமாகில், எனக்கோதான் இது வேண்டுவது?’ என்று விடப்பார்த்து, 3‘அவனுக்கு வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா எனக்கு,’ என்று ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் நசை அற்றபடியை அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார். 4அவன் விரும்பின வழியாலேகாணும் ஆத்தும வஸ்துவை
விரும்பச் சம்பந்தம் உள்ளது; 1இங்ஙனம் விரும்பாத போது தேகத்தையே ஆத்துமாவாக நினைத்திருக்கும் பழைய நினைவினைப் போன்றதே அன்றோ?
2‘ந தேகம் – இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலை நின்ற பலத்தையுங்கூட அழிய மாற்றும்படி அன்றோ சரீரத்தில் பண்ணியிருக்கும் அபிமானம்? அப்படிப்பட்ட சரீரம் வேண்டா. ந பிராணாந் – சரீரத்தை விரும்புகிறது பிராணனுக்காக; அந்தப் பிராணன்களும் வேண்டா. ந சுகம் -பிராணன்களை விரும்புகிறது சுகத்துக்காக; அந்தச் சுகமும் வேண்டா. இதற்கு உறுப்பாக வருமவை எல்லாம் எனக்கு வேண்டா. இவையெல்லாம் புருஷார்த்தமாவது, ஆத்துமாவுக்கே அன்றோ? அந்த ஆத்துமாதானும் வேண்டா. இங்ஙனம் பிரித்துச் சொல்லுமது என்? உன் திருவடிகளில் அடிமையாகிற சாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில, அவை ஒன்றும் எனக்கு வேண்டா. நாத – உடையவனுக்குப் புறம்பாய் இருக்குமவற்றை விரும்பச் சம்பந்தம் உண்டோ?’ ‘அங்ஙனேயாமாகில், கிரமத்திலே கழித்துத் தருகிறோம்,’ என்ன, ‘ஒரு கணமும் பொறுக்கமாட்டேன்; இவைதம்மைத் தவிர்த்துக் கடக்க வைக்க ஒண்ணாது; நசித்துப்போம்படி செய்யவேண்டும். இது கழுத்துக்கு மேலே வருகின்ற வார்த்தை அன்றோ?’ என்ன, தத் சத்யம் – அது மெய். மது மதந – ‘இங்ஙனம் அன்றாகில், தேவர் முன்பு பொய்யரானார் பட்டது படுகிறேன்,’ என்றார் ஸ்ரீ ஆளவந்தார். 3‘-இது,
தோத்திர ரத்நம், 57.
காரதராகிய பெருமாளைப் பிரிந்து அரக்கியர் நடுவில் வசிக்கிற எனக்குப் பிராணனால் பயன் இல்லை; பொருள்களாலும் பயன் இல்லை; ஆபரணங்களாலும் ஒரு பயன் இல்லை,’ என்றாள் பிராட்டி. ‘பிராணன் முதலியவற்றால் காரியம் இன்றிக்கே ஒழிகிறது என்?’ என்னில், ‘இருக்கிறது அரக்கியர்கள்-ஸ்ரீராமா. சுந். 26 : 5.-
நடுவே; பிரிகிறது பெருமாளை; இவற்றால், என்ன பிரயோஜனம் உண்டு?’ என்றபடி.
410
ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.
பொ-ரை : ‘இடபவாகனத்தையுடைய சிவபிரானும் நான்கு முகங்களையுடைய பிரமனும் திருமகளும் தனித்தனியே ஆளுகின்ற ஒப்பற்ற திருமேனியையுடையவனும், கூட்டம் கூட்டமாக அசுரர்கள் சாம்பலாகும்படியாக நினைத்துப் படையைப் பிரயோகித்த மாறாளனுமான சர்வேசுவரனால் விரும்பப்படாத அழகிய இந்நிறத்தால் ஒருவிதப் பயனும் உடையோம் அல்லோம்,’ என்கிறாள்.
வி-கு : குறை – பயன். இத்திருவாய்மொழி, தரவுகொச்சகக் கலிப்பா.
ஈடு : முதற்பாட்டு. 2‘எல்லை இல்லாத பெருமை பொருந்திய குணத்தையுடையவனுமாய் விரோதிகளை அழிக்கிற ஆற்றலையுடையவனுமாய் இருக்கிற எம்பெருமான் விரும்பாத நலம் மிக்க நிறங்கொண்டு எனக்கு ஒரு காரியம் இல்லை,’ என்கிறாள்.
ஏறு ஆளும் இறையோனும் திசை முகனும் கூறு ஆளும் தனி உடம்பன் – இதனால், 1‘நான், நான்,’ என்பார்க்கும் அணையலாம்படியான உடம்பை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள், 2 ‘கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள். ஏறு ஆளும் –3சர்வேசுவரன் வேதமே சொரூபமான பெரிய திருவடியை வாஹனமாகவுடையனாய் இருக்குமாகில், தானும் கைக்கொள் ஆண்டிகளைப் போலே ‘ஓர் எருத்தையுடையேன்’ என்று செருக்குற்று இருப்பவனாதலின், ‘ஏறு ஆளும்’ என்கிறார். ஆளும் – 4இவனுடைய இரு வகைப்பட்ட உலகங்களின் ஆட்சி இருக்கிறபடி. 5அவன் உபயவிபூதிகளுக்கும் கடவனாய்ச் சர்வேசுவரனாயிருப்பான் : கள்ளியை ‘மஹாவிருக்ஷம்’ என்பதனைப் போன்று, தானும் ‘ஈசுவரன்’ என்று இருப்பவனாதலின், ‘இறையோன்’ என்கிறார். திசைமுகனும் – படைத்தலுக்கு உறுப்பாக நான்கு வேதங்களையும் உச்சரிப்பதற்குத் தகுதியான நான்கு முகங்களையுடையனாய், ‘நான் படைப்பவன்’ என்று செருக்குற்று
இருக்கிற பிரமனும். 1‘தர்ம தர்மிகளுக்கு ஐக்கியம் உண்டித்தனை போக்கி, தர்மி துவயத்துக்கு ஐக்கியமில்லை,’ என்க.
திருமகளும் – 2‘நான் ஸ்ரீ ராகவனுக்கு வேறு ஆகாதவள்’ என்று சொல்லுகிறபடியே இருக்கிற பெரிய பிராட்டியும். கூறு ஆளும் தனி உடம்பன் -இவர்கள் கூறு இட்டு ஆளும்படி ஒப்பற்ற உடம்பு படைத்தவன். 3‘நாங்கள்அதிகாரி புருஷர்களுடையவர்கள்’ என்று பிராட்டி பக்கத்திலே புக்குச் சிலர் அழிவு செய்தல், ‘நாங்கள் படுக்கைப் பற்றிலுள்ளோம்’ என்று சிலர் அவர்கள் எல்லையிலே புக்கு அழிவு செய்தல் செய்ய ஒண்ணாதபடி ஆளுகின்றாராதலின், ‘கூறு ஆளும்’ என்கிறார். 4திவ்யாத்ம சொரூபத்திலும் வீறுடையது திருமேனியே அன்றோ? 5எல்லார்க்கும் இடமாய் அன்றோ திருமேனிதான் இருப்பது? 6இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.
குலம் குலமா அசுரர்களை நீறு ஆகும்படியாக நிருமித்துப் படை தொட்ட மாறாளன் – இதனால், 1‘அணைக்கைக்குத் தடை உண்டாய்த்தான் இழக்கின்றேனோ?’ என்கிறாள். மேற்கூறியது, 2‘இந்த உலகத்தில் இக்காலத்தில் குணங்களையுடையவர் யாவர்?’ என்பது போன்றது. ‘வீரத்தையுடையவர் யாவர்?’ என்பது போன்றது இது. குலம் குலமா அசுரர்களை – குலம் குலமாக அசுரர் கூட்டத்தை. நீறாகும்படியாக நிருமித்து – 3‘என்னால் முன்னரே கொல்லப்பட்டு இருக்கிறார்கள்’ என்கிறபடியே, உறவு வேண்டேம்’ என்ற போதே சாம்பலாகப் போகும்படி நினைத்து. படை தொட்ட – 4‘உலகத்தைப் படைக்கின்ற காலத்தில் சங்கற்பத்தாலே அதனைச் செய்யுமவன், அடியார்கட்குப் பகைவர்களை அழியச் செய்யுமிடத்தில் படையையுடையவனாய் மேல் விழுவான். 5படைத்தல் முதலிய தொழில்களில் சத்திய சங்கற்பனாய் இருப்பான், அடியார்களுடைய பகைவர்களிடத்திலே அசத்திய சங்கற்பனாய் இருப்பான். 6‘யாகங்களுக்கு இடையூறு செய்கின்றவர்களையும், பாண்டவர்கட்குத் துன்பம் செய்கின்றவர்களையும் நான் வருத்துவேன்!’ என்கிறபடியே, ‘தன்னை மிடற்றைப்
பிடித்தாரையும், உயிர் நிலையிலே நலிந்தாரையும் நலியுமவன்’ என்பதாம்.
நீறு ஆகும்படியாக – 1‘அறுக்கப்பட்டனவாகவும் பிளக்கப்பட்டனவாகவும் பாணங்களால் கொளுத்தப்பட்டனவாகவும்’ என்கிறபடியே, தூளியாகும்படியாக நினைத்து ஆயுதம் எடுக்குமவன் ஆதலின், ‘நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட’ என்கிறார். மாறாளன் – ‘மிடுக்கன்’ என்னுதல்; ‘பகைவன்’ என்னுதல். 2துரியோதனன் ‘உண்ண வேண்டும்’ என்ன, ‘பகைவனுடைய அன்னம் உண்ணத்தக்கது அன்று; பகைவர்களையும் உண்பிக்கக்கூடாது,’ என்கிறபடியே, தன் அடியார்களுடைய பகைவர்களைத் தனக்குப் பகைவர்களாகக் கொண்டு வழக்குப் பேசுமவன் அன்றோ? கவராத மணி மாமை குறை இலமே – பகைவர்களை அழியச்செய்து விடாய்த்துத் ‘தண்ணீர், தண்ணீர்’ என்று அவன் வந்து அணையாத நல்ல நிறத்தால் ஒரு விருப்பம் உடையோம் அல்லோம். 3நிறத்திலே அவன் ஆதரிக்குமன்று அன்றோ இத்தால் காரியமுள்ளது? அல்லது, நிறக்கேடாமித்தனை அன்றோ?
மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
அருளிச்செய்கிறார், ‘மேல் திருவாய்மொழியிலே’ என்றது முதல்
‘அந்யாபதேசத்தாலே அருளிச்செய்கிறார்’ என்றது முடிய.
2. இத்திருவாய்மொழியிலே வருகின்ற ‘அடியேனைப் பணி கொண்ட’
என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சம்பந்தமுள்ளவனாய்’ என்றும், ‘கூறாளும்
தனியுடம்பன்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுசீலனுமாய்’ என்றும்,
‘அசுரர்களை நீறாகும்படியாக’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘விரோதிகளை அழிக்கின்ற தன்மையனுமாய்’ என்றும் அருளிச்செய்கிறார்.
3. ‘உயிரினால் குறைஇலம்’, ‘உடம்பினால் குறை இலம்’?
என்பனவற்றைத்திருவுள்ளம் பற்றி, ‘அவனுக்கு வேண்டாத நானும் என்
உடைமையும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அந்யாபதேசம் –
மாற்றிச் சொல்லுதல்; வேறு வகையில் பேசுதல்.
4. ‘அவன் விரும்பிலனாகில், அதற்காகத் தான், தன்னையும் தன்
பொருள்களையும் விரும்பாதிருத்தல் கூடுமோ?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘அவன் விரும்பின வழியாலே’ என்று தொடங்கி.
‘காதலர் நயந்தது யாமுடை நயப்பே;
காதலர் வேண்டின யாம்வேண் டினமே;
காதலர் எம்மை வேண்டார் எனிலே
யாமும் வேண்டலம் இனியே’
என்றார் பிறரும்.
சிவன், பிரமன்’ என்னாமல் ‘ஏறாளும்’, ‘திசைமுகன்’ என்று விசேடித்ததற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘நான், நான்’ என்று தொடங்கி. என்றது,
அவர்களுடைய உயர்வைச் சொல்லுகிறது அன்று;
‘அகங்காரங்கொண்டவர்களுக்கும் சுலபமானது எனக்கு அரியதாயிற்றே!’
என்னுமதனைச் சொல்ல வந்தது.
2. அதனை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘கண்ட காபாலி’ என்று தொடங்கி.
காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;
சிவன். அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு
நாபீ கமலத்தில் பிறந்தவன் என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.
ஏறாளும் -கூப்பிட்டாலும் முகம் காட்டாமல் –
அதிகார பூர்த்தி அடைய
தமது பக்கல் உபேஷை
ஆத்ம ஆதமீயம் வேண்டாமே
சீதா பிராட்டி நிலை போலே
பிரப்தன் சுசீலன் விரோதி நிரசன்னா சீலன் -வேண்டாம் என்றால்
அவனுக்கு வேண்டாத நானும் எனது உடைமையுமஎனக்கு வேண்டாமே
நசை அற்ற படியை
அன்யாபதேசம் –
இப்படியே நாயகி பாவம் –
அவன் விரும்பின படியே ஆத்ம வஸ்துவை விரும்புவது
இல்லை என்றால் தேகாபிமானம் போலே ஆகுமே
சேஷத்வ –
உனக்கு ஆனதே வேண்டும் ஆளவந்தார்
சாந்தாக தனது
பூசும் சாந்து எனது நெஞ்சமே
அத்தையும் அழிய மாறும் படி தேக அபிமானம்
ந பிராணான்
சுகமும் வேண்டாம்
இதுக்கு உறுப்பாக
ஒன்றும் வேண்டாம்
ஆத்மாவே வேண்டாம் என்றல் எதுவும் வேண்டாமே
சேஷத்வ சாம்ராஜ்யத்துக்கு
உடையவன் உடைமை விரும்பலாமா
க்ரமத்தில் கழித்து தருவோம்
என்ன
ஷணமும் பொறுக்க மாட்டேன்
மேல் எழுந்த வார்த்தை இல்லை
சத்யம்
மெய் -மது அரக்கனை அழித்தாயே
பொய்யானால் மது பட்டது படுவேன்
சீதை போன்ற வார்த்தை சொல்கிறார்
பெருமாளை பிரிந்து
ஈசன் உகப்பக்குக்கு மாறு படில் ஆத்ம ஆத்மதீயங்கள் ஒன்றும் வேண்டாம் என்கிறார் –
பிராட்டி வார்த்தை -ஜீவிதே அர்த்தம் இல்லை -ராஷசிகள் இடம் இருந்து பெருமாள் இடம் சேராமல்
இஷ்ட பிராப்தியும் இன்றி அநிஷ்ட நிவ்ருதியும் இருக்க –
இளைய பெருமாளும் அருளிய வார்த்தை -ந தேவ லோகம் இத்யாதி எதுவும் வேண்டாம் சக்கரவர்த்தி திரு மகனை பிரிந்து
ஆளவந்தார் -உபயோகப் படாத பொழுது ந தேகம் -ஒன்றும் வேண்டாம்
தத் சேஷத்வ -கிடைக்காமல் -சத்யமான வார்த்தை –
அவனுக்கு வேண்டாத ஓன்று வேண்டாமே
கோவை வாயாள் -எனது நெஞ்சை பூசும் சாந்தாக கொண்டான்
என்னுடைய ஆத்ம ஆத்மதீயங்கள் அவனுக்கு –
அனைத்தும் எம்பெருமானுக்கே
ஆயுஷ் ஹோமம் கூட பண்ண மாட்டார்கள் -நமக்கு என்று கூடாது
பகவத் கைங்கர்யத்துக்கு என்றால் செய்யலாம்
பகவத் ப்ரீத் யார்தம் லோக சேமம் ஆனால் அர்ச்சைனையும் செய்யலாம்
ஆத்மா சொல்லி ஆத்மாதீயங்கள்
உயிரினால் குறைவிலேமே முதலில் சொல்லாமல்
எம்பெருமான் உடம்பை விரும்பினதாலே அதே முறையில் அருளுகிறார்
தனி தனியாக இவற்றை விரும்பினான்
அதனால் அதே க்ரமத்தில் அருளுகிறார் –
அத்யந்த குண சீலன் -அனைவருக்கும் இடம் கொடுத்து
விரோதி நிரசன சீலன்
பாசுரத்தில் ‘ஏறாளும்’ என்றது முதல் ‘தனியுடம்பன்’ என்பது முடியக்
கடாக்ஷித்து, ‘எல்லையில்லாத குணத்தையுடையவனுமாய்’ என்றும், ‘குலம்
குலமா’ என்றது முதல் ‘படை தொட்ட’ என்றது முடியக் கடாக்ஷித்து,
‘விரோதிகளை . . . ஆற்றலையுடையவனுமாய்’ என்றும், ஈற்றடியைத்
திருவுள்ளம் பற்றி, ‘எம்பெருமான்’ என்று தொடங்கியும், அவதாரிகை
அருளிச்செய்கிறார். இங்குக் ‘குணத்தை’ என்றது, சௌசீல்ய குணத்தை.
சௌசீல்யமாவது, ஸ்ரீ வைகுண்டத்தைக் கலவிருக்கையாகவுடைய இறைவன்,
அங்கு நின்றும் சமுசாரி சேதநர் நின்றவிடத்தே வந்து அவதரித்து
எளியனாகி எல்லாரோடும் கலந்து பரிமாறித் தன்னைத் தாழவிட்டால்,
‘இப்படிச் சிறியாரளவிலே நம்மைத் தாழ விட்டோமே!’ என்று தன்
திருவுள்ளத்திலும் இன்றிக்கே இருத்தல்.
போக்தாவுக்கு உகப்பு ஒன்றே காரணம் –
திருக்கண் அமுதில் சேர்க்கும் முந்திரி போல்வன அவற்றுக்கு என்று இல்லாமல்
அவன் ஆனந்தம் ஒன்றே குறிக்கோள் என்று அருளிச் செய்கிறார் –
மணிமாமை முறை இலமே
ஏறு எருது வாகனமாக கொண்ட ருத்ரன் -பிரமன் -பெரிய பிராட்டியார்
கூறாளும் தனி உடம்பன் –
குலம் குலம் அசுரர்களை நீராகும் படி செய்தவன் –
மாமை நிறம் இத்தால் என்ன கார்யம் –
‘சிவன், பிரமன்’ என்னாமல் ‘ஏறாளும்’, ‘திசைமுகன்’ என்று விசேடித்ததற்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘நான், நான்’ என்று தொடங்கி. என்றது,
அவர்களுடைய உயர்வைச் சொல்லுகிறது அன்று;
‘அகங்காரங்கொண்டவர்களுக்கும் சுலபமானது எனக்கு அரியதாயிற்றே!’
என்னுமதனைச் சொல்ல வந்தது.
2. அதனை ரசோக்தியாக விவரிக்கிறார், ‘கண்ட காபாலி’ என்று தொடங்கி.
காபாலி-கபாலத்தையுடையவன்; சிவன். கந்தன் – கந்தையையுடையவன்;
சிவன். அன்றிக்கே, கந்தன் என்பது, ‘உலகத்திற்கெல்லாம் மூலமான திரு
நாபீ கமலத்தில் பிறந்தவன் என்று பிரமனைச் சொல்லுகிறது’ என்னுதல்.
அடியேன் என்பவனுக்கு கொடுக்காமல் நான் நான் என்பாருக்கு கொடுத்து
கண்ட காபாலி கழுத்தில் காபாலி அணிந்து மாலையாக -கையிலே கொண்டு
இவர்கள் பெற்று போக -எனக்கு அரிதாகிறது
வேதாத்மா பெரிய திருவடி வாகனமாக கொண்ட –
ரக்கை நகம் கூட வேதமே உருவாக கொண்ட -பெரிய திருவடி –
ஏறு ஆளும் -இவனும் தானும் -செருக்கு உற்று -கைக்கொள் ஆண்டிகளைப் போலே –
உபய விபூதி நாதன் -இவன் ஏறு ஆளும்
இவனும் இறையோன் -கள்ளியை மகா வருஷம் என்பாரைப் போலே -விபரீத லஷணை
எதிர்மறை இலக்கணை யில் தான் ஈஸ்வரன் என்று இருக்கும்
‘சிவனாய் அயனானாய்’ என்று ஐக்கியம் சொல்லாநிற்க, ‘இறையோன்,
திசைமுகன்’ என்று பேதகமாகச் சொன்னதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘தர்ம தர்மிகள்’ என்று தொடங்கி. என்றது, ‘தேவன் என்றால், தேவ
சரீரத்துக்கும், சரீரியான ஆத்துமாவுக்கும் ஐக்கியம் சொல்லுகிறாப்போலே,
இவர்கள் சரீரமாயும் அவன் சரீரியாயும் இருக்கையாலே ஐக்கியம்
சொன்னதித்தனை போக்கி, சொரூப ஐக்கியம் சொல்லவில்லை,’ என்றபடி.
தர்மம் – சரீரம். தர்மி – ஆத்துமா. தர்மி துவயம் – இரண்டு தர்மிகள்.
மனுஷ்ய சரீரத்தை உடையவன் என்னாமல் மனுஷ்யன் என்கிறோம்
அத்வைதி தரமி ஒன்றாக –
ஜீவாத்மா தரமமாக இருக்கும் விசிஷ்டாத்வைத தத்வம் அருளுகிறார் –
இரண்டு தரமி ஐக்கியம் சோழ முடியாதே
சரீரமாக இவை இருப்பதால் -சரீர ஏக தேசம்
முனியே நான்முகனே முக்கண் அப்பா -நீராய் நிலனாய் ஐக்கியம் காட்டி –
திசை முகன் சிருஷ்டிக்கு நான்கு முகம் –
திரு மகளும் -அனந்யா ராகவே -பிரியாமல் கட்டுப்பட்டு இருப்பவள்
அவளுக்கும் கொடுத்து துர்மாநிகளுக்கும் இடம் கொடுத்து
கூறிட்டு ஆளும் படி அத்வதீயமான திரு உடம்பு
அனைவரையும் ஆளுகின்ற –
படிக்கை பற்று பிராட்டி பரிக்ரமம் –
அவனால் நியமிக்க பட்ட அதிகாரிகள் -தனது பத்னி –
பிராட்டிக்கு வேண்டியவன் -பிரம ருத்ராதிகளுக்கு வேண்டியவன்
திவ்யாத்மா ஸ்வரூபம் வீறு உடையது திரு மேனி
சர்வ அபாஸ்ரயமாக இருப்பது திருமேனி எம்பெருமானும் கூட -ஆஸ்ரயிக்கும்படி –
இத்தனை சீலவானை கிடீர் நான் இழந்தேன்
விரோதி நிரசன சீலன் -பிரதி பந்தகங்கள் போகும் சர்வ சக்தன் -இருந்தும் நான் இழந்தேன்
குணவான் வீர்யவான் முதல் இரண்டு குணங்கள் ஸ்ரீ ராமாயணம்
குணம் -சீலம் தான் ஆசார்யர்கள் நிர்வாகம்
ஸ்வாமி -உடையவர் தானே
பராக்கிரமம் அடுத்து சொல்லி –
குணவான் வீர்யவான் -என்றால் போலே குலம் குலம் அசுரர் நீராக்கி –
விஷ்ணு பக்தி இல்லாதவர் அசுரர் பாஸ்மாகும் படி செய்து அருளி
நினைத்தால் மாத்திரம் போதியதாமே? படை எடுப்பான் என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உலகத்தை’ என்று தொடங்கி. என்றது,
‘அடியார்களிடத்து வைத்த அன்பினால் செய்கிறான்’ என்றபடி. சங்கல்பம் –
நினைத்தல்.
5. ‘படைதொட்ட’ என்றதற்குப் பாரதப் போரைத் திருவுள்ளத்திலே கொண்டு
பாவம் அருளிச்செய்கிறார், ‘படைத்தல் முதலிய’ என்று தொடங்கி. ‘அசத்திய
சங்கல்பன்’ என்றது, வீடுமனைக் கொல்லுதற்குத் திருவாழியைத் திருக்கரத்தில்
ஏந்தியது, திருவாழியைக்கொண்டு சூரியனை மறைத்தது முதலிய
செயல்களைத் திருவுள்ளம் பற்றி என்க. ‘சங்கல்பத்தோடு அமையாது அதற்கு
மேலும் காரியங்களைச் செய்வான் அடியார்கள் விஷயத்தில்’ என்றபடி.
சிருஷ்டிக்கும் பொழுது சங்கல்பமே போதுமே
பகுச்யாம் -நினைக்கும் பொழுதே
அசத்திய சங்கல்பம் -ஆயுதம் எடேன் என்று சொல்லி படை தொட்டானே
சின்னம் பின்னம் ஆகும் படி தூளியாகும் படி நீராக்கி
யக்ஜம் அழிப்பாரை முடிப்பான் –
பாண்டவரை விரோதிப்பாரை முடிப்பேன்
எல்லா உயிர்களிடத்திலும் ஒத்த அன்பினையுடைய சர்வேசுவரனுக்குப்
பகைவர் ஆவார் உளரோ?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘துரியோதனன்’ என்று தொடங்கி. இது, பாரதம், உத்தியோக பர். 74 : 27.
என்றது, ‘அடியார்க்குப் பகைவர்கள், தனக்கும் பகைவர்கள்’ என்றபடி.
மேற்காட்டிய சுலோகப் பொருளோடு,
‘என்னி னின்னிலொரு பேத மில்லையிது என்னி னின்னிலது என்னினும்
மின்னில்மின்னிலகு விறல்நெடும்படைவி தூரன் வந்தெதிர் விளம்பினான்
உன்னி லின்னமுள தொன்று பஞ்சவ ருரைக்க வந்தஒரு தூதன்யான்
நின்னி லின்னடிசி லுண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ?’
என்ற வில்லி பாரதச் செய்யுளை ஒப்பு நோக்குக.
மம பிராணாகி பாண்டவ
மாறாளன் மிடுக்கன் –
சர்வ பூதேஷு சமம் இருந்தாலும் பக்த பக்த விரோதிகளை முடிப்பானே –
பாகவத அபசாரம் கூடாதே -மத்யானம் வெய்யில் போலே -பகவத அபசாரம் காலை வெயில் போலே
விரோதிகளை அழிய செய்து விடாய்த்து தண்ணீர் தண்ணீர் என்று சீதை ஆலிங்கனம் செய்து
அணையாத நல்ல நிறத்தால் –
நிறத்திலே அவன் ஆதரிக்கும் என்றே ஆசை
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply