தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென்குருகூர் மாறன் சடகோ பன்சொல்
வழுவி லாத ஒண்த மிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.
பொ-ரை : ‘கூட்டங்கூட்டமான மாடங்களையுடைய அழகிய திருக்குருகூரில் அவதரித்த மாறன் சடகோபராலே, தம்மைத் தழுவிக் கொண்டு நிற்கின்ற காதலால், தாமரை போன்ற கண்களையுடைய சர்வேசுவரனைப் பற்றி அருளிச்செய்யப்பட்ட குற்றம் இல்லாத பிரகாசம் பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களையும் மனம் பொருந்தப்பாடி ஆட வல்லவர்கள் பரமபதத்தை அடைவார்கள்,’ என்றவாறு.
வி-கு : ‘சடகோபன் தாமரைக் கண்ணனைக் காதலால் சொல் தமிழ்கள் ஆயிரம்’ என்க. தமிழ்கள் – திருப்பாசுரங்கள். ‘வல்லார் ஏறுவர்’ என்க.
ஈடு : முடிவில், 3‘இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே எப்பொழுதும் சேர்ந்திருக்கலாம்படியான திருநாட்டிலே செல்லப்பெறுவர்,’ என்கிறார்.
தழுவி நின்ற காதல் தன்னால் – ‘நான் விடுவேன்’ என்றாலும் விட ஒண்ணாதபடியாய் உடன் வந்தியான அளவு கடந்த காதலாலே. தாமரைக்கண்ணன்தன்னை – இந்தக் காதலுக்குக் கிருஷி பண்ணின –4நேத்திரபூதரைச் சொல்லுகிறார்.
குழுவு மாடம் தென்குருகூர் – 1‘ஆழ்வார்க்குத் துக்கம் மிக மிகச் சர்வேசுவரன் வரவு தப்பாது’ என்று திருநகரி குடி நெருங்கிக் குளிர்ந்து தேறினபடி. இதனை ‘வீட்டில் எல்லோரும் சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்பது போன்று கொள்க. மாறன் – சமுசாரத்தை மாற்றினவர். சடகோபன் – பகவானிடத்தில் விருப்பமில்லாதவர்கட்குப் பகைவர். சொல் வழு இலாத – பகவானைப் பிரிந்த பிரிவாலே கூப்பிடுகிற இந்நன்மையில் ஒன்றும் தப்பாதபடி சொன்ன. ஆயிரத்துள் இப்பத்தும் தழுவப்பாடி ஆட வல்லார் – 2ஆழ்வாருடைய மனநலம் ஒருவர்க்கும் பிறக்கமாட்டாதே அன்றோ? அதிலே சிறிது அணைய நின்றாகிலும் இதனைக்கற்க வல்லவர்கள். வைகுந்தம் ஏறுவரே – காண ஆசைப்பட்டுக் கூப்பிடுகிற இவ்வுலகத்தைக் கழித்து, எப்பொழுதும் அனுபவிக்கத் தக்க பரமபதத்திலே புகப்பெறுவர். குழுவு மாடம் – நெருங்கின மாடம். தென்குருகூர் – ஆதலால், ஆழகிய திருநகரி.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
சீலமிகு கண்ணன் திருநாமத் தால்உணர்ந்து
மேலவன்றன் மேனிகண்டு மேவுதற்குச் – சால
வருந்திஇர வும்பகலும் மாறாமற் கூப்பிட்டு
இருந்தனனே தென்குருகூர் ஏறு.
‘ஆழ்வார் ஆற்றாமையாலே துன்ப மிகுந்தவராய் இருக்க, திருநகரிக்குக்
குளிர்த்தி எங்ஙனே?’ என்ன, அதற்கு விடையும் அருளிச்செய்து,
மேற்கோளும் காட்டுகிறார், ‘ஆழ்வார்க்கு’ என்று தொடங்கி. ‘தென்’ என்பது
அழகாய், அதனால், குளிர்ச்சியைச் சொல்லுகிறது. அதற்குப் பிரமாணம்
‘வீட்டில்’ என்று தொடங்குவது, இது, ஸ்ரீராமா. யுத். 127 : 5. ஸ்ரீ
பரதாழ்வான் துன்பக்கடலின் மூழ்கினவனாயிருக்கிறபடியைக் கண்டு
பெருமாள் வரவை நிச்சயித்துத் தரித்தபடியாலேயன்றோ ‘எல்லாரும்
சௌக்கியமாக இருக்கிறார்கள்’ என்று பரத்துவாச முனிவர் ஸ்ரீ ராமபிரானைப்
பார்த்துக் கூறியருளினார்?’ என்றபடி.
2. ‘தழுவி நின்ற காதல்’ என்றாற்போலே, ‘தழுவி நின்று பாட வல்லார்’
என்னாதது என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘ஆழ்வாருடைய’ என்று தொடங்கி. ‘தழுவுதல்’ என்றது, பரிசித்தலாய்,
‘ஆழ்வாருடைய பாவ விருத்தியிலே அந்யவத்தை உடையராய்க்கொண்டு’
என்றபடி.
நிகமத்தில்
வைகுந்தம் ஏறுவது
தழுவி
விட எண்ணி நாளும் விடாத காதல் தன்னால்
கிருஷி பண்ணின நேத்ர பூதர் தாமரைக் கண்ணன்
குருகூர் -கோஷ்டி
ஆர்த்தி மிகுந்து குடி நெருங்கி –
நிச்சயம் வருவான் என்று –
பரத ஆழ்வான் துன்பம் கண்டு பெருமாள் வருவார் என்று நிச்சயம்
மாறன் சம்சாரம் போக்கி
சடகோபன் விரோதிக்கு சத்ரு
சொல் -கூப்பிட நன்மையில் ஒன்றும் தப்பாத படி
பாவம் கொண்டு
தழுவ பாடி தொட்டு கொண்டு
கொஞ்சம் ஸ்பர்சமே போதுமே
வைகுந்தம் ஏறுவர் பலன் –
நித்ய அனுபவம் உகந்து இருக்க பெறுவார்
தம்மைப் போலே கதற வேண்டாத படி
நெருங்கின மாறன் குருகூர் மாறன் என்றுமாம்
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவர்
சாரம்
சீல மிகு கண்ணன் திரு நாமத்தால் உணர்ந்து
தீர்ப்பாரை திருவாய் மொழி துவராபதி மன்னன் ஏத்தி உணர்ந்து
மேனி கண்டு மேவுதற்கு ஆசைப் பட்டார்
சால வருந்தி -அருளி
இரவும் பகலும் கூப்பிட்டு –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply