என்றும் ஒன்றுஆகி ஒத்தாரும்
மிக்கார் களும்தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா
உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த
பிரானைச் சொன்மாலைகள்
நன்று சூட்டும் விதிஎய் தினம்
என்னகுறை நமக்கே?
பொ-ரை : ‘எக்காலத்திலும் தன்னுடைய எல்லாப் படிகளுக்கும் ஒத்தவர்கள் இல்லை என்கையேயன்றித் தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு ஒத்தவர்களும் மிக்கவர்களும் இல்லாமலே நின்றவனும், எல்லாவுலகங்களையுமுடையவனும், மழையினால் துன்புறாதபடி பசுக்களையும் ஆயர்களையும் கோவர்த்தனம் என்னும் ஒரு மலையினால் காத்த உபகாரகனுமான சர்வேசுவரனுக்குச் சொன்மாலைகளைப் பெரிதாகச் சூட்டுவதற்குத் தக்கவாறு அவனுடைய கிருபையைப் பெற்றோம்; ஆதலால், நமக்கு இனி என்ன குறை? ஒரு குறையும் இல்லை,’ என்றபடி.வி-கு : தன்தனக்கு – தன்னுடைய சௌலப்ய குணத்துக்கு. ‘நன்று பெரிதாகும்’ என்பது தொல்காப்பியம். விதி – பகவானுடைய திருவருள். ‘நமக்கு என்ன குறை?’ என மாறுக.
ஈடு : ஏழாம் பாட்டு. 1“அரியது உண்டோ எனக்கு?’ என்கிற இந்த நிறைவு உமக்கு எத்தாலே வந்தது?’ என்ன ‘பகவானுடைய கிருபையாலே வந்தது,’ என்கிறார்.
என்றும் – எல்லாக்காலமும். ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கு இன்றி நின்றானை – 2‘அந்தப் பரமாத்துமாவுக்குச் சமானமான பொருளும் மேலான பொருளும் காணப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, 3எல்லாம் கூடின கூட்டத்துக்கு ஒப்பு இல்லாமையே அன்றிக்கே, ஒரோ வகைக்கும் ஓர் ஒப்பு இன்றிக்கே இருப்பவனை. 4‘அவனுக்குச் சரீரமாக இருப்பதனாலே, ஒத்தாராயும் மிக்காராயும் இருப்பாரை இன்றிக்கே இருப்பவனை’ என்றபடி. 5‘தன்தனக்கு இன்றி நின்றானை’ என்பதற்கு, எம்பெருமானார் தெற்கே எழுந்தருளின நாளிலே, ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை: ‘தன்தனக்கு என்றது, தானான தனக்கு என்றபடி. ஒரு படிக்கு ஒப்பு இன்றிக்கே இருக்கிறது பரத்துவத்தில் அன்று; 6‘என்னை நான் மனிதனாகவே நினைக்கிறேன்,’ என்கிறபடியே, அவதரித்து மனிச்சு ஏறிட்டுக்கொண்டு நிற்கிற நிலையிலே’
என்றாராம். எல்லா உலகும் உடையான்தன்னை – 1‘உலகங்களினுடைய தோற்றமும் பிரளயமும் கிருஷ்ணனிடத்திலே; இது பிரசித்தம்; சராசரங்களாகிற இந்தப் பிராணி வர்க்கம் எல்லாம் கிருஷ்ணன் நிமித்தமாகவே இருக்கின்றன. இது பிரசித்தம்,’ என்கிறபடியே, எல்லா உலகங்கட்கும் ஈசுவரனான கிருஷ்ணனை. ‘இப்படி எல்லாவற்றையுமுடைய செருக்காலே உடைமை நோவுபடவிட்டுப் பார்த்துக்கொண்டு இருப்பானோ?’ என்னில், ‘அங்ஙனம் இரான்,’ என்கிறார் மேல் :
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை – இந்திரன் பசிக்கோவத்தாலே பசுக்களும் ஆயர்களும் தொலையும்படி மழை பெய்த போது, தோன்றியது ஒருமலையை எடுத்து, அந்த ஆபத்தினின்றும் காத்த உபகாரகனை. 2‘தீ மழை’ அன்றோ? சொன்மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் – சொன்மாலைகள் நன்று சூட்டும்படியான பாக்கியத்தை அடையப்பெற்றோம். 3பரத்துவத்தில் குணங்கள் உளவாம் தன்மை மாத்திரமே உள்ளது, அவதரித்த இடத்தே அன்றோ அவை பிரகாசிப்பன? ‘இப்படி விஷயம் நிறைவுற்றிருந்தால் ‘பேச ஒண்ணாது’ என்று மீளுகை அன்றிக்கே, இந்நிலையிலே விளாக்குலை கொண்டு பேசும்படியானேன்,’ என்பார், ‘நன்று சூட்டும்’ என்கிறார். 4இவர் இப்போது ‘விதி’ என்கிறது, பகவானுடைய கிருபையை. தமக்குப் பலிக்கையாலும், அவனுக்குத் தவிர ஒண்ணாதாகையாலும், ‘விதி’ என்கிறார். ‘விதி சூழ்ந்ததால்’ என்றாரேயன்றோ
முன்னரும்? என்ன குறை நமக்கே – 1‘சீற்றத்திற்கு’ இலக்கு ஆகாதே அவன் கிருபைக்கு விஷயமான நமக்கு ஒரு குறை உண்டோ? நமக்கு ஒரு குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபையை அளவிற்கு உட்படுத்துகையேயன்றோ?
2‘ஸ :- பாதுகாவலே சொரூபமாக இருக்குமவர், தம் – தீய செயலிலே முதிர நின்ற அவனை, நிபதிதம் பூமௌ – தெய்வத் தன்மையாலே பூமியிலே கால் வையாதவன் போக்கற்றுத் தரையிலே வந்து விழுந்தான்; அன்றிக்கே, குழந்தை தீம்பு செய்தால் தந்தை தண்டிக்கத் தொடர்ந்தால், தாயின் காலிலே விழுமாறு போலேகாணும், இவன் பூமியிலே விழுந்தது. சரண்ய :- ஏதேனும் தசையிலும் சரணமாகப் பற்றுதற்குத் தகுந்தவர். சரணாகதம் – கண்வட்டத்தில் வேறு கதியில்லாமை தோன்ற விழுந்துள்ளவனை. வதார்ஹமபி – பெருமாள் சித்தாந்தத்தாலும் கொல்லுதற்கு உரியவனே; ஆனாலும், காகுத்ஸ்த : – குடிப்பிறப்பால் வந்த நீர்மையாலே பாதுகாத்தார். 3‘குடிப்பிறப்பு, தண்டிக்கத் தகுந்தவரைத் தண்டித்தற்குக் காரணமாய் இராதோ?’ என்னில், கிருபயா – ‘நாம் தொடங்கின கார்யம் பிரபலமான கர்மத்தாலே முடிக்க ஒண்ணாததைப் போன்று, அவரும் கிருபைக்குப் பரதந்திரப்பட்டவர் ஆகையாலே நினைத்த காரியத்தை முடிக்கமாட்டார். அவன் கிருபை விளையும் பூமியைப் பற்றியவன் ஆனான்; அதற்கு மேலே கிருபையும் விளிந்தது; இனி, அவர் எவ்வழியாலே தண்டிப்பார்? ஆகையாலே, எனக்குக் குறை உண்டாகையாவது, பகவானுடைய கிருபை அளவிற்குட்பட்ட விஷயமாக அன்றோ?’ என்கிறார்.
பகவானுடைய கிருபையை ‘விதி’
என்றதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார், ‘தமக்கு’ என்று தொடங்கி.
அதற்குப் பிரயோகம் காட்டுகிறார், ‘விதி சூழ்ந்ததால்’ என்று. இது திருவாய்.
2. 7 : 6.
இந்த பூர்த்தி உன்னாலே தானே வந்தது
விதி -பகவத் கிருபை –
எக்காலமும் -ஒப்பு இன்றி
ஒவ்வொரு வகையிலும் ஒப்பு இல்லை
பிரகாரம் அனைவரும்
தன் தனக்கு -அர்த்தம்
எம்பெருமானார் -தெற்கே எழுந்து இருந்த நாளிலே ஆளவந்தார் மகனார் சொட்டை நம்பி
திருமலை நம்பி திருப்பேரனார் என்பர்
சொட்டை குலம் -ஸ்ரேஷ்ட குலம் –
தானான தனக்கு
ஆத்மாநாம் மானுஷ்யம்
பரத்வம் இல்லை -மனுஷ்யத்வம் உள்ள காலத்திலும் சமம் இல்லை
ஈடு இணை இன்றி
தனக்கு’ என்னாது, ‘தன்தனக்கு’ என்றதற்குக் கருத்து யாது?’ என்ன,
‘எம்பெருமானார்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ஸ்ரீ
வைஷ்ணவர் சிலர் கேட்க, சொட்டை நம்பி அருளிச்செய்த வார்த்தை
என்றபடி. தன்தனக்கு – அவதரித்து அடியார்க்குப் பரதந்திரனாயிருக்கிற
தனக்கு. தன் தனக்கு – தானான தனக்கு; தானான தன்மையாவது,
தனக்கேயுரிய ஆகாரம்; அதாவது, ‘ஆஸ்ரித பாரதந்திரியம்’ என்றபடி.
ஒப்பார் மிக்கார் இலையாய
இரண்டும் இல்லையே
-கிருஷ்ணன் எல்லாம் உடைய செருக்காலே உடைமை நோவு பட பார்த்து இருக்குமோ
குன்றம் ஒன்றா ல் மழை காத்த பிரான்
தொற்றிற்று பொறு மலையை எடுத்து
தீ மழை காத்தான் –
சொல்மாலைகள்
பரத்வத்தில் பிரகாசிக்காத குணங்கள் விபவத்தில் உண்டே
பரிபூர்ண விஷயம்
சொல்லுமாறு
விளாக்குலை கொள்ளும்படி
விதி எய்தினான்
பகவத் கிருபையை -விதி என்கிறார்
தமக்கு பலிக்கையாலும் -அவனுக்கு தவிர ஒண்ணாது ஆகையாலும்
விதி சூழ்ந்தால் -திருவாய்மொழி -2-7-6-
வந்தேறி விதி
என்ன குறை நமக்கே
ந ஷமாமி -இன்றி -பொறுக்க மாட்டேன் -இல்லாமல் -ததாமி புத்தி யோகம் -கிருபைக்கு இலக்கு ஆன பின்பு
கிருபைக்கு அளவே இல்லையே கிருபையாலே பரிபாலயது ரஷிக்கிறான்
இது இருக்க என்ன -கவலை
காகாசுர விருத்தாந்தம் –
சகா -எவன் -சக்கரவர்த்தி திருமகன் -ரஷிக்க ஸ்வாபம் -கொண்டவன்
பூமியிலே விழ -போக்கற்று தேவர்கள் காலில் அழுக்கு ஓட்டும் கால் -படாமல்
பிரஜை தப்பு செய்தால் மாதாவின் காலில் -பூமி மாதா மடியில் விழ –
எப்படிப்பட்ட நிலையிலும் சரணாகதி செய்யலாம் படி சரணாகத வத்சல்யன்
காகுஸ்தன் குடிப்பறப்பால் வந்த நீர்மை
கிருபையா -தண்டிக்க வேண்டி இருந்தாலும் -முடியாதவன் கிருபை தடுக்க
நாம் நினைக்க கார்யம் பிரபல கர்மம் தடுக்கும் –
அவன் நினைக்கும் தண்டிக்கும் காரியமும் கிருபை தடுக்குமே
கிருபை விளையும் பூகதர் ஆனான் –
பூமிக்கு மேலே விளையுமே
தண்டிக மாட்டார்
கிருபை விதி சூழ்ந்தது
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply