1கரிய மேனிமிசை வெளிய
நீறுசிறி தேஇடும்
பெரிய கோலத் தடங்கண்ணன்
விண்ணோர் பெருமான்றனை
உரிய சொல்லால் இசைமாலைகள்
ஏத்திஉள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்குஇன்று
தொட்டும்இனி என்றுமே?
பொ-ரை : ‘கரிய திருமேனியின்மேலே வெண்மையான சூர்ணத்தைச் சிறிதளவே இடுகின்ற, பெரிய அழகிய விசாலமான திருக்கண்களையுடையவனும், நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைத் தகுதியான சொற்களாலே சமைந்த இசையோடு கூடிய மாலைகளால் துதித்து நினைக்கின்றவனான எனக்கு இன்று தொடங்கி இனி எப்பொழுதும் கிடைத்தற்கு அருமையான பொருள் ஒன்று உண்டோ?’ என்கிறார்.
வி-கு : ‘இடும்’ என்பதனைக் கண்ணுக்கு அடைமொழியாக்குவர் வியாக்கியாதா. அதனைப் பெருமானுக்கு அடைமொழியாக்குவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான். ‘இடும் பெருமான்’ என்றும்,பெரிய கோலத் தடங்கண்ணனாகிய பெருமான்’ என்றும் தனித்தனியே கூட்டிக்கோடல் வேண்டும். வெளிய நீறு – பச்சைக்கற்பூரச் சூர்ணம். ‘நீறு’ என்பது, பல பொருள் ஒரு சொல் : ‘சிலைவேடன் அவ்வளவில், நீறாய் விழுந்தான் நிலத்து’ (நளவெண்) என்றவிடத்துச் சாம்பலையும். ‘மாந்தரும் மாவும் செல்ல மயங்கிமேல் எழுந்த நீறு’ (சிந்.) என்றவிடத்துப் புழுதியையும். ‘மந்திரமாவது நீறு’ என்றவிடத்து விபூதியையும் காட்டுதல் காண்க. அரசர்கள் அஞ்சனம் அணிந்துகோடல் மரபு. ‘உள்ளப்பெற்றேற்கு எனக்கு இன்று தொட்டும் இனி என்றும் அரியது உண்டோ?’ எனக் கூட்டுக.
ஈடு : ஆறாம் பாட்டு. 1‘சர்வேசுவரன் திருவடிகளில் அடிமை செய்யவும் பெற்றுத் தடைகளும் போகப்பெற்றேன்,’ என்றார் மேல் பாசுரத்தில். ‘ஆனால், இனி உமக்குச் செய்ய வேண்டுவது என்?’ என்றான் ஈசுவரன்; ‘இதற்கு முன்பு பெறாததாய் இனிப் பெற வேண்டுவது ஒன்று உண்டோ?’ என்கிறார் இப்பாசுரத்தில்.
கரிய மேனி மிசை – 2திருக்கண்களில் கருவிழியினுடைய கறுத்த நிறத்தால் வந்த அழகுக்கு மேலே. மேனி – நிறம். ‘கரியவாகிப் புடை பரந்து’ என்னக்கடவதன்றோ? வெளிய நீறு – அஞ்சன சூர்ணம், சிறிதே இடும் -அதனை அளவே கொண்டு அலங்கரிக்கும். 3‘ஆரார் அயில் வேற்கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து’ என்னக் கடவதன்றோ? அழகுக்கு இட வேண்டுவது இல்லையே? இனி, மங்களத்தின்பொருட்டு இடுவது ஆகையாலே, ‘சிறிதே இடும்’ என்கிறது. பெரிய கோலம் – ஒப்பனை வேண்டாதபடி அழகு அளவு இறந்து இருக்கிறபடி. தடம் கண்ணன் –
அனுபவிக்கின்றவர்களுடைய அளவில் நில்லாது அனுபவிக்கப்படுகின்ற பொருள் மிக்கு இருக்கிறபடி.
அன்றிக்கே, 1‘கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் பெரிய கோலம் தடம் கண்ணன்’ என்பதற்கு, ‘திருமேனியில் கறுத்த நிறத்தாலே வந்த அழகுக்கு மேலே அதற்குப் பரபாகமான திருக்கண்களிலே அஞ்சனத்தை இடுகின்ற’ என்னலுமாம். இனி, ‘கரி’ என்று யானையாய், அத்தால் நினைக்கிறது குவலயாபீடமாய், குவலயாபீடமானது, அம்மேனி மிசை – அழகிய திருமேனியிலே, வெளிய – சீற. ‘நீறு சிறிதே இடும் – பொடியாக்கும்’ என்றார் ஒரு தமிழ்ப்புலவர். விண்ணோர் பெருமான் – ‘இக் கண்ணழகை அனுபவிக்கின்றவர்கள் நித்தியசூரிகள்’ என்பார், அதனையடுத்து ‘விண்ணோர் பெருமான்’ என்கிறார். ‘பரமபதத்திலுள்ளார் அடைய அனுபவியாநின்றாலும், அனுபவித்த பாகம் குறைந்து அனுபவிக்கவேண்டிய பாகம் விஞ்சியிருக்கும்’ என்பார், ‘பெருமான்’ என்கிறார்.
2உரிய சொல்லால் – அவயவ சோபை அது; அனுபவிக்கின்றவர்கள் அவர்கள்; இப்படியிருந்தால், ‘நாம் பாடுகிற கவிக்கு இது விஷயம் அன்று’ என்று மீளுதல் அன்றோ தக்கது? இப்படி இருக்கச்செய்தேயும், இவ்விஷயத்திற்கு நேரே வாசகமான சொற்களாலே. இசை மாலைகள் –3‘கேட்பதற்கு இனியனவான வார்த்தைகள்’ என்கிறபடியே, திருச்செவி சார்த்தலாம்படி இருக்கை. ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – ஏத்தி அனுபவிக்கப்பெற்றஎனக்கு. அரியது உண்டோ – 1அடையாதது அடைய வேண்டியதாய் இருப்பது யாதொன்றுமில்லை,’ என்கிறபடியே, ‘இதற்கு முன்பு அடையாததாய் இனி எனக்கு அடையப்படுவது ஒன்று உண்டோ? எனக்கு – ‘ஈசுவரன் நான்’ என்று இருக்கிற இவ்வுலகத்திலே அடிமை இனிக்கப்பெற்று, சொரூபத்திற்குத் தகுதியாக வாசிகமான அடிமை செய்யப்பெற்று, ‘வினை நோய்கள் கரிய’ என்கிறபடியே, விரோதிகள் கழியப்பெற்று இருக்கிற எனக்கு. இன்று தொட்டும் இனி என்றுமே -அடிமையில் இழிந்த இன்று தொடங்கி இனி மேல் உள்ள காலம் எல்லாம் அரியது இல்லை. 2பின்னர் அவன் பயம் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது உபநிடதம். 3பின்பு ‘தீர்ப்பாரை யாம்இனி’ என்ற திருவாய்மொழியாவது அறியாமலே அன்றோ இவர் இவ்வார்த்தை சொல்லுகிறது?
பிரதி பந்தகம் போயின
கைங்கர்யமும் கிட்டியதே
இனி என்ன வண்டும்
ஒன்றுமே இலையே என்கிறார்
கரிய மேனி மிசை
மேனி நிறமாய்
கறுத்த நிறத்துக்கு -கரு விழி
கரியவாகி -நீண்ட அப்பெரிய வாய கண்கள் புடைபரந்து
மிளிர்ந்து
ஏழு விசெஷணங்கள் அருளி –
கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்டஅப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.’
அஞ்சன சூர்ணம் -வெளிய நீறு -பொடி
சிறிதே இடும் அளவே கொண்டு அலங்கரிக்கும்
அஞ்சனத்தை நீறு அணிந்து -சிறிய திரு மடல் –
கரிய மேனிமிசை’ என்பதற்கு, மூன்று வகையான பொருள்
அருளிச்செய்யப்படுகிறது. முதற்பொருளில், ‘கரிய மேனிமிசை’ என்பது,
திருக்கண்களுக்கு அடை; இரண்டாவது பொருளில், திருமேனியைக்
காட்டுகிறது; மூன்றாவது பொருளில், பதங்களையே வேறு வகையாகப்
பிரித்துப் பொருள் கோடல் வேண்டும். கரி, அம், மேனி மிசை’ என்று
பிரித்தல் வேண்டும். பரபாகம் – பல நிறங்கள் கலத்தலால் உண்டாகும்
சோபை.
தடம் கண்ணன் போக்தாக்கள் அளவு அன்றிகே மிக்கு இருந்தபடி
அதவா
கருத்த நிறத்துக்கு -அழகுக்கு மேலே -நீறு
கரி யானை குவலாயபீடம்
அம்மேனி
எம்பெருமான் மேல் மிசை சீர
அத்தை நீறு சிறிதே இடும் பொடி பொடியாக ஆக்கினான் தமிழன் நிர்வகித்தான்
விண்ணோர் பெருமான் போக்தாக்கள் உண்டே
அநுபூத விஷயம் விஞ்சி நிற்கும் பெருமான் –
தகுதியான சொல்
அவயவ சோபை தடம் கண்
பக்தைகள் அவர்கள்
நான் பாட -கவிகளுக்கு மீளாமல் -நேராக வாசகமான சொல்லலே
இசை மாலைகள்
இனிமையான வரத்தை திருவடி -சீதை
ஏத்தி உள்ளப் பெற்றேன் அனுபவிக்க பெற்றேன்
அடைய வேண்டியது ஒன்றுமே இல்லை என்கிறார்
எனக்கு -சம்சாரத்தில் ஈச்வரோஹம் இருக்கிற
சேஷத்வம் ரசிகப் பெற்று அடிமையும் செய்து விரோதிகளும் கழிந்து –
தேசிகன் ஸ்ரீ ஸ்துதி -தாயர் முன்னால் -பெரும் தேவித் தாயார் -சிரிக்க காரணம் –
மாதா தேவி வாசுதேவம் பிதா -தயா யால் பிறந்தேன் –
ஆச்சார்யர்களையும் பெற்றுக் கொடுத்தீர்
கடாஷம் பரி பூர்ண இலக்கு ஆனேன்
கைங்கர்யம் செய்யும் படியும் பெற்ற பின்பு
இன்னும் என்ன வேணும் என்று சிரிக்கிறாயா -கேட்பதாக
லஜ்ஜை பட்டர் -அருளி –
அரியது உண்டோ எனக்கு என்கிறார் ஆழ்வார்
இன்று தொட்டும் இனி என்றுமே ஒன்றும் அரியது இல்லை
பயம் நீங்கப் பெற்றேன் -துக்கம் இல்லையே
அநந்தரம் தீர்ப்பாரை சோழப் போவது அறியாமல் பேசுகிறார் –
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply