திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-5-8–ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?

    பொ-ரை : ‘தன் திருவடிகளை இன்று வந்து பற்றிய நமக்கும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பெரிய பிராட்டியார்க்கும் இனியனானவனும், பூலோகத்திலுள்ளவர்கட்கும் நித்தியசூரிகட்கும் தலைவனும், குளிர்ந்த தாமரை மலராலே சுமக்கப்படுகின்ற திருவடிகளையுடைய பெருமானுமான சர்வேசுவரனைச் சொல் மாலைகள் சொல்லும்படியாகத் தரிக்க வல்ல எனக்குப் பரமபதத்திலேயுள்ள நித்தியசூரிகளுக்குள் இனி ஒப்பாவார் யாவர்?’ என்கிறார்.

    வி-கு : ‘நமக்கும்’ என்ற உம்மை, இழிவு சிறப்பு. ‘தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமான்’ என்ற இவ்விடத்து, ‘மலர்மிசை ஏகினான்’ என்ற திருக்குறளை நினைவுகூர்க. ‘அமைக்க வல்லேன்’ என்றது, தரித்திருந்து பாடும்படியைத் தெரிவித்தபடி. ‘யாவர்’ என்ற வினா, இன்மைப்பொருளைக் குறித்து நின்றது. வானம் – இடவாகு பெயர்.

    ஈடு : எட்டாம் பாட்டு. 1எம்பெருமானுக்குத் தம் பக்கல் உண்டான அன்பின் மிகுதியை நினைத்து, ‘அவனுடைய உபய விபூதிகளை உடையனாம் தன்மைக்கும் மிருதுத் தன்மைக்கும் தகுதியாகக் கவி சொல்ல வல்ல எனக்குப் பரமபதத்திலும் ஒப்பு இல்லை,’ என்கிறார்.

    நமக்கும் – இன்று தன் திருவடிகளைப் பற்றிய நமக்கும். அன்றிக்கே, பிறந்து இறந்து பிறிவிகளிலே உழன்று திரிகின்றவர்கட்கும் இவ்வருகாயிருக்கிற நமக்கும்; 2‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ என்றாரே அன்றோ தம்மை? பூவின்மிசை நங்கைக்கும் – நித்திய சூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப குணத்தாலும் ஆத்தும குணத்தாலும் நிறைந்திருக்கிற பெரிய பிராட்டியார்க்கும். மலரில் மணத்தை வகுத்தாற்போலே இருந்துள்ள மிருதுத்தன்மையையும்

இனிமையையும் உடையவளாதலின், ‘பூவின் மிசை நங்கை’ என்கிறது. 1‘இத்தலை நிறைவு இன்றியே இருக்கிறாப்போலேயாயிற்று அத்தலை குறைவு அற்றிருக்கிறபடி’ என்பார், ‘நங்கை’ என்கிறார். இன்பனை –2இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பு ஆயிற்று அவளிடத்தில் அன்பு செலுத்தியிருப்பது.

    3இலங்கையிலேயுள்ள சுவேல மலையிலே பெருமாள் எழுந்தருளி நிற்கச் செய்தே இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினவாறே, ‘இராஜத் துரோகியான பையல் திரு முன்பே நிற்கையாவது என்?’ என்று மஹாராஜர் அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது பெருமாள் அவரைப் பார்த்து, 4‘இராஜாக்கள் இப்படிப்பட்ட சாகஸ காரியங்களைத் தாங்களே செய்யமாட்டார்கள்,’ என்றார்; என்றது, ‘சிலர்மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார்?’ என்கிறார் என்றபடி. 5‘ஸ்ரீராமபிரான் உலகங்கட்கெல்லாம் நாதனாய் இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கிறார்,’ என்னா நின்றதே அன்றோ? கிடைப்பது கிடையாதொழிவது இச்சியாநின்றார். 6‘அத்தகைய இந்த ஸ்ரீராமபிரான் சுக்கிரீவனைச் சரணமாக அடைந்தார்,’ என்னாநின்றதே அன்றோ?நீர் மஹாராஜரான தரம் குலைய அவன் ஒரு வார்த்தை சொல்லுமாகில், நீர் தேடிப் போகிற சரக்குதான் நமக்கு என்ன செய்ய?’ என்றாரே அன்றோ?

    2‘ஸ்ரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்!’ என்றார் மஹாராஜர்; ‘இவன் புகுராவிடில் நாம் உளோம்ஆகோம்,’ என்கிறார் பெருமாள்; ‘இப்படி இருவரும் மாறுபடுதற்குக் கருத்து என்?’ என்று நஞ்சீயர் கேட்க, ‘இருவரும் ‘சரணமாகப் பற்றினவர்களை விடோம்!’ என்று மாறுபடுகிறார்கள் காணும்,’ என்பது பட்டர் அருளிச்செய்த வார்த்தை. என்றது, ‘சுக்கிரீவம் சரணம் கத:’ என்றதனை நடத்தப் பார்த்தார் மஹாராஜர்; ‘ராகவம் சரணம் கத:’ என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள்,’ என்றபடி. ‘அங்ஙனமாயின், மஹாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலை குலையாதோ?’ எனின், ஆகையாலே அன்றோ 3‘ஆநயைநம் ஹரி சிரேஷ்ட – வானரங்களுக்குத் தலைவனே! இவனை அழைத்துக் கொண்டு வா’ என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று?

    4‘இப்படி அவன் இருக்கைக்கு அடி என்?’ என்னில், அதனை அருளிச்செய்கிறார் மேல் : ஞாலத்தார் தமக்கும்

வானத்தவர்க்கும் பெருமானை – இப்படி நெடுவாசிபட்ட விஷயங்களிலே சினேகம் ஒத்திருக்கைக்கு அடி, சம்பந்தம் இரண்டு இடத்தில் உள்ளாரோடும் ஒத்திருப்பினும், 1இவர் படுக்கைப் பற்றில் உள்ளவராகையாலே. அன்றிக்கே, ‘அவன் இறைவனான நிலையும் இத்தலை பரதந்திரமான நிலையும் ஒத்திருக்கையாலே’ என்னுதல். அன்றிக்கே, ‘தாய் தந்தையர்கள் குழந்தைகளில் குறைவாளர் பக்கலிலேயன்றோ இரங்குவது? அதனாலே, சமுசாரிகள் முற்பட வேண்டுகிறது,’ என்னுதல். 2அந்தப் பரம பதமும் உண்டாயிருக்கவே அன்றோ, ‘அந்தப் பரமாத்துமா உயிர்க்கூட்டம் எல்லாம் பிரிகிருதியில் லயப்பட்டுக் கிடந்த அக்காலத்தில் தான் தனியாய் இருந்து சந்தோஷத்தை அடையவில்லை,’ என்கிறது?

    தண் தாமரை சுமக்கும் பாதப்பெருமானை – குளிர்ந்த தாமரைத் தவிசினாலே தரிக்கப்பட்ட திருவடிகளையுடைய பெருமானை. குளிர்த்தியாலும் பரிமளத்தாலும் செவ்வியாலும் தாமரை திருவடிகளுக்குத் தோற்றுச் சுமக்கிறாப் போலே ஆயிற்று இருக்கிறது; ஆதலின், ‘தாமரை சுமக்கும் பாதம்’ என்கிறது. ‘தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா’ என்றது அன்றோ முன்பும்? பெருமான் – எல்லார்க்கும் தலைவன். சொல் மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு – அவனுடைய உபய விபூதிகளை உடைமையால் வந்த ஐசுவரியத்துக்கும் மிருதுத்தன்மைக்கும் தகுதியாம்படியான கவி பாட வல்ல எனக்கு. இதற்கு, 3‘சர்வேசுவரன்,ஆழ்வீர்! நம்மை ஒரு கவி சொல்லும்,’ என்றால், அப்போதே கவி சொல்லிச் சமையும்படியாக வல்ல எனக்கு,’ என்கிறார் என்று முன்புள்ள முதலிகள் நிர்வஹிக்கும்படி. அங்ஙனன்றிக்கே, பட்டர், ‘என்னாகியே, தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி’ என்கிறபடியே, சர்வேசுவரன் கவி பாடினான். ஆகையாலே, கவி பாடத் தட்டு இல்லை; அவன் அங்கீகரித்துத் திருக்கண்களாலே குளிர நோக்கி, ‘நீர் ஒரு கவி சொல்லும்,’ என்றால் ‘பிரீதியாலே உடை குலைப்படாமல் தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்று அருளிச்செய்வர்.

    இனி யாவர் நிகர் அகல் வானத்தே – பரமபதத்திலே தரித்து நின்று, 1‘அஹமந்நம் அஹமந்நம் – நான் பரமாத்துமாவுக்கு இனியன், நான் பரமாத்துமாவுக்கு இனியன்’ என்னுமவர்கள் எனக்கு என் கொண்டார்? திரிபாத் விபூதியாய்ப் பரப்பையுடைத்தாமத்தனையோ வேண்டுவது? தெளிவிசும்பு ஆகையாலே அந்நிலந்தானே சொல்லுவிக்கும்; இருள் தருமாஞாலமாகையாலே இந்நிலம் அதனைத் தவிர்ப்பிக்கும்; 2‘சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியர்’-திருவிருத்தம், 79.– என்னக் கடவதன்றோ?

இன்பனாமிடத்தில், முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளிடத்தில்
அன்பு செலுத்தியிருப்பது,’ என்பதற்குப் பிரமாணங் காட்டுகிறார், ‘நீர்
மஹாராஜரான தரம் குலைய’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. யுத். 41 :4.
‘நீர் தேடிப்போகிற சரக்கு’ என்றது, சீதாபிராட்டியை.
இச்சுலோகப்பொருளோடு,

  ‘இந்நிலை விரைவின் எய்தா தித்துணை தாழ்த்தி யாயின்
நன்னுதற் சீதை யாலென்? ஞாலத்தாற் பயனென்? நம்பி!
உன்னையான் தொடர்வன்; என்னைத் தொடருமிவ் வுலக மெல்லாம்;
பின்னைஎன்? இதனை நோக்கி விளையாடிப் பிழைப்ப செய்தாய்.’

  என்ற கம்பராமாயணச் செய்யுளை ஒப்பு நோக்குக.

2. மேலதற்கே ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார், ‘ஸ்ரீ விபீஷணாழ்வானை’ என்று
தொடங்கி.

3. ‘ஆதலால் அபய மென்ற பொழுதத்தே யபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
காதலால்; இனிவேறு எண்ணக் கடவதென்? கதிரோன் மைந்த!
கோதிலா தவனை நீயே என்வயிற் கொணர்தி என்றான்.’

  என்றார் கம்பநாடரும்.

முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்துக்குக் கருத்து, ‘ஆசு கவியாகக் கவி
சொல்லிச் சமைக்க வல்லேனான எனக்கு’ என்பது. பட்டர் நிர்வாஹத்திற்குக்
கருத்து, ‘தரித்து நின்று சொல்ல வல்லேனான எனக்கு’ என்பது.
‘என்னாகியே’ என்ற பாசுரம், திருவாய். 7. 9 : 4. ‘உடைகுலைப்படாதே’
என்றது ‘பரவசப்படாமல்’ என்றபடி.

உபய விபூதி நாதன்
கவி சொல்ல வல்ல எனக்கு யாரு ஈடு
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் உண்பன்
தாமரை சுமக்கும் திருவடிகள் –
யார் நிகர் அகல் ஞாலத்தே –
நமக்கும் -இன்று ஆஸ்ரயித்த நமக்கும் –
வாசி இன்றி –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன்
பூவின் மிசை- நித்ய சூரிகளில் அவ்வருகாய் இருக்கும் -பிராட்டியார்
ரூப ஆத்ம குணா பூரணை
புஷ்பம் பரிமளம் வடிவு கொண்டது போலே இனிமை சௌகுமார்யம்
உமக்கு -முதல் எழுது எடுத்து மக்கு
நங்கை பரி பூரணை
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
குறை ஒன்றும் இல்லாத மலர்மகள்
முற்பாடு இங்கேயே நமக்கும் -ஸ்நேகம் முதலில் நமக்கு
கிம் கார்யம் சீதயா -மகாராஜரை -பெருமாள் வார்த்தை –
ராஜாக்கள் செய்ய வேண்டிய கார்யம்
நான் வேலைக்காரன் இருக்க நீ செய்ய வேண்டுமா
லோக நாத -இப்பொழுது சுக்ரீவனை எஜமானன் ஆக
எனக்கு கட்டளை இட்டு ஏவி இருக்க வேண்டுமே
பரிகரம் இருக்க –
ஸ்ரீராமபிரான், சுக்கிரீவனைத் தமக்கு அரசனாக நினைத்திருந்தார்
என்பதற்குப் பிரமாணங்காட்டுகிறார், ‘இராஜாக்கள்’ என்று தொடங்கி. இது,
  ஸ்ரீராமா. யுத.் 41 : 2. இதனால், ‘பரிகரங்களில் ஒருவனான நான் நிற்க,
என்னை ஏவிக் காரியமாகாவிடிலன்றோ நீர் மேல் விழ வேண்டுவது?’
என்கிறார் என்றபடி.

மேலே கூறியதற்கே மற்றும் ஒரு பிரமாணம் காட்டுகிறார், ‘ஸ்ரீராமபிரான்’
என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. கிஷ்.  4 : 18. ‘இச்சதி’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘கிடைப்பது கிடையாதொழிவது இச்சியாநின்றார்,’
என்று.

  அதற்கே மற்றும் ஒரு பிரமாணம் காட்டுகிறார், ‘அத்தகைய இந்த
ஸ்ரீராமபிரான்’ என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 20.

சீதயா கிம் கார்யம்

விபீஷணன் அங்கீகாரம் -செய்தபின்பு -அன்று ஈன்ற  கன்று

ஆதலால் அபய மென்ற பொழுதத்தே யபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த
காதலால்; இனிவேறு எண்ணக் கடவதென்? கதிரோன் மைந்த!
கோதிலா தவனை நீயே என்வயிற் கொணர்தி என்றான்.’

  என்றார் கம்பநாடரும்.

இருவரும் -சரணம் அடைந்தவர்களை ரஷிக்க
சுக்ரீவன் -பெருமாளை யும்
பெருமாள் -விபீஷணனையும் ரஷிக்க –
அவனை இட்டே  கூட்டி வரச் சொல்லி -முன்னிலையாக அங்கீகரித்து
மகாராஜர் தரம் அறியாமல் ஒரு வார்த்தை சொல்லுமாகில் நீர் தேடித் போகும் சரக்கு பிராட்டி கிடைத்து என்ன பலன்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் –
படுகைப் பற்று உள்ளவர் ஆகையால் ஸ்ரீ தனம் பிராட்டி பரிஜனம் நாம்
‘படுக்கைப்பற்று’ என்றது, ‘ஞாலம்’ என்று பூமியாய், அதனாலே, ஸ்ரீ
பூமிப்பிராட்டியைச் சொல்லிற்றாய், இது அவளுடைய விபூதியாகையாலே
இதனைப் ‘படுக்கைப்பற்று’ என்கிறார் என்றபடி. படுக்கைப் பற்று – சீதனம்.

ப்ராப்தி ஒத்து இருக்க செய்தே சம்சாரத்தில் உள்ளவர் இடம்
ஞாலத்தார் -முதலில் சொல்லி வானத்தார் பின்பு சொல்லி
சேஷியான நிலையும்  பரதந்த்ரமான நிலையும்
குறைவாளர் பக்கலில் ப்ரீதி தாய்ந்தந்தை செலுத்துமா போலே
அத்தாலே சம்சாரிகளை முற்பட வேண்டி
பரமபதம் -அவாக்ய அநாதர
த ண் தாமரை சுமக்கும் ஆசன பத்மத்தால் தரிக்க பட்ட திருவடிகள்
குளிர்தியாலும் வாசனையாலும் செவ்வியாலும் தோற்று -அதனாலே சுமக்கும் –
மிளகு ஆழ்வான் தோற்று முதலி யாண்டானை தூக்கி போன ஐதிகம்
சௌந்தர்யம் மாதுர்யம் ரசம் -சுந்தர ஸ்தவம் -சிரஸா தாங்குகிறது கூரத் ஆழ்வான்
தாமரை நின் கண் பாதம் கண் ஒவ்வா
சொல் மாலைகள் சொல்லுமாறு
சொன்னது சாமர்த்தியம்
முன்புள்ள முதலிகள் படி சொல்லும் -வலேர்க்கு
பட்டர் என்னாலே தன்னைத் தன் கவி தான் சொல்லி –
இவரை அங்கீகரித்து ப்ரீதியாலே தரித்து நின்று கவி சொல்லும்படி ஆக்கி
கால் சோராமல் -சிதிலமாகாமல் -பட்டர் நிர்வாகம் –

 உபய விபூதி யோகம் சௌகுமார்யம் இரண்டுக்கும் கவி பாட
பரம பதத்தில் தரித்து நின்று அஹம் அன்னம் அஹம் அன்னம் -சொல்வது என்ன ஆச்சர்யம்
தெளி விசும்பு இருள் தரும் மா ஞாலம் தெளிவை தவிர்ப்பிக்குமே
சீதனை யே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -திருவிருத்தம் -79

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply