ஆற்றநல் லவகை காட்டும்அம் மானை அமரர்தம்
ஏற்றைஎல் லாப்பொரு ளும்விரித் தானைஎம் மான்றனை
மாற்றமா லைபுனைந்து ஏத்திநா ளும்மகிழ்வு எய்தினேன்;
காற்றின்முன் னம்கடு கிவினை நோய்கள் கரியவே.
பொ-ரை : ‘பொறுக்கப்பொறுக்க அனுபவிப்பதற்கு நல்ல வகையைக் காட்டுகின்ற அம்மானை, நித்தியசூரிகளுக்குத் தலைவனை, எல்லாப் பொருள்களையும் பகவத்கீதை மூலமாக விரித்தவனை, எனக்குத் தலைவனை, வினைகளும் நோய்களும் காற்றிற்கு முன்னே விரைந்து சென்று கரிந்து போகும்படியாக, சொற்களாலே மாலை புனைந்து ஏத்தி எப்பொழுதும் மகிழ்ச்சியுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
வி-கு : ‘வினைகளும் நோய்களும் காற்றின் முன்னம் கடுகிக் கரிய, எம்மானை மாற்றம் மாலை புனைந்து ஏத்தி, நாளும் மகிழ்வு எய்தினேன்,’ எனக் கூட்டுக, ‘கடுகிக்கரிய, புனைந்து ஏத்தி, மகிழ்வு எய்தினேன்,’ என்க.
ஈடு : ஐந்தாம் பாட்டு. 2‘தான் எல்லார்க்கும் தலைவனாய் இருந்து வைத்து அருச்சுனனுக்கு எல்லாப் பொருள்களையும் பொறுக்கப்பொறுக்க அருளிச்செய்தாற்போலே, எனக்குத் தன் படிகளைக் காட்ட, கண்டு அனுபவித்து, நான் என்னுடைய தடைகள் எல்லாம் போம்படி திருவாய்மொழி பாடி, எல்லை அற்ற ஆனந்தத்தையுடையவன் ஆனேன்,’ என்கிறார்.
ஆற்ற – அமைய : பொறுக்கப் பொறுக்க என்றது, 3‘குளப்படியிலே கடலை மடுத்தாற்போலேயன்றிக்கே,
பொறுக்கப்பொறுக்க ஆயிற்றுத் தன் கல்யாண குணங்களை அனுபவிப்பித்தது’ என்றபடி. 1‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்றதன் பின் ‘வீற்றிருந்து ஏழ் உலகு’ என்ற திருவாய்மொழியின் அனுபவத்தை அனுபவிப்பித்தானாகில், நான் உளேன் ஆகேன் ஆன்றோ?’ என்கிறார் என்றவாறு. நல்ல வகை காட்டும் – தன்னுடைய குணங்களையும் செயல்களையும் அனுபவிப்பிக்கின்ற. அம்மானை –2உடையவன்உடைமையின் நிலை அறிந்தன்றோ நடத்துவான்? அமரர்தம் ஏற்றை – சிறிய விஷயங்களையும் உண்டறுக்க மாட்டாதே போந்த என்னை அன்றோ நித்தியசூரிகள் எப்பொழுதும் அனுபவம் பண்ணுகிற தன்னை அனுபவிப்பித்தான்? அன்றிக்கே, 3‘தனக்கு ஒரு குறை உண்டாய் அன்று; அனுபவிக்கின்றவர்கள் பக்கல் குறை உண்டாய் அன்று; தான் சர்வேசுவரனாய் இருந்து வைத்தும், தன் படிகளை அனுபவிக்கும் நித்தியசூரிகளையுடையனாய் இருந்து வைத்தும் என்னை அனுபவிப்பித்தான்,’ என்கிறார் என்னுதல். தம்மை அனுபவிப்பித்த வகையைச் சொல்லுகிறார் மேல்:
எல்லாப் பொருளும் விரித்தானை – முதல் வார்த்தையிலே ‘தர்மம் இன்னது என்றும், அதர்மம் இன்னது என்றும் அறிகின்றிலேன், 4‘நான் உனக்கு மாணாக்கன்; உன்னைச் சரணம் அடைந்தேன்; என்னைத் தெளியச் செய்வாய்,’ என்ற அருச்சுனனுக்குப் 5பிரகிருதி புருஷ விவேகத்தைப் பிறப்பித்து, கரும யோகத்தை விதித்து, ‘அதுதன்னை, நான் செய்கிறேன் என்ற எண்ணத்தைப்
போகட்டுப் பலத்தில் விருப்பமில்லாமல் செய்வாய்’ என்று, பின்னர் ஆத்தும ஞானத்தைப் பிறப்பித்து, பின்பு பகவத் ஞானத்தைப் பிறப்பித்து, எப்பொழுதும் நீங்காத நினைவின் உருவமான உபாசனக் கிரமத்தை அறிவித்து, இவ்வளவும் கொண்டு போந்து இதன் அருமையை அவன் நெஞ்சிலே படுத்தி, ‘இவை என்னால் செய்யத் தக்கவை அல்ல’ என்று கூறிச் சோகித்த பின்பு, ‘ஆகில், என்னைப் பற்றிப் பாரம் அற்றவனாய் இரு,’ என்று தலைக்கட்டினாற்போலே ஆயிற்று, கிரமத்தாலே தன்னுடைய குணங்களையும் செயல்களையும் இவரை அனுபவிப்பித்தபடி.
எம்மான் தன்னை – 1‘அருச்சுனனுக்குப் பலித்ததோ, இல்லையோ, அறியேன். அந்த உபதேசத்தின் பலம் நான் பெற்றேன்,’ என்கிறார். அவனும் இப்பொருளைக் கேட்ட பின்னர், 2‘அடியார்களை நழுவ விடாதவரே! தேவரீர் திருவருளால் என்னால் தத்துவஞானம் அடையப்பட்டது; விபரீத ஞானம் நீங்கியது; எல்லாச் சந்தேகங்களும் நீங்கி நிலைபெற்றவனாய் இருக்கிறேன்; போர் செய்ய வேண்டும் என்கிற தேவரீருடைய வார்த்தையை இப்போதே நிறைவேற்றிவிடுகிறேன்,’ என்று கூறியவன், மீண்டும், 3‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்றானே அன்றோ? 4உத்தேசிக்கிறவனும் எல்லார்க்கும் பொதுவானவன்; உபதேசிக்கிற பொருளும் எல்லார்க்கும் பொதுவானது. ஆகையாலே, அதனையறிந்த இவர்க்குப் பலித்தது என்னத்
தட்டு இல்லை அன்றோ? ‘மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்’ என்னக் கடவதன்றோ? 1இவர் மநோரதத்திலே நின்றுபோலேகாணும் அருளிச் செய்தது.
மாற்றம் மாலை புனைந்து ஏத்தி – சொன்மாலையைத் தொடுத்து ஏத்தி. என்றது, அவன் செய்த உபகாரத்திலே தோற்று ஏத்தினார்; அது திருவாய்மொழியாய்த் தலைக்கட்டிற்று,’ என்றபடி. மாற்றம் – சொல். நாளும் மகிழ்வு எய்தினேன் – அழிவு இல்லாத ஆனந்தத்தையுடையவன் ஆனேன். எய்துகை – கிட்டுகை. ‘இப்படிப் பெரிய பேற்றினைப் பெற்றீராகில், விரோதிகள் கதி என்ன ஆயிற்று?’ எனின், காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே – வினைகளும் வினைகளின் பயனான பிறவியும், காற்றினைக்காட்டிலும் விரைந்து எரிந்து சாம்பல் ஆயின. 2புதுப்புடைவை அழுக்குக் கழற்றுமாறு போலே, கிரமத்தாலே போக்க வேண்டுவது தானே போக்கிக் கொள்ளப் பார்க்குமன்றே அன்றோ? அவன் போக்கும் அன்று அவனுக்கு அருமை இல்லையே? 3‘வினைப்படலம் விள்ள விழித்து’ என்கிறபடியே, ஒருகால் பார்த்துவிட அமையுமே? 4‘பாப ரூபமான கர்மத்தினுடைய கூட்டங்கள், மேருமலை மந்தர மலை இவைகளைப்போன்று உயர்ந்திருந்தாலும், வைத்தியனைக் கிட்டிக் கெட்ட வியாதி
அழிந்து போவது, கிருஷ்ணனை அடைந்து பாவங்கள் அழிகின்றன,’ என்கிறபடியே, வியாதியின் மூலத்தை அறிந்த வைத்தியனைக் கிட்டின வியாதிபோலே அன்றோ சர்வேசுவரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி?
‘வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால் ;- ஆனீன்ற
கன்றுயரத் தாம்எறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
வன்துயரை ஆஆ மருங்கு.’-இது, பெரிய திருவந். 54.
என்ற திருப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.
அருச்சுனனுக்கு உபதேசித்திருக்க, ‘இவர் நான் பெற்றேன்’ என்கிறது
எப்படி?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘உபதேசிக்கிறவனும்’
என்று தொடங்கி. ‘இப்படி உபதேசம் பலித்த விடம் உண்டோ?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘விட்டு சித்தர்’ என்று தொடங்கி.
‘செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்.’
என்பது நாய்ச்சியார் திருமொழி, 11 : 10.
அர்ஜுனனுக்கு சாத்மிக சத்மிக்க அருளிச் செய்த படி
தன்னுடைய படிகளைக் காட்டி அருளி
அனுபவித்து கவி பாடி அனுபவித்து ஆனந்தம் அடைந்தேன்
ஆற்ற-பொறுக்க பொறுக்க
குளப்படியிலே கடலை மடுத்தால் போலே இன்றிகே
1-10 திருவாய்மொழி சாத்மிக
ஆற்ற நல்ல -இந்நின்ற நீர்மை அப்புறம் வீற்று இருந்து காட்டாமல்
அம்மான் உடையவன் அறிவானே உடைமையை ரஷிப்பது
அறிந்து பரிமாறுகிறான்
அமரர் ஏறு -சின்ன விஷயம் ஜீரணம் செய்ய முடியாத என்னை
தன்னை அனுபவிக்க வைத்தானே
நித்ய சூரிகள் நித்ய அனுப வம்
தனது படிகளை அனுபவிக்க வைத்தான்
எல்லா தத்வ த்ரயங்களும் அறிந்து
அர்ஜுனன் –
தர்ம அதர்ம வாசி -வியாகுலம் நீக்கி
சிஷ்யன் -த்வாம் பிரபன்னம் –
பிரகிருதி புருஷ விவேகம் ஆத்மா சரீர விவேகம்
கர்ம யோகம்
கர்த்ருத்வ புத்தி
பலத்தில் ஆசை இன்றி
பக்தி யோகம் தைல தாரை போலே
கொண்டு போந்து அருமையை நெஞ்சிலே படுத்தி
இது கஷ்டம் சோகித்த பின்பு
விடச் சொல்லி -நினைவை விட சொல்லி
சரம ஸ்லோகம் சாதித்து
எல்லா பொருளும் விரித்தானே
க்ரமத்தால் குண செஷ்டிதங்கள் அனுபவிக்க
அர்ஜுனனுக்கு பலிததோ இல்லையோ எனக்கு பலித்தது
சம்சயம் அர்ஜுனனுக்கு இருந்தது -கேட்ட பின்பும் –
‘சந்தேகத்தையுடையவனாய் இருக்கிறேன்’ என்பது, ஸ்ரீகீதையில்
இல்லையேயாகிலும், கீதை உபதேசம் பெற்ற பின்னர், அந்த அர்த்த
விஷயமாக மீண்டும் கேள்வி கேட்ட அருச்சுனனை நோக்கிக் கிருஷ்ணன்,
‘நிச்சயம் நீ சந்தேகத்தை உடையவனாய் இருக்கிறாய்,’ என்ற அநுகீதையில்
கூறினானாதலின், அதனை அநுவாதம் பண்ணி அருளிச்செய்கிறார்,
‘சந்தேகத்தையுடையவனாக இருக்கிறேன் என்றானேயன்றோ?’ என்று.
பொது நின்ற பொன் அம் கழல்
சொன்னதும் பிரபத்தி
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பார்
மநோ ரதம் -மனசில் இருந்து கீதை அருளினார்
தேர் தட்டில் இருந்து அருளி -சர்மா ஸ்லோகம் அருளி
தொல் மாலை
-பண்ணினேன்
நாளும் மகிழ்வு எய்தினேன்
நித்ய ஆனந்தம் அடைந்தேன்
வினைகள் காற்றில்
எரிந்து போனது
புது வஸ்த்ரம் அழக்கு க்ரமத்தில் போக வேண்டும்
கடாஷத்தால் வினைகள் போம் படி
விள்ள விழித்தால் வினைகள் போம்
வியாதி போக -நோய் முதல் நாடி -கர்மத்துக்கு அடி அறிவானே
வானோ -கானோ -கண்டிலம் -விட்டு போயின
தீயினில் தூசாகும்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply