மேவிநின் றுதொழு வார்வினை போகமே வும்பிரான்
தூவிஅம் புள்ளுடை யான்அடல் ஆழிஅம் மான்றனை
நாவிய லால்இசை மாலைகள் ஏத்திநண் ணப்பெற்றேன்;
ஆவிஎன் ஆவியை யான்அறி யேன்செய்த ஆற்றையே.
பொ-ரை : ‘வேறு பயன் ஒன்றையும் கருதாது பொருந்தி நின்று தொழுகின்ற அடியார்களுடைய பாவங்கள் போகும்படி அவர்களோடு சேர்கின்ற உபகாரகனும், சிறகையுடைய அழகு பொருந்திய கருடப்பறவையை வாகனமாக உடையவனும், பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த தலைவனுமான சர்வேசுவரனை, நாவின் தொழிலாலே இசை மாலைகளைக்கொண்டு ஏத்திக் கிட்டப் பெற்றேன்; பரமாத்துமாவான சர்வேசுவரன் என் ஆத்துமாவைச் செய்த தன்மையினை யான் அறியமாட்டுகின்றிலேன்,’ என்கிறார்.
வி-கு : தொழுவார் – பெயர். ‘ஆவி, என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன்,’ என்க.
ஈடு : நாலாம் பாட்டு. 1‘அநந்யப் பிரயோஜனரையும், முதலிலேயே பயன்களில் இழியாத நித்தியசூரிகளையுமுடையனாய் வைத்து, நித்தியசூரிகளுக்கு அவ்வருகான தான், பிறந்து இறந்து உழல்கின்ற தம் பக்கல் செய்த மஹோபகாரத்தைத் தம்மால் அளவிட்டு அறிய முடிகிறது இல்லை,’ என்கிறார்.
மேவி நின்று தொழுவார் – கிட்டக்கொண்டு 2‘நான் உனக்குத் தருகிறேன்; நீ எனக்கு ஒன்று கொடு,’ என்று வேறு பிரயோஜனங்களுக்கு மடியேற்றுக்கொண்டு போகை அன்றிக்கே, 3‘வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்’ என்கிறபடியே, அவன்றன்னையே பிரயோஜனமாகக் கொண்டு தொழுமவர்கள். என்றது, 4‘இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்’ என்கிறபடியே தொழுமவர்கள் என்றபடி. வினை போக – 5‘அவர்களுக்குப் பின்னை வினை உண்டோ?’ என்னில், வேறு பிரயோஜனங்களிலே நெஞ்சு செல்லுகைக்கு அடியான
பாவங்கள் போகும்படியாக. மேவும் பிரான் – இவன் வேறு பிரயோஜனங்களைக் கருதாதவனாய்க் கிட்டினவாறே சர்வேசுவரனும் வேறு பிரயோஜனத்தைக் கருதாதவனாய்க் கிட்டுவானே அன்றோ? நடுவில் வினைகளுக்கு ஒதுங்க இடமில்லாமையாலே அழிந்து போகும்; 1‘மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்டு, அடிஎடுப்பது அன்றோ அழகு?’ என்றாரே அன்றோ? பிரான் -உபகாரமே இயல்பு என்னும்படி இருக்குமவன்.
2ஆக, முதலடியில், முன்பு சில நாள்கள் வேறு பிரயோஜனங்களைக் கருதினவர்களாயிருந்து, பின்பு தன்னையே பிரயோஜனமாக விரும்பினார் திறத்தில் உபகரிக்கும்படி சொல்லிற்று. முதலிலேயே வேறு பிரயோஜனங்களில் நெஞ்சு செல்லாதபடி இருக்கின்ற திருவனந்தாழ்வான் பெரிய திருவடி முதலானவர்களை உடையனாயிருக்கும்படி சொல்லுகிறது மேல் : தூவி அம் புள் உடையான் – ‘தூவி’ என்ற அடைமொழியால், நினைத்த இடத்திலே கொண்டு ஓடுகைக்கு அடியான கருவியையுடையவன் என்பதனையும், ‘அம் புள்’ என்றதனால், 3‘தேவரீர் திருவடிகளாலே நெருக்கி அழுத்தின தழும்பினாலே சோபிக்கிறவன்’ என்கிறபடியே, சோபிக்கிற அழகையுடையவன் ஆகையாலே வந்த ஏற்றத்தையுடையவன் என்பதனையும் தெரிவித்தபடி. தூவி – சிறகு. அம் -அழகு. அடல் ஆழி – 4‘பரமபதத்திலுங்கூட அவனுக்கு என்வருமோ என்று அச்சங்கொண்டிருப்பவன் ஆகையாலே, எப்போதும் ஒக்க யுத்த சந்நத்தனாய் இருப்பவன்’ என்பார்
அடல் ஆழி’ என்கிறார். அடல் – மிடுக்கு. அம்மான் தன்னை – ‘பெரிய திருவடி திருத்தோளிலே பெயராதிருத்தல், திருவாழியைச் சலியாதே பிடித்தல் செய்ய வல்லவனே எல்லார்க்கும் தலைவன்,’ என்பார், ‘தூவியம் புள்ளுடையான் அடலாழி அம்மான்’ என்று ஒரு சேர அருளிச்செய்கிறார்.
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி – நெஞ்சு ஒழியவும், வாக்கின் தொழில் மாத்திரமே இசை மாலைகள் ஆயிற்றன; என்றது, நாப்புரட்டினது எல்லாம் இயலும் இசையுமாய்க் கிடக்கையைத் தெரிவித்தபடி. ஏத்தி நண்ணப் பெற்றேன் – இவர் நண்ணியன்று ஏத்தியது; ஏத்தியாயிற்று நண்ணியது. ஆவி என் ஆவியைச் செய்த ஆற்றை யான் அறியேன் – 1‘உலகங்கட்கு எல்லாம் ஓர் உயிரேயோ’ என்றும், ‘ஆத்மந ஆகாஸ : ஸம்பூத :- பரமாத்துமாவினின்றும் ஆகாசம் உண்டாயிற்று’ என்றும், ‘சர்வாத்துமா’ என்றும் சொல்லுகிறபடியே, ஒரு காரணமும் பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆவியாய் இருப்பவனை ‘ஆவி’ என்கிறார், தாம் மிகமிகத் தாழ்ந்தவர் என்பதனைத் தெரிவிப்பார், ‘என் ஆவியை’ என்கிறார், என்றது, அவன் விபு; தாம் அணு என்பதனைத் தெரிவித்தபடி. 2‘இந்தப் பரமாத்துமாதானே சந்தோஷத்தைக் கொடுக்கின்றான்?’ என்றும், 3‘வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்’ என்றும் சொல்லுகிறபடியே, அவனோடு ஒத்த ஆனந்தத்தை உடையவராம்படி தம்மைச் செய்தமையைத் தெரிவிப்பார், ‘செய்த ஆற்றை’ என்கிறார், அன்றிக்கே, ‘உலகமே உருவமாய் இருக்கின்ற ஒருவன், தன் சரீரத்திலே ஒன்றைப் பெறாப்பேறு பெற்றானாகத் தலையாலே சுமப்பதே!’ 4என்கிறார் என்னுதல். அனுபவித்துக் குமிழிநீர்உண்டு போமித்தனை போக்கி, அது பேச்சுக்கு நிலம் அன்று என்பார், ‘யான் அறியேன்’ என்கிறார். அன்றிக்கே, ‘செய்த நன்றியை அறிதலும் அவனது,’ என்கிறார் என்னலுமாம்.1
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்’
என்பது முதல் திருவந். 26.
4. ‘இன்றுவந் தித்தனையும் அமுது செய்திடப் பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப் பின்னும் ஆளும் செய்வன்’
என்பது நாய்ச்சியார் திருமொழி, 9 : 7.
5. அவர்களுக்கு – மேவி நின்று தொழுமவர்களுக்கு. ‘பாப
விமோசனமாகையாலேயன்றோ, அநந்யப் பிரயோஜனராய்க்கொண்டு
தொழுகிறார்கள்? அவர்களுக்குப் பின்னை வினையுண்டோ?’ என்னில்
என்றபடி. அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘வேறு பிரயோஜனங்களிலே’
என்று தொடங்கி. இதனால், ‘ஆஸ்ரயண விரோதி கழிந்ததேயாகிலும்,
பாபஹேதுவான சரீரம் இருக்கையாலே வேறு பிரயோஜனங்களிலே மனம்
செல்லுகைக்கு அடியான பாபம் உண்டாகைக்குக் காரணம் உண்டேயன்றோ?
அத்தகைய பாபங்கள் போம்படி’ என்பது கருத்து.
அவன் கிட்டினால் பாவங்கள் அழிந்துபோம்,’ என்பதற்குப் பிரமாணம்,
‘மடியடக்கி’ என்று தொடங்குவது.
‘இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் – அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்டு
அடியெடுப்ப தன்றோ அழகு?’
என்பது பெரிய திருவந். 30.
2. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘ஆக, முதலடியில்’ என்று
தொடங்கி.
3. தோத்திர ரத்நம், 41.
4. ‘ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும்
பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காண
வல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து.’
அநந்ய பிரயோஜனரை
பிரயோஜனர்
நித்ய சூரிகள்
நித்ய சம்சாரி எனக்கு உபகாரம் செய்து அருளி
மேவி நின்று தொழுவார்
நின்று மேவி தொழுவார்
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்’
என்பது முதல் திருவந். 26.
அங்கேயே நின்று தொழுவார்
இங்கு -அமுது செய்திடப் பேரில் ஓன்று நூறாயிரம் போலே
கர்மம் உண்டோ இவர்களுக்கு
பிரயோஜனம் பெற்று போகாதபடி
மேவும் பிரான் –
இவன் அநந்ய பிரயோஜனனாய் கிட்டுனவாறே அவனும் அநந்ய பிரயோஜனனாய் கிட்டுமே
நடுவிலே வினைக்கு ஒதுங்க இடம் இல்லை
இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம் – அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்மீண்டு
அடியெடுப்ப தன்றோ அழகு?’
என்பது பெரிய திருவந். 30.
பாபம் பார்த்து சொல்கிறார்
பண்டு அன்று பட்டினம் காப்பே நோய்காள் புக இடம் இல்லை உங்களுக்கு
மடி யடக்கி ஒதுங்கி
இனிமேல் அடி எடுப்பது தன அழகு –
ஓடிப் போகும் படியாக மேவும் பிரான்
பிரான் -உபகாரம் செய்தவன்
உபகாரமே சீலம்
நித்ய சம்சார்கள் இப்பொழுது அநந்ய பிரயோஜனர்
முதலில் நெஞ்சில் செலுத்தா நித்ய சூரிகள்
கருட ஆழ்வான் சக்கரத் தாழ்வான்
தூவி சிறகு நினைத்த இடம் செலுத்த அழகிய பறவை
திருவடி ஸ்பர்சத்தல் வந்த அழகு –
அடல் ஆழி -மிடுக்கு அஸ்த்தான பய சங்கை -என்ன ஆகுமோ நெருப்பு கக்கிக் கொண்டு
அம்மான் –
கருட வாகனத்வம் -திருவாழி தரித்து -சீமாலி -நப்பினை பிராட்டி உடன் பிறந்தவன் என்பர்
ஆங்கார வார மதுகேட்டு அழலுமிழும்
பூங்கா ரரவணையான் பொன்மேனி – யாங்காண
வல்லமே யல்லமே மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து.’
நெஞ்சு ஒழிய நாக்கால் பாட
சககாரியம் இன்றி வாக்கால் இசை மாலைகள்
நா புரட்டினது எல்லாம் இயலும் இசையும்
நண்ணி
ஸ்தோத்ரம் செய்து கிட்டினார்
ஆவியை சர்வாத்மா ஓர் உயிர் -எம்பெருமான்
என் ஆவி
விபுவாகிய தான் அணு வாக்கிய என்னை
தன்னோடு அவன் –
ஆவி’ என்பது, பொதுவான சொல்லாகையாலே, அதற்கு, ‘ஒரு காரணமும்
பற்றாமே எல்லாப் பொருள்கட்கும் ஆத்துமாவாய் இருப்பவன்’ என்ற
பொருளை அருளிச்செய்து, மேற்கோள்களும் காட்டுகிறார்,
‘உலகங்கட்கெல்லாம்’ என்று தொடங்கி. இது, திருவாய். 8. 1 : 5.
‘ஆத்மந:’ என்பது, தைத்திரீய ஆனந். 1.
2. ஆனந்தவல்லி. 7.
3. திருவாய், 4. 5 : 3.
4. ஆக, ‘செய்தவாற்றை’ என்பதற்கு இரண்டு கருத்து அருளிச்செய்தபடி.
முதலாவது தம்மை ஒக்க அருள் செய்தல்; இரண்டாவது, ‘தலையாலே
சுமப்பதே!’ என்பது.
யான் அறியேன் -உபகார ஸ்ம்ருதியும்
எனக்கு ஆத்மாவாக இருப்பதையும் பெருமையாக கொண்டு
கீழில் பாட்டில் விண்ணோர் பெருமான் -பொதுவாக சொல்லி
இதில் இன்னார் என்கிறார் -புள்ளுடை அம்மான் -ஆழி அம்மான்
விண்ணோர் நித்ய சூரிகளை காட்டி
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply