அறியும்செந் தீயைத் தழுவி,
‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும்தண் காற்றைத் தழுவி,
‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறிகொள் துழாய்மலர் நாறும்
வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான்
செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?
பொ-ரை : ‘சுடும் தன்மையது என்று எல்லாராலும் அறியப்படுகின்ற சிவந்த நெருப்பைத் தழுவி, ‘அச்சுதனே!’ என்று சொல்லுவாள்; உடம்பு வேகின்றிலள்; வீசுகின்ற குளிர்ந்த காற்றைத் தழுவி, ‘என்னுடைய கோவிந்தனே!’ என்பாள்; வாசனையையுடைய திருத்துழாய் மலரின் நறுமணம் வீசாநின்றாள்; மஹா பாவியாகிய யான் பெற்ற செறிந்த வளையல்கள் பொருந்திய முன்கையினையுடைய சிறிய மான் போன்ற என் பெண்ணானவள் செய்கின்ற செயல் என் கண்களுக்கு ஒன்றா? அன்று; பல,’ என்கிறாள்.
வி-கு : ‘பெற்ற சிறுமான்’ என்க. செய்கின்றது – வினையாலணையும் பெயர். ‘ஒன்றே’ என்பதில் ஏகாரம் : எதிர்மறை.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1இவளுடைய அதியான செயல்களைச் சொல்லப்புக்கு, ‘அவற்றிற்கு எண் இல்லை’ என்கிறாள்.
அறியும் – ‘ஒன்றால் அவிக்க ஒண்ணாது, எரிக்குந் தன்மையது’ என்று எல்லாராலும் அறியப்படுகின்ற. அன்றிக்கே, ‘இவள் தானும் இப்படி மயங்குவதற்கு முன்பு எரிக்குந்தன்மையது என்று அறிந்து நீக்கிப் போந்தது’ என்னுதல். செந்தீயைத் தழுவி – எரிக்கின்ற நெருப்பைத் தழுவாநின்றாள்; ‘மந்திரம் மருந்து முதலியவைகளால் தடைசெய்யப்பட்ட ஆற்றலையுடையது’ என்றுதான் தழுவுகிறாளோ?’ 2‘ஒளிகளின் நிலையான திரள்’ என்கிறபடியே, ஒளியுடைமையையே பார்த்துத் தழுவாநின்றாள். அன்றிக்கே, 3‘பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ என்னுமாறு போன்று, இப்போது தனக்காக ஒரு மாணிக்கப்படி சார்த்தி அணைக்கைக்காக வந்தான் என்று பார்த்துத் தழுவுகின்றாள் என்னுதல். அச்சுதன் என்னும் – 4‘உடைமையை மங்கக் கொடாமைக்காகவந்தானே!’ என்பாள். மெய் வேவாள் – இவள் தான் மயக்கத்தாலே கட்டிக்கொள்ளுகிறாள்; ‘அந்நெருப்புத் தன் காரியம் செய்யாது ஒழிவான் என்?’ என்னில், 1‘அந்த விராட்புருஷனுடைய முகத்திலிருந்து இந்திரனும் அக்கினி தேவனும் உண்டானார்கள்,’ என்கிறபடியே, அச்சுதன் முகத்தாலே வந்தது ஆகையாலே எரித்திலது. அன்றிக்கே, ‘செந்தீயைத் தழுவி அச்சுதன் என்னும்; மெய்வேவாள்’ என்கிறாள் ஆகையாலே, 2இவளுடைய அக்கினி ஸ்தம்பந மந்திரம் இருக்கிறபடி என்னுதல். அன்றிக்கே, 3‘அந்தப் பகவானை நினைப்பதனால் உண்டான சந்தோஷத்தோடு கூடினவனாய்’ என்கிறபடியே, ‘அவனுடைய நினைவாலே நனைந்திருக்கையாலே சுட மாட்டுகிறது இல்லை,’ என்னுதல். 4‘தந்தையே! இந்த நெருப்புக் காற்றாலே தூண்டப்பட்டதாக இருப்பினும், இங்கு என்னைக் கொளுத்த இல்லை; நான் நான்கு பக்கங்களிலும் எல்லாத் திக்குகளிலும் தாமரைப்பூக்களாகிற விரிப்பினால் பரப்பப் பட்டனவாயும் குளிர்ந்திருப்பனவாயும் பார்க்கிறேன்,’ என்றான் அன்றோ ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான்? அன்றிக்கே,ஸீதோபவ – தண்ணிது ஆகக்கடவாய்’ என்றவளும் இல்லை அன்றோ? ‘தண்ணிதாகக் கடவாய்’ என்றவள் தானே இங்ஙனம் செய்கிறாள்? ஆதலின், எரித்திலது’ என்னுதல். ஆக, 2‘பிரிவு காலத்தில் வாயு புத்திரனைத் தழுவுகை நாயகனுக்கும் நாயகிக்கும் பணி’ என்றபடி. 3‘ஹநுமானான திருவடிக்கு என்னால் கொடுக்கப்பட்ட இந்த ஆலிங்கனமானது’ என்றதனால், நாயகன் தழுவினமை உணரலாகும். 4‘வாயுவினின்றும் நெருப்பு உண்டாயிற்று,’ என்றதனால், நெருப்புக் காற்றின் புத்திரனாதல் உணர்தல் தகும்.
எறியும் தண் காற்றைத் தழுவி – வீசுகிற குளிர்ந்த காற்றைத் தழுவி. 5‘விரஹ நோயினரைச் சுடுந்தன்மையதான
காற்றும் சுட்டிலது; இதுவன்றோ ஆச்சரியம்!’ என்பாள், ‘எறியும் தண்காற்றை’ என்கிறாள். 1‘பிராணனிடத்தில் காற்றுத் தோன்றியது’ என்கிறபடியே, இக் காற்றும் அவனுடைய பிராணனாய் இருப்பது ஒன்றே அன்றோ? ஆகையாலே, அதுவும் சுட்டதில்லை. என்னுடைக் கோவிந்தன் என்னும் – 2‘நீங்கி ஒரு கணநேரமும் உயிர் பிழைத்திருக்கமாட்டேன்!’ என்கிறபடியே, ‘பிரிவில் பொறுக்க வல்லனோ? அவன் உண்மை பிறர்பொருட்டாக அன்றோ இருப்பது?’ என்று சொல்லாநிற்கும். அன்றிக்கே, ‘கன்று மேய்த்த வடிவோடே என் துன்பம் தீர அணைக்க வந்தான் என்று சொல்லாநின்றாள்,’ என்னுதல். 3‘உலகத்தார் படியும் அன்று; விரஹநோயினர்கள் படியும் அன்று; உலகத்தார் படியாகில் நெருப்புச் சுடவேண்டும்; விரஹநோயினர்கள் படியாகில் காற்றுச் சுடவேண்டும்; இரண்டும் கண்டிலோம்,’ என்கிறாள்.
வெறி கொள் துழாய் மலர் நாறும் – 4‘கோவைவாயாள்’ என்ற திருவாய்மொழியிற்கூறிய கலவியால் வந்த பரிமளம் 5பத்து எட்டுக் குளிக்கும் நிற்குமேஅன்றோ? அத்தாலேயாதல்; 1வந்தேறி கழிந்தால் ஆத்துமாவின் தன்மை பகவானுக்கு உரிமைப்பட்டதாய் அன்றோ இருப்பது? அத்தாலேயாதல். அன்றிக்கே, ‘காற்றோடே கலந்து வந்து புகுந்து அணைந்தான்’ என்று காரியத்தைக் கொண்டு கற்பித்துக் கூறுகின்றாள் ஆகவுமாம். 2‘அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்?’ என்னக் கடவதன்றோ? வினையுடையாட்டியேன் பெற்ற – இவள் இத்தனை உள் புகுந்தது – மூழ்கியது நான் செய்த பாபமே அன்றோ? பிரிவிலும் வடிவு திருத்துழாய் நாறும்படி உள்புகுந்து – மூழ்கி, பின்பு போலி கண்டு மயங்கும்படி மயக்கமேயாய் விடுகைக்கு அடி, பாவத்தைச் செய்த என் வயிற்றிற்பிறப்பே அன்றோ?’ என்கிறாள் என்றபடி. 3பல பிறவிகளிலே ஈட்டப்பட்ட புண்ணிய பலத்தைப் பாப பலமாகச் சொல்லுகிறாளாயிற்று இப்போதை இழவைப் பற்ற. 4பகவத் விஷயத்தில் உள் புகுந்தவர்கள் பெற்றவர்களுக்கு ஆகார்களே அன்றோ? ‘அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்,’ என்னக் கடவதன்றோ? செறிவளை முன்கைச் சிறுமான் –
முன் கையிலே செறிந்த வளையையுடையவள்; 1இதுவன்றோ இருக்கத் தகும்படி! முன்பு இருக்கும்படியாதல், பின்பும் அப்படியே இருக்கத் தகுமவள் என்னுதல். அன்றிக்கே, ‘இவள் வளைத்தழும்பு அவன் உடம்பில் காண்கை அன்றிக்கே, இவள் உடம்பிலே அவன் உடம்பில் திருத்துழாய் காணுமத்தனையாவதே!’ என்பாள், ‘செறிவளை முன்கை என்கிறாள்’ என்னுதல். ‘இதற்கெல்லாம் பற்றுக்கோடு எங்குத்து?’ என்பாள், ‘சிறுமான்’ என்கிறாள். ‘நனி இளையள்’ என்றபடி. செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே? – ‘ஒன்றன்று; பல’ என்கிறாள்.
அன்றிக்கே, ‘ஒன்றே’ என்பதற்கு, 2‘நெருப்பைக் கட்டிக்கொள்வது, காற்றைத் தழுவுவது, திருத்துழாய் நாறுவது ஆகாநின்றாள். ‘நெருப்புச் சுடாமையாலே உலக ஒழுக்கினள் என்று நிச்சயிக்க ஒண்கிறது இல்லை; போலியான காற்றைத் தழுவுகையாலே ‘சேர்ந்தவள்’ என்ன ஒண்ணாது; திருத்துழாய் நாறுகையாலே ‘விரஹிணி’ என்ன ஒண்ணாது; ஆகையாலே, ஒன்றில் வைக்கப்பட்டிருக்கிறதோ இவள் படி?’ என்கிறாள் என்னுதல்.
ஸ்ரீராமா. சுந். 53 : 28. இதனால், தன் சத்தியாலே வேவாதிருந்தாள்
என்பதனைத் தெரிவித்தபடி.
‘தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்’
என்றார் கம்பநாட்டாழ்வார்.
2. ‘செந்தீயைத் தழுவி’ என்றதற்குச் சிலேடையாக அருளிச்செய்கிறார், ‘பிரிவு
காலத்தில்’ என்று தொடங்கி. வாயு புத்திரன் – நெருப்பும், அனுமானும்.
அதி பிரவர்த்தி கண்டு என்ன செய்வேன் என்கிறாள்
செந்தீ தழுவி அச்சுதன்
உடம்பு சுடவே இல்லை
எரியும் த ண் காற்றை
திருத் துழாய் மணம் கமழ –
அறி யும் செந்தீ -நெருப்பை அறி க்க =அணைக்க முடியாதே
திருநாராயணபுர வார்த்தை
தழுவிக் கொண்டு
மந்த்ரம் ஔஷதம் கொண்டு தழுவிக் கொண்டது போலே
பிரகாசம் தேஜசாம் ராசீம் இருப்பதால் -தழுவிக் கொள்கிறாள்
பொருநீர்க் கடல் தீப்பட்டு எங்கும், திகழும் எரியோடு செல்வது ஒப்ப’ -திருவாய்மொழி -8-9-1-போலே
தன்னுடன் கலக்க மாணிக்கப்படி ரத்னாங்கி சாத்திக்கொண்டு வந்து இருக்கிறான்
அச்சுதன் கை விடாதவன்
பிரமத்தாலே கட்டிக் கொள்கிறாள்
அதுவும் அதன் கார்யம் செய்யாமல் இருப்பது என்ன
அச்சுதன் முகம்
வழியாக வந்ததால் எரியவில்லை பாவ சுத்தி
நெருப்பு சுடுவதும் அறிய மாட்டாள்
முகாதிச்ய அக்நிச்ய
முகத்தில் இருந்து அக்னி வந்ததே
நெருப்புச் சுடாமைக்கு நான்கு வகையான காரணங்களை அருளிச்செய்கிறார்,
‘அந்த விராட்புருடன்’ என்று தொடங்கும் பொருளையுடைய சுலோகத்தோடு,
‘திண்சுட ராழி அரங்கேசர் திக்குத் திருச்செவியில்,
மண்கழ லில்,சத்ய லோகஞ் சிரத்தின், மருத்துயிரில்,
தண்கதி ருள்ளத்தில், வானுந்தி யில்,செந் தரணிகண்ணில்,
ஒண்கன லிந்திரன் வான்முகப் போதி லுதித்தனரே.’
என்ற திருவரங்கத்து மாலைச் செய்யுளை ஒப்பு நோக்குக.
‘அச்சுதன் முகத்தாலே’ என்றது, சிலேடை : ‘அச்சுதன் காரணத்தால்’
என்பதும், ‘அச்சுதனுடைய முகத்திலே’ என்பதும் பொருள்.
அச்சுதன் இவளுடைய அக்னி ஸ்தம்பன மந்த்ரம்
நினைவினால் நனைக்கப் பட்டு இருக்கிறாள்
சீதோ பவ சீதை வார்த்தை போலே யாராவது சொன்னார் உண்டோ
சொன்னவளே இவள் தானே
தாயே யனைய கருணையான் துணையே! ஏதுந் தகைவில்லா
நாயே யனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ?
நீயே உலகுக் கொரு சான்று, நிற்கே தெரியுங் கற்பு,அதனில்
தூயேன் என்னில் தொழுகின்றேன்; எரியே! அவனைச் சுடல்,’ என்றாள்’
செந்தீயைத் தழுவி’ என்றதற்குச் சிலேடையாக அருளிச்செய்கிறார், ‘பிரிவு
காலத்தில்’ என்று தொடங்கி. வாயு புத்திரன் – நெருப்பும், அனுமானும்.
பிராண பூதம் வாயு
பிராண வாயு
உத்பூதம்
அதுவும் சுடவில்லை
ஆய காலையின் அமரர் ஆர்த்தெழத்
தாயின் அன்பனைத் தழுவி னான்தனி
நாய கன்பெருந் துயர நாமறத்
தூய காதல்நீர் துளங்கு கண்ணினான்.’
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ’!
‘வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ!’-திருவாய்மொழி -9-9-1/4
என்னுடை கோவிந்தன்
பிரிந்து –
கோ வாக்கு பசு -கிருஷ்ணன்
கோவிந்தன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
‘அவனுண்மை’ என்று தொடங்கி. கோவிந்தன் – ஸ்ரீராமபிரான். ‘கோவிந்தன்’
என்பதற்கு வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி. இங்குக் கோவிந்தன் – கிருஷ்ணன். இத்தால், பசுக்களை
இரட்சிக்கையாலே பரோபகாரத்தன்மை சொல்லுகிறது. காற்றுக்கும்
பரோபகாரத் தன்மை உண்டே? அவ்வளவில் ஒப்புமை கொள்க.
கன்று மேயத வடிவுடன் துக்கம் தீர்க்க வந்தான்
நெருப்பு வைதிகர் போலே இன்றியும்
விரகிதர் காற்றை தழுவாமல் இருந்து
வெரி கோவை வாயாள் கலந்த பத்து குளிக்கு போகாத திருத் துழாய் கந்தம்
ஆத்மா ஸ்வரூபம்
வந்தேறி சரீரம் கழிந்த பின்பு ஆத்மாவின் ஸ்வரூப பரிமளம்
காற்றுடன் வந்து கலந்தான்
வினை உடை யாட்டியேன் எனது பாபமே இவள் படுகிறாள்
புண்ய பலத்தை பாப விஷயமாக சொல்கிறாள்
இழவு கண்டதால் துக்கம்
போலி கண்டு பிரேமிக்கும் படி
பிரிவிலும் திருத் துழாய் மணம் கமழ்ந்தாலும்
பகவத் விஷயத்தில் -புகுந்த -கள்வன் கொல் –
அன்னையும் அத்தனையும் -போக விட்டு இருப்பேன் -அடியேன் கைங்கர்ய பரையாக பார்க்காமல்
பெரிய திருமொழி -3-7-7-
செறிந்த வளை தழும்பு அவன் திருமேனியில் பார்க்கக் கடவ
திருத் துழாய்
முன் கையிலே
முன்பு கையிலே
இரண்டு அர்த்தம் –
சிறுமான் -ஆஸ்ரயம் மென்மையானவள்
செய்வது ஓன்று அன்று அநேகம்
நெருப்பு காற்றை தழுவி
லோகத்தார் படியும் இல்லை
கலந்து இருக்க வில்லை காற்றை தழுவி
கலக்க வில்லை சொல்ல முடியாதே திருத் துழாய் மணப்பதால்
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply