நினைப்பான் புகின் 1கடல் எக்கலின் நுண்மண லிற்பலர்
எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்குஅற மாய்தல்அல் லால்மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ.
பொ-ரை : ‘நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தை எல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கலிலே உள்ள நுண்மையான மணல்களைக்காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந்தார்களே அன்றி, வேறு ஒன்றனையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருஷ்ணன் திருவடிகளை வணங்குங்கள்,’ என்றவாறு.
வி-கு : ‘நினைப்பான் – வினையெச்சம். எக்கல் – மணல் மேடு. ‘ஆண்டு கழிந்தவர் பலர்’ என்க. மனைப்பால் – மனை இடம்.
ஈடு : நாலாம் பாட்டு. 2‘செல்வத்தின் நிலையாமையும் மதிப்பு அறுகையும் கிடக்கச்செய்தே, இன்பத்தை அனுபவிக்கின்றவர்களுடைய நிலையாமையாலும் அவனைப் பற்றவேண்டும்,’ என்கிறார்.நினைப்பான் புகின் – நினைக்கப்புக்கால். ‘புகின்’ என்றதனால், 1கடலிலே இழிவாரைப்போல, நினைத்ததாய்த் தலைக்கட்ட ஒண்ணாதபடியாய் இருக்கிற இருப்பும், தாம் உலக வாழ்வினை நினையார் என்னுமிடமும் தோற்றுகின்றன. ‘ஆயின், இப்பொழுது நினைக்கிறது என்?’ எனின், ஆனாலும், 2பிறருடைய நலத்திற்காக நினைக்குமது உண்டே அன்றோ? கடல் எக்கலில் நுண்மணலின் பலர் – அலைவாய் எக்கலில் நுண்ணிய மணலிற்காட்டில் பலர் ஆவார். ‘இப்படியாண்டு முடிந்து போகிறவர்கள்தாம் யார்?’ என்னில், ‘சிறிய மனிதர்கள் அல்லர்; 3‘பிரமாவினுடைய ஒரு பகலை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் ஓர் இரவை ஆயிரம் சதுர்யுகம் உள்ளதாகவும் அறிகிறார்கள்,’ என்கிறபடியே, 4ஆயிரம் சதுர்யுகம் கூடியது ஒரு பகலாய், இப்படி இராத்திரியாய், இங்ஙனம் நூறு ஆண்டு இருந்து துவிபரார்த்தகாலம் உயிர் வாழ்ந்து முடிந்து போகும் பிரமன் முதலானோர்’ என்கிறார் மேல்; எனைத்தோர் உகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர் – பல யுகங்களும் இவ்வுலகையாண்டு, 5இது குறியழியாதே இருக்க, இதனை ‘என்னது’ என்று அபிமானித்து முடிந்து போனவர்கள். ‘கழிந்தவர் கடல் எக்கலில் நுண் மணலின் பலர்,’ எனக்
கூட்டுக. 1‘உலகில் கழிந்த பிரமர்கள் கங்கையிலே உள்ள மணல் போலவும் இந்திரனாலே பெய்விக்கப்படுகின்ற மழைத்தாரைகள் போலவும் எண்ணுதற்கு முடியாதவர்கள் ஆவர்,’ எனப்படுதலால். ‘கழிந்தவர் நுண்மணலிற்பலர்’ என்கிறார்.
மனைப்பால் மருங்கு அற – அசலிட்டுப் பக்கத்தில் உள்ளார்க்கும் நாசமாம்; மனைப்பால் – மனை இடம். மருங்கு – அயல். சிறுக வாழ்ந்தானாகில், தன்னளவிலே போம்; பரக்க வாழ்ந்தானாகில், தன் அயலில் உள்ளாரையும் கொண்டு போம்; பெருமரம் முரிந்தால் அருகு உள்ளவற்றையும் கொண்டு போம் அன்றோ? ஆதலின், ‘மனைப்பால் மருங்கு அற’ என்கிறார். மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம் – 2இப்படி முடியுமது ஒழிய நிலைத்திருப்பாரை ஒருவரையும் கண்டிலோம். ‘ஆனால், செய்ய அடுப்பது என்?’ என்னில், பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமின் – ‘பனைபோலே இருக்கையாலே அச்சத்தை உண்டாக்குகின்ற காலையுடைத்தான மதயானை உண்டு, குவலயாபீடம்; அதனை முடித்தவன் திருவடிகளைப் பற்றுதற்குப் பாருங்கோள். 3அவன் உங்களுடைய பிரபலமான தடைகளைப் போக்க, நீங்கள் அவன் காலிலே தலை சாய்க்கப் பாருங்ககோள்,’ என்கிறார். மேற்பாசுரத்தில். 4‘மாம்’ என்றபதத்தின் பொருள் சொல்லப்பட்டது: இப்பாசுரத்தில் ‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது.1
ஐஸ்வர்யம் மட்டும் நிலை இல்லை எனபது இல்லை
போக்தாவும் நிலை இல்லையே
சமுத்ரம் நுண் மணல் போலே பல ஜீவாத்மாக்கள்
கோடி கணக்கான ஆண்டுகள் ஆண்டு மாய்ந்து போனவர்கள்
பனை மரம் போன்ற காலை கொண்ட குவலயாபீடம் யானை செற்றவன் தாள்
நினைக்க முடியாத சம்சாரம் -அளவு
நினைக்க முடியாது –
தாம் லோக யாத்ரை நினைக்க வேண்டாதபடி உள்ளது –
அலை வாரி வரும் மணல் போலே அநேகர்
சூத்திர மனுஷ்யர் அல்லர்
ஆயிரம் சதுர யுகம் பிரமாதிகள் -கூட இப்படி -கோடி பிரம்மாக்கள்
சகச்ர யுக பர்யந்தம்
15 நிமிஷம் ஒரு காஷ்டை; 30 காஷ்டை ஒரு கலை; 30 கலை ஒரு
முகூர்த்தம்; 30 முகூர்த்தம் ஒரு நாள்; 15 நாள் ஒரு பக்ஷம்; 2 பக்ஷம் ஒரு
மாதம்; 2 மாதம் ஒரு ருது; 2 ருது ஓர் அயனம்; 2 அயனம் ஒரு வருஷம்;
இப்படி மனித வருஷம் 360 கொண்டது ஒரு தேவ வருஷம்; தேவ வருஷம்
12000 கொண்டது ஒரு சதுர் யுகம்; 71 சதுர் யுகம் ஒரு மந்வந்தரம்; 14
மந்வந்தரம் ஆயிரம் சதுர்யுகம்; இது பிரமனுக்கு ஒரு பகல்; இரண்டாயிரம்
சதுர்யுகம் பிரமனுக்கு ஒரு நாள். இந்த நாள்களால் மாதங்களையும்,
மாதங்களால் வருஷங்களையும் பெருக்கி, அதனால் வருகின்ற வருஷம் நூறு
ஆனால், பிரமனுடைய ஆயுள் முடிவாகும் என்பர்.
43 20 000 வருஷம்
12000 தேவ வருஷம் இரு சதுர யுகம்
1000 சதுர யுகம் ஒரு பகல்
இப்படி ஒரு ராத்திரி
இங்கனே நூறு ஆண்டு இருந்து ஜீவித்து முடிந்து போன பிரமாதிகள் எத்தனை பேர்
லோகம் குறி அழியாது இருக்க -இவர்கள் மாய்ந்து போக –
கங்கை -மழை சொட்டு போலே
பிதாமகா பிரம்மாக்கள் எண்ணிக்கை இன்றி
மனைப்பால் மருங்கு அற -சேர்த்து
சிறுக ஜீவித்தான் ஆகில் தன்னடையே போம்
பெருக ஜீவிதான் ஆகில் அனைவரையும் அழித்து கொண்டு போம்
களிறு அட்டவன் திருவடிகள் –
பிரதிபந்தம் போக சித்தமாக உள்ளவன் –
கீழில் பாட்டில் மாமின் அர்த்தம்
இதில் அஹம் அர்த்தம்
மாம்’, ‘அஹம்’ என்ற இரண்டும் சரம சுலோகத்திலுள்ள பதங்கள். மேல்
பாசுரத்தில், ‘கண்ணன்’ என்றதனால், சௌலப்யம் தோன்றுகிறது. அதனால்,
‘மாம்’ என்ற பதத்தின் பொருள் கூறப்பட்டது,’ என்கிறார். இப்பாசுரத்தில்,
‘மதகளிறு அட்டவன்’ என்றதனால் ஆற்றல் தோன்றுகிறது. அதனால்,
‘அஹம்’ என்ற பதத்தின் பொருள் சொல்லப்படுகிறது என்கிறார்.
கண்ணன் கழல்கள் கீழே சொல்லி
கார்யம் செய்பவன் களிறு அட்டவன் -இங்கே அருளுகிறார்
கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க் கயிறும், சேநாதூளி தூசரிதமான
திருக்குழலும் தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற சாரத்ய
வேஷத்தை ‘மாம்’ என்று காட்டுகிறான்.
(சூத். 218.)
2. ‘சர்வஜ்ஞனாய், சர்வசக்தியாய், பிராப்தனான நான்’, ‘கீழ் நின்ற நிலையும்,
மேல் போக்கடி அறிகைக்கும் அறிந்தபடியே செய்து தலைக் கட்டுகைக்கும்
ஏகாந்தமான குண விசேஷங்களையும், தன் பேறாகச் செய்து
தலைக்கட்டுகைக்கு ஈடான பந்த விசேஷத்தையும் காட்டுகிறது,’ ‘தனக்காகக்
கொண்ட சாரத்ய வேஷத்தை அவனையிட்டுப் பாராதே தன்னையிட்டுப்
பார்த்து, அஞ்சின அச்சந்தீரத் தன்மையை ‘அஹம்’ என்று காட்டுகிறான்,’
என்பன ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீ சூக்திகள்;
(முமுக்ஷூப்படி,244, 245, 246.)
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply