துயர்இல் சுடர்ஒளி தன்னுடைச் சோதி
நின்றவண் ணம்நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில்
தோன்றிக்கண் காணவந்து
துயரங்கள் செய்துதன் தெய்வநிலை உலகில்
புகஉய்க்கும் அம்மான்
துயரம்இல் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற
யான்ஓர்துன் பம்இலனே.
பொ-ரை : ‘துன்பங்கட்கு எதிர்த்தட்டான மிக்க ஒளியுடன் கூடிய தன்னுடைய திவ்விய மங்கள விக்கிரகமானது பரமபதத்தில் நிற்கிறவாறே இவ்வுலகத்திலும் நிற்கும்படியாக, துன்பங்களால் மிக்கிருக்கின்ற மனிதப் பிறவியில் தோன்றி, ஊனக் கண்கள் காணுமாறு வந்து துன்பங்களைச் செய்து, தனது தெய்வத் தன்மையை உலகத்தில் புகும்படியாகச் செலுத்துகின்ற இறைவனும், குற்றம் இல்லாத புகழையுடைய கண்ணபிரானும், ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும் ஆன எம்பெருமானது நற்குணங்களை அனுபவித்த யான் ஒரு துன்பமும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.
வி-கு : ‘நிற்கத் தோன்றிக் காண வந்து துயரங்கள் செய்து புக உய்க்கும் அம்மான்’ எனக் கூட்டுக. துயரங்கள் செய்தலை வியாக்கியானத்திற்காண்க. துற்ற – நுகர்ந்த.
ஈடு : ஆறாம் பாட்டு. 1‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய விக்கிரகத்தை, இதர சாதிகளின் தன்மையை உடையதாக்கிச் சமுசாரிகள் கண்களுக்கு விஷயம் ஆக்கின கிருஷ்ணனுடைய குணங்களை அனுபவிக்கப்பெற்ற எனக்கு ஒரு துக்கத்தின் வாசனையும் இல்லை,’ என்கிறார்.
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி – தள்ளத்தக்க குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டாய், சுத்த சத்துவமயம் ஆகையாலே தனக்குமேல் ஒன்று இல்லாததான ஒளியுருவமாய், பிறர்க்கு உள்ளது ஒன்று அன்றிக்கே, தனக்கே சிறப்பாகவுடைய விக்கிரகமானது. நின்ற வண்ணம் நிற்கவே – அங்கு இருக்கும்படியில் ஒன்றும் குறையாமல், விளக்கிலே கொளுத்தின விளக்குப் போன்று அங்கு நின்ற வண்ணம் இங்கு நிற்க. 1‘எனக்கு உரியதான பிரகிருதியை அதிஷ்டித்து என் மாயையால் உண்டாகிறேன்,’ என்று சொல்லப்பட்டதே அன்றோ? துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி – துக்கக் கடலிலே அழுந்தாநின்றுள்ள மனிதர்களுடைய பிறவிகளிலே தோன்றி. 2‘எல்லா உலகங்கள் ஆகிற தாமரை மலரும்படி தேவையாகிற கீழைச்சந்நிதியில் மிக்க ஒளியையுடைய கிருஷ்ணன் ஆகிற சூரியன் உதித்தான்,’ என்கிறபடியே, தோன்றினவன் ஆதலின், ‘தோன்றி’ என்கிறார்.
கண் காண வந்து – ஊனக்கண்களுக்குப் புலப்படுதல் இன்றி நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் காண்பதற்கு விஷயமான தன்னை ஊனக்கண்களுக்குப் புலப்படச் செய்து. துயரங்கள் செய்து – அடியார்களை அழகாலே நோவுபடுத்தியும்; பகைவர்களை ஆயுதத்தாலே நோவுபடுத்தியும்; 3‘நீண்ட கண்களையுடைய கிருஷ்ணர் பூமியினுடைய பாரத்தைப் போக்கி, எல்லா உலகத்தையும் மயங்கச் செய்து, தம்முடைய மேலான இருப்பிடத்தை அடைந்தார்,’ என்கிறபடியே, பகைவர்களை முட்கோலாலே சாடியும் அடியார்களை கண்ணழகாலே சாடியும் போனபடி. 4‘ஏழையர் ஆவி உண்ணும் இணைக்கூற்றங்கொலோ அறியேன்! ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ அறியேன்!’ என்னும்படி அன்றோ கண்ணற்று நலியும்படி?
தன் தெய்வ நிலை – இவ்வுலக சம்பந்தம் இல்லாத தன்னுடைய தன்மையை. உலகில் – இதற்கு இட்டுப்பிறவாத சமுசாரத்திலே. புக உய்க்கும் – செலுத்துகின்ற. அம்மான் – அவர்கள் விரும்பாமலே, சமுசாரிகளுக்குத் தன் படிகளை வெளியிடுகைக்கு வேண்டும் சம்பந்தத்தைச் சொல்லுகிறார். ‘ஆக, ‘பரமபதத்திலே நடையாடக் கூடிய இவ்வுலக சம்பந்தம் இல்லாத விக்கிரகத்தைச் சமுசாரிகளுக்குத் தெரிவித்து, அங்கு உள்ளாரோடு சம்பந்தம்இங்கு உள்ளாரோடும் ஒத்திருக்கையாலே, ‘தன் தெய்வ நிலை புக உய்க்கும் அம்மான்’ என்கிறார்,’ என்றபடி. அன்றிக்கே, 1‘தூது சென்று, சாரதியாய் இருந்து தேரை ஓட்டித் தன் படியைத் தெரிவித்து, இச்செயலாலே உலகத்தாரை எழுதிக்கொண்டவன்’ என்றுமாம்.
துயரம் இல் சீர்க் கண்ணன் – குற்றங்கட்கு எதிர்த்தட்டான கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணன். மாயன் – ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவன். புகழ் துற்ற யான் – அவனுடைய கல்யாண குணங்களை நெருங்க நுகரப்பெற்ற யான். ஓர் துன்பம் இலன் – ‘இவ்வுலக சம்பந்தம் இல்லாத திவ்விய மங்கள விக்கிரகத்தைக்கொண்டு இவ்வுடம்போடே அணையலாம்படி அவன் கிட்டுவான் ஆயிற்ற பின்பு, நான் இச்சரீரத்தை விட்டு அங்கே போய் அவ்வுடம்போடே அணைய வேண்டும்,’ என்றால் எனக்கு அவன் அருமைப்படுத்துவானோ?
இதர சஜாதீயமாக்கி
சம்சாரிகள் கண்களுக்கு விஷயமாக்கி –
தன்னுடை சோதி -ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து
அம்மான் -மாயன் -புகழ் அனுபவித்து துக்கம் இல்லை
ஹேய பிரத்யநீகமாய்
தனக்கே அசாதாராணமான திவ்ய மங்கள விக்ரஹம்
தன்னுடை சோதி -சுத்த சத்வமயம்
நிரவதிக தேஜஸ் கொண்ட –
நின்ற வண்ணம் நிற்கவே -அங்கே இருக்கும் படி ஒன்றுமே குறையாமல் –
விளக்கில் கொளுத்திய விளக்கு போலே –
சம்பவாமி -பூதானாம் ஈஸ்வரோ -இயற்கையான பிரகிருதி உடன்
துயரில் மலியும் மனிசர் துக்க சாகாரத்தில் அழுந்தி
தோன்றி ஆவிர்பவித்து
நித்ய சூரிகள் விஷயமான தன்னை -சம்சாரிகள் காணும்படி வந்து அவதரித்து –
துயரங்கள் செய்து –
அனுகூலரை அழகால் நோவுபடுத்தி
பிரதிகூலரை ஆயுதங்களால் நோவுபடுத்தி –
பூபாரம் நீக்கி -லோஷன -மோக யித்வா ஜகத் சர்வம் -ஸ்லோகம்
அழகும் ஆயுதமும்
கண் அழகால் சாடி இணைக் கூற்றங்கள் கொலோ
தனது தெய்வ நிலை -ச்ப்ராக்ருதமான ச்வாபத்தை
உலகில் புக வைக்கும் அம்மான் -அபெஷா நிரபெஷமாக
பிராப்தி உண்டே -அம்மான் ஆகையாலே
தெய்வ நிலை காட்டியது –
இங்கு உள்ளாருக்கும் அனுபவிக்கும்படி
தூத்ய சாரத்யங்கள் காட்டி எழுதிக் கொண்டவன்
கண்ணன் -மாயன் –
புகழை புஜிக்க பெற்ற யான்
இவ்வுடம்புடன் அணைவான் கிட்டும் பொழுது
அங்கு போய் அனுபவிப்பிக்க கேட்க வேண்டுமா
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply